Friday, April 2, 2010

பையா - என் பார்வையில்

பையா வித் குப்பனும் சுப்பனும்!!


ரொம்ப நாள் கழிச்சு நம்ம நண்பர்கள் குப்பனையும் சுப்பனையும்
படம் விட்டு வீட்டுக்கு வரும் போது பார்த்தேன்...அந்த வரலாறு
முக்கியம் வாய்ந்த உரையாடல்கள் உங்கள் பார்வைக்கும்!!


குப்பன்: என்ன மாமே பையா பார்த்துட்டு வர போல??

ஜெட்லி: இதெல்லாம் கேள்வியாடா வெள்ளிக்கிழமை ஆனா நமக்கு வேற என்ன வேலை.

குப்பன்: எங்கே தியாகராஜாவா?

ஜெட்லி: இல்லைப்பா...கணபதிராம்..

சுப்பன் : என்னடா எப்பவும் அங்கே தான் போவ...தீடிர்னு கணபதிராம் போய்ட்ட...

ஜெட்லி: அந்த தியேட்டர் வர வர செம கலீஜ்ஆ இருக்குப்பா...அதான்...


குப்பன்:சரி பையா என்ன கதை...

ஜெட்லி: பெங்களூரில் படம் ஆரம்பிச்ச உடனே கார்த்தி தமன்னாவை பார்க்குறாரு....

குப்பன்: பார்த்தவுடனே லவ்வா??

ஜெட்லி: லவ் வராம வேற என்னய்யா வரும்....அப்புறம் தீடிர்னு தமன்னா சென்னை போக கார்த்தி கார்ல ஏறுறாங்க...

குப்பன்: ஏய்..நிறுத்து நிறுத்து...கார்த்தி என்ன டிரைவரா...?

ஜெட்லி: இல்லப்பா...EC படிச்சுட்டு வேலை தேடுவாரு...ஆனா படம் புல்லா கார் தான் ஓட்டுவாரு...

சுப்பன்:அப்புறம் தமன்னாவை துரத்திட்டு வில்லன் குரூப் வருமா??ஜெட்லி: டேய் சுப்பா எனக்கு முன்னாடியே படம் பார்த்துட்டியா
நீ??

சுப்பன் : அட போப்பா...இது கூட தெரியாம காலம்காலமா தமிழ்சினிமாவில்
இப்படி தானே வருது....

குப்பன்: கார்த்தி எப்படி ஜெட்லி...?

ஜெட்லி: மனுஷன் பின்னி பெடல் எடுக்கறாரு...இவர் படத்தில்
காமெடியன்ஏ தேவை இல்லை...அவர் வசனம் பேசினாலே
சிரிப்பு வருது.....

குப்பன்: பைட்??

ஜெட்லி: படம் பார்க்க போகும் போது வெளியே ரசிகர் மன்ற பேனரில் மாவீரன் கார்த்தி அப்படின்னு போடும் போதே மைல்ட்ஆ டவுட் ஆனேன்.....

சுப்பன்: ஏன் மாமே??

ஜெட்லி: பின்னே....இருபது பேர் ரவுண்ட் கட்டி நின்னாலும் ஒரு அடி வாங்கமா பறந்து பறந்துல அடிக்கிறாரு....

சுப்பன்: பைட் கொஞ்சம் ஓவர்ஒ...

ஜெட்லி: ரொம்ப ஓவர்...

குப்பன்: அப்புறம் வேற ஏதாவது படத்தை பத்தி சொல்றது...

ஜெட்லி: இன்டெர்வல் ப்ளாக்கில் கார்த்தி தமன்னாவிடம் "அவுங்க உன்னை தேடி வரல என்னை தேடி வந்து இருக்காங்க..." என்று ஏக பில்ட் அப் பண்ணுவார்.சரி நானும் பாம்பே பிளாஷ்பேக் பயங்கரமா இருக்கும்னு பார்த்தா சண்டைகோழி முதல் பாதியை பத்து நிமிஷம் பார்த்த
மாதிரி இருந்தது....என்ன கொடுமை குப்பா இது...

சுப்பன் : அய்யயோ....பொதுவா லிங்குசாமி படத்தில் வில்லனுக்கு
ரோல் சூப்பர்ஆ இருக்குமே....இதில் மிலிந்த் சோமன் எப்படி??

ஜெட்லி : நானும் உன்னை மாதிரி தான் நினைச்சேன்...பார்த்தா
மிலிந்த் சோமன் வில்லனும் பயங்கர மொக்கை ஆயிட்டார்.
லிங்குசாமி ஏன் இப்படி பண்ணார்னு தெரியல. சாம்பிள்க்கு
ஒரு சீன் சொல்றேன் கேளு....டோல்கேட்டில் மிலிந்த்தும்
அவர் ஆட்களும் கார்த்தியை தேடுவாங்க...ஆனா நம்ம
கார்த்தி ஒரு குடை புடிச்சிட்டு அவங்களை தாண்டி போய்
நின்னு டிமிக்கி கொடுப்பார்(மூஞ்சு தெரியாதாம்).

குப்பன்: என்ன கொடுமை ஜெட்லி இது....

ஜெட்லி: ஆனா ஒரு சீன் மனசை ரொம்ப தொட்டிச்சு...
தமன்னாவை அவங்க பாட்டி வீட்டில் விட்டுட்டு வரும் போது
கார்த்தி நண்பியிடம் போனில் பேசும் சீன் உண்மையலே செம...
லவ் பீலிங்க்ஸ்.....

சுப்பன்: அப்புறம் வேற என்ன ஸ்பெஷல்...

ஜெட்லி: வேற யாரு யுவன் ஷங்கர் ராஜா....செம கலக்கு கலக்கியிருக்கிறார்.அப்புறம் கேமராமேன் மதி நல்லா
பண்ணி இருக்காரு.

சுப்பன்: யோவ் என்னய்யா நீ தமன்னாவை பத்தி ஒன்னுமே
சொல்லலை....

ஜெட்லி: தமன்னா பத்தி நிறைய சொல்லலாம்....பாடல் காட்சியில்
நல்லா திறமை காட்டியிருக்காங்க....கூடிய விரைவில் தமன்னா
முன்னேற்ற பேரவைன்னு யாராவது ஆரம்பிச்சாலும் ஆச்சரியம்
இல்லை.அதுவும் பாட்டி வீட்டில் ஒரு டிரஸ்இல் தேவதை மாதிரி
இருப்பாங்க......

குப்பன்: சரி சரி தொடச்சுக்கோ...தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் எப்படி....

ஜெட்லி : மிக்ஸ்ட் ரெஸ்பான்ஸ் தான்ப்பா.....

சுப்பன் : நீ என்ன சொல்ற...??

ஜெட்லி : நமக்கு தேவை டைம்பாஸ்....சில காட்சிகள் தவிர
நல்லா டைம்பாஸ் ஆச்சுனு தான் சொல்லணும்......நமக்கு
பொழுது போன சரி...ஆனா செகண்ட் ஆப்.....மட்டும் கொஞ்சம்
பொறுத்துக்கோ குப்பா.....


குப்பன்,சுப்பன்: சரி அப்ப இன்னைக்கு நைட் ஷோ போய்
குந்திக்க வேண்டியது தான்.....


ஜெட்லி.....

36 comments:

King Viswa said...

மீ த பஸ்ட்.

படம் அவுட்'டா?

சைவகொத்துப்பரோட்டா said...

:))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படம் அப்ப ஆவரேஜ் தானா .. தல ..

துபாய் ராஜா said...

பையா - பைய பார்க்கலாமா... :))

Anbu said...

:-))

Chitra said...

குப்பன்: ஜெட்லி பையா, வாழ்க!
சுப்பன் : மாவீரன் ஜெட்லி, வாழ்க!

சேட்டைக்காரன் said...

//கூடிய விரைவில் தமன்னா
முன்னேற்ற பேரவைன்னு யாராவது ஆரம்பிச்சாலும் ஆச்சரியம்
இல்லை.//

ஹி..ஹி! ஆரம்பிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்! விண்ணப்பம் கிடைக்குமான்னு தேடிட்டிருக்கேன்!

தமிழ் உதயம் said...

பையா படம் ரிலீஸாயிடுச்சா...

அக்பர் said...

பஞ்ச் எங்கே காணோம்.

hasan said...

why jetli, no theatre noruks???

♠ ராஜு ♠ said...

உஙகளோட போன பதிவுல என்னோட பின்னூட்டம் பாருங்க தல..!

முதல் பின்னூட்டம்.
:-)

இராமசாமி கண்ணண் said...

:)

செந்தில்குமார் said...

அருமை.......
செந்தில்குமார்

ஜெட்லி said...

@ King Viswa

அப்படி தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.....

ஜெட்லி said...

@ ஸ்ரீ.கிருஷ்ணா

எஸ் பாஸ்.....

ஜெட்லி said...

@ துபாய் ராஜா


அது உங்க இஷ்டம் அண்ணே

ஜெட்லி said...

@ Chitra

எதுக்கு இப்படி ஒரு பில்ட் அப்.....??

ஜெட்லி said...

@ சேட்டைக்காரன்

ஹோ....எனக்கும் கிடைச்சா குடுப்பா....

ஜெட்லி said...

@ தமிழ் உதயம்

நல்ல கேள்வி...

ஜெட்லி said...

@ அக்பர்


பன்ச்க்கு இன்னைக்கு லீவ்....

ஜெட்லி said...

@ hasan


தியேட்டரே சைலன்ட்ஆ இருந்தது ஹசன்.....
நொறுக்ஸ் எதுவும் கிடைக்கில...

ஜெட்லி said...

@ ♠ ராஜு ♠


நீங்க உண்மையிலே தீர்க்கதரிசி தான் அண்ணே....

ஜெட்லி said...

@ ♠ ராஜு ♠


நீங்க உண்மையிலே தீர்க்கதரிசி தான் அண்ணே....

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:)))

முகிலன் said...

சரி.. அப்ப ஒருதடவை பாக்கலாம்னு சொல்றீங்க..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கூடிய விரைவில் தமன்னா
முன்னேற்ற பேரவைன்னு யாராவது ஆரம்பிச்சாலும் ஆச்சரியம்
இல்லை.//

அந்த எஸ்.எம்.எஸ் நல்லா இருந்தது ஜெட்லி..:)

எறும்பு said...

கூடிய விரைவில் தமன்னா
முன்னேற்ற பேரவைன்னு யாராவது ஆரம்பிச்சாலும் ஆச்சரியம்
இல்லை.//

அண்ணே நீங்க விட்ட ஜொள்ளுக்கு இந்நேரம் ஆரம்பிச்ருகனுமே..

Sathya said...

can watch for cute tamanna

ர‌கு said...

நானும் பார்த்துட்டேன்....ப்ச்..என்ன‌த்த‌ சொல்ற‌து... :(

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

என்ன கொடுமை ஜெட்லி இது....;;)

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

அடடா அடடா அடைமழை டா அந்த பாட்ட தவிர எனக்கு ஒன்னும் புடிக்கல...! ஜில்ல்லுன்னு என்னமா எடுத்து இருக்காங்க...!

தமிழ்ப்பறவை said...

thalai.. வழக்கம் போல விமர்சனம் பண்ணுங்க... இந்த ஸ்டைல்(...?) சரி இல்லை...1960 கள்ல வர்ற குமுதம், விகடன் விமர்சனம் படிக்கிற மாதிரி போரடிச்சிருச்சு...

தாராபுரத்தான் said...

தூள் விமர்சனம்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////சுப்பன் : அய்யயோ....பொதுவா லிங்குசாமி படத்தில் வில்லனுக்கு
ரோல் சூப்பர்ஆ இருக்குமே....இதில் மிலிந்த் சோமன் எப்படி??//////


அசந்த நேரம் பார்த்து புகுந்துட்டாங்கணு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க நண்பரே !

பின்னோக்கி said...

திமிரு, சண்டைக்கோழி, மலைக்கோட்டை.. ஏன் வேற கதைய எடுக்க மாட்டேங்குறாங்க.... படம் பார்க்குற மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்

manoj said...

கார்த்திக்கு வட போச்சா ??