Monday, September 20, 2010

வாங்க பொங்குவோம்...!!

வாங்க பொங்குவோம்...!!

என் அன்பான வலையுலக நண்பர்களே, புதுசா வலையுலகில் வந்த சில நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு உதவியா இருக்க வாய்ப்பிருக்கு....
சில மாதங்களாக ப்ளாக் படித்து வரும் என் நண்பன் பல பேர்
பொங்குவதை பார்த்து நீ எப்ப மச்சி பொங்க போறேன்னு கேட்டான்.
அதனால நாமும் பொங்குவோம் என்று முடிவெடுத்து...இதோ உங்கள்
பார்வைக்கு ...

ஹாசினி பேசும் படம்...

தெரியதனாமா ஹாசினி விமர்சனம் பண்ற பேசும் படத்தை ஜெயா டி.வி.யில்
முடியும் போது பார்த்து விட்டேன்...எப்பா நம்மளை விட படத்தை இப்படி
கிழி கிழினு கிழிகிறாங்க....நான் பார்த்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின்
விமர்சனத்தை. இப்படியெல்லாம் கூட விமர்சனம் பண்ணலாமானு என்னை
யோசிக்க வச்சிட்டிங்கா மக்கா....அதனால தான் விமர்சனத்துக்கே விமர்சனம்.


உதாரணம் : படத்தில் ஆர்யா நயன்தாராவை சூப்பர் பிகர்னு சொல்றது
உலக மகா தப்பாம்... தனிப்பட்ட முறையில் சொல்ற மாதிரி இருக்குதாம்...
இனிமே இப்படி யாரும் படம் எடுக்க கூடாதாம்..இயக்குனரும் வசனகர்த்தாவும் திருந்தனுமாம்...அது மட்டும் இல்லாம படம் பார்க்கிற நாமும் திருந்தனுமாம்!! இதில என்ன காமெடினா இவங்க தான் பூனைக்கு மணி கட்டுரங்கலாம் அதை அவங்களே சொல்லிக்கிறாங்க.... நல்லா கட்ராங்கையா மணி...!!

இதோ அந்த வீடியோ...இதுக்கு மேலையும் பொங்கலைனா எப்படி... இவங்க நியாய தராசுனு சொல்லி அடிக்கிற கூத்து இருக்கே செம காமெடி...நம்ம வெகு ஜன மக்கள் ரசித்த அனைத்தையும் மொக்கை என்று கூறுவதை என்னவென்று சொல்வது.
சுஹாசினி ராவணன் படத்தின் வசனகர்த்தா என்று நினைக்கிறேன்...
அந்த படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் துக்கத்தையும் பாஸ்
படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் சந்தோசத்தையும் பார்த்த
காரணத்தால் நானும் பொங்க உரிமை இருக்கு என்று இங்கே சொல்லி
கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்....


படம் பார்த்து ரசிச்சவங்க எல்லாம் முட்டாள் நான் தான் அறிவாளினு
சுஹாசினி மேடம் சொல்ற மாதிரி இருக்குது. அப்புறம் இந்தம்மா வசனம்
பேசிக்கிட்டே இருக்காங்க அதையெல்லாம் கம்மி பண்ணனும்னு சொல்லி
இருக்காங்க... எனக்கு ஒரு கேள்வி கேட்கணும் போல இருக்கு அது
இது தான் "எப்படி உங்க படத்தில் வசனம் காதுல விழாம இருந்ததே
அது மாதிரியா.."னு கேட்கணும். நல்ல வேளை சந்தானத்தை மட்டும்
விட்டு வச்சாங்க....ஓர்குட் நண்பர் குமரன் கிட்ட இதை பத்தி நான்
சாட்டில் கேட்ட போது அவர் "ஒரு வேளை உதயநிதி ஸ்டாலின் படம்
என்பதால் இப்படி சொல்றாங்க போல" என்றார்... இருக்கலாம் யாருக்கு
தெரியும்.


பாஸ் படம் ஒரு டைம் பாஸ் படம் நோ லாஜிக் அப்படின்னு சின்ன
குழந்தைய கேட்டா கூட சொல்லிடும் ஆனா அது சுகாசினி மேடத்துக்கு
தெரியாம போச்சு..ஏதோ சீரியஸ்ஆன படத்துக்கு சொல்ற மாதிரி செம
காமெடி பண்ணி இருக்காங்க சுஹாசினி மேடம்.ஒரு வேளை பாஸ் படம் ராவணன்வோட நல்ல ஒடரதுனால வயிதெரிச்சல்ஆ இருக்குமோ??
மொதல்ல இவங்க உலக படம் எடுக்கறதை நிறுத்திட்டு நல்ல தமிழ் படம்
எடுத்தா என்னை மாதிரி பாமரனுக்கு வசதியா இருக்கும் அதாவது படத்தை புரிஞ்சிக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன். எனக்கு
இதுவரைக்கும் ராவணன் படத்தில் விக்ரம் கேரக்டர் சத்தியமா புரியலைங்க...


அப்புறம் இன்னொரு காமெடி வேற சொல்லிகிறாங்க...அந்த மாமா
மாமா உன் பொண்ண கொடு மாமா பாட்டில் ஏன் மாமா வந்தார்?னு
அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டு இருக்காங்க...மாமா பாட்டில் மாமா
வராமா ஆயாவா வருவாங்க... என்ன கொடுமை கேள்வி இது..,,,


ஆக மொத்தத்தில் எனக்கு டி.வியை உடைக்கணும் போல் இருந்தது...
ஆனா உடைக்கல ஏன்னா அது கலைஞர் கொடுத்த டி.வி.இல்ல...


இன்னும் நிறைய விஷயத்துக்கு பொங்கணும் நண்பர்களே...

* ஜெனீலியா அவர்கள் டி.வி பேக் விளம்பரத்தில் ஒரு ஜட்டி போட்டு
கிஸ் அடிக்கும் போது அவர் பேக் மூலம் ரூம் கேமராவை மறைக்கிறார்...
இந்த விளம்பரத்தால் நம்ம சமூகம் சீரழிந்து போகும்...இந்த மாதிரி எல்லாரும் பண்ணா scandal videos என்பதே இல்லாம போய் விடும் வாய்ப்பு இருக்கிறது...
அதனால் எல்லாரும் பொங்குங்க...!!


http://www.youtube.com/watch?v=uQTLpeQ28XQ

* முந்தாநேத்து மெஸ்இல் சாப்பிடும் போதும் இட்லிக்கு கெட்டி சட்னி
இல்லன்னு சொல்லிட்டான்...அதனால கெட்டி சட்னி தராத அந்த பையனுக்கு
எதிரா கண்டிப்பா பொங்கியே ஆகணும்..


*எந்திரன் படத்துக்கு என்னை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு சத்யம்,
எஸ்கேப், அபிராமி போன்ற தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட்
கிடைக்குமா...?? கண்டிப்பா கிடைக்காது அனைத்து பண்பலை
அலைவரிசையும் மொத்தமா டிக்கெட் வாங்கி ஒரு ஈத்து போன
கேள்வியை கேட்டு அது மூலமா ஒரு அமௌன்ட் சம்பாதிச்சு
டிக்கெட்டை கொடுப்பாங்க.... ஹ்ம்...நான் அதே தியாகராஜாவில்
டிக்கெட் எடுத்து போலீஸ் கிட்ட அடியும் வாங்கி தான் படத்துக்கு
போகணும்னு போல..... இதுக்காக யாராவது பொங்குங்க மக்கா...

இது மாதிரி பொங்கரதுக்கு உங்களுக்கு டிப்ஸ் தர நான் ரெடி...
சும்மா ஜாலியா பொங்குங்க...


ஜெட்லி...(சரவணா)

Saturday, September 18, 2010

வந்தே மாதரம் - - எதிர் வீட்டு பார்வை!!

வந்தே மாதரம்....!!போன வாரம் ரீலீஸ் ஆகுதுன்னு சொன்னாங்க...நானும் அபிராமி 7 ஸ்டார்
தியேட்டரில் புக் பண்ணினேன். அப்புறமா படம் வரலைன்னு வியாழக்கிழமை அன்னிக்கே தியேட்டரில் இருந்து போன் பண்ணினார்கள். பாஸ் படத்தை
தியாகராஜாவில் பார்க்க இருப்பதால் டிக்கெட்டை கான்சல் செய்ய சொன்னேன்.புதன்க்கிழமை வரை அக்கௌன்ட்டில் காசு வராததால் மீண்டும் அபிராமிக்கு போன் பண்ணின அப்புறமா தான் டிக்கெட்டை கான்சல் பண்றாங்க....


இந்த படத்துக்கெல்லாம் ஏன்டா புக் பண்ணிட்டு போறேன்னு ரெண்டு நண்பர்கள் கலாய்ச்சுது தான் மிச்சம்....ஹ்ம்..அவங்களுக்கு என்ன தெரியும் நான் சின்ன பையன் ஏதோ மசாஜ் சீட்க்கு ஆசைப்பட்டு மீதி எந்த படம் வந்தாலும் அந்த சீட் கிடைக்கறது இல்லன்னு புக் பண்ணிட்டேன். பைனலா இன்னைக்கு நம்ம ஓர்குட் நண்பர் அசோக் சொல்ற மாதிரி அடையார் ஐநாக்ஸ் என்று நம்பப்படுகிற கணபதிராமில் படத்தை இரவு காட்சி பார்த்துட்டேன்....


என்ன கதை??

நம்ம நாட்டு நதிகளை இணைக்க போகிற நிகழ்ச்சியில் நம் நாட்டு
தலைவர்களை தீவிரவாதிகள் கொள்ள திட்டம் போடுறாங்க...அதை
எப்படி மம்மூட்டியும் அர்ஜுனும் சேர்ந்து முறியடிச்சு, கெடா வச்சு
சூப் குடிச்சாங்க என்பதே மீதி திரைக்கதை கதை எடிட்டிங் எல்லாம்.
காலம் காலமா நாம விஜயகாந்த் படத்தில் பார்த்துட்டு வர்ற கதை
தான் இது.... என்ன விஜய்காந்த்க்கு பதில் இதில் ரெண்டு ஹீரோக்கள்...
அவ்வளவே....
படம் ஆரம்பிச்ச உடனே சிநேகா பாட்டு...மம்மூட்டி கொஞ்சம் நேரம்
மொப்பம் பிடித்தவுடன் அடுத்தது தீவிரவாதியை பிடிக்க நம்ம ஊர்ல
இருக்கிற அனைத்து மாவட்டத்துக்கும் போறாங்க...அப்புறமா சிநேகா
ஆளையே காணோம்...இன்டெர்வல் அப்புறம் ஒரு சீன் அதாவது ஒரு
காட்சி மட்டும் வருவாங்க அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு
சீன் வருவாங்க...

ஹென்றி அவர்களின் கதை திரைக்கதை ரொம்ப பழசு...ஆனா புதுசா
ஒரு விஷயம் அவர் ட்ரை பண்ணி இருக்கிறார். ஆனா எனக்கு என்னமோ
அது மொக்கையா தான் இருந்தது. படத்தில் உருப்படியா இருந்தது ரெண்டு
ஐட்டம்ங்க அதாவது ரெண்டு ஐட்டம் பாட்டுனு சொன்னேன்ங்க. ஆனா
அதிலும் அவ்வளவா தெளிவில்லை. அந்த ஐட்டம் பாட்டு ஏன் வருது எதுக்கு வருதுன்னு ஹென்றிக்கே வெளிச்சம். இந்த ஐட்டம் பாட்டின் வரிகள் கண்டிப்பாக பள்ளி பிள்ளைகளின் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்...
இதோ அந்த பாட்டின் முதல் வரி...

1 2 3 4 5 6 7 உன் ஆசைக்கு நான் என்றைக்கும் 24x7 ......

இமானின் பின்னணி இசை பயங்கரம்..
ஒரே மியூசிக் தான் படம் முடியுற வரைக்கும்...EVERYBODY HANDSUP என்று
பின்னணியில் வரும்..படத்தில் யாரும் கை தூக்கல..தியேட்டர்ல தான்
என்னை மாதிரி நிறைய பேர் கொட்டாவி மேல கொட்டாவி விட்டு கையை தூக்கிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது!! ]ஹென்றி படம்னு நம்பி போனேன்...ஹம்..போனதுக்கு அர்ஜுன் சண்டை
ஓகே.இருந்தாலும் மரத்துக்கு மரம் தாவி அடிக்கறது எல்லாம் ஓவர் சார்.
அநேகமா குருவிக்கு அப்புறமா நம்ம அர்ஜுனும் ரியாஸ் கானும் தான்
ஒரு பில்டிங் இருந்து இன்னொரு பில்டிங்க்கு பறந்து போய் இருப்பாங்கனு
நினைக்கிறேன். அப்புறம் பெலிக்கான் பறவை மூலம் தீவிரவாதிகள்
விஷயத்தை பகிர்வது என்று நம்மை பூ கடையிலே உட்கார வைத்து
விடுகிறார்கள்.

தியேட்டர் நொறுக்ஸ்:


# படத்துக்கு போனதால் கிடைத்த ஒரே சந்தோசம் எந்திரன் ட்ரைலரை
ரெண்டு தடவை பார்த்தது தான்.

எந்திரன் ட்ரைலர் போட்டு முடித்ததும் ஒருவர்...

"இதுக்கே அம்பது ரூபாய் சரியா போச்சு..." என்று கத்தினார்.

# படம் போட்டு இருபது நிமிஷத்தில் படம் நிறுத்தி ஒரே இருட்டா போச்சு...
பக்கத்தில் இருந்தவர்..

"வந்திருக்கிறதே கொஞ்ச பேரு...அவங்களையும் கிளப்பி விட்ருவாங்க போல..."
என்று நக்கல் அடித்தார்.


# இந்த படத்துக்கு இன்டர்வல் வாசகம் REFRESH YOUR MIND ...

ஒருவர் " தூங்கிட்டு இருக்கறவங்களை மூஞ்சை கழிவிட்டு வர சொல்றாங்க போல.." என்றபடி நடந்து சென்றார்.

குடும்பத்துடன் வந்த ஒருவர் " பத்து வருஷம் முன்னாடி ரீலீஸ் பண்ண
வேண்டிய படத்தை இப்போ விட்ட்ருகானுங்க..." என்று திட்டி கொண்டே
பாப்கார்ன் வாங்க சென்றார்.

# இன்டர்வல் அப்ப நான் பால்கனி ஜன்னல் பக்கத்தில் நின்னுட்டு
வெளியே சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... அப்போ ரெண்டு
மூணு பேர் பைக் எடுத்துட்டு கிளம்பினாங்க என்பது வேறு விஷயம்...
ஒரு ஆள் என் பக்கத்தில் வந்து ஜன்னல் வழியே எட்டி எட்டி
அவசரமாக பார்த்தார்...நான் பயந்துட்டேன் எங்கே ஜன்னல் வழியா
குதிச்சு எஸ்கேப் ஆக போறாரோனு....நல்ல வேளை அப்படி ஒரு
சம்பவம் நடக்கலை...


# சிநேகா வரும்போதும், அர்ஜுன் பைட்டின் போதும் கொஞ்சம் சவுண்ட்
வந்தது...மற்றபடி பின் டிராப் சைலன்ஸ் தான்.

# கடைசியில் இரண்டு ஹீரோக்களும் தீவிரவாதியை பொரட்டி எடுத்த
பின் மாறி மாறி வசனம் பேச ஆரம்பிச்சுடுவாங்க...இதை பார்த்த நம்
பின்சீட்காரர் அவர் நண்பரிடம்...

" பேசியே திருத்திடிவாங்கோலோ..." என்று பயத்தை வெளிப்படித்தினார்...
நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை...


இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய உங்க வாக்கு
முக்கியம்...நாலு பேருக்கு நல்லது செய்யுங்க...என்னை மாதிரி...!!


உங்கள்

ஜெட்லி...(சரவணா...)

Friday, September 17, 2010

நல்லா கேட்காரங்கயா டீடெயிலு.....!!

ஓசி இப்போ இல்லை ஈசி....!!

நாமும் எத்தனை நாள் தான் பழைய செல் நம்பர் வச்சிக்கிட்டே அலையறது
புதுசா செல் நம்பர் மாத்தலாம்னு பார்த்தா துபாயில் இருந்து எப்போதாவது
சென்னை வரும் நண்பன் "நீ மட்டும் தான்டா நம்ம குரூப்ல இன்னும் நம்பர் மாத்தாம இருக்க...உன் செல் நம்பர் என் மனசில் அப்படியே இருக்குனு..." பிட் போட்டவுடன் நானும் நம்பர் மாத்தும் எண்ணத்தை கைவிட்டுவிடுவேன்...


ஆனா இந்த தடவை அப்படி ப்ரீயா விடறதா இல்லை காரணம் எங்க வீட்டு
பக்கத்தில் இருக்கும் பையன் ஒருவன் அடையாரில் ஒரு கடையில் ப்ரீ
சிம் கார்டும் கூடவே நூப்பது ரூபாய் டாக் டைமும் தருகிறார்கள்,உங்க லைசன்ஸ் ஜெராக்ஸ் ரெண்டு போட்டோ போதும்னு சொன்னான்...
அதுவும் இல்லாம நாங்கெல்லாம் வாரம் வாரம் ஒண்ணு வாங்கி
டாக் டைம் பேசிட்டு தூக்கி போட்டிருவோம் என்று எக்ஸ்ட்ரா ஐடியா
வேறு கொடுத்தான். ரைட் நமக்கு தூக்கி போடுற ஐடியா இல்லனாலும்
சும்மா தானே தரான் நாமும் ட்ரை பண்ணுவோம் என்று நப்பாசையில்
லைசன்ஸ் ஜெராக்ஸ் எடுத்து கிளம்பினேன்.

அந்த கடையிலே போய் குறிப்பிட்ட நிறுவனத்தின் கார்டு கேட்டேன்...
உங்க லைசன்ஸ் ஜெராக்ஸ் கொடுங்க என்று வாங்கினான் கடைக்கார
பையன். "ஒரிஜினல் லைசன்ஸ் கொடுங்க" என்று கேட்டான். கொடுத்தென்.
"ஜெராக்ஸ்ல உங்க மூஞ்சு கொஞ்சம் கருப்பா விழுந்துருக்கு சரியா
தெரியலை..." என்று இழுத்தான். "நான் என்ன அஜித்குமார் கலரா..
இருக்கறது தானே விழும்" என்று மனசுக்குள் நினைத்து கொண்டேன்.
"போட்டோல இருக்கறது நீங்க தானா??" என்று ஒரு கேள்வி கேட்டான்...
"நான்தான்ப்பா.." என்றேன் ஒரு வித எரிச்சலில். "நீங்க பக்கத்து பில்டிங்ல போய் ஜெராக்ஸ் எடுங்க தெளிவா விழும்.."என்றான். "அப்படியா என்
போட்டோவை கொடுங்க..." என்று வாங்கி கொண்டு கிளம்ப ரெடி
ஆனேன்..இனிமே ஒ.சி.ல தரான்னு மட்டும் எங்கையும் போய்ற
கூடாதுனு ஒரு முடிவு எடுத்தேன். அப்போ என் பக்கத்தில் ஒரு
நாப்பது ப்ளஸ் வழுக்கை ஆசாமியும் லைசன்ஸ் ஜெராக்ஸ் எடுத்து
வந்திருந்தார். அந்த போட்டோவை பார்த்த பையன் "போட்டோவில்
யாருங்க... போட்டோல 'முடி'லாம் இருக்கு...." என்று அந்த மனிதரிடம்
பேச்சுவார்த்தை தொடங்கியது.....


இதை தான் சொல்வாங்க அப்பாவி கிட்ட ஆயிரம் கேள்வி கேப்பாங்க...
ஆனா தீவிரவாதி பக்காவா வந்து வாங்கிட்டு போவான் அவனை விட்ருவாங்க...


கண்டிஷன் அப்ளை.....(CONDITION APPLY )


பேப்பர், புக்னு எதை திறந்தாலும் கலர் கலரா விளம்பரம்...ஒரு போன்
வாங்கினா ரெண்டு போன் ப்ரீ, ஒரு சட்டை வாங்கினா நாலு சட்டை
ப்ரீ, போன வாரம் கல்லூரி பசங்களுக்கு இனிது இனிது படத்துக்கு ஒரு
டிக்கெட் எடுத்தா இன்னொரு டிக்கெட் ப்ரீ...அப்படின்னு ஏகப்பட்ட
ப்ரீ....சில இலவச விளம்பரங்கள் உண்மையானத இருக்கலாம்...
(எ.கா) நம்ம இனிது இனிது படத்துக்கு ஒண்ணு வாங்கினா இன்னொரு
டிக்கெட் ப்ரீ வேணும்னா கண்டிப்பா கொடுத்து இருப்பாங்க...ஏன்னா படம்
அப்படி... ஆனா எல்லா விளம்பரங்களும் உண்மையா இருக்கறது
இல்லை என்பது தான் உண்மை.


வேவ்டேல்னு ஒரு செல் கடை...இப்போ கை மாறி நிறைய இடத்தில்
மூடிட்டாங்க என்பது வேறு விஷயம். ஆனால் அவர்கள் ரெண்டு வருடம்
முன்பு வரை செம பீக்கில் இருந்தார்கள் என்பது மட்டும் உண்மை. அதுக்கு
காரணம் விளம்பரம் மட்டுமே. நான் போன வருஷம் செல் வாங்க ஆறு
மாசமா தேடும் போது அவர்களின் ஒரு விளம்பரம் பார்த்து அடையாரில்
உள்ள கடையில் சென்று விசாரித்தேன். அந்த விளம்பரம் என்னன்னா
"செல் போன் வாங்கினா மூணு நாள் டூர் இலவசம்" என்பதே.

கடைக்கு போய் முதலில் ஒரு சோனி செல் பற்றி விசாரித்தேன்...
நான் வாங்க ரெடியாக இருந்தேன். சரி ஆபர் என்னனு கேட்டேன்..
அதற்கு கடைக்காரன் இந்த செல்க்கு ஒன்னுமில்லைன்னு சொன்னான்.
சரி விலை அதிகமான செல்போன் கேட்டேன். அதற்கு என்ன ஆபர் என்று கேட்டேன்...அவன் இதுக்கும் இல்லை என்றான்... உடனே நான் " சரி அப்ப
அரை பக்கம் விளம்பரம் போட்டு டூர் விளம்பரம் போட்டு இருக்கீங்களே..
எதுக்கு தான் அதை தருவீங்க" னு கேட்டேன்...."அந்த ஆபர் செல்
இப்போதைக்கு ஸ்டாக் இல்லை" என்றான்.சரி என்ன மாடல் செல்னு
கேட்டேன் அதற்கு அவன் ஒரு ஈத்து போன செல் மாடலை கூறினான்.
அப்படியே நன்றி சொல்லி திரும்பி வந்து விட்டேன்.கண்டிஷன்
அப்ளைனாலே அங்கே ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் என்பது
மட்டும் உண்மை.


மேரி பிரவுன் :

பொதுவாக எனக்கு இந்த பிசா, பர்கர் ஐட்டம் மேல அவ்வளவு விருப்பம்
இல்லனாலும்...எப்பயாவது சாப்பிடுவது உண்டு...ஆனா ஆபர் இருக்குதா
இல்லையான்னு எல்லாம் பார்த்துட்டு போறதில்லை...சமீபத்தில் நீலாங்கரை
மேரி ப்ரௌனில் நானும் நண்பரும் லைட்ஆ சாப்பிட சென்றோம்...ஹாட்
டச் பர்கர் தான் எங்களது விருப்பம் அதே போல் ஆளுக்கு சிக்கன் தொடை
கறியும் ஆர்டர் செய்தோம்..... அப்போது தான் அவர்களுது விளம்பரம் கண்ணில்ப்பட்டது..அது 350 மேல் சாப்பிட்டால் 54 ரூபாய் மதிப்புள்ள ஹோர்லிக்ஸ் பூட்ள்ஸ்(FOODLES) இலவசம் என்று.....

கஸ்டமர் இஸ் கிங்?? எங்கே??

நாங்க கணக்கு பண்ணி எல்லாம் சாப்பிடல...அப்புறம் ஒரு சிக்கன்
பாப் ஆர்டர் பண்ணோம்....அதெல்லாம் நான் சின்ன வயசில் சாப்பிட்டது
அழகா சின்ன சின்ன உருண்டையாக நன்றாக இருக்கும்..ஆனால் இவர்கள் கொண்டு வந்ததோ போண்டா சைஸ்சில்...ஒரு ஒரு பாப்க்கும் ஒற்றுமை
கூட இல்லை...பில் வந்தது 354 ரூபாய் நண்பன் பே பண்ணி விட்டு வந்தான்..வெளியே கிளம்ப தயாரான போது நண்பனிடம் ஆபரை சுட்டி காட்டினேன்... அவனும் போய் கவுன்டரில் கேட்டான் அதற்கு அவர்களின்
பதில் நாங்கள் சாப்பிட்டது 338 தான்..மீதி வரியாம்...அதனால் உங்களுக்கு
கொடுக்க முடியாது என்று காரணம் சொன்னார்கள்...!!

ஒரு தடவை ஈஞ்சம்பாக்கம் MARRY BROWN இல் சாப்பிட்ட போது
அவர்கள் 220 சாப்பிட்டதுக்கே எதோ ஒரு இங்கிலீஷ் படத்தின்
மொக்கை டிவிடியை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு FOODLES ஒ.சி.யில் கிடைக்கலன்னு கூட வருத்தம் இல்லங்க...
அந்த FRANCHISE MANAGER எப்படி இப்படி ஒரு தெளிவான பதிலை
சொல்வார்னு நான் எதிரிப்பார்க்கல....ஒன்னாவது படிக்கறவனுக்கு
கூட தெரியும் 338 க்கு சாப்பிட்டவன் 350 க்கு சாப்பிட முடியாதா??
அன்னைக்கே நான் முடிவு பண்ணேன் இனிமே MARRY பிரவுன்
பக்கம் கூட பெட், பாய் விரிச்சி படுக்க கூடாதுனு.... அந்த மேனேஜர் கிட்ட
ஒரு கேள்வி தான் கேட்க ஆசைப்படுறேன்... அன்னைக்கு எங்களுக்கு
தர வேண்டிய FOODLES செய்ஞ்சு சாப்பிட்டாங்களா சார்....??..


ஒரு நிமிஷம் இருங்க போன் வருது....

ராஜா : என்ன தம்பி என்ன பண்றீங்க??

ஜெட்லி : சும்மா தான் மச்சி..சிஸ்டம் முன்னாடி இருக்கேன்...

ராஜா : என்ன ப்ளாகா...?

ஜெட்லி : கண்டிப்பா...

ராஜா : சரி நாளைக்கு என் பர்த்டே ட்ரீட்...வந்துடு... பசங்க எல்லாம் வராங்க..

ஜெட்லி : கண்டிப்பா...நீயே அதிசியமா ட்ரீட் வைக்கிற...எங்கேடா??

ராஜா : அடையார் marry brown மச்சி...

ஜெட்லி : ஹ்ம்ம்...நான் marry brown போறது இல்லன்னு முடிவு பண்ணினேன்...நீ கம்பல் பண்றதாலே வரேன்டா...!!

மனதுக்குள்...

சிக்கிட்டான்டா ஒரு அடிமை....!!


உங்களுக்கும் எதுவும் இந்த மாதிரி ஒ.சி.யில் கிடைக்க இருந்தது
கிடைக்காம போய் இருந்தா தாராளமா ஷேர் பண்ணுங்க....
அட...நாம எதாவது பண்ணுவோம் பாஸ்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, September 13, 2010

பாஸ் , துரோகி மற்றும் ரெசிடென்ட் ஈவில் 4 !!

பாஸ் , துரோகி மற்றும் ரெசிடென்ட் ஈவில் 4 !!


பாஸ் படத்தை வெள்ளிக்கிழமை நைட் ஷோவே பார்த்தாச்சு...ஆனா
அதை பத்தி எழுத நேரம் கிடைக்கல.... சந்தானம் மீண்டும் கலக்கி
இருக்கிறார். இந்நேரம் எல்லாரும் பார்த்து இருப்பீங்கனு நினைக்கிறேன்...
படம் செம டைம்பாஸ்...ஆர்யா கண்ணாடி மாட்டும் சீனே செம...
நயன்தாரா ஏன் இப்படி ஆகிட்டாங்கனு தெரியல...கொஞ்சம் கிழடு
தட்டிடுச்சுனு தான் சொல்லணும்....

சந்தானம் அண்ட் சுவாமிநாதன் அரியர் எக்ஸாம் காமெடி செம....
ஆர்யா அண்ணனாக வருபவர் பஞ்சு அருணச்சலம் அவர்களின் மகனாம்,
நல்லாவே பண்ணி இருக்கிறார். அதே போல் பால் பாண்டி பாத்திரம்
கூட இன்ட்ரஸ்டிங்....கடைசியில் ஜீவா வருவது லக லக காமெடி....!!
பாட்டு பத்தி சொல்லவே வேண்டாம்...அய்லா என்ற ஒரு பாட்டு தவிர
மீதி எல்லாமே சூப்பர்...


தியேட்டர் நொறுக்ஸ்:

மைனா படத்தின் ட்ரைலர் போட்டார்கள்.... கொஞ்சம் டரியலாக தான்
எனக்கு இருந்தது... கடைசியில் ஒரு வசனம் வரும்..அது...

"லவ் பண்ண லைப் அழகா ஆயிடும்..." என்று வரும்னு நினைக்கிறேன்...

ஆனா பின்னாடி இருந்த நம்ம ஆளு... லவ் பண்ண லைப் நாசமா போய்டும்
என்று கத்தினார்....ஹ்ம்..அவருக்கு என்ன பிரச்சனையோ...!!

துரோகி பார்க்காத கதை....!!


அப்புறம் நேத்து நைட் செம மழை....சரி ஜெயந்தி தியேட்டர்ல துரோகி
பார்க்கலாம்னு ஒரு ஆர்வத்துல போனேன்...செம கூட்டம்...கூட்டம்
எல்லாம் தியேட்டரில் வேலை செய்பவர்களின் கூட்டம் தான், மழையால்
படம் ரத்தானால் சீக்கரம் வீட்டுக்கு போலாம்னு வெளியே காத்துகிட்டு
இருந்தாங்க....பால்கனி டிக்கெட் வாங்க ஒரு ஆள் கூட இல்லை....
கிழே டிக்கெட் வாங்க ஒரு பத்து பேரு இருந்தாங்க அவங்களும் பாஸ்
படத்துக்கு டிக்கெட் கிடைக்காம வந்தவங்க தான்...எனக்கு என்னமோ
அவங்க படம் ஆரம்பிக்கிற மாதிரி தெரியல என்பதால் திரும்பவும்
வீட்டுக்கு வந்து விட்டேன்.....


சரி திங்கள் என்ன படம் போலாம்னு யோசிச்சு யோசிச்சு...துரோகி போலாம்னு தான் பார்த்தேன் ஆனா ஏற்கனவே துரோகம் நடந்தது என்ன?? படம் பார்த்தே பஞ்சர் ஆகி போனதுனாலே ப்ரீயா விட்டுடேன்....

ரெசிடண்ட் ஈவில்....!!


அப்படியே நம்ம பைலட் தியேட்டர் பக்கம் போன ரெசிடண்ட் ஈவில் படம்
ஸ்டில் பார்த்தேன்...அப்படியே வண்டியே நிறுத்திட்டு டிக்கெட் எடுத்து
உள்ளே போய்ட்டேன்...மூணாம் பாகம் ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்ததாக நினைவு... ரெண்டாம் பாகம் சுத்தமா மறந்து போச்சு....இருந்தாலும் படம் செம ஸ்பீட்... மில்லா ஜோவிச் தான் நாயகி...சும்மா பறந்து பறந்து அடிக்கறாங்க...இதில் பத்து பேராக முதல் காட்சியில் வருகிறார்...ஏன் வர்றாங்க எப்படி வர்றாங்கனு எனக்கு புரியலை... இந்த பார்ட் ஜப்பான் டோக்யோவில் ஆரம்பம் ஆகிறது...முந்தைய பார்ட்டில் வந்த ஒரு பெண் இதிலும் வருகிறார் அவருக்கு பழசெல்லாம் மறந்து விடுகிறது....


இருவரும் சிறு விமானத்தில் மீண்டும் அமெரிக்காவை ஒரு ரவுண்ட் அடிக்கிறார்கள்..அங்கு ஒரு ஐந்து பேர் உயிருடன் இருக்கிறார்கள்,...அவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் என்பதே மீதி படம்... தமிழ் டப்பிங் என்பதால் நான் 3-D யில் பார்க்க வில்லை... அதில் எனக்கு விருப்பமும் இல்லை... எனக்கு ஒரு சந்தேகம் அது ஏன் இந்த படத்துக்கு தமிழில் பெயர் வைக்கவில்லை?? ஒரு வேளை வரி விலக்கு எல்லாம் இப்போது இல்லையா.... இல்லனா நம்ம ஆளுங்க ரத்த காட்டேரி...இல்ல ருத்ர காட்டேரினு ஏதாவது பேர் வச்சி இருப்பாங்களே......


இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளர் வருவார் செம காமெடி வசனம்...எல்லாமே
டைமிங் காமெடி ஆனால் அவர் நல்லவர் அல்ல... மறதி பெண் அவள் அண்ணனை பார்த்ததும் அவள் அண்ணன் உருகுவான்...உடனே நம்ம தயாரிப்பாளர்...


"என்ன பாசமலர் ரீமிக்ஸ்ஆ...மொதல்ல இங்கே இருந்து தப்பிப்போம்..."


என்று காமெடி வசனத்துக்கு பலத்த கைத்தட்டு....அதே போல் மில்லாவின்
சண்டை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.... அந்த மாபெரும் பேய் ஒன்றை
அந்த பெண் வீழ்த்தும் போதும் தியேட்டரில் செம விசில்....


அநேகமா பார்ட் 5 , 6 கூட வரும் வாய்ப்பு இருக்கு... எத்தனை பார்ட் வந்தாலும் அதை நாம போய் பார்க்கிறோம்.... நான் ரெசிடண்ட் ஈவில் 4 கேமை நான் எனது play station இல் விளையாடி இருக்கிறேன் அது வேறு மாதிரியான கதை...படத்தில் வருவது வேறு கதை.... கேம் விளையாடுவது செம த்ரில்லிங்ஆக இருக்கும்.....!!


இந்த பதிவு பிடிச்சு இருந்தா உங்கள் பொன்னான வாக்கினை போடவும்....


ஜெட்லி...(சரவணா...)


Monday, September 6, 2010

சிந்து சமவெளி - ஏதோ ஒரு பார்வை.

சந்துல சிந்து....!!


சரியா சொல்லனும்னா எனக்கு இந்த படத்தை பார்க்குற ஐடியா நேத்து
நைட் ஒன்பது மணி வரைக்கும் இல்லை. இந்த படத்துக்கு நான்
போனதுக்கு ஒரே காரணம் ஆற்காடு வீராசாமி அவர்கள் மட்டுமே.
மழை வேற...பலே பாண்டியா போலாம்னு தான் எனக்கு வெள்ளிக்கிழமை
ப்ளான்...ஆனா படத்தை பத்தி மாறுதாறு ரிப்போர்ட் வந்ததனால் அப்படியே
விட்டுடேன்...முன்னாடி எல்லாம் முதல் ஆள போய் படத்தை பார்த்து
மொக்கையா இருந்தா கூட அவ்வளவா பீல் பண்ணதில்லை...ஆனா இப்போ
முதல் நாள் நைட் ஷோ போலாம்னு ப்ளான் போட்டா மதியமே படம்
மொக்கைனு சொல்லி ஆப் பண்ணிடறாங்க நண்பர்கள்.... இப்படியே விட்டா
படமே பார்க்க முடியாதுனு முடிவு பண்ணிட்டு சிந்து சமவெளி கிளம்பிட்டேன்.வெள்ளிக்கிழமையில் இருந்தே எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில்
இந்த படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்தது.
ஆனா இந்த மழையிலும் ஜெயந்தியில் நல்ல கூட்டம். எல்லாம் 'A ' சான்றிதழ்
மகிமை. ஏன் நூப்பது ருபாய் கொடுத்து கட்டை சீட்டில் உட்கார்ந்து கொசு
கடி, மூட்டை பூச்சி கடி வாங்கனும்னு நேரா வண்டியை ஈஞ்சம்பாக்கம்
ஆராதனாவில் நிறுத்தினேன். செம கூட்டம் அநேகமா நான் தான் உள்ள
என்டர் ஆன இருபதாவது ஆளாக இருப்பேன்!! அப்புறம் படம் ஆரம்பிச்ச
கொஞ்ச நேரத்தில் ஒரு பத்து பேர் சேர்ந்து இருப்பாங்க...அதில் ரெண்டு
ஜோடி. ஒதுங்க வந்திருப்பாங்கனு நினைக்கிறேன்...மழைக்கு பயந்துனு
சொன்னேன்ங்க....

அதே கைகள்...ஹில்ஸ் ஹேவ் கண்கள் படத்தின் விளம்பர படம்....


நம்ம சிந்து சமவெளி விளம்பர படம்... பொண்ணு மட்டும் வேற..கை அதே தான்....
சுறா படத்தில் முதல் காட்சியில் எப்படி விஜய் கடலில் இருந்து வருவரோ
அதே போல் இதிலும் நாயகன் ஹரிஷ் கடலில் இருந்து வருகிறார்.
படத்தோட நாயகி அனாகா அழகா இருக்காங்க.... எனக்கு அப்போ அப்போ
டவுட் வந்திருச்சு... ஏன்னா வரிசையா எல்லா மிருகத்தையும் காட்டுவாங்க..
ஒரே வேளை டிஸ்கவரி சேனல் எதையும் போட்டுடாங்கலோனு. இங்க
தான் சாமியோட நுண் மற்றும் பன் அரசியலை பத்தி நீங்க கண்டிப்பா
தெரிஞ்சே ஆகணும்.... ஒரு காட்சியில் நாயகனும் நாயகியும் படத்தில்
தியேட்டரில் பார்க்கிற படம் சாமியின் முந்திய படம் மிருகம்.


அதோ அந்த ஓரமா ஒரு ஈ பறக்குது தெரியுதா....??
இந்நேரம் உங்களுக்கு படத்தோட கதை திரைக்கதை எல்லாம் தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.நான் இதுக்கு முன்னாடி சாமி எடுத்த ரெண்டு படத்தையும் பார்த்ததில்லை.படம் ரீலீஸ் ஆகும் போதே நண்பன் சொன்னான்
சாமி படம் டெர்ரர்ஆ இருக்கும்...ஆன சீனே இருக்காதுனு....அது உண்மை தான்.இது விழிப்புணர்வு படம்னு சொன்னாங்க, அது உண்மைங்க முதல் பாதி தூக்கம் தள்ளுனாலும் இன்டெர்வல் டைமில் இருந்து இயக்குனர் சாமி நம்மை எழுப்பி உட்கார வச்சிடுறாரு.(என் முன்னாடி ரோவில் இருந்த ஆசாமி கடைசி வரை கண் முழிக்கவில்லை...). மற்றபடி படம் எப்ப முடியும் எப்ப எஸ் ஆகலாம்னு காத்துகிட்டு இருந்தேன்.


எனக்கு சாமி மேல ரொம்ப கோபம்ங்க....முக்கியமான சீனில் எல்லாம்
அந்த வீட்டை ரெண்டு ரவுண்ட் அடிச்சு காட்டி எங்களை மாதிரி விடலை
பசங்களை ஏமாத்திடாரு. கஞ்சா கருப்பு காமெடி பண்றேன்னு சொல்லி
செம மொக்கை போட்டாரு. ரொம்ப பாராட்டப்பட விஷயம்னா அது
ஆராதானா தியேட்டரில் இருந்த புல் ஏ.சி.தாங்க. அப்புறம் இது வரைக்கும்
என் வாழ்க்கை வரலாறுல ஆராதானாவில் படத்தை அப்போ அப்போ
நிறுத்தாம பார்த்த ஒரே படம் இது தாங்க.


தியேட்டர் நொறுக்ஸ் :


# டிக்கெட் எடுக்க போகும் போதே நண்பர்கள் குழுவில் கேட்ட டயலாக்...

"என்ன படம் மச்சான்??"

" சிந்து சமவெளி டா.."

"என்னது...??"

"சிந்து நடிச்ச படம்டா..."


# நாயகனின் அப்பா வேறு ஊருக்கு படிக்க செல்லும் மகனிடம்

" ஆச்சியை(நாயகியை) நான் பார்த்துக்கிறேன்..."

இங்கே நம்ம ஆள்...

"நீ தானே பார்க்க போற..."


# படத்தில் இன்டெர்வல் அப்புறம் தான் கொஞ்சம் ஏடாகூடமா கதை
போகும்....அந்த டைமில் வந்திருந்த ரெண்டு ஜோடிகளும் ஒண்ணு
ஒண்ணா கிளம்பி போய்ட்டாங்க..என் டவுட் என்னனா படத்தோட
கதை போக்கு பிடிக்காம போனாங்களா...?? இல்லை அவங்க வந்த
வேலை முடிஞ்சவுடனே கிளம்பிட்டாங்களா??னு தான்.....சரி அதெல்லாம்
நமக்கு எதுக்கு...!!


இது விமர்சனமா இல்லையானு நீங்களே முடிவு பண்ணி...
உங்கள் வாக்கை போட்டு பல பேரை படிக்க செய்யுங்க...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)