Saturday, September 18, 2010

வந்தே மாதரம் - - எதிர் வீட்டு பார்வை!!

வந்தே மாதரம்....!!போன வாரம் ரீலீஸ் ஆகுதுன்னு சொன்னாங்க...நானும் அபிராமி 7 ஸ்டார்
தியேட்டரில் புக் பண்ணினேன். அப்புறமா படம் வரலைன்னு வியாழக்கிழமை அன்னிக்கே தியேட்டரில் இருந்து போன் பண்ணினார்கள். பாஸ் படத்தை
தியாகராஜாவில் பார்க்க இருப்பதால் டிக்கெட்டை கான்சல் செய்ய சொன்னேன்.புதன்க்கிழமை வரை அக்கௌன்ட்டில் காசு வராததால் மீண்டும் அபிராமிக்கு போன் பண்ணின அப்புறமா தான் டிக்கெட்டை கான்சல் பண்றாங்க....


இந்த படத்துக்கெல்லாம் ஏன்டா புக் பண்ணிட்டு போறேன்னு ரெண்டு நண்பர்கள் கலாய்ச்சுது தான் மிச்சம்....ஹ்ம்..அவங்களுக்கு என்ன தெரியும் நான் சின்ன பையன் ஏதோ மசாஜ் சீட்க்கு ஆசைப்பட்டு மீதி எந்த படம் வந்தாலும் அந்த சீட் கிடைக்கறது இல்லன்னு புக் பண்ணிட்டேன். பைனலா இன்னைக்கு நம்ம ஓர்குட் நண்பர் அசோக் சொல்ற மாதிரி அடையார் ஐநாக்ஸ் என்று நம்பப்படுகிற கணபதிராமில் படத்தை இரவு காட்சி பார்த்துட்டேன்....


என்ன கதை??

நம்ம நாட்டு நதிகளை இணைக்க போகிற நிகழ்ச்சியில் நம் நாட்டு
தலைவர்களை தீவிரவாதிகள் கொள்ள திட்டம் போடுறாங்க...அதை
எப்படி மம்மூட்டியும் அர்ஜுனும் சேர்ந்து முறியடிச்சு, கெடா வச்சு
சூப் குடிச்சாங்க என்பதே மீதி திரைக்கதை கதை எடிட்டிங் எல்லாம்.
காலம் காலமா நாம விஜயகாந்த் படத்தில் பார்த்துட்டு வர்ற கதை
தான் இது.... என்ன விஜய்காந்த்க்கு பதில் இதில் ரெண்டு ஹீரோக்கள்...
அவ்வளவே....
படம் ஆரம்பிச்ச உடனே சிநேகா பாட்டு...மம்மூட்டி கொஞ்சம் நேரம்
மொப்பம் பிடித்தவுடன் அடுத்தது தீவிரவாதியை பிடிக்க நம்ம ஊர்ல
இருக்கிற அனைத்து மாவட்டத்துக்கும் போறாங்க...அப்புறமா சிநேகா
ஆளையே காணோம்...இன்டெர்வல் அப்புறம் ஒரு சீன் அதாவது ஒரு
காட்சி மட்டும் வருவாங்க அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு
சீன் வருவாங்க...

ஹென்றி அவர்களின் கதை திரைக்கதை ரொம்ப பழசு...ஆனா புதுசா
ஒரு விஷயம் அவர் ட்ரை பண்ணி இருக்கிறார். ஆனா எனக்கு என்னமோ
அது மொக்கையா தான் இருந்தது. படத்தில் உருப்படியா இருந்தது ரெண்டு
ஐட்டம்ங்க அதாவது ரெண்டு ஐட்டம் பாட்டுனு சொன்னேன்ங்க. ஆனா
அதிலும் அவ்வளவா தெளிவில்லை. அந்த ஐட்டம் பாட்டு ஏன் வருது எதுக்கு வருதுன்னு ஹென்றிக்கே வெளிச்சம். இந்த ஐட்டம் பாட்டின் வரிகள் கண்டிப்பாக பள்ளி பிள்ளைகளின் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்...
இதோ அந்த பாட்டின் முதல் வரி...

1 2 3 4 5 6 7 உன் ஆசைக்கு நான் என்றைக்கும் 24x7 ......

இமானின் பின்னணி இசை பயங்கரம்..
ஒரே மியூசிக் தான் படம் முடியுற வரைக்கும்...EVERYBODY HANDSUP என்று
பின்னணியில் வரும்..படத்தில் யாரும் கை தூக்கல..தியேட்டர்ல தான்
என்னை மாதிரி நிறைய பேர் கொட்டாவி மேல கொட்டாவி விட்டு கையை தூக்கிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது!! ]ஹென்றி படம்னு நம்பி போனேன்...ஹம்..போனதுக்கு அர்ஜுன் சண்டை
ஓகே.இருந்தாலும் மரத்துக்கு மரம் தாவி அடிக்கறது எல்லாம் ஓவர் சார்.
அநேகமா குருவிக்கு அப்புறமா நம்ம அர்ஜுனும் ரியாஸ் கானும் தான்
ஒரு பில்டிங் இருந்து இன்னொரு பில்டிங்க்கு பறந்து போய் இருப்பாங்கனு
நினைக்கிறேன். அப்புறம் பெலிக்கான் பறவை மூலம் தீவிரவாதிகள்
விஷயத்தை பகிர்வது என்று நம்மை பூ கடையிலே உட்கார வைத்து
விடுகிறார்கள்.

தியேட்டர் நொறுக்ஸ்:


# படத்துக்கு போனதால் கிடைத்த ஒரே சந்தோசம் எந்திரன் ட்ரைலரை
ரெண்டு தடவை பார்த்தது தான்.

எந்திரன் ட்ரைலர் போட்டு முடித்ததும் ஒருவர்...

"இதுக்கே அம்பது ரூபாய் சரியா போச்சு..." என்று கத்தினார்.

# படம் போட்டு இருபது நிமிஷத்தில் படம் நிறுத்தி ஒரே இருட்டா போச்சு...
பக்கத்தில் இருந்தவர்..

"வந்திருக்கிறதே கொஞ்ச பேரு...அவங்களையும் கிளப்பி விட்ருவாங்க போல..."
என்று நக்கல் அடித்தார்.


# இந்த படத்துக்கு இன்டர்வல் வாசகம் REFRESH YOUR MIND ...

ஒருவர் " தூங்கிட்டு இருக்கறவங்களை மூஞ்சை கழிவிட்டு வர சொல்றாங்க போல.." என்றபடி நடந்து சென்றார்.

குடும்பத்துடன் வந்த ஒருவர் " பத்து வருஷம் முன்னாடி ரீலீஸ் பண்ண
வேண்டிய படத்தை இப்போ விட்ட்ருகானுங்க..." என்று திட்டி கொண்டே
பாப்கார்ன் வாங்க சென்றார்.

# இன்டர்வல் அப்ப நான் பால்கனி ஜன்னல் பக்கத்தில் நின்னுட்டு
வெளியே சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... அப்போ ரெண்டு
மூணு பேர் பைக் எடுத்துட்டு கிளம்பினாங்க என்பது வேறு விஷயம்...
ஒரு ஆள் என் பக்கத்தில் வந்து ஜன்னல் வழியே எட்டி எட்டி
அவசரமாக பார்த்தார்...நான் பயந்துட்டேன் எங்கே ஜன்னல் வழியா
குதிச்சு எஸ்கேப் ஆக போறாரோனு....நல்ல வேளை அப்படி ஒரு
சம்பவம் நடக்கலை...


# சிநேகா வரும்போதும், அர்ஜுன் பைட்டின் போதும் கொஞ்சம் சவுண்ட்
வந்தது...மற்றபடி பின் டிராப் சைலன்ஸ் தான்.

# கடைசியில் இரண்டு ஹீரோக்களும் தீவிரவாதியை பொரட்டி எடுத்த
பின் மாறி மாறி வசனம் பேச ஆரம்பிச்சுடுவாங்க...இதை பார்த்த நம்
பின்சீட்காரர் அவர் நண்பரிடம்...

" பேசியே திருத்திடிவாங்கோலோ..." என்று பயத்தை வெளிப்படித்தினார்...
நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை...


இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய உங்க வாக்கு
முக்கியம்...நாலு பேருக்கு நல்லது செய்யுங்க...என்னை மாதிரி...!!


உங்கள்

ஜெட்லி...(சரவணா...)

16 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

present

எஸ்.கே said...

மொக்கையா! இந்த படம் விளம்பரம் கொடுக்கிறப்ப ஏதோ பெரிசா சொன்னாங்க. சரி எப்படியும் கொஞ்ச நாள்ல ஏதாவது டீவில போடுவாங்க அப்ப பாக்க வேண்டியதுதான்! (பார்ப்பேனா?!?) :-)

Chitra said...

# படத்துக்கு போனதால் கிடைத்த ஒரே சந்தோசம் எந்திரன் ட்ரைலரை
ரெண்டு தடவை பார்த்தது தான்.

எந்திரன் ட்ரைலர் போட்டு முடித்ததும் ஒருவர்...

"இதுக்கே அம்பது ரூபாய் சரியா போச்சு..." என்று கத்தினார்.


...... How is it? SUPER!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லவேளை ஹென்றி படம் நானும் போய் பாக்கணும்ன்னு நினைச்சேன். ஐ எஸ்கேப்பு மாமு

என்னது நானு யாரா? said...

படத்தை விட உங்க தியேட்டர் நொறுக்ஸ் சூப்பரு! நல்லா நகைசுவையா விஷயங்களை பிடிக்கறீங்க!


//இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய உங்க வாக்கு
முக்கியம்...நாலு பேருக்கு நல்லது செய்யுங்க...என்னை மாதிரி...!!//

நல்லது செய்திட்டேன் தல!

மோகன் குமார் said...

ஜெட்லி = பொறுமை ??

Balaji saravana said...

உள்ளேன் ஐயா!
//அடையார் ஐநாக்ஸ் என்று நம்பப்படுகிற கணபதிராமில் // :)

பின்னோக்கி said...

படத்த விட நொறுக்ஸ் சூப்பர் :)

சிநேகிதன் அக்பர் said...

அப்போ கொலைவெறியா ஆயிடுச்சா :)

hasan said...

ha..ha ha ha another funny xperiance from saran....
every week there will be atleast on e single english tamil dubbed movie..better go to those movies instead of watching these...

ஜெட்லி... said...

அனைவருக்கும் நன்றி...


ஹசன்...இந்த வாரம் இங்கிலீஷ் டப்பிங் படம் எதுவும்
வரலை..அது சரி நமக்கென்ன மொக்கை படம் பார்க்கறது
புதுசா...

R.Gopi said...

தலைவா....

வந்தே மாதரம்னு உங்க வீட்டு கண்ணாடி முன்னாடி நாலு தடவை சொல்லியிருந்தா, 50 / 100 மிச்சம் ஆகியிருக்கும்.... அப்படியே அந்த தலைவலியும் இல்லாம இருந்திருக்கும்.

நீங்க அந்த படத்த பார்க்க போன போது நடந்த ஒரே நல்ல விஷயம் “எந்திரன்” ட்ரெயிலர் போட்டது தான்... இல்லேன்னா, நீங்க தியேட்டர் போனதே வேஸ்ட் ஆயிருக்கும்...

அடுத்த தடவையாச்சும் போஸ்டர எல்லாம் பார்த்து ஏமாந்துடாதீங்கப்பு..

Maduraimalli said...

Vaalibamae Vaa review podunga!!

ஜெட்லி... said...

@R.Gopi


போஸ்டர்லாம் பார்த்து போல...ட்ரைலர் பார்த்து ஏமாந்துட்டேன்....

ஜெட்லி... said...

@ Maduraimalli


try panraen boss...
padam engae oduthuNU theriyala...

மதுரை பாண்டி said...

EVERYBODY HANDSUP என்று
பின்னணியில் வரும்..படத்தில் யாரும் கை தூக்கல..தியேட்டர்ல தான்
என்னை மாதிரி நிறைய பேர் கொட்டாவி மேல கொட்டாவி விட்டு கையை தூக்கிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது!! ///

Ha Ha ha