Friday, August 27, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்!!

பொது அறிவு செய்திகள் :


ரொம்ப நாள் ஆச்சுங்க பொது அறிவு செய்தி போட்டு....நிறைய நண்பர்கள்
ஏன் போடல ஏன் போடலனு ஈ மெயில் மற்றும் போனில் கேட்கலனாலும்..
இப்போ ஏதோ கிராம அதிகாரி தேர்வு ஒண்ணு வருதாமே,அதனால நானா
குப்புற படுத்த சிந்திச்சு நாம போடுற பொது அறிவு செய்திகள் ஆறு பேருக்கு
உதவும் என்ற நோக்கத்திலே, என்னால் முடிஞ்ச நல்ல செய்திகளை அள்ளி
தெளிச்சி இருக்கேன்....!! சூஸ் தி பெஸ்ட் அன்சர்....


************************************

முக்கிய அ(பி)ட்டு செய்திகள் :


சவுகரியமான கதாநாயகனுடன் " முத்த காட்சியில் நடிப்பேன் "

நடிகை ரம்யா நம்பீசன் பேட்டி...


நம்ம நாட்டுக்கு ஏன் உலகத்துக்கே தேவையான முக்கியமான கேள்வியை
ரம்யா நம்பீசனிடம் கேட்ட நண்பர்க்கு ஆயிரம் நன்றிகள். அந்த கேள்வி
"முத்த காட்சியில் நடிப்பீங்களா??" அதற்கு ரம்யா அவர்கள் தனக்கு
சவுகர்யமான நடிகர் கூட நடிப்பேன் என்று கூறியிள்ளார்.

சவுகர்யம்னா எப்படினு எனக்கு தெரியல...தெரிஞ்சவங்க சொல்லுங்க...
ஆனா ஒண்ணு ஆட்ட நாயகன் படத்துக்காக மட்டும் தான் முத்த காட்சி போன்ற பேட்டி எல்லாம் வருது.... இது அப்ப அப்ப வரது தான்...
சும்மா ஒரு பப்ளிசிட்டி... ஆட்டநாயகன் ட்ரைலர் டரியலாக இருக்கிறது
என்பது மட்டும் உண்மை....!

*****************************************

டாக்டர் சீனிவாசன் பற்றி சிறு குறிப்பு வரைக....

ஏற்கனவே நான் சொன்னது தான்...அநேகமா சாம் அண்டர்சன், ஜே.கே,ரீத்தீஸ் வரிசையில் தலைவர் இடம் பிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு. இன்னும்
இவர் நடிச்ச படத்தை பார்க்கலை. மண்டபம் படத்தில் நடித்து இருக்கிறாராம்.
அது போக வாரம் மூணு நாள் தினதந்தியில் ஆனந்த தொல்லை என்ற படத்தின்
டெர்ரர்ஆன ஸ்டில் போட்டு நமக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.


மேலும் லத்திகா என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் கலக்குகிறார் மனிதர்.
அவர் கொடுத்திருக்கும் ரொமன்ஸ் ஸ்டில் ஒன்றே போதும் என்று
நினைக்கிறேன். என்னாமா சொட்டுது பாருங்க....காதல் ரசம்...

(DISCLAIMER : லைட்டான இதயம் இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தயவு செய்து கிழே இருக்கும் படங்களை பார்க்க வேண்டாம்...!அப்புறம் இன்னொரு விஷயம் சீனிவாசன் ஸ்டில் எடுக்க இதுவரைக்கும் அவரே கூட கூகிள்லே தேடி இருப்பாரானு தெரியலை....ஆனா அவர் படத்தை முதல்முறையாக கூகிள்இல் தேடின பெருமை என்னையே சேரும்....!!)


இவர் நல்லவர் என்பதற்கு இந்த ஒரு ஸ்டில் போதும்...!!


சீனிவாசன் அவர்களுக்கு ரசிகர் மன்றம் திறக்கலாம் என்ற எண்ணம் உள்ளது..
ஆனா நான் தான் நிரந்தர பொது செயலாளர்.... வேற யார் வேணும்னாலும் என்ன பதவி வேணுமோ எடுத்துக்கலாம்...!!

*************************************

விளம்பர இடைவேளை:

வெல்கம் டூ சுடுக்காட்டு சிட்டி...!!


வணக்கம் நேயர்களே....உங்களுக்கு ஒரு புண்ணான வாய்ப்பு...இது வரைக்கும் உங்களுக்கு சொந்த வீடு இல்லையே என்று கவலை இருந்திருக்கும்...
இனிமே அந்த கவலை இல்லை...கோவளம் தாண்டி சுடுக்காட்டில் புதிதாக
அம்பது ப்ளாட் போட பட்டுள்ளது... ஒரு சதுர அடி இருநூறு ருபாய் தான்.
இந்த சனிக்கிழமை வந்து நடுகாட்டில் இருக்கும் சுடுக்காட்டை ஜாலிஆக
குடும்பத்துடன் சுற்றி பார்த்து அப்படியே ஓசி சோறும் தின்னுட்டு.....
அப்பவே நீங்க புக் பண்ணா ரெஜிஸ்டர் இலவசமாக பண்ணி தரப்படும்.
ஒரு வேளை நீங்க புக் பண்ணலைனா ஆறு அடி இலவசம் சுடுக்காட்டில்!!

சீக்கரம் வாங்க...உங்களுக்கு சொந்தமான மனையை வாங்குங்க...!!


***************************

தொடரும் அட்டு செய்திகள்...


தூத்துகுடியில் சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா!!

சரத்குமார் அறிக்கை.

"பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலர
செய்ய இந்த முப்பெரும் விழாவில் சூளுரை ஏற்று புது வரலாறு
படைத்திட, புது விடியலை உருவாக்கிட புயலென புறப்பட்டு வருக..."


என்னது காந்தி செத்துட்டாரா??

இப்பவே கண்ணை கட்டுதே......அடேய் சோடா ஒன்னு கொடுப்பா...

சரத்குமார் சார் இந்த வசனம் சூப்பர்ஆ இருக்கு....எந்த படத்தில் வருது...??

******************************

கொல கொலயா முந்திரிக்கா நூறாவது நாளாம்.....********************

ரைட்ங்க...நான் கிளம்புறேன்....இந்த பொது அறிவு செய்தி பல பேரை
சென்று அடைய உங்கள் வாக்கை போடுங்க.....நாலு பேரு கிராம
அதிகாரி ஆனா நமக்கு தானே மகிழ்ச்சி...!!

நன்றி


ஜெட்லி...(சரவணா...)

நன்றி indiaglitz , chennaionline படங்களுக்கு....

Monday, August 23, 2010

எஸ்கேப் மாமே எஸ்கேப்.....!!

எஸ்கேப் சினிமாஸ்இல் ஒரு அனுபவம்.....
ராயபேட்டா மணிகூண்டு அருகே புதிதாக மலர்ந்து இருக்கும் எக்ஸ்பிரஸ்
அவின்யு மாலில் இன்று தான் சத்யம் சினிமாஸ்இன் அடுத்த மல்டிப்ளெக்ஸ்
பொது மக்களுக்கு திறந்து விட்டார்கள். சும்மானாச்சும் திங்கள்கிழமை
சத்தியத்தில் ஏதாவது படம் போலாம் என்று அவர்களின் வலையை
மேய்ந்த போது எஸ்கேப் என் கண்ணில்ப்பட்டது. உடனே எனக்கும்
நண்பனுக்கும் நான் மகான் அல்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.நான்
போன ஸ்க்ரீன் பேரு plush ஆம்... சத்தியமா தமிழ்ல எனக்கு என்ன
அர்த்தம்னு தெரியாதுங்கோ.....!!


அது என்ன தியேட்டர் பேரு எஸ்கேப்...?? ஒரு வேளை நாம போற படம்
மொக்கை படமா இருந்தா பாதியிலே எஸ்கேப் ஆக எதுவும் பதுங்கு
குழி வச்சி இருப்பாங்களோனு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.....
இன்று காலையில் வேறு ஒரு நண்பனிடம் எஸ்கேப் போகிறேன் என்று
சொன்னதற்கு அவனும் அதே கருத்தை தான் சொன்னான்.அதவாது
படம் புடிக்கலைனா பாதியிலேயே எஸ்கேப் ஆயிடலாம் போல என்றான்.

எஸ்கேப் போன கதை....

நான் மகான் இல்ல கண்டிப்பா ரெண்டாவது தடவை பார்க்கணும்னு முதல்
தடவை இன்டெர்வல்லே முடிவு பண்ணிட்டேன். அதுவும் புதுசா அன்னைக்கு
தொறக்க போற தியேட்டரில் பார்க்க போவது டபுள் சந்தோசமாக இருந்தது.
சரி அப்படியே நம்ம ஆஸ்தான வூட்லாண்ட்ஸ் தியேட்டர்ல என்ன படம்
போட்டு இருக்காங்கனு எட்டி பார்த்துட்டு போனேன்....தேவலீலை என்ற
பிட்டு படமும் மூன்று ஆவிகளின் அட்டகாசம் என்ற அட்டு படமும்
போட்டு இருந்தார்கள். அப்படியே அதை தாண்டி போய்கிட்டு இருக்கும்
போது என் கண்ணில் ஒரு போஸ்டர் பட்டது....சானகானுக்கு கூட நம்ம ஊரில் பிறந்த நாள் கொண்டாட,போஸ்டர் ஒட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அப்படியே வானத்தில் ஒரு ஒளி வட்டம் தெரிஞ்சுது...அப்போ தான் நினைச்சேன் கூடிய விரைவில் இந்தியா கண்டிப்பா வல்லரசு ஆயிரும்னு.....!!


எக்ஸ்பிரஸ் அவின்யு....இப்போ தான் முதல் முதலா எக்ஸ்பிரஸ் அவின்யு போறேன்...நண்பர் சித்து
சொன்னது போல் எக்ஸ்பிரஸ் அவின்யு எக்ஸ்பென்சிவ் அவின்யு தான்.
பூட் மால் எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுது. பானி பூரி ப்ளேட் நாப்பது
என்றாலும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அப்போ தான் பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக் தம்பியாய் வருவாரே ஒரு மொட்டை அவரை பார்த்தேன்.அவரும் யாராவது என்னை பார்ப்பாங்களா என்று பார்த்து கொண்டே போனார்.சரி அவர் ஆசையை ஏன் கெடுப்போம் என்று அவரை பார்த்து சிரித்து வைத்தேன் அவரும் ஒரு ஸ்மைல் செய்ஞ்சிட்டு போனார். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சேவை.அதுக்கு அப்புறம் நேரா எஸ்கேப் உள்ளே பூந்தாச்சு.... உள்கட்டமைப்பு எல்லாம் பக்கா.... லைப்ரரி இருக்கு...வீடியோ பார்க்க டி.வி இருக்கு...செமையா

இருந்தது.முதல் நாள் என்பதால் யாரையும் செக் பண்ணி அனுப்பவில்லையா?? இல்லை ஆட்கள் பற்றாகுறையா என்று தெரியவில்லை. இங்கயும் ரெஸ்ட் ரூம் சான்ஸ்ஏ இல்லை.... இங்கே அருகில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பட்டையை தட்டினால் நீண்ட குழாவில் தண்ணி வருகிறது. வழக்கம் போல் சுத்தத்தில் அடிச்சிக்க முடியாது. முதல் நாள் என்பதால் இன்னும் சில பல வேலைகள் பாக்கி இருக்கிறது... அதே போல் வேலை செய்யாத லட்டின்களை கழட்டி ரிப்பேர் செய்து கொண்டு இருந்தனர்.
அப்புறம் இன்னொரு முக்கியமான நான் அதிசியத்து பார்த்த விஷயம்..
அது எஸ்கேப் சினிமாஸ்இல் உள்ள ப்ரொஜெக்டர்...எல்லாமே தியேட்டர்
வெளியே அந்தரத்தில் இருக்குங்க... படம் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு....
வருங்காலத்தில் ஆபரேட்டர் என்று ஒருத்தர் இருக்க மாட்டார் போல...
நான் போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது ஒரு பான்ட் போட்ட அக்கா
சாரி மேடம் வந்து போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுனு சொல்லிட்டு
போனாங்க...அதனால இதுக்கு மேல நோ போடோஸ்...


சரி இனிமே தியேட்டர் உள்ளே போவோம்....நான் போன ஸ்க்ரீன் பெயர்
plush ....இது தான் அங்கே இருப்பதிலே பெரிய ஸ்க்ரீன் என்று சொன்னார்கள்.
முதல் முறையா எனக்கு வந்த டிக்கெட் confirmation எஸ்.எம்.எஸ் மூலம்
உள்ளே சென்றது இப்போது தான். உள்ளே போனதும் அசந்துட்டேன்...
நன்றாகவே இருந்தது. ஓர சீட்கள் அனைத்தும் கபூல்(ஜோடி) சீட்தான்.
நல்லா தெளிவா தான் வடிவமைச்சு இருக்காங்க....பத்து ரூபாய் சீட்கள்
அனைத்தும் காலியாக தான் இருந்தது.


சீட்கள் நல்லா அகலமா சோபா போல இருந்தது. புஷ் பேக் வசதி இல்லாதது
குறையே. அப்புறம் சீட் நம்பர் பிளாஸ்டிக் ப்ளேட்கள் விழுந்து கிடந்தன.
என் சீட் மட்டும் தான் அப்படி இருக்குனு நினைச்சேன் படம் ஆரம்பிச்ச
நாலா புறமும் இருந்து அந்த தகர டப்பா சவுண்ட் கேட்டது. முதல் ஷோ
வந்தவங்களே அடிச்சு உடைச்சுட்டாங்கலோ என்று சந்தேகம் வந்தாலும்
அது தானாக கழுண்டு விழுகிறது என்று போக போக தெரிந்தது....!!


இன்னைக்கு தான் முதல் நாள் என்பதனால் அப்படி இருக்கலாம்...போக
போக நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா சவுண்ட் எல்லாம்
தாறு மாறு...சும்மா அதுருது... யுவனின் பின்னணி இசையை இந்த தடவை
மிகவும் ரசித்தேன்...அதே போல் மதி கேமராவையும்.... முதல் நாள்
சவுண்டில் விட்டு போன வசனங்களை தெள்ள தெளிவாக கேட்டேன்...


அப்புறம் ஒரு சின்ன பாப்கார்ன் விலை வெறும் அறுபத்தி அஞ்சு ரூபாய்
தான். ஒரு வெஜ் புப்ஸ் விலை வெறும் நாப்பது அஞ்சு ரூபாய் தான்.
பானி புரி, பேல் புரி போன்ற சாட் ஆயிட்டங்கள் கூட வெறும் அறுபது
ரூபாய்க்கு கிடைக்கிறது. நான் இந்த விலை பட்டியலை பார்த்ததே
சாப்பிட்டது மாதிரி இருந்ததால் அந்த பெரிய கியூவில் நிற்காமல் அப்படியே
திரும்பி விட்டேன்,இன்டெர்வெல் முடிந்து சரியாக படமும் ஆரம்பித்தார்கள்.


அப்புறம் நான் பார்க்கிங் எவ்வளவு ஆகும்னு ஒரு கணக்கு போட்டேன்...
ஏதோ பரவாயில்லை மூப்பது ரூபாய் தான் வந்தது. ஆனா ஒரு படத்துக்கு
மூப்பது ரூபாய் பார்க்கிங் கொஞ்சம் அதிகம் தான். மொத்தம் மூணு பேஸ்மென்ட் பார்க்கிங் இருக்கு....எனக்கு எந்த பேஸ்மென்ட்டில் வண்டி விட்டேன் என்றே மறந்து அதை எடுக்க ஒரு கால் மணி நேரம் ஆச்சு என்பது குறிப்பிடதக்கது.பைக் பார்க்கிங் ஏரியா ஒரே தண்ணியாய் இருந்தது....!!இந்த இடுகை பல பேருக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்....
இப்போதைக்கு மீ எஸ்கேப்...

ஜெட்லி...(சரவணா...)

Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல....!!

நான் மகான் அல்ல....!!கதைனு பார்த்தீங்கனா ரொம்ப சிம்பிள் தான். சாதாரணமா சொல்லிடலாம்
அப்பாவை கொன்னவனை பழி வாங்குற கதைனு...ஆனா திரைக்கதையை
அவ்வளவு சாதாரணமா யாரும் சொல்லிட முடியாது என்று மீண்டும்
நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆனா இவர் முதல் பாதி
கொண்ட போன அழகு செம..செம...செம...! முதல் பாதிக்கு சம்பந்தமே
இல்லாம ரெண்டாவது பாதியை அப்படியே ஒரு கிரைம் ப்ளஸ் ஆக்சன்
ஆக படைத்து இருக்கிறார் இயக்குனர்.

கார்த்தி மீண்டும் தன் படத்தில் காமெடியன் தேவையே இல்லை என்று
நக்கல் அடித்து வெளுத்து கட்டி இருக்கிறார் மனுஷன். காஜல் அகர்வாலை
கண்டதும் காதல் கொள்கிறார்...அனைத்தையும் வெளிப்படையாக
பேசுகிறார். குறிப்பா அந்த குப்பத்து தாதாவுடன் அவர் பேசும் காட்சிகள்
உண்மையிலே நல்ல டச். ஓசியில் கிடைக்கும் பொருளில் கூட விலை
உயர்ந்த ரகத்தை தேர்ந்துடுப்பது என பிச்சு உதறி இருக்கிறார். சண்டை
காட்சியில் செம அதிரடி...செம எக்ஸ்பிரசன்....!!

காஜல் அகர்வால் கிட்ட பெரிய மாற்றம் தெரியுது...வழக்கம் போல தான்
வராங்க...வேற ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல. அடுத்து முக்கியமா சொல்ல
வேண்டிய நபர் ஜெயபிரகாஷ், நிஜமான மிட்டில் கிளாஸ் அப்பாவை போல்
வருகிறார். கார்த்திக்கும் அவருக்கும் இருக்கும் அந்த பாசம் எல்லாமே
நல்லா இருந்தது. காஜலுடன் உங்க அப்பா காதல்க்கு ஓகே சொன்னாரா??
என்று ஜெயபிரகாஷ் கேட்கும் இடமும் அதன் பின் அவர் விளக்கமும்
செம.....!! படத்தில் ஒரு உயிரோட்டம் இருக்கு...


படத்தில் வேறு விஷயங்கள் பத்தி சொல்லனும்னா கண்டிப்பா எடிட்டிங்
பத்தி சொல்லணும்...கடைசி சண்டை காட்சிகளில் எடிட்டிங் செம...
அப்புறம் நம்ம யுவன் பத்தி சொல்லவே தேவை இல்லை...கலக்கி
இருக்கிறார். எனக்கு ஒரே ஒரு குறை "ஒரு மாலை நேரம்" பாட்டு
திரையில் வரவில்லை....


பாஸ்கர் ஷக்தி வசனங்கள் பல இடங்களில் சிரிப்பு வருகிறது. கார்த்தி சொல்லும் "எல்லாரும் விட்டு கொடுத்து வாழ்வாங்க...நீங்க தோசையை
சுட்டு கொடுத்து வாழ்றீங்க..."போன்ற டைமிங் காமெடி வசனங்கள்
நன்றாகவே இருந்தது. கேமரா வேலை எல்லாம் பக்கா...!! அந்த
அஞ்சு பசங்களும் பார்க்கவே டெர்ரர்ஆ இருக்காங்க....ஒரு பையன்
நந்தா படத்தில் சின்ன சூர்யாவாக வருவாரே நல்லா பண்ணி இருக்கிறார்...
கடைசி சண்டையில் ரேணிகுண்டா படத்தில் கார்த்தி போய் வெளுத்தா
எப்படி இருக்கும் அது போல் இருந்தது.....


படம் மொத்தம் ரெண்டு ஹவர் பத்து நிமிஷம் தாங்க ஓடுது....டைம் பாஸ்
கியாரண்டி. நிறைய பேர் வைலன்ஸ் அதிகம்னு சொல்றாங்க..ஆனா எனக்கு
அப்படி ஒண்ணும் தெரியலை...இதோட வைலன்ஸ் அதிகமா எல்லாம் படம்
பார்த்து இருக்கோம். எனக்கு என்னமோ படத்தோட கிளைமாக்ஸ் சரினு
தான் தோணுது... நான் பார்த்த தியேட்டரில் கொஞ்சம் மிக்சட் ரெஸ்பான்ஸ்
தான்... எனக்கு படம் பிடிச்சுருக்கு....முதல் பாதிக்காக இன்னொரு தடவை
கூட பார்க்கலாம்....!!


நான் மகான் அல்ல - வெற்றி மகான்...தியேட்டர் நொறுக்ஸ்:

# ஒரு காட்சியில் காஜலின் தோழி ஒருத்தி பசங்களை பத்தி தப்பு
தப்பாக சொல்வாள்,,,அதாவது பத்து ரூவா டிக்கெட் எடுத்துட்டு கையில்
கோக் வைத்து கொண்டு சீன் போடுவார்கள் என்று.....

இங்கே நம்ம ஆட்கள்...

" நீ மட்டும் என்ன,உங்க வுட்ல சோறே இல்லை ஆனா பிட்சா தான் கேட்பே ,,,"

என்று நண்பர்கள் பட்டாளம் கூறி கலாய்த்து கொண்டார்கள்.


# காஜலை பார்த்து உன் வயசென்ன என்று ஜெயபிரகாஷ் கேட்பார்...
கிழே இருந்து நம்ம ஆள் செம சவுண்டில்...

"நாப்பது அஞ்சு..." என்று கத்தினார்.

அதற்கு காஜல் "22 " என்பார்...

தியேட்டரில் ஒரு வித அதட்டல் சவுண்ட் கிளம்பியது,....


# "வ" குவாட்டர் கட்டிங் படத்தின் ட்ரைலர் போட்டாங்க....சத்தியமா சில
காட்சிகள் புரியலை...இன்னும் ரெண்டு மூணு தடவை பார்த்தா தான்
புரியும்னு நினைக்கிறேன். காரணம் செம பாஸ்ட். படம் கண்டிப்பா
வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன். நண்பர்களுடன் சைதை
ராஜில் ஓரம்போ போன நினைவு இன்னும் மனதின் ஓரத்தில் தங்கி
இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

அதென்ன "வ"... குவாட்டர் கட்டிங் அடிச்ச பிறகு வாந்தி வரும் சவுண்டா...?? இல்லை நான் தான் தப்பா படிச்சிட்டேன்னா??

# தல மங்காத்தா டிசர் போட்டாங்க..... என்ன சொல்றது....சத்தியமா
ஒன்னுமே கேட்கலை...அவ்வளவு விசில், கத்தல். ஆனா அதிக
பில்ட் அப் மாதிரி தான் இருக்கு. அத்தனை குண்டும் சுவத்தை
மட்டும் தான் ஓட்டை போடுது கடைசியில் டீ கப் நொறுங்குது...
தல என்ன சொன்னார்னு கூட கேட்க முடியல...மங்காத்தானு
தான் சொல்லி இருப்பாரு நினைக்கிறேன்....


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஓட்டு போடவும்...
பின்னூட்டத்தில் சந்திப்போம்...


நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Monday, August 16, 2010

காதல் சொல்ல வந்தேன்....

காதல் சொல்ல வந்தேன்!!


இந்த வெள்ளிக்கிழமை மூணு படம் ரீலீஸ் ஆச்சுனு உங்களுக்கு
தெரியாதது இல்ல...எனக்கு ஒரே குழப்பம் என்ன படத்துக்கு போறதுன்னு.
சரி கடைசியா யுவனையும் பூபதி பாண்டியனின் நகைச்சுவையையும் நம்பி மாயாஜால்க்கு வண்டியை விரட்டினேன். பரவாயில்லை எதிர்ப்பார்த்ததை
விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் ஒரு நாப்பது பேரு இருந்து இருப்பாங்க...நான் எங்கே அஞ்சு ஆறு பேரு கூட சேர்ந்து படம் பார்க்க போறோமோ என்று ஒரு திங்கிங்கில் தான் போனேன்.

வழக்கத்துக்கு மாறாக ஜோடிகளை விட சேவல்களே அதிகம் காணப்பட்டன.
அதனால் தியேட்டர் நொறுக்ஸ் பற்றி சொல்லவே வேணாம்..அதுக்கு முன்னாடி நாம படத்தை பத்தி கொஞ்சமாவது பேசுவோம்...

கதையின் நாயகன் பாலாஜி...கனா காணும் காலங்களில் முத்திரை
பதித்தவர்.பட்டாளம் படத்தில் கூட நல்ல ரோல் பண்ணி இருப்பார்.
பாலாஜி நல்லாவே பண்ணி இருக்கார். ஏன் பாலாஜிக்கு டப்பிங் குரல்னு தெரியல...மேக்னாக்கு தாராள மனசுனு படத்தை பார்த்தவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். கதைக்கு ஏற்ற சரியான தேர்வு தான் மேக்னா.
ஆனா ஜூனியர் பையன் கூட இந்த நெருக்கம் ஆகாது மேக்னா அக்கா.
இப்படி நெருக்கம் காட்னா யாருக்குதான் லவ் வராது??...


சபேஷ் கார்த்திக் தான் படத்தையும் நமக்கு நேரத்தையும் ஒட்ட
காமெடி செய்து இருக்கிறார். டைமிங் காமெடிகள் நன்றாகவே
இருந்தது. அதுவும் அந்த ஆனந்தராஜ் "ஹாப்பி ராஜ்" கஜினி மியூசிக்கும்,
அந்த சிங்கும் சிரிக்க வைக்கிறார்கள்.சுந்தர்ராஜன் அப்பாவாக வருகிறார்.
ஆர்யா சிறப்பு தோற்றத்தில் ஒரே சீனில் டாக்டர்ஆக வந்து போகிறார்...
ஆர்யா வர்ற சீன் நல்லாவே இருந்தது...அதுவும் அவர் சாக்லேட் பற்றி
சொல்லும் செய்திகள் எனக்கு புதுசு...இப்பதான் எனக்கு தெரியுது ஏன்
நம்ம பசங்க பெரிய பெரிய பார் சாக்லேட் வாங்கி கொடுக்குறாங்கனு...காதலை ஏன் சொன்ன??

ரெண்டு வயசு பெரிய பொண்ணோட பார்த்தவுடனே காதல் வந்தது
சரி...அவதான் தம்பினு சொன்ன பிறகும் ஏன் காதலை சொல்லணும்...
சத்தியமா இந்த படத்தை பார்த்த எந்த ஒரு லவ் பீலிங்க்ஸ்ஸும்
வரவில்லை என்பதே உண்மை எரிச்சல் தான் வந்தது. அதுக்காக படம் மொக்கையானு கேட்டா அப்படி எல்லாம் சொல்ல முடியாது. இது ஒரு
டைம் பாஸ் படம்... யுவன் சாங்க்ஸ், காமெடி மற்றும் படத்தின் நீளம்
(வெறும் ரெண்டு மணி நேரம் தான்) இவையெல்லாம் படத்துக்கு ப்ளஸ்...
முதல் பாதி வேகமாய் போனாலும் ரெண்டாவது பாதியில் ஆடி மாசம்
ஸ்பீக்கர் மாதிரி பாலாஜி சொன்னதே சொல்லி கொண்டிருப்பது கொஞ்சம்
சலிப்பை வரவைக்கிறது....!!


காதல் சொல்ல வந்தேன் : சரியான ஜோடியா பார்த்து சொல்லி இருக்கலாம்!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# மாயாஜால் இன்னொரு ஆராதனா தியேட்டராக மாறி கொண்டு வருகிறது...
சுத்தம் சுத்தமா இல்லை...நம்ம அரசு பேருந்தில் சீட்டில் தலைக்கு ஒரு வெள்ளை துணி கருப்பாய் இருக்குமே அது போல் இங்கே பேப்பரில் வைத்து...எத்தனை நாள் ஆச்சுனு தெரியல...சீட்டில் ஒட்டடையா இல்லை அந்த பேப்பர்ஆ என்று ஒரே குழப்பம்....!! அதே போல் படம் ஆரம்பித்த ரெண்டு நிமிடத்தில் படம் நின்று விட்டது...இதை பார்த்த நம்ம ஆட்கள் " படம் விட்டாங்க வாயா போவோம்"என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.நான் போனது ஸ்க்ரீன் எட்டில் புது ஸ்க்ரீன்ஏ இந்த லட்சணம்....இதில் வேறு இன்னும் நான்கு புதிய ஸ்க்ரீன்கள் வரபோதாம்....இனி மாயாஜால் போவதை கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கணும்...

# பாலாஜி கதை சொல்ல ஆரம்பிப்பார்..."நான் சந்தியாவை எப்போ பார்த்தேன்?"..

இங்கே நம் குடிமகன் கத்தி "யாரை கேட்குற..."


# இன்டெர்வல் ப்ளாக் தான் படத்தில் மிக பெரிய காமெடி...கிட்டத்தட்ட
தியேட்டரில் அனைவரும் சிரித்து விட்டனர்...ஆனா அது காமெடி காட்சி
அல்ல ட்ராஜடி காட்சி....ஆனா காமெடி ஆகி போச்சு...


# நண்பர்கள் குழுவாய் வந்தவர்கள் ரெண்டாவது பாதி மொக்கையை பார்த்துட்டு இருக்கும் போதே "டேய் வெளியே போய் கிரிக்கெட்ஆவது பார்க்கலாம்டா..."என்று சொல்லி கொண்டிருந்தார்.

# ஒரு காட்சியில் பாலாஜி "இப்ப என்ன பண்ணலாம்??" என்று கேட்பார்..
இங்கே நம்ம ஆள் " நாம எந்திருச்சி வெளியே போலாம்..." என்றார்..செம டைமிங்...


# ரெண்டாவது பாதியில் காலேஜ் டி.சி. வாங்க சுந்தராஜன்,பாலாஜி அவரது
அம்மா மூவரும் ஓவர் பீலிங்க்ஸ்...அதுவும் அம்மா பேசறது எல்லாம் முடியல...பின்னாடி இருந்த நம்ம ஆள் "ஒக்காளி ஓவர்ஆ பண்றாங்க மச்சான்..." என்று நண்பரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


# கரெக்ட்ஆ அன்புள்ள சந்தியா பாட்டு வரதுக்கு முன்னாடி ரெண்டாவது
ரோவில் இருந்த குடிமகன் நினைவிருக்கும் வரை பாட்டை எடுத்து விட்டார்
"சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா..."னு தியேட்டரே சிரிப்பில் மூழ்கியது.


# மேக்னா ஒரு காட்சியில் பாலாஜியிடம் "ஊருக்கு போறேன்..." என்பார்...
வெறுப்பில் இருந்த ஒரு நபர் " போய் தொலை சனியனே..." என்று
கத்தினார்...


# கடைசி காட்சியில் பஸ் டிரைவரிடம் தான் வந்து பஸ் முன் விழும்
போது பிரேக் போட்டுருங்க அண்ணே என்று பாலாஜி சொல்வார்...
இங்கே சைடில் இருந்தவர்..."டேய் அது கவர்மன்ட் பஸ்டா....நீ சத்தியமா
காலி...ஏதோ தண்ணி வண்டினா கூட பரவாயில்லை...."
என்று உரக்க
கத்தினார்...மீண்டும் சிரிப்பலை...

# கிளைமாக்ஸ் காட்சியில் பாலாஜி இறந்தவுடன் பின்னாடி இருந்த
நண்பர்கள் குழு..."சக்சஸ்..சக்சஸ்..சக்சஸ்.." என்று பெரும் கூச்சல்
போட்டு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்கள் என்றால் பார்த்து
கொள்ளுங்கள்....

# படம் பார்த்துட்டு வண்டி எடுக்க வந்தா...பாருங்க சைட் மிர்ரர் கதியை..

ஆனா இந்த அளவுக்கு எல்லாம் வளைச்சு இது வரைக்கும் பார்த்தது
இல்லை....இந்த தடவை முதல்லே பார்த்துட்டேன்...சில தடவை பார்க்காமலே வண்டி எடுத்து விட்டு கொஞ்சம் தட்டு தடுமாறி மாற்றுவேன்....
என்னத்த சொல்றது போங்க....


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை
போடுமாறு கேட்டு கொள்கிறேன்....


ஜெட்லி...(சரவணா...)

Thursday, August 12, 2010

ஒரு ப்ளாக்கரின் வாக்குமூலம்...??

தொடர் பதிவா இல்ல டெர்ரர் பதிவா.....


(இந்த மாதிரி தெருவில உட்கார்ந்து ப்ளாக் எழுத கூடாதுனு
சொல்லவந்தேன்.......)

அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் அண்ணன் தொடர்
பதிவுக்கு அழைத்து இருந்தார்... பொதுவா தொடர் பதிவுனா
ஏதாவது அனுபவம்,இல்லை பொதுவான கேள்வி கேட்பாங்க...
ஆனா இதிலே நம்ம ஜாதகத்தை தவிர எல்லாத்தையும்
கேட்குறாங்க... நாம பண்ண உட்டாலக்கடி வேலையெல்லாம்
வேற சொல்ல வேண்டி இருக்குது.... சரி ஏதோ என்னால்
முடிஞ்சது....


1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜெட்லி...2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லைங்க...என் பேரு சரவணன். ஜெட்லினு பேர் வைக்க ஒரே
காரணம் அன்னைக்கு முதல் முறையா ப்ளாக் எழுதும்
போது இட்லி சாப்பிட்டேன்ங்க....மற்றொரு காரணம்...
ஜாக்கி தான் நம்ம பேவ்ரைட் ஆனா ஏற்கனவே ஜாக்கி சேகர்
அண்ணன் இருக்கார்னு...எல்லோருக்கும் தெரிஞ்சா பேரா
வைப்போம்னு ஜெட்லினு வச்சிக்கிட்டேன்...!!3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

ஏன்டா காலடி வச்சேனு மூணு நாலு பேரு அசிங்க அசிங்கமா
தீட்னாங்க...என்னது அதை கேட்கலையா...சரி... நான் காலடி
எடுத்த வச்ச அன்னைக்கு மழை,புயல் எல்லாமே வந்தது...
ஆனா படிக்க ஆளுங்க தான் வரல என்பது வேறு விஷயம்...!!4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

அந்த கொடுமையை வேற சொல்லனுமா... எனக்கு ரொம்ப
தெரிஞ்ச நாலு பேருக்கு போன் பண்ணி படிக்க சொல்வேன்...
அதிலிருந்து அவர்கள் என் போன் வந்தாலே அட்டன்ட் செய்வதில்லை....இதை விட உச்சபட்ச கொடுமை என்னன்னா
என் பால்ய நண்பன் ஒருத்தன் அடிக்கடி வீட்டுக்கு வருவான்..
அவன் வரும் போது சிஸ்டத்தில் என் ப்ளாக் ஓபன் பண்ணிட்டு..
படிடா என்று கொடுமை படுத்துவேன்... அவனும் ஒரு
மாசம் பார்த்தான்..அப்புறம் வீட்டுக்கே வரது இல்லனா
பார்த்துக்குங்க... இந்த மாதிரி பல டெர்ரர் வேலை பார்க்கணும்...!!
உங்கள் ப்ளாக் பிரபலம் அடைய....

(பி.கு)

உங்க வீட்ல சொந்தகாரங்க ரொம்ப நாள் டேரா போட்டங்கனா..
நம்ம ப்ளாக் ஓபன் பண்ணி உடுங்க...ஓடி போயிருவாங்க....!!5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வளவா எதுவும் சொல்றது இல்ல...சும்மா டூர் போன அதை
பத்தி பதிவு போடுவேன்...வேற ஒண்ணும் ஷேர் பண்ணிக்கிறது
இல்ல... சினிமா எனக்கு புடிக்கும் அதனால் அதை பத்தி
மட்டும் அதிகம் ஷேர் பண்ணிப்பேன்..... இல்லைனா காரணம்
சிம்பிள்... நம்மை பத்தி எழுதி எதுக்கு இன்னும் அதிகமா
மொக்கை போடணும்னு தான்...6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போவமா தான் முதல்ல வாரத்துக்கு அஞ்சு பதிவெல்லாம்
போட்டுட்டு இருந்தேன்...இப்ப வர வர வேலை அதிகமா போச்சு...
படம் பார்க்க போறதே திண்டாட்டம் ஆகி போச்சினா பாருங்க..
சாம்பாதிக்கிற ஆசையெல்லாம் இல்லைங்க...நாலு பேருக்கு
நல்லது பண்ணனும், அவ்வளவுதான்...!!


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

நண்பர்களுக்கு இந்த ஒரு கொடுமை பத்தாதா??

பல வலைப்பக்கங்கள் ஆரம்பிக்க நான் ரெடி...படிக்க நீங்க
ரெடியா.... கவிதைக்கு ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சுரவா??


சாம்பிள் :

அண்டங் காக்க கருப்பு...
பக்கத்துக்கு உட்டு சொவரு வெளுப்பு...
பழயதுல போடு உப்பு...
நாலு நாள் குளிக்கலைனா நீ கப்பு...!!


மேல உள்ள கவிதை குறித்து அனைத்து வித உரிமைகளும் @ஜெட்லி..!!


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இந்த தொடர்ப்பதிவை ஆரம்பிச்சவர் மேல தான் எனக்கு ரொம்ப
கோபம்...எப்படி கோத்து விடுறார் பாருங்க...யார் அவர்னு தெரிஞ்சா
சொல்லுங்க.....

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என் முதல் பதிவே அருந்ததி படம் விமர்சனம் தான்...தியேட்டர்ல
பத்து பேர் இருந்தாலும்..படம் நன்றாக இருந்தது... யார் படிக்க
போறா என்று நினைத்து கொண்டிருந்தால்..சுரேஷ் பழனியிலிருந்து
அண்ணன் தான் முதல் பின்னூட்டம்...மறக்க முடியாதது...
அப்புறம் நண்பர் சித்து உறுதுணையாக இருந்தார்...


10 . கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

ஏன் விட்டா பத்திரத்தில் கையெழுத்து கேட்டு வாங்குவீங்க போல...
ரைட் நான் கிளம்புறேன்... என்னை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லங்க....


இதனை தொடர அழைக்க விரும்புவது...

எழுதாத நண்பர்கள் அனைவரையும்....
ஆனா இந்த தொடர் பதிவில் ஏதோ உள்குத்து இருக்குனு நினைக்கிறேன்...தொடர போறவங்க பார்த்து ஹன்டல் பண்ணுங்க....இன்னுமாட நீ ப்ளாக் எழுதுற...அப்படின்னு எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா கத்தி எடுத்துட்டு வருது...இப்போதைக்கு எஸ்கேப்...
புடிச்சவங்க ஓட்டு போடுங்க....நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Monday, August 9, 2010

பாணா காத்தாடி

பாணா காத்தாடி - கிழிஞ்ச காத்தாடியா??
படம் ரீலீஸ் அன்னைக்கு போறது தான் முதல்ல ப்ளான், வேலை
காரணமாக போக முடியவில்லை. திங்கள் கிழமை தான் ப்ரீ என்பதால் பாணா போலாமா இல்ல ப்ரேடடர் போலாமான்னு ஒரே குழப்பம்... சரி பாணா போலாம் என்று தியேட்டர் லிஸ்ட் பார்த்தால் எல்லாமே தூரம்...சரி மாயாஜால் போலாம் அப்படின்னு முடிவு பண்ணா 120 ரூபாய் கொடுத்து போனுமா என்று யோசித்தேன்... இருக்கவே இருக்கு நம்ம சாய் சாந்தி 80 ரூபாய் தான் டிக்கெட் என்று போனேன். சாய் சாந்தியில் 80 ரூபாய் அதிகம் தான்!!யார் ஹீரோ...??

படம் ஆரம்பிச்சு இருபது நிமிஷத்தில் எனக்கு ஒரே குழப்பம்...
அது யார் ஹீரோ என்பதே...கருணாசா இல்லை அதர்வாவா
என்று. முதல் இருபது நிமிஷம் கருணாஸ் தான் வருகிறார்.'
கருணாஸ் டைமிங் காமெடியில் உண்மையிலே பிச்சு உதறுகிறார்.
கருணாஸ் அண்ட் கஜேந்திரன் காமெடி ரசிக்கும் படியா இருக்கு.
முக்கியமா அந்த சட்டை பாக்கெட்டில் காசு மேட்டர் வந்தாலே
தியேட்டரில் சிரிப்பொலி கேட்குகிறது,


அடுத்ததா மனசில் நிக்கறது அதர்வா அம்மாவாக வரும் மௌனிகா..
செம ஆக்டிங்...பக்கா லோக்கல் அம்மா... தன் மகனை போலீஸ் பிடிச்சுட்டு போய்டுச்சு என்றவுடன் தன் பையனை பற்றி சொல்லும் காட்சி உண்மையில் செம...!! நம்ம பிரசன்னா உண்மையில் நன்றாக பண்ணி இருக்கிறார். ஒரு படம் நடிச்சு ஹிட் ஆனாலே நம்ம ஹீரோக்கள் பண்ற அலும்பு தாங்க முடியல...ஆனா இந்த விசயத்தில் கண்டிப்பா பிரச்சானவை பாராட்ட வேண்டும்...


சமந்தா...சமந்தா....


சமந்தா உண்மையிலயே ரொம்ப சூப்பர்ஆ இருக்காங்க...ஆனா
நடிப்பு தான் என்ன விலைனு சில இடத்தில் கேட்குறாங்க...
இருந்தாலும் நாம மன்னிச்சு விட்ருவோம்.... காலம் காலமா
நம்ம தமிழ் சினிமாவில் வருகிற நாயகி வேடத்தில் தான்
வர்றாங்க...!!


அதர்வா... என் கூட முதுகலை பட்டம் படிச்ச பையன் ஒருத்தன்
நோஞ்சான் மாதிரி இருப்பான், ஆனா குரல் சும்மா கனீர் கனீர்னு
இருக்கும்... அதே மாதிரி தான் அதர்வா குரலும்..இது அவருக்கும்
ப்ளஸ்ஸும் மைனஸ்ஸும் கூட.... குப்பத்து தமிழை கஷ்டப்பட்டு
பேசுகிறார் என்று படத்தை பார்த்தாலே புரியும்...!! மற்றபடி
டான்ஸ் எல்லாம் நோ சான்ஸ்....!!


முதல் பாதி அப்படி அப்படினு போகுது...ஆனா அந்த பைத்தியம்
பிடிக்குது சாங் ஒரு மினி இன்டெர்வல் மாதிரி தான் இருந்தது.
அதுக்கு அப்புறம் தான் இன்டெர்வல் வந்தது வேற விஷயம்...
இன்டெர்வல் ட்விஸ்ட் கொஞ்சம் மொக்கையா தான் இருந்தது
இல்ல சிறுபிள்ளைதனமா இருந்ததுனு கூட சொல்லலாம்...!!
ரெண்டவாது பாதியில் கொஞ்சம் கொஞ்சமா நம்ம பொறுமையை
இயக்குனர் சோதனை செய்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆள் ஆளுக்கு புத்தி மதி மற்றும் வாழ்க்கை தத்துவங்களை
அள்ளி விடுகிறார்கள்...அதுவும் அதர்வா மொட்டை மாடியில்
அள்ளி விடும் தத்துவம் செம காமெடி... சமந்தா நண்பி பேசும்
மழலை தமிழ் ஐயோ முடியலை சாமி ரகம்..!!


கடைசியில் வரும் ஐட்டம் சாங் எதுக்குனு ஆண்டவனுக்கே வெளிச்சம்...சரி அதில் வரும் ஐட்டமாவது நல்லா இருக்கானு பார்த்தா..சுத்தம்... கேவலமா இருந்தது...ஏதோ சுண்ணாம்பு அடிச்சு பூசின மாதிரி.... முமைத்கான் போட்டிருந்தா அருமையா இருந்து இருக்கும்...இல்லனா அவங்க அக்காவையாது போட்டு இருக்கலாம்...!! ஐட்டம் சாங்கில் சொல்றேன்...!!

(இது தான் முமைத் கான் சிஸ்டர்... சப்யர் கான்...ஏதோ என்னால் முடிந்த பொது அறிவு தகவல் மக்களுக்கு...!! )
சரி கிளைமாக்ஸ் வருவோம்... என்ன நடக்கும் என்று ஒரு
எதிர்ப்பார்ப்பு இருந்தாலும்...இப்படி நடந்து போச்சேனு ஒரு
சோகம் வந்தாலும்.. ஓரளவுக்கு தான் மனசை டச் பண்ணிச்சு...
அதுக்கு காரணம் அதுக்கு முன்னாடி வந்த நாடகதனமான
காட்சிகளால் இருக்கலாம்....! பாணா காத்தாடி ஒரு டைம்
பாஸ் படம் தான் என்றாலும் சில விஷயங்களில் சலிப்பு
வருகிறது...கருணாஸ் மட்டும் இல்லைனா காத்தாடியை
காப்பாத்தி இருக்கறது ரொம்ப கஷ்டம்... பார்க்கறவங்க
பாக்கலாம்...!!


பாணா காத்தாடி - சூஸ்திரம் மட்டும் சரியில்லை...!!


தியேட்டர் நொறுக்ஸ்:


# படத்துக்கு போறதுக்கு முன்னாடி நம்ம சாந்தி தியேட்டர்
பக்கத்தில் இருக்கிற கடையில் பூரி சாப்பிட்டேன்... படத்தை
விட பூரி நன்றாகவே இருந்தது... பூரி சாப்பிடாவாவது படத்துக்கு
போங்கப்பா...
# ஒரு காட்சியில் அதர்வாக்கு காதல் வந்தவுடன் தெரு லைட்
மற்றும் அவங்க வீட்டு கூண்டு பல்பு எல்லாம் தானாக எரியும்...
இதை கண்ட நம்ம ஆளு...

" யார்டா லைட்டை போட்டது..."

என்று கத்த ஆரம்பித்து விட்டார்...


# மப்பில் வந்த நண்பர்கள் குரூப்பில் ஒருவர் இன்டெர்வல் லைட் போட்டவுடன் தான் எழும்பினார்...அவர் நண்பர்களிடம்
கேட்ட கேள்வி

"பாணா காத்தாடி படமா மச்சி ஓடுது...??"


# முரளி ஒரு காட்சியில் வந்து...அதர்வாவிடம்

"லவ் வந்தா உடனே சொல்லிடுங்க... இல்லனா இதயத்தில்
ஓட்டை விழுந்துடும்...நான் இன்னும் காலேஜ் படிச்சுட்டு
இருக்கேன்" என்பார்... தியேட்டரில் நல்லா ரெஸ்பான்ஸ்...


# அதே காட்சியில் அதர்வா தன் கனத்த குரலில் சமந்தாவிடம்

"இது வரைக்கும் என் பெர்த்டேவை இப்படி கொண்டாடினது
இல்லை..." என்று பீலிங்க்ஸ் ஆக பேசுவார்...

இங்கே நம்ம ஆட்கள்..."டேய் போதும்டா.."என்று கத்த ஆரம்பித்து
விட்டனர்.

# படம் விட்டு வெளிய வரும் போது ஒருவர்

"கிழிஞ்ச காத்தாடி மாதிரி இருக்கு இது தான் பாணா
காத்தாடியா" என்று நண்பரிடம் சொல்லி கொண்டு வந்தார்..

"ஒவ்வொரு மனுசனக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்...":


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள்
வாக்கினை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம்...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

சாமுராய், எந்திரன் , டயலாக்.......!!

சாமுராய் :


நீண்ட நாட்கள் கழித்து டி.வி.யில் ஒரு படத்தை இன்டெர்வல்க்கு பிறகு படம் முடியும் வரை பார்த்தேன் என்றால் அது சாமுராய் தான். இன்டெர்வல்க்கு முன்னாடி ஏன் பார்க்கலைனா வேலை தான் காரணம். பல பேரு சொல்வாங்க சாமுராய் மொக்கை படம்னு.... ஆனா முழுசா மொக்கைனு சொல்ல முடியாது. படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் சொல்ல வந்த கருத்து சரி என்றாலும்...வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்தாலும்... படத்தின் எடிட்டிங் ரொம்ப மோசம்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

சாமுராய் நான் இளங்கலை படிக்கும் போது ரீலீஸ் ஆச்சு. எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் தான் படம் பார்த்தேன். படம் பார்க்கும் போதே கடைசி கட்ட காட்சிகளில் எனக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே போல் படத்தின் வசனங்கள் நச். படத்தின் மிக பெரிய பலம் ஹாரிஸ் தான். அவரின் பின்னணி இசையும் குறிப்பாக அந்த மூங்கில் காடுகளே பாட்டும் நோ சான்ஸ்.

படம் பார்த்த பிறகு என் கல்லூரியில் நண்பர்களை ஒட்ட அடிக்கடி இந்த படத்தில் வரும் ஜோசியர் காமெடி வசனத்தை மாற்றி மாற்றி சொல்லி கலாய்ப்போம்...அது " வெறும் அம்பு தான் நீ...அதை விட்ட வில்லன் யார்னு எனக்கு தெரியும்" என்பதே.படம் ஓடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முன் வந்த அஜித் நடித்த சிடிசன் படமும் ஒரு காரணம். ஆனா ரெண்டு படத்துக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கு அது ரெண்டுமே அவுட் என்பது மட்டுமே!!

இந்த படத்தில் வரும் சில பல சம்பவங்கள், வசனங்கள் நம் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றது ஆகும். தெய்வாவிடம் தியாகு கூறும் அனுபவ மொழிகள் நன்றாக இருக்கும். இந்த தடவை படம் பார்க்கும் போது கடைசியில் மிக பெரிய (ஆ)தப்பு ஒன்றை கண்டுபிடித்தேன் அது கடைசியில் எங்கோ காட்டில் நாசர் விக்ரம் அண்ட் கோ..வை விட போகும் போது தீடிர் என்று அனிதா வந்து நிற்பார்... என்ன கொடுமை சார் இது...!!

ஆனால் இன்னொரு தடவை இந்த படத்தை டி.வி.யில் போட்டாகூட திரும்பவும் நான் பார்ப்பேன். எனக்கு இந்த படத்தில் வரும் உயிரோட்டம் மிகவும் பிடிக்கும்.... உதராணமாக...விக்ரம் சின்னி,விக்ரம் நாசர், விக்ரம் ஜெயா ரே, விக்ரம் அனிதா இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் நன்றாக இருக்கும்.ஆனா இந்த படத்தில் அவங்க இயற்ற சொன்ன சட்டம் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.....

*******************************

டயலாக் :

எக்மோர் டாஸ்மாக் நண்பர்கள் கூட்டத்தில் இருவர்...

" மச்சி நாட்டுல என்ன என்னமோ கண்டுப்பிடிக்கிறாங்க...ஆனா சரக்கு அடிச்சா வாசனை வராத மாதிரி சரக்கு கண்டு பிடிக்க மாட்டறாங்களே"

"மாமே நம்ம ஊர்ல சரக்கு அடிச்சா போதை வராத மாதிரி வேணும்னா கண்டுப்பிடிப்பாங்க....வாசனை வராத மாதிரி எல்லாம் ஹுஹம் "

###################

ரெண்டு ப்ளாகர்ஸ் பேசி கொண்டது...

"நீங்க இன்னும் நல்லா ட்ரை பண்ணா முன்னாடி வரலாம்..."

" எதுக்கு முன்னால... ட்ரெயின் முன்னாடியா இல்ல லாரி முன்னாடியானு தெளிவா சொல்லுங்க ..."

**************************************

எந்திரன் :

முதல் தடவை கேட்கும் போது பாட்டு கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது...ஆனா இப்போ திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கேன்... முக்கியமா புதிய மனிதாவும்...,அரிமா அரிமாவும்.... இப்பவே படம் பார்க்கும் ஆர்வம் வந்தாலும்...இவ்ளோ பெரிய பில்ட் அப் வோட படம் வருதே என்று ஒரு ஓரமா அரிக்குது... படம் வந்ததுக்கு அப்புறம் ரஜினி சன் மியூசிக்ல லைவ்ல வர்ற நாளை ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கேன்...அதே மாதிரி தியேட்டர் தியேட்டரா போவரோ என்று சந்தேகமும் இருக்கு...ஆனா ஒரே சந்தோசம் ரஜினி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஜட்ஜ் ஆக போக மாட்டார் என்பதே.....என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும்...!!

ஜெட்லி... (சரவணா...)

Wednesday, August 4, 2010

கனகதுர்காவுடன் நான்....!!

கனகதுர்காவுடன் நான்....!!


கனகதுர்கா... இப்போ என் கூட தான் இருக்கா .ரெண்டு மாசம் முன்னாடி அவளை கே.கே.நகரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்தவுடனேயே புறட்டனும் போல இருந்தது, ரேட் கேட்டேன், 250 ரூபாய் என்றார்கள்... வாங்கி வந்துவிட்டேன்.ஹலோ ஒரு நிமிஷம்,நான் பேசிட்டு இருக்கிறது நம்ம பாஸ்கர் சக்தி அண்ணன் எழுதின கனதுர்கா என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்தை பத்தி மட்டும்னு சொல்லிக்க விரும்புறேன்....!! வம்சி புக்ஸ்வெளியீட்டு உள்ளார்கள்.

கனதுர்கா என்று ஒரு சிறுகதை தொகுப்பு இருக்கிறது என்று அண்ணன் தண்டோரா மணிஜி அவர்கள் ஒரு தடவை எழுதி இருந்தார். மேலும் அதில் வர்ற அழகர்சாமியின் குதிரைசிறுகதையை தான் 'வெண்ணிலா கபடி குழு' சுசீந்திரன் அடுத்த படமாக எடுக்க போகிறார் என்றும் கூறியிருந்தார். இதுக்கு அப்புறமும் புக்கை வாங்காம விட்ட எப்படினு...நேரா நம்மடிஸ்கவரி புக் பேலஸ் சென்று கனகதுர்கா மற்றும் மேலும் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.பதிவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு.

சத்தியமா இந்த பதிவு புத்தக விமர்சனம் இல்லங்க....இந்த புத்தகத்தில் மொத்தம் 31 சிறுகதைகள் இருக்கு. இதில் நான் படிச்சு ரசிச்ச சில சிறுகதைகள்னு சொன்னா எல்லாத்தையும்சொல்லணும்...அதனால ரொம்ப பிடிச்ச....பாதித்த கதைகள்பத்தி மட்டும் சொல்றேன்...பாஸ்கர் சக்தி அவர்கள் தேனிபக்கம் என்பதால் இந்த தொகுப்பில் பல கதைகள் அங்கே நடப்பது போல் இருக்கும்... சில கதைகளில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தான் தொகுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
*******************
அழகர்சாமியின் குதிரை:
எனக்கு எப்பவுமே ஒரு ஆர்வம் உண்டு அது ஒரு நாவல் அல்லது சிறுகதையை எப்படி படமாக எடுப்பார்கள் என்று பார்க்க ஆசை. அதனால இந்த கதையை தான் முதலில் வாசித்தேன். இந்த கதையில் பல கேரக்டர் வரும், நையாண்டி நக்கல் என்று குறைவில்லாமல் சுவாரசியமாக சென்றது.
நாமும் இந்த கதைக்குள் சென்றது போன்ற உணர்வு கண்டிப்பாக
ஏற்படும்.
ஊரில் இருக்கும் அழகர்சாமியின் வாகனமான உயிரில்லா குதிரை
காணாமல் போனதால் நடக்கும் சம்பவங்களே கதை. இந்த கதையில்
நாயகனாக நடிக்க போறவர் அப்புக்குட்டி என்று படித்தேன். நல்ல
தேர்வு தான். கண்டிப்பா படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது..
கதையை படித்தாலே பல இடங்களில் சிரிப்பு வரும்...அதுவும்
அந்த டைமிங் காமெடிகள் செம...!!
மகன் :
இந்த கதையில் வரும் பையன் தன் அப்பாவை பற்றி பேசுவதே
கரு. ஆனால் அப்பாவை பாராட்டி பேச மாட்டான்..மட்டம் தட்டுவது
போல் கதை செல்லும்... தன் அப்பாவை விட தன்னை உயர்வாக
நினைப்பான். தன் அப்பாவின் நினைவற்றால் நினைத்து கடைசியில்
அவன் கண்ணீர் சிந்தும் போது...உண்மையிலே எனக்கு தலையில்
சூர்னு ஏறிச்சு...பீலிங்க்ஸ்.... இந்த கதையை படிக்கும் போது மறைந்த என் அப்பாவின் நினைவும் வந்தது...!!சுஜாதாவோட பீட்டர் கதைக்கு அப்புறம் இந்த கதையை நிறைய பேர் கிட்ட இப்போ சொல்லிக்கிட்டு இருக்கேன்......
ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன் :
இந்த கதை ஒரு சிறு பையனுக்கும் அவனது சித்தப்பாவுக்கும்
இடையே உள்ள உறவை மிக இயல்பாக காட்டுகிறது. இந்த
கதையை படிச்சு முடிச்சவுடன்...ச்சே.. நமக்கு இப்படி ஒரு
சித்தப்பா இல்லாமா போயிட்டாரே என்று வருத்த படவைக்கும்.
தன் அண்ணனுக்கு நேர்மாறான ஒரு கேரக்டர், எதிலும்
கோபப்படாமல் மனிதநேயத்துடன் இருப்பவராக அந்த
பையனுக்கும் காட்பாதர் ஆக வரும் சித்தப்பா கேரக்டர் சூப்பர்....!!


வேலப்பர் மலை :

தனது மாமாவுக்கும் தனக்கும் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சிகள்
மற்றும் தான் வலம் வந்த தென்ன மரதோப்பை ஏன் மாமா
தீடிர் என் விற்க போகிறார் என்று கதை ஒரு டச்சிங்காவே
சென்றது. நானும் அந்த பச்சை பசேல் கிராமத்துக்கு போன
உணர்வு கிடைத்தது.நட்சத்திர கடை நொண்டன்:

செம நக்கல் நையாண்டி இந்த கதையில் உண்டு. அதே போல்
பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத கதை. நொண்டன் பேர் காரணம்
'நொண்டப்பய' என்பதே. ஜோசியகாரரை நொண்டன் நோண்டுவது
அதனால் அவர் சாபம் விடுவது.... கடைசியில் என்ன நடக்கும்
என்ற ஒரு ஆர்வம் கண்டிப்பாக படித்து கொண்டிருக்கும் போதே
வரும்..... அப்படியே மனகண்ணில் குறும்படம் பார்த்த திருப்தி..


வாட்டர் லூ :

இப்போதைக்கு நம்ம ஊரில் பல பேர் செய்து கொண்டிருக்கும்
வேலை தான் இது. அதான்ங்க ஏமாத்து வேலை, பிராடு பண்றது...
இதில் வரும் நாயகன் நெகடிவ் கேரக்டர்..அவர் செய்த பிராடு
வேலைகளை பட்டியிலிட்டு தன் மருமகனிடம் சொல்வார்,..
அவனையும் அப்படியே இருக்க சொல்வார்..கடைசியில் அவரே
ஏமாந்தும் போய்டுவார்....


உதயாவுக்கு திலகா சொன்ன கதை :

கண்டிப்பா இந்த கதையோட கிளைமாக்ஸ் இப்படி இருக்கும்னு
யூகிக்கவே முடியலை. காதல் தோல்வி பற்றி திலகா சொல்லும்
காரணங்கள் நன்றாக இருந்தது.


நாகம் :

நாகையா என்பவரை பற்றி கதை பேசுகிறது. பாம்பு விஷம்
முறிப்பவராக அந்த கிராமத்தில் இருக்கிறார். அனைவரும்
மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கின்றனர். தீடிர் என்று
ஊரில் ஒருவரது குடிசையை காலி செய்து அதை நாக கோவிலாக
மாற்றி விடுகிறார் இந்த நாகையா. கடைசியில் பாம்பு கடித்தே
நாகையா இறந்து போவது...கண்டிப்பா நமக்குள் பல கேள்வி
எழுப்பும்....

வீராசாமி பி.காம்.

இந்த கதையின் நாயகன் போல் நம்மூரில் இன்னும் சில பேர்
சுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.கண்டிப்பாக நாம்
அனைவரும் இந்த கேரக்டரை நம் வாழ்நாளில் சந்தித்து
இருப்போம். தான் தான் இந்த ஊரில் அதிகம் படித்தவன்
அடுத்தவன் பேச்சை கேட்ககூடாது என்று நினைத்து நினைத்து
மனம் முற்றியவன் பற்றி கதை...


விரியன் பாம்பு குட்டிகள் :

ஊர் ஒதுக்கு புரத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்த கருப்பு
நாயின் சோக வடுவே இந்த கதை. அந்த நாயை நினைத்தால்
ரொம்ப பாவமாக இருக்கிறது. ஆனா இங்கே மேல அந்த
நாயை காப்பாற்றுகிறேன் என்று அதை சாக அடிக்க முயற்சி
செய்வார்கள். கடைசி ஐடியாவில் அந்த நாய் செத்தும் விடும்...
இந்த கதையை படித்து முடித்ததும்...இது தான் நாய் படும்
பாடா...என்று யோசிக்க வைத்தது....!!இன்னும் நிறைய பிடித்த கதைகள் இருக்கு...பதிவு ரொம்ப
பெருசா போற மாதிரி இருக்கு...அதனால் இப்போதைக்கு அப்பீட்டு...
உங்களுக்கு பதிவு பிடிச்சு இருந்தா ஓட்டு போடுங்கள்....நன்றி

ஜெட்லி...(சரவணா...)