Friday, August 27, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்!!

பொது அறிவு செய்திகள் :


ரொம்ப நாள் ஆச்சுங்க பொது அறிவு செய்தி போட்டு....நிறைய நண்பர்கள்
ஏன் போடல ஏன் போடலனு ஈ மெயில் மற்றும் போனில் கேட்கலனாலும்..
இப்போ ஏதோ கிராம அதிகாரி தேர்வு ஒண்ணு வருதாமே,அதனால நானா
குப்புற படுத்த சிந்திச்சு நாம போடுற பொது அறிவு செய்திகள் ஆறு பேருக்கு
உதவும் என்ற நோக்கத்திலே, என்னால் முடிஞ்ச நல்ல செய்திகளை அள்ளி
தெளிச்சி இருக்கேன்....!! சூஸ் தி பெஸ்ட் அன்சர்....


************************************

முக்கிய அ(பி)ட்டு செய்திகள் :


சவுகரியமான கதாநாயகனுடன் " முத்த காட்சியில் நடிப்பேன் "

நடிகை ரம்யா நம்பீசன் பேட்டி...


நம்ம நாட்டுக்கு ஏன் உலகத்துக்கே தேவையான முக்கியமான கேள்வியை
ரம்யா நம்பீசனிடம் கேட்ட நண்பர்க்கு ஆயிரம் நன்றிகள். அந்த கேள்வி
"முத்த காட்சியில் நடிப்பீங்களா??" அதற்கு ரம்யா அவர்கள் தனக்கு
சவுகர்யமான நடிகர் கூட நடிப்பேன் என்று கூறியிள்ளார்.

சவுகர்யம்னா எப்படினு எனக்கு தெரியல...தெரிஞ்சவங்க சொல்லுங்க...
ஆனா ஒண்ணு ஆட்ட நாயகன் படத்துக்காக மட்டும் தான் முத்த காட்சி போன்ற பேட்டி எல்லாம் வருது.... இது அப்ப அப்ப வரது தான்...
சும்மா ஒரு பப்ளிசிட்டி... ஆட்டநாயகன் ட்ரைலர் டரியலாக இருக்கிறது
என்பது மட்டும் உண்மை....!

*****************************************

டாக்டர் சீனிவாசன் பற்றி சிறு குறிப்பு வரைக....

ஏற்கனவே நான் சொன்னது தான்...அநேகமா சாம் அண்டர்சன், ஜே.கே,ரீத்தீஸ் வரிசையில் தலைவர் இடம் பிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு. இன்னும்
இவர் நடிச்ச படத்தை பார்க்கலை. மண்டபம் படத்தில் நடித்து இருக்கிறாராம்.
அது போக வாரம் மூணு நாள் தினதந்தியில் ஆனந்த தொல்லை என்ற படத்தின்
டெர்ரர்ஆன ஸ்டில் போட்டு நமக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.


மேலும் லத்திகா என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் கலக்குகிறார் மனிதர்.
அவர் கொடுத்திருக்கும் ரொமன்ஸ் ஸ்டில் ஒன்றே போதும் என்று
நினைக்கிறேன். என்னாமா சொட்டுது பாருங்க....காதல் ரசம்...

(DISCLAIMER : லைட்டான இதயம் இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தயவு செய்து கிழே இருக்கும் படங்களை பார்க்க வேண்டாம்...!அப்புறம் இன்னொரு விஷயம் சீனிவாசன் ஸ்டில் எடுக்க இதுவரைக்கும் அவரே கூட கூகிள்லே தேடி இருப்பாரானு தெரியலை....ஆனா அவர் படத்தை முதல்முறையாக கூகிள்இல் தேடின பெருமை என்னையே சேரும்....!!)


இவர் நல்லவர் என்பதற்கு இந்த ஒரு ஸ்டில் போதும்...!!


சீனிவாசன் அவர்களுக்கு ரசிகர் மன்றம் திறக்கலாம் என்ற எண்ணம் உள்ளது..
ஆனா நான் தான் நிரந்தர பொது செயலாளர்.... வேற யார் வேணும்னாலும் என்ன பதவி வேணுமோ எடுத்துக்கலாம்...!!

*************************************

விளம்பர இடைவேளை:

வெல்கம் டூ சுடுக்காட்டு சிட்டி...!!


வணக்கம் நேயர்களே....உங்களுக்கு ஒரு புண்ணான வாய்ப்பு...இது வரைக்கும் உங்களுக்கு சொந்த வீடு இல்லையே என்று கவலை இருந்திருக்கும்...
இனிமே அந்த கவலை இல்லை...கோவளம் தாண்டி சுடுக்காட்டில் புதிதாக
அம்பது ப்ளாட் போட பட்டுள்ளது... ஒரு சதுர அடி இருநூறு ருபாய் தான்.
இந்த சனிக்கிழமை வந்து நடுகாட்டில் இருக்கும் சுடுக்காட்டை ஜாலிஆக
குடும்பத்துடன் சுற்றி பார்த்து அப்படியே ஓசி சோறும் தின்னுட்டு.....
அப்பவே நீங்க புக் பண்ணா ரெஜிஸ்டர் இலவசமாக பண்ணி தரப்படும்.
ஒரு வேளை நீங்க புக் பண்ணலைனா ஆறு அடி இலவசம் சுடுக்காட்டில்!!

சீக்கரம் வாங்க...உங்களுக்கு சொந்தமான மனையை வாங்குங்க...!!


***************************

தொடரும் அட்டு செய்திகள்...


தூத்துகுடியில் சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா!!

சரத்குமார் அறிக்கை.

"பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலர
செய்ய இந்த முப்பெரும் விழாவில் சூளுரை ஏற்று புது வரலாறு
படைத்திட, புது விடியலை உருவாக்கிட புயலென புறப்பட்டு வருக..."


என்னது காந்தி செத்துட்டாரா??

இப்பவே கண்ணை கட்டுதே......அடேய் சோடா ஒன்னு கொடுப்பா...

சரத்குமார் சார் இந்த வசனம் சூப்பர்ஆ இருக்கு....எந்த படத்தில் வருது...??

******************************

கொல கொலயா முந்திரிக்கா நூறாவது நாளாம்.....********************

ரைட்ங்க...நான் கிளம்புறேன்....இந்த பொது அறிவு செய்தி பல பேரை
சென்று அடைய உங்கள் வாக்கை போடுங்க.....நாலு பேரு கிராம
அதிகாரி ஆனா நமக்கு தானே மகிழ்ச்சி...!!

நன்றி


ஜெட்லி...(சரவணா...)

நன்றி indiaglitz , chennaionline படங்களுக்கு....

22 comments:

Mohan said...

எல்லா செய்திகளுமே கலக்கலாக இருந்துச்சு!

Anbu said...

தல பதிவு கலக்கல்..
அப்புறம் அந்த ரசிகர் மன்றத்துக்கு நான் பொருளாலர் பதவி எடுத்திக்கிறேன் தல....

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மீ த செகண்ட்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஐயோ பூச்சாண்டி ஓடுங்க...

நான் கொ.ப.செ ஆயிடுறேன்

Cable Sankar said...

ithukku munnadi mathumithavoda படமும் நூறு நாள் ஓடிச்சே தெரியாதா.. ??

மோகன் குமார் said...

சரத் குமார், கொல கொலயா மேட்டர்கள் செம சிரிப்பா இருந்துச்சு

வெறும்பய said...

தல பதிவு கலக்கல்.

வானம்பாடிகள் said...

பொது அறிவுமட்டுமில்ல புது அறிவும் :))

பின்னோக்கி said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. இந்த சீனிவாசன் மாதிரி நிறைய பேர் படம் எடுக்குறாங்களே ! அவங்க காசுல தான் எடுக்குறாங்களா ? அப்படின்னா எதுக்கு சொந்தக்காசுல சூன்யம் வெச்சுக்குறாங்க..

காமராஜர் ஆட்சியா ?. அப்படின்னா எப்படி இருக்கும்... இதுக்காகவே இவங்களுக்குத் தான் என் ஓட்டு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே சீனிவாசன் ரசிகர் மன்ற சதுர செயலாளர் பதவி எனக்கு. மறந்துடாதீங்க...

அகல்விளக்கு said...

இப்பவே கண்ணக் கட்டுதே....

அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

ஏன் டெர்ரரா ஸ்டில்ஸ் போட்டு டாராக்குறீங்க....

Sukumar Swaminathan said...

// நாலு பேரு கிராம
அதிகாரி ஆனா நமக்கு தானே மகிழ்ச்சி...!! //

நாலு பேரு என்ன தல... இதப் படிச்சி நானூறு பேரு கிராம அதிகாரி ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கு.. ஹி..ஹி.. கலக்கல்...

ப.செல்வக்குமார் said...

//. ஒரு சதுர அடி இருநூறு ருபாய் தான்.
இந்த சனிக்கிழமை வந்து நடுகாட்டில் இருக்கும் சுடுக்காட்டை ஜாலிஆக
குடும்பத்துடன் சுற்றி பார்த்து அப்படியே ஓசி சோறும் தின்னுட்டு.....///
அப்படியே ஆளையும் போட்டு தள்ளிடவேண்டியதுதானே ..

சி.பி.செந்தில்குமார் said...

பின்னிப் பெடெல் எடுக்கறதுனா இதானா?

M.G.ரவிக்குமார்™..., said...

சிரிச்சு முடியல!...
பிரிச்சு மேஞ்சுட்டீங்க!.....
செம!...........

R Gopi said...

\\ஆனா அவர் படத்தை முதல்முறையாக கூகிள்இல் தேடின பெருமை என்னையே சேரும்\\

கட்டக் கடைசியா தேடிய பெருமையும் உங்களைதான் சேரும்னு நினைக்கிறேன்:)

Anonymous said...

தின தந்தியில் அந்த டெர்ரர் ஸ்டில்லை பார்த்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆனேன். எப்படி இவரை கூகுளே பண்றதுன்னு. தகவல் கிடைக்கும்மான்னு. ஆனா முந்திகிட்டீங்க
இவர் படத்தை முதல் நாள் பார்த்து விமர்சனம் எழுத உங்களை வேண்டுகிறேன்

கானா பிரபா said...

நான் தான் கொ.ப.சே சே சே

ஒகேவா?

சிநேகிதன் அக்பர் said...

ஜெட்லி அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கு. ரொம்ப வலிச்சது சீனிவாசன் மேட்டர்தான்.

ஜெட்லி... said...

பின்னூட்டம் ஈட்ட அனைவர்களுக்கும் நன்றிகள் பல....
கூடிய விரைவில் நாம மன்றம் ஆரம்பிப்போம்...
அவர் அவர்களுக்கு ஆசைப்பட்ட பதவியும் கிடைக்கும்....!!

சத்ரியன் said...

பார்த்ததும், படித்ததும்-னு தலைப்பு வெச்சிட்டு, பக்கத்துல நாலு ஆப்பு நட்டு வெச்சிருக்கீங்களே எதுக்கு தல...?

ஜெட்லி... said...

யாராவது தானா வந்து உட்கார்ந்தா நான் பொறுப்பில்லை ஜி....