Thursday, August 12, 2010

ஒரு ப்ளாக்கரின் வாக்குமூலம்...??

தொடர் பதிவா இல்ல டெர்ரர் பதிவா.....


(இந்த மாதிரி தெருவில உட்கார்ந்து ப்ளாக் எழுத கூடாதுனு
சொல்லவந்தேன்.......)

அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் அண்ணன் தொடர்
பதிவுக்கு அழைத்து இருந்தார்... பொதுவா தொடர் பதிவுனா
ஏதாவது அனுபவம்,இல்லை பொதுவான கேள்வி கேட்பாங்க...
ஆனா இதிலே நம்ம ஜாதகத்தை தவிர எல்லாத்தையும்
கேட்குறாங்க... நாம பண்ண உட்டாலக்கடி வேலையெல்லாம்
வேற சொல்ல வேண்டி இருக்குது.... சரி ஏதோ என்னால்
முடிஞ்சது....


1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜெட்லி...2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லைங்க...என் பேரு சரவணன். ஜெட்லினு பேர் வைக்க ஒரே
காரணம் அன்னைக்கு முதல் முறையா ப்ளாக் எழுதும்
போது இட்லி சாப்பிட்டேன்ங்க....மற்றொரு காரணம்...
ஜாக்கி தான் நம்ம பேவ்ரைட் ஆனா ஏற்கனவே ஜாக்கி சேகர்
அண்ணன் இருக்கார்னு...எல்லோருக்கும் தெரிஞ்சா பேரா
வைப்போம்னு ஜெட்லினு வச்சிக்கிட்டேன்...!!3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

ஏன்டா காலடி வச்சேனு மூணு நாலு பேரு அசிங்க அசிங்கமா
தீட்னாங்க...என்னது அதை கேட்கலையா...சரி... நான் காலடி
எடுத்த வச்ச அன்னைக்கு மழை,புயல் எல்லாமே வந்தது...
ஆனா படிக்க ஆளுங்க தான் வரல என்பது வேறு விஷயம்...!!4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

அந்த கொடுமையை வேற சொல்லனுமா... எனக்கு ரொம்ப
தெரிஞ்ச நாலு பேருக்கு போன் பண்ணி படிக்க சொல்வேன்...
அதிலிருந்து அவர்கள் என் போன் வந்தாலே அட்டன்ட் செய்வதில்லை....இதை விட உச்சபட்ச கொடுமை என்னன்னா
என் பால்ய நண்பன் ஒருத்தன் அடிக்கடி வீட்டுக்கு வருவான்..
அவன் வரும் போது சிஸ்டத்தில் என் ப்ளாக் ஓபன் பண்ணிட்டு..
படிடா என்று கொடுமை படுத்துவேன்... அவனும் ஒரு
மாசம் பார்த்தான்..அப்புறம் வீட்டுக்கே வரது இல்லனா
பார்த்துக்குங்க... இந்த மாதிரி பல டெர்ரர் வேலை பார்க்கணும்...!!
உங்கள் ப்ளாக் பிரபலம் அடைய....

(பி.கு)

உங்க வீட்ல சொந்தகாரங்க ரொம்ப நாள் டேரா போட்டங்கனா..
நம்ம ப்ளாக் ஓபன் பண்ணி உடுங்க...ஓடி போயிருவாங்க....!!5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வளவா எதுவும் சொல்றது இல்ல...சும்மா டூர் போன அதை
பத்தி பதிவு போடுவேன்...வேற ஒண்ணும் ஷேர் பண்ணிக்கிறது
இல்ல... சினிமா எனக்கு புடிக்கும் அதனால் அதை பத்தி
மட்டும் அதிகம் ஷேர் பண்ணிப்பேன்..... இல்லைனா காரணம்
சிம்பிள்... நம்மை பத்தி எழுதி எதுக்கு இன்னும் அதிகமா
மொக்கை போடணும்னு தான்...6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போவமா தான் முதல்ல வாரத்துக்கு அஞ்சு பதிவெல்லாம்
போட்டுட்டு இருந்தேன்...இப்ப வர வர வேலை அதிகமா போச்சு...
படம் பார்க்க போறதே திண்டாட்டம் ஆகி போச்சினா பாருங்க..
சாம்பாதிக்கிற ஆசையெல்லாம் இல்லைங்க...நாலு பேருக்கு
நல்லது பண்ணனும், அவ்வளவுதான்...!!


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

நண்பர்களுக்கு இந்த ஒரு கொடுமை பத்தாதா??

பல வலைப்பக்கங்கள் ஆரம்பிக்க நான் ரெடி...படிக்க நீங்க
ரெடியா.... கவிதைக்கு ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சுரவா??


சாம்பிள் :

அண்டங் காக்க கருப்பு...
பக்கத்துக்கு உட்டு சொவரு வெளுப்பு...
பழயதுல போடு உப்பு...
நாலு நாள் குளிக்கலைனா நீ கப்பு...!!


மேல உள்ள கவிதை குறித்து அனைத்து வித உரிமைகளும் @ஜெட்லி..!!


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இந்த தொடர்ப்பதிவை ஆரம்பிச்சவர் மேல தான் எனக்கு ரொம்ப
கோபம்...எப்படி கோத்து விடுறார் பாருங்க...யார் அவர்னு தெரிஞ்சா
சொல்லுங்க.....

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என் முதல் பதிவே அருந்ததி படம் விமர்சனம் தான்...தியேட்டர்ல
பத்து பேர் இருந்தாலும்..படம் நன்றாக இருந்தது... யார் படிக்க
போறா என்று நினைத்து கொண்டிருந்தால்..சுரேஷ் பழனியிலிருந்து
அண்ணன் தான் முதல் பின்னூட்டம்...மறக்க முடியாதது...
அப்புறம் நண்பர் சித்து உறுதுணையாக இருந்தார்...


10 . கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

ஏன் விட்டா பத்திரத்தில் கையெழுத்து கேட்டு வாங்குவீங்க போல...
ரைட் நான் கிளம்புறேன்... என்னை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லங்க....


இதனை தொடர அழைக்க விரும்புவது...

எழுதாத நண்பர்கள் அனைவரையும்....
ஆனா இந்த தொடர் பதிவில் ஏதோ உள்குத்து இருக்குனு நினைக்கிறேன்...தொடர போறவங்க பார்த்து ஹன்டல் பண்ணுங்க....இன்னுமாட நீ ப்ளாக் எழுதுற...அப்படின்னு எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா கத்தி எடுத்துட்டு வருது...இப்போதைக்கு எஸ்கேப்...
புடிச்சவங்க ஓட்டு போடுங்க....நன்றி

ஜெட்லி...(சரவணா...)

44 comments:

மதுரை சரவணன் said...

பிடிச்சுருக்கு அதனாலே கமண்டு போடுறேன்... ஓவர் தன்னடக்கம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

MANO said...

SUPER JETLI...


NICE POST.


MANO

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பிங்களா நீங்க போடுற தியேட்டர் கமேன்ட்சுக்கு நான் ரசிகன்

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பிங்களா நீங்க போடுற தியேட்டர் கமேன்ட்சுக்கு நான் ரசிகன்

நாஞ்சில் பிரதாப் said...

என்னக்கொடுமை சரவணா இது...:)

இராகவன் நைஜிரியா said...

// ஒரு ப்ளாக்கரின் வாக்குமூலம்...??

தொடர் பதிவா இல்ல டெர்ரர் பதி //

தொடர் டெரர் பதிவு ... இல்லை... தொடர் டெரர் சங்கிலி இடுகை என்று வேண்டுமானால் வைத்துக் கொல்லலாம்.. (கொள்ளலாம் இல்லை..)

இராகவன் நைஜிரியா said...

// (இந்த மாதிரி தெருவில உட்கார்ந்து ப்ளாக் எழுத கூடாதுனு
சொல்லவந்தேன்.......)//

அப்ப வேற எப்படி உட்கார்ந்து எழுதலாம் என்று சொல்லுங்க?

அளவில்லா டவுட்டுடன்

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் அண்ணன் தொடர்
பதிவுக்கு அழைத்து இருந்தார்..//

எப்ப காணாம போனார் என்று சொல்லவேயில்லையே... இப்ப வீடு திரும்பியது கேட்டு மிக்க மகிழ்ச்சி..

இராகவன் நைஜிரியா said...

// பொதுவா தொடர் பதிவுனா
ஏதாவது அனுபவம்,இல்லை பொதுவான கேள்வி கேட்பாங்க. //

இப்படி ஒரு எண்ணம் ஓடிகிட்டு இருக்கா... ரொம்ப தப்பான எண்ணமா இருக்கே...

இராகவன் நைஜிரியா said...

// ஆனா இதிலே நம்ம ஜாதகத்தை தவிர எல்லாத்தையும்
கேட்குறாங்க... //

அவங்க கேட்கவில்லை என்றால் என்ன... நீங்களே ஜாதகத்தை கொடுக்க வேண்டியதுதானே..

இராகவன் நைஜிரியா said...

// நாம பண்ண உட்டாலக்கடி வேலையெல்லாம்
வேற சொல்ல வேண்டி இருக்குது.. //

நீங்க சொல்லவில்லை என்றால் எங்களுக்கு தெரியாது பாருங்க..

பின்னோக்கி said...

ஜெட்லி பெயர் காரணம் தெரிஞ்சதும் புல்லரிச்சுடுச்சு. என்ன ஒரு பெயர் காரணம். வாழ்க. வளர்க.

இராகவன் நைஜிரியா said...

// ஏன்டா காலடி வச்சேனு மூணு நாலு பேரு அசிங்க அசிங்கமா
தீட்னாங்க...என்னது அதை கேட்கலையா...சரி... நான் காலடி
எடுத்த வச்ச அன்னைக்கு மழை,புயல் எல்லாமே வந்தது...
ஆனா படிக்க ஆளுங்க தான் வரல என்பது வேறு விஷயம்...!! //

மூணு நாலு பேருதான் திட்டினாங்களா? அப்ப மத்தவங்க எல்லாம் வாழ்த்தினாங்களா? எப்ப இருந்து இப்படி பொய் சொல்ல கத்துகிட்டீங்க...

வானம்பாடிகள் said...

ahaa அண்ணன் கும்மி ஒன்னே போதுமே. இடுகைக்கு சர்டிஃபிகேட். செம லொல்லு ஜெட்லி:))

யோ வொய்ஸ் (யோகா) said...

இட்லிதான் ஜெட்லீ ஆகிருச்சா?

ரொம்ப நாளா எங்க உறவுகாரரு எங்க வீட்டுல தங்கி இம்ச பண்ணுறாரு, அவருக்கு உங்க ப்ளாக்க படிக்க கொடுக்கவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ambuttu nallavanaaley nee
sent by mobile

ஜெட்லி... said...

@மதுரை சரவணன்

@MANO


நன்றி...

ஜெட்லி... said...

@கே.ஆர்.பி.செந்தில்


@நாஞ்சில் பிரதாப்


நன்றி அண்ணே...

ஜெட்லி... said...

@இராகவன் நைஜிரியா


//மூணு நாலு பேருதான் திட்டினாங்களா? அப்ப மத்தவங்க எல்லாம் வாழ்த்தினாங்களா? //


ஏன் அண்ணே.... ஒய் டேமேஜ்...

ஜெட்லி... said...

@பின்னோக்கி


ஹி ஹி...


@வானம்பாடிகள்


நன்றி ஐயா...

ஜெட்லி... said...

@யோ வொய்ஸ் (யோகா)


ஹ்ம்...நம்ம ப்ளாக் ஓபன் பண்ணி காட்டுங்க...
மூணு நாள்ல கிளம்பி போய்டுவாங்க...


@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


சத்தியமா அண்ணே...

டம்பி மேவீ said...

தமிழ் செம்மொழியான பயனை அடைய வேண்டுமானால் நீங்க இன்னொரு பிளாக் ஆரம்பித்தாக வேண்டும்.

திருக்குறள் சொன்ன அத்தனை கருத்துக்களையும் உங்களது நான்கு வரி கவிதை சொல்லிவிட்டதே ..ஆச்சரியம்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

////என் பால்ய நண்பன் ஒருத்தன் அடிக்கடி வீட்டுக்கு வருவான்..
அவன் வரும் போது சிஸ்டத்தில் என் ப்ளாக் ஓபன் பண்ணிட்டு..
படிடா என்று கொடுமை படுத்துவேன் ///


அண்ணே நீங்களாவது பரவாயில்ல

நான் என்னோட ஒயர்லெசு நெட் கனெக்சனையே என் நண்பன் வூட்டுக்கு எடுத்துட்டு போயி படிக்க வச்சி கொடும படுத்திகிட்டு இருக்கேன் ஆமாம்

அட அதான் ஜெட்லி இட்லியா நல்லாயிருக்கே :)

Riyas said...

//அண்டங் காக்க கருப்பு...
பக்கத்துக்கு உட்டு சொவரு வெளுப்பு...
பழயதுல போடு உப்பு...
நாலு நாள் குளிக்கலைனா நீ கப்பு..//

கவிதை சூப்பருங்கோ இன்னும் இன்னும்

Vidhoosh said...

ராகவன் அண்ணே.. சொல்லி விட்டுருந்தா நாமும் வந்திருப்போம் இல்ல. :))

LK said...

//உங்க வீட்ல சொந்தகாரங்க ரொம்ப நாள் டேரா போட்டங்கனா..
நம்ம ப்ளாக் ஓபன் பண்ணி உடுங்க...ஓடி போயிருவாங்க...//

neenga vera, ithap padichitu enga relativeslam blog elutha start pannittanga

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

மோகன் குமார் said...

கலக்கல். உங்க ஸ்டைலில் எழுதிருக்கீங்க

VISA said...

dhoooooooooool

secondpen said...

உங்களின் தகவல் நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

எம்.எம்.அப்துல்லா said...

//நாலு பேருக்கு
நல்லது பண்ணனும், அவ்வளவுதான்...!!

//

வேற வழியே இல்லை.அப்ப நீங்க பிளாக் எழுதுறத நிறுத்தித்தான் ஆகணும்.

:)

வால்பையன் said...

//அண்டங் காக்க கருப்பு...
பக்கத்துக்கு உட்டு சொவரு வெளுப்பு...
பழயதுல போடு உப்பு...
நாலு நாள் குளிக்கலைனா நீ கப்பு...!!//

ஒத்த கவிதைன்னாலும் வித்த கவித தல!

ஜெட்லி... said...

@டம்பி மேவீ


//திருக்குறள் சொன்ன அத்தனை கருத்துக்களையும் உங்களது நான்கு வரி கவிதை சொல்லிவிட்டதே ..ஆச்சரியம் //


இது ஒண்ணும் போதும்....சீக்கரம் ஆரம்பிச்சு..சேவை
இடியாப்பம் பண்ணுவோம்...

ஜெட்லி... said...

@ஜில்தண்ணி - யோகேஷ்


நீ என்னை விட கொடுமைகாரான இருப்ப போலையே...


@Riyas


//
கவிதை சூப்பருங்கோ இன்னும் இன்னும் //

கொஞ்சம் பொறுங்க... கவிதை தொகுப்பே போட்டுருவோம்...

ஜெட்லி... said...

@Vidhoosh said...

ராகவன் அண்ணே.. சொல்லி விட்டுருந்தா நாமும் வந்திருப்போம் இல்ல. :)) //


ஒரு பச்சை புள்ளைய இப்படி ரவுண்ட் கட்டி அடிக்க எத்தனை
நாளா காத்துட்டு இருக்கீங்க...??

ஜெட்லி... said...

@LK


ஹ்ம்...அப்படி வேற நடக்குதா...நடக்கட்டும்...

ஜெட்லி... said...

@T.V.ராதாகிருஷ்ணன்


@மோகன் குமார்

@VISA


@வால்பையன்


நன்றி...

ஜெட்லி... said...

//எம்.எம்.அப்துல்லா said...

//நாலு பேருக்கு
நல்லது பண்ணனும், அவ்வளவுதான்...!!

//

வேற வழியே இல்லை.அப்ப நீங்க பிளாக் எழுதுறத நிறுத்தித்தான் ஆகணும்.

:) //


நான் நிறுத்த ரெடி...ஆனா அவங்களை நிறுத்த சொல்லுங்க...


வாரம் வாரம் மூணு படம் ரீலீஸ் பண்ணனும்னு சொல்லிட்டு..
மூணுமே மொக்கை படமா ரீலீஸ் பண்றாங்களே அதை நிறுத்த
சொல்லுங்க....நான் நிறுத்துறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க பதில்களும் ராகவன் அண்ணனோட பின்னூட்டமும் போட்டி போடுதப்பா..:-0))

சிநேகிதன் அக்பர் said...

நல்ல நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க.

சுதந்திர தின வாழ்த்துகள்.

ப.செல்வக்குமார் said...

//ஜெட்லினு பேர் வைக்க ஒரே
காரணம் அன்னைக்கு முதல் முறையா ப்ளாக் எழுதும்
போது இட்லி சாப்பிட்டேன்ங்க..///
அப்ப தோசை சாப்பிட்டிருந்தா என்ன பேரு வச்சிருப்பீங்க ...?

ப.செல்வக்குமார் said...

///உங்க வீட்ல சொந்தகாரங்க ரொம்ப நாள் டேரா போட்டங்கனா..
நம்ம ப்ளாக் ஓபன் பண்ணி உடுங்க...ஓடி போயிருவாங்க....!!

///
அதுக்குத்தான் நானே ப்ளாக் எழுத ஆரம்பிச்சேங்க ..!!

ப.செல்வக்குமார் said...

இம்பூட்டு அருமையா எழுதிருக்கீங்க ..
அதனால இப்பவே உங்களை பின்தொடர ஆரம்பிச்சிட்டேன் ..

சி.பி.செந்தில்குமார் said...

செம தன்னடக்கம்