Monday, August 23, 2010

எஸ்கேப் மாமே எஸ்கேப்.....!!

எஸ்கேப் சினிமாஸ்இல் ஒரு அனுபவம்.....
ராயபேட்டா மணிகூண்டு அருகே புதிதாக மலர்ந்து இருக்கும் எக்ஸ்பிரஸ்
அவின்யு மாலில் இன்று தான் சத்யம் சினிமாஸ்இன் அடுத்த மல்டிப்ளெக்ஸ்
பொது மக்களுக்கு திறந்து விட்டார்கள். சும்மானாச்சும் திங்கள்கிழமை
சத்தியத்தில் ஏதாவது படம் போலாம் என்று அவர்களின் வலையை
மேய்ந்த போது எஸ்கேப் என் கண்ணில்ப்பட்டது. உடனே எனக்கும்
நண்பனுக்கும் நான் மகான் அல்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.நான்
போன ஸ்க்ரீன் பேரு plush ஆம்... சத்தியமா தமிழ்ல எனக்கு என்ன
அர்த்தம்னு தெரியாதுங்கோ.....!!


அது என்ன தியேட்டர் பேரு எஸ்கேப்...?? ஒரு வேளை நாம போற படம்
மொக்கை படமா இருந்தா பாதியிலே எஸ்கேப் ஆக எதுவும் பதுங்கு
குழி வச்சி இருப்பாங்களோனு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.....
இன்று காலையில் வேறு ஒரு நண்பனிடம் எஸ்கேப் போகிறேன் என்று
சொன்னதற்கு அவனும் அதே கருத்தை தான் சொன்னான்.அதவாது
படம் புடிக்கலைனா பாதியிலேயே எஸ்கேப் ஆயிடலாம் போல என்றான்.

எஸ்கேப் போன கதை....

நான் மகான் இல்ல கண்டிப்பா ரெண்டாவது தடவை பார்க்கணும்னு முதல்
தடவை இன்டெர்வல்லே முடிவு பண்ணிட்டேன். அதுவும் புதுசா அன்னைக்கு
தொறக்க போற தியேட்டரில் பார்க்க போவது டபுள் சந்தோசமாக இருந்தது.
சரி அப்படியே நம்ம ஆஸ்தான வூட்லாண்ட்ஸ் தியேட்டர்ல என்ன படம்
போட்டு இருக்காங்கனு எட்டி பார்த்துட்டு போனேன்....தேவலீலை என்ற
பிட்டு படமும் மூன்று ஆவிகளின் அட்டகாசம் என்ற அட்டு படமும்
போட்டு இருந்தார்கள். அப்படியே அதை தாண்டி போய்கிட்டு இருக்கும்
போது என் கண்ணில் ஒரு போஸ்டர் பட்டது....சானகானுக்கு கூட நம்ம ஊரில் பிறந்த நாள் கொண்டாட,போஸ்டர் ஒட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அப்படியே வானத்தில் ஒரு ஒளி வட்டம் தெரிஞ்சுது...அப்போ தான் நினைச்சேன் கூடிய விரைவில் இந்தியா கண்டிப்பா வல்லரசு ஆயிரும்னு.....!!


எக்ஸ்பிரஸ் அவின்யு....இப்போ தான் முதல் முதலா எக்ஸ்பிரஸ் அவின்யு போறேன்...நண்பர் சித்து
சொன்னது போல் எக்ஸ்பிரஸ் அவின்யு எக்ஸ்பென்சிவ் அவின்யு தான்.
பூட் மால் எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுது. பானி பூரி ப்ளேட் நாப்பது
என்றாலும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அப்போ தான் பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக் தம்பியாய் வருவாரே ஒரு மொட்டை அவரை பார்த்தேன்.அவரும் யாராவது என்னை பார்ப்பாங்களா என்று பார்த்து கொண்டே போனார்.சரி அவர் ஆசையை ஏன் கெடுப்போம் என்று அவரை பார்த்து சிரித்து வைத்தேன் அவரும் ஒரு ஸ்மைல் செய்ஞ்சிட்டு போனார். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சேவை.அதுக்கு அப்புறம் நேரா எஸ்கேப் உள்ளே பூந்தாச்சு.... உள்கட்டமைப்பு எல்லாம் பக்கா.... லைப்ரரி இருக்கு...வீடியோ பார்க்க டி.வி இருக்கு...செமையா

இருந்தது.முதல் நாள் என்பதால் யாரையும் செக் பண்ணி அனுப்பவில்லையா?? இல்லை ஆட்கள் பற்றாகுறையா என்று தெரியவில்லை. இங்கயும் ரெஸ்ட் ரூம் சான்ஸ்ஏ இல்லை.... இங்கே அருகில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பட்டையை தட்டினால் நீண்ட குழாவில் தண்ணி வருகிறது. வழக்கம் போல் சுத்தத்தில் அடிச்சிக்க முடியாது. முதல் நாள் என்பதால் இன்னும் சில பல வேலைகள் பாக்கி இருக்கிறது... அதே போல் வேலை செய்யாத லட்டின்களை கழட்டி ரிப்பேர் செய்து கொண்டு இருந்தனர்.
அப்புறம் இன்னொரு முக்கியமான நான் அதிசியத்து பார்த்த விஷயம்..
அது எஸ்கேப் சினிமாஸ்இல் உள்ள ப்ரொஜெக்டர்...எல்லாமே தியேட்டர்
வெளியே அந்தரத்தில் இருக்குங்க... படம் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு....
வருங்காலத்தில் ஆபரேட்டர் என்று ஒருத்தர் இருக்க மாட்டார் போல...
நான் போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது ஒரு பான்ட் போட்ட அக்கா
சாரி மேடம் வந்து போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுனு சொல்லிட்டு
போனாங்க...அதனால இதுக்கு மேல நோ போடோஸ்...


சரி இனிமே தியேட்டர் உள்ளே போவோம்....நான் போன ஸ்க்ரீன் பெயர்
plush ....இது தான் அங்கே இருப்பதிலே பெரிய ஸ்க்ரீன் என்று சொன்னார்கள்.
முதல் முறையா எனக்கு வந்த டிக்கெட் confirmation எஸ்.எம்.எஸ் மூலம்
உள்ளே சென்றது இப்போது தான். உள்ளே போனதும் அசந்துட்டேன்...
நன்றாகவே இருந்தது. ஓர சீட்கள் அனைத்தும் கபூல்(ஜோடி) சீட்தான்.
நல்லா தெளிவா தான் வடிவமைச்சு இருக்காங்க....பத்து ரூபாய் சீட்கள்
அனைத்தும் காலியாக தான் இருந்தது.


சீட்கள் நல்லா அகலமா சோபா போல இருந்தது. புஷ் பேக் வசதி இல்லாதது
குறையே. அப்புறம் சீட் நம்பர் பிளாஸ்டிக் ப்ளேட்கள் விழுந்து கிடந்தன.
என் சீட் மட்டும் தான் அப்படி இருக்குனு நினைச்சேன் படம் ஆரம்பிச்ச
நாலா புறமும் இருந்து அந்த தகர டப்பா சவுண்ட் கேட்டது. முதல் ஷோ
வந்தவங்களே அடிச்சு உடைச்சுட்டாங்கலோ என்று சந்தேகம் வந்தாலும்
அது தானாக கழுண்டு விழுகிறது என்று போக போக தெரிந்தது....!!


இன்னைக்கு தான் முதல் நாள் என்பதனால் அப்படி இருக்கலாம்...போக
போக நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா சவுண்ட் எல்லாம்
தாறு மாறு...சும்மா அதுருது... யுவனின் பின்னணி இசையை இந்த தடவை
மிகவும் ரசித்தேன்...அதே போல் மதி கேமராவையும்.... முதல் நாள்
சவுண்டில் விட்டு போன வசனங்களை தெள்ள தெளிவாக கேட்டேன்...


அப்புறம் ஒரு சின்ன பாப்கார்ன் விலை வெறும் அறுபத்தி அஞ்சு ரூபாய்
தான். ஒரு வெஜ் புப்ஸ் விலை வெறும் நாப்பது அஞ்சு ரூபாய் தான்.
பானி புரி, பேல் புரி போன்ற சாட் ஆயிட்டங்கள் கூட வெறும் அறுபது
ரூபாய்க்கு கிடைக்கிறது. நான் இந்த விலை பட்டியலை பார்த்ததே
சாப்பிட்டது மாதிரி இருந்ததால் அந்த பெரிய கியூவில் நிற்காமல் அப்படியே
திரும்பி விட்டேன்,இன்டெர்வெல் முடிந்து சரியாக படமும் ஆரம்பித்தார்கள்.


அப்புறம் நான் பார்க்கிங் எவ்வளவு ஆகும்னு ஒரு கணக்கு போட்டேன்...
ஏதோ பரவாயில்லை மூப்பது ரூபாய் தான் வந்தது. ஆனா ஒரு படத்துக்கு
மூப்பது ரூபாய் பார்க்கிங் கொஞ்சம் அதிகம் தான். மொத்தம் மூணு பேஸ்மென்ட் பார்க்கிங் இருக்கு....எனக்கு எந்த பேஸ்மென்ட்டில் வண்டி விட்டேன் என்றே மறந்து அதை எடுக்க ஒரு கால் மணி நேரம் ஆச்சு என்பது குறிப்பிடதக்கது.பைக் பார்க்கிங் ஏரியா ஒரே தண்ணியாய் இருந்தது....!!இந்த இடுகை பல பேருக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்....
இப்போதைக்கு மீ எஸ்கேப்...

ஜெட்லி...(சரவணா...)

26 comments:

VISA said...

rightea...........

Pradeep said...

me the first

கார்த்திகைப் பாண்டியன் said...

கொடுத்து வச்ச மக்கள்யா.. குடுக்குற காசுக்கு சரியான வசதிகள் கிடைக்குது..

ஜாக்கி சேகர் said...

நல்ல இடுக்கை கண் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது... இனி அதனுள் போக முயற்ச்சிக்கின்றேன்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இந்த இடுகை பல பேருக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்....]]]

நிஜம்தான் தம்பி.. சத்தியமா இன்னிக்குத்தான் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்குறாப்புல ஒரு மேட்டரை எழுதியிருக்கிற..

நன்றி..!

என்னை மாதிரி ஏழைபாழை பரதேசிகள் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத இடம் போல..! ம்.. நமக்கு உதயமும், கருமாரி காம்ப்ளக்ஸூமே போதும்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வ குவாட்டர் கட்டிங் விட்டுட்டு உள்ள போனியா மாமு...

பின்னோக்கி said...

ஒரு படத்த விட மாட்டேங்குறீங்கன்னு பார்த்தா, தியேட்டரையும் விட மாட்டேங்குறீங்க :).

என்னது பார்க்கிங் 30 ரூபாயா ? காருக்கு எவ்வளவு ஆகும் ?. எதோ போட்டோ பார்த்துட்டேன். அது போதும்பா.

அருண் பிரசாத் said...

ரைட்டு

Mohan said...

சனா கானுக்கு போஸ்டர் மேட்டர் சூப்பர்!

Chitra said...

சானகானுக்கு கூட நம்ம ஊரில் பிறந்த நாள் கொண்டாட,போஸ்டர் ஒட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அப்படியே வானத்தில் ஒரு ஒளி வட்டம் தெரிஞ்சுது...அப்போ தான் நினைச்சேன் கூடிய விரைவில் இந்தியா கண்டிப்பா வல்லரசு ஆயிரும்னு.....!!


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அடுத்து, பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக் தம்பியாய் வருவாரே ஒரு மொட்டை....அவரது பிறந்த நாளுக்கு, ஒரு சேவையாக நீங்களே ஒரு போஸ்டர் அடித்து ஒட்ட ஏற்பாடு செய்வீங்க போல.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

Ok Ok

sivakasi maappillai said...

உனது மன உறுதி, வலிமை, டெடிகேஷன், பொறுமை எல்லாம் விவேகானந்தருக்கு ஈடானது தம்பி....
இந்த படம் ரெண்டாவது தடவை பாத்த உன்னை எப்படி பாராட்டினாலும் தகும்.....
இனி எனக்கு எவ்ளோ பெரிய ப்ராப்ளம் வந்தாலும் உன்னை நினைத்து மன ஆறுதல் அடைவேன்....

sivakasi maappillai said...

உனது மன உறுதி, வலிமை, டெடிகேஷன், பொறுமை எல்லாம் விவேகானந்தருக்கு ஈடானது தம்பி....
இந்த படம் ரெண்டாவது தடவை பாத்த உன்னை எப்படி பாராட்டினாலும் தகும்.....
இனி எனக்கு எவ்ளோ பெரிய ப்ராப்ளம் வந்தாலும் உன்னை நினைத்து மன ஆறுதல் அடைவேன்....

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

முப்பது ரூவா கொடுத்து பார்க்கிங் .. அப்புறம் சினிமா .. கொரிக்கன்னு ஒரு ஆளுக்கு கொறஞ்சது ஆயிரமாவது வேணும் .. அரசு அதிகாரிகளின் குடும்பங்களும் ... அரசியவாதிங்க குடும்பங்களும் தாராளமா வந்து போகும் இடம் போல ...

ஜெட்லி... said...

@VISA


@Pradeep

நன்றி....


@ கார்த்திகைப் பாண்டியன்

கண்டிப்பா அண்ணே....

ஜெட்லி... said...

@ ஜாக்கி சேகர்


நீங்க கண்டிப்பா போவீங்க அண்ணே....


@ உண்மைத் தமிழன்

//என்னை மாதிரி ஏழைபாழை பரதேசிகள் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத இடம் போல..! ம்.. நமக்கு உதயமும், கருமாரி காம்ப்ளக்ஸூமே போதும்..!
//


அது சரி தான்....

ஜெட்லி... said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வ குவாட்டர் கட்டிங் விட்டுட்டு உள்ள போனியா மாமு...//சத்தியமா இல்லப்பா...

ஜெட்லி... said...

@பின்னோக்கி


எல்லாம் ஒரு பொது சேவை தான்.....@அருண் பிரசாத்

@Mohan


நன்றி...

ஜெட்லி... said...

@ Chitra


அவரு மாசம் ஒரு கட்டிங்(அமௌன்ட்) கொடுத்தார்னா ரசிகர் மன்றமே
ஆரம்பிக்க நான் ரெடி...


@T.V.ராதாகிருஷ்ணன்


நன்றி...

ஜெட்லி... said...

@sivakasi maappillai

அண்ணே....சப்பை மேட்டர்ணே இது....
உங்களுக்கு நான் மகான் அல்ல புடிக்கல எனக்கு பிடிச்சு இருக்கு....
அதுக்காக நான் உங்க கிட்ட ஏன் புடிக்கல,எதுக்கு
புடிக்கல,படத்தில என்ன இல்லைனு எல்லாம் கேட்க
மாட்டேன்.....எனக்கு அது தேவை இல்லாத விஷயம்...
காரணம் சிம்பிள் அடுத்தவங்க ரசனையில் நான்
என்னைக்கும் தலையை உள்ளே விடுறது இல்லை.....

நான் இப்பவும் சொல்றேன் வாய்ப்பு கிடைச்சா மூணாவது
தடவையும் நான் 'நான் மகான் அல்ல' படத்துக்கு போவேன்....

நன்றி சிவகாசி மாப்பிள்ளை அண்ணே....

ஜெட்லி... said...

@கே.ஆர்.பி.செந்தில்

சரியா சொன்னீங்க அண்ணே....

டம்பி மேவீ said...

அண்ணே ஒரு call க்கு அந்த பக்கமா போகும் போது பார்த்தேன் ...இன்னும் பின்பக்கம் கட்டி முடிக்கல போலிருக்கே ??

நானெல்லாம் சதாம் ஐநாக்ஸ் க்கெல்லாம் போகும் பொழுது வெளிலையே நிறைய சாப்பிட்டுவிட்டு போவோம் ...அதனால் தின்பண்டங்களின் விலையை பற்றி நான் அதிகம் கவலை பட்டதில்லை

sivakasi maappillai said...

//நான் இப்பவும் சொல்றேன் வாய்ப்பு கிடைச்சா மூணாவது
தடவையும் நான் 'நான் மகான் அல்ல' படத்துக்கு போவேன்....
///

வாழ்த்துக்கள்

கார்க்கி said...

ரைட்டு

ஜெட்லி... said...

@sivakasi maappillai


நன்றி மாப்பி.....