Wednesday, September 30, 2009

ரசனைகள் (அல்லது) கிரிவல விவாதம் ஒரு தொடர்ச்சி


வணக்கம், நான் சங்கர், நண்பர்கள் சரவணன் (ஜெட்லி) & சித்து குறிப்பிட்டு இருக்கும், ஒரேபுத்தகத்தை பலமுறை வாசிக்கும், அதே சங்கர் (
http://nee-kelen.blogspot.com/2009/09/blog-post_661.html#comments) (http://nee-kelen.blogspot.com/2009/05/blog-post_31.html), பலமுறை எழுதுவதை பற்றி யோசித்து, சிலமுறை எழுதவும் தொடங்கி சில காரணங்களால் அதை கைவிட்ட blog உறுப்பினர், அந்த சில காரணங்கள்,
  • என் ரசனை மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை, அதை பற்றி பேசுவதில் இல்லை
  • எல்லாமே எப்போதோ சொல்லப்பட்டு விட்டது, புதிதாய் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணம்
  • நாம் சொல்வது அதே அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற தயக்கம்
  • பல இடங்களில், பல நேரங்களில் தோன்றும் எண்ண சிதறல்களை ஒன்றாய் கோர்ப்பதில் உள்ள சிரமம்
  • எல்லாத்துக்கும் மேலே எனக்கு கேள்வி இல்லாம பதில் சொல்ல தெரியாது (அதாவது கேள்வியும் நானே பதிலும் நானே என்பது இயலாது)
இது எல்லாம் மீறி தைரியத்தை வரவழைத்து எழுத முடிவு செய்து, தொடங்கிவிட்டேன், எதை பற்றி எழுதலாம் என யோசிக்கும்போது, நண்பர்கள்என் ரசனை பற்றி குறிப்பிட்டு இருப்பதால் அதையே எழுதலாம் என முடிவுசெய்தேன். சற்றே நீண்ட பதிவு தான், முதல் முயற்சி, பொறுத்தருளுங்கள்,

முதலில், ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து சில வரிகள்,

"காலை ஒன்பதரை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஜே ஜே அந்த பிச்சைக்காரனை பார்த்தான், முற்றிய தொழுநோயாளியான அவன், கைகளை இயந்திரகதியில் அசைத்து முகத்தில் இரக்க பாவத்தை வரவழைத்து கவனத்தை ஈர்த்து கொண்டிருந்தான், ஜே ஜே யோசிக்க ஆரம்பித்தான், கிழக்கிலும் மேற்கிலும் இது குறித்து சொல்லபட்டிருப்பவை யாவற்றையும் நினைவுக்கு கொண்டு வந்தான், உடலில் சூடு பரவ தொடங்கியது, காது மடல்களில் உஷ்ணம் ஏறி வந்தது, எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என தெரியவில்லை, திடிரென உடலில் ஓர் அதிர்வு, ஹோட்டலின் சுற்றுப்புறத்தில் வந்து விழுந்துவிட்டான், மணி பன்னிரண்டாகி விட்டிருந்தது, எதிரே மேஜையில் நான்கைந்து காலி தம்ளர்கள் இருந்தன, தன் நினைவின்றியே தண்ணீர் குடித்து கொண்டு இருந்திருக்கிறான், அவன் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது, அவன் பிச்சைகாரனுக்கு உதவ முடிவு செய்துவிட்டான், 'இதிகாச நாயகர்களும் புராண மாந்தர்களும் வந்திருக்க கூடிய முடிவுக்கு தான் நானும் வந்திருக்கிறேன், ஆனால் அவர்கள் வந்திருக்க கூடிய விதம் வேறு, நான் வந்த வழி வேறு'' என தனக்குள் கூறி கொண்டான்,

வாசலை பார்த்தபோது, அந்த பிச்சைக்காரன் எப்போதோ போய்விட்டிருந்தான்,
ஜே ஜே அவசரமாக வெளியே வந்தான் அவன் போயிருக்க கூடியதாக அனுமானித்து ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஓடினான் ஒரு திருப்பத்தில் உள்ளுணர்வு உந்த சர்ச் சாலையில் திரும்பினான், சற்று தூரத்தில் சாலை மரத்தடியில் தொழுநோயாளியை பார்த்தான், ஆனால் இவன் உடைகள் சற்று சுத்தமாக இருந்தன, இது என்ன அதற்குள் ஓர் அவசர சலவையா என யோசித்தான், இவன் வேறு பிச்சைக்காரன், ஆனால் யாராயிருந்தால் என்ன, உதவுவதாக எடுத்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை, ஒரு முழு வெள்ளி நாணயத்தை எடுத்து அவன் முன் வீசினான், ஒருவேளை விரல்களே இல்லாமலிருந்தால் எப்படி பணத்தை எடுப்பான் என உரைக்க குனிந்து எடுக்க போனான் அப்போது அந்த பிச்சைகாரனின் இடது கால் நீண்டு பணத்தை மண்ணோடு தேய்த்தது,"

இந்த சம்பவத்தை ஜே ஜே பேராசிரியர் மேனனிடம் கூறும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தான், "அவன் தேய்த்து தள்ளியது பணத்தை அல்ல, அவனை சக மனிதனாக கணக்கில் எடுத்துக்கொள்ளாத என்னுடைய அலட்சியத்தை தான், பல புத்தகங்களும் பல நூறு தத்துவங்களும் கடந்து வந்த பின்னும் பழக்கத்தின் தடத்திலேயே மீண்டும் மீண்டும்
மனம் சரிகிறது," என்றான்,"

நண்பர் ஜெட்லி குறிப்பிட்ட கிரிவல விவாதம் முடிந்த பின் நடந்த ஒரு சம்பவம், கோவிலுக்குள் சென்று வெளியே வரும்போது அங்கே ஒருவர் போவோர் வருவோரிடம் எல்லாம் பாக்கெட் சைஸ் படங்களை கொடுத்து கொண்டிருந்தார், பழக்கத்தின் காரணமாக என் கை நீண்டு ஒன்றை வாங்கியது, கொடுத்தவர் பத்து ரூபாய் கொடுங்கள் என கேட்டார், அப்போது தான் அவர் படங்களை அன்பளிப்பாக தரவில்லை விற்பனை செய்து கொண்டிருப்பவர் என புரிந்தது, கடவுள் பக்தி இல்லை என கூறிக்கொள்ளும் நான் ஏன் அந்த படத்தை கைநீட்டி வாங்கினேன் என யோசித்த போது மேலே உள்ள வரிகள் மனதில் ஓடின, திருவண்ணமலையில் இருந்து சென்னை வரும் வரை மீண்டும் மீண்டும் இந்த சம்பவமும் வரிகளும் மனதில் வந்து கொண்டே இருந்தன, இது எளிதில் கடந்து சென்றுவிட கூடிய சிறு சம்பவம்தான் என்றாலும் சுந்தர ராமசாமியின் வரிகள் இதை என்றும் மறக்க முடியாத பாடமாக செய்துவிட்டன.

மேலே உள்ள வரிகள் எழுதும் போது ஜே ஜே சில குறிப்புகள் என் கையில் இல்லை, கிட்டதட்ட ஆறு முறை தொடர்ந்து (அதாவது ஆரம்பத்திலிருந்து முடிவு வரை படித்து மீண்டும் முதல் பக்கத்தில் தொடங்கி படிப்பது) படித்து முடித்து நண்பன் நட்ராஜ்க்கு கொடுத்து இருக்கிறேன், வரிக்கு வரி அப்படியே எழுதாவிட்டாலும் தொண்ணூறு சதம் சுராவின் வார்த்தைகளையே பயன்படுத்தி எழுதி இருக்கிறேன். நான்காவது முறை வாசிக்கும் போது, புத்தகத்தின் இந்த பகுதி என் கவனத்தை ஈர்த்தது,

ரசனை பற்றி பேசும்போது ரசனைக்குரிய விஷயங்கள் பற்றியும் கூற வேண்டும்
, "ஒரு நல்ல படைப்பு என்பது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையோ அல்லது ஒரு பாறையின் கனத்தையோ மனதில் ஏற்படுத்த வேண்டும்" (எங்கேயோ படித்தது
). அப்படி ஓர் உணர்வை ஏதாவது ஒரு கணத்தில் உருவாக்கும் படைப்பே ரசிகன் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

மேலே கூறியது ரசனை பற்றி பொதுவான கருத்து என்றாலும் பொதுவான ரசனை என்று ஒன்று இல்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் (மற்ற எந்த விஷயத்தையும் போலவே!). அது அவரவர் பிறந்து வளர்ந்த சூழலை சார்ந்தே உள்ளது.
எனக்கு மிக சிறந்ததாக தோன்றும் ஒரு நாவல், நண்பர் நட்ராஜ்க்கு அர்த்தமற்ற சொற்குப்பையாக இருக்கலாம். நண்பர் சரவணனுக்கு மொக்கை படமாக தோன்றும் மும்பை எக்ஸ்பிரஸ் (http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_16.html ), நான் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்த நகைச்சுவை படங்களில் ஒன்று.


என் செய்கைகளை பற்றி மற்ற யாருக்கும் பதில் சொல்வதை விடவும் எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டியதை தான் முக்கியமானதாக கருதுகிறேன், என் ரசனை எனக்கு தந்திருக்கும் பெரும்பரிசு இந்த சுயவிமர்சன பார்வைதான். என் ரசனை வெறுமனே படித்து ரசித்து விடுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதிப்பீடு செய்யவும், தவறுகளை மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துகொள்ளவும் உதவுகிறது. ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த இடமும் சூழலும் ஒரு புதிய அர்த்தத்தை காட்டும். கவுண்டமணியின், வடிவேலுவின் நகைச்சுவை காட்சியையே ஒவ்வொரு முறையும் அதே உற்சாகத்துடன் நம்மால் ரசிக்க முடிகிறபோது இதுவும் சாத்தியமே.

சில வாரங்களுக்கு முன் விஜய் டிவி நீயா நானாவில் தமிழ்நாட்டில் புத்தக வாசிப்பு குறித்து விவாதம் நடந்தது, தமிழ் வாசிப்பும் ரசனையும் தேவை இல்லை என பேசிய இந்த தலைமுறை இங்கிலீஷ் மீடியம் இளைஞர்கள், (பெரும்பாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள், சங்கம் வளர்த்த செந்தமிழர்கள் சிலரும் கூட), பேசியதன் ஒரு வரி சுருக்கம், 'தமிழ் எங்கள் சோற்றுக்கு உதவுவதில்லை அதனால் எங்களுக்கு அது தேவையில்லை', இதை கூட ஒரு வகையில் ஏற்று கொள்ளலாம், ஆனால் தமிழ் வேண்டும் என பேசியவர்களோ 'தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் ம... ' என்ற ரீதியிலே பேசினர், சிறப்பு விருந்தினராக வந்த பேச்சாளர் (பாரதி பாஸ்கர் என நினைக்கிறேன்) கூறிய, வேறு ஒருவர் கூட குறிப்பிடாத, விஷயம், வாசிப்பு அனுபவமும் அது தரும் இன்பமும் தான், நண்பர்கள் சிலர் கூறும் மது தரும் போதையை விடவும், நல்ல புத்தகத்தின் சில பக்கங்கள் தரும் இன்பம் மிக அதிகம் என்றே என்னால் கூற முடியும், அதிலும் மதுவின் வசப்பட்டபின் தான் யார், எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து தன சுய மரியாதையை பற்றி சிறிதும் யோசிக்க முடியாமல் நடு சாலையில் தடுமாறும் நண்பர்களின் உல்லாச சுற்றுலாகளை விடவும், சில வரிகளை படித்து அடக்க முடியாத சிரிப்புடனோ, நீர் தளும்பி நிற்கும் கண்களுடனோ நிமிர்ந்து சக பயணிகளின் ஆச்சர்ய (அல்லது) பரிதாப பார்வைக்கு இலக்காகும் ரயில் பயணங்கள் எந்த வகையிலும் தாழ்ந்ததாய் தோன்றவில்லை.


மீண்டும் ஜே ஜே யிலிருந்து சில வரிகள்,


" ஜே ஜே யின் பழைய கட்டுரை ஒன்றை வாசித்து கொண்டிருந்தேன், அப்போது என் மனதில் தோன்றிய என்னகளை வார்த்தை வடிவில் குறுக்கினால், இரு உணர்ச்சிகள் தான், ஒன்று பயம் மற்றது லகரி.
பயம் ஜே ஜே என்னை, என் உலகத்தை இல்லாமல் செய்துவிடுவானோ என்று, நானோ கனவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன், அவையே எனக்கு தின்பண்டம், ஆனால் கனவுகள் அவன் கைகளில் சல்லா துணிகளை போல் கிழிபடுகின்றன, காதலியின் புன்முறுவலில் நான் மயங்கி நிற்கும் போது 'இது புன்முறுவல் அல்ல, பொய்' என்கிறான், 'ஆசை உன் மீது அல்ல, குழந்தை பெற்றுக்கொள்ள தான்' என்று தொடரவும் செய்வான் என்றால் நான் என்ன தான் செய்வது,
ஜே ஜே என் மனதில் தோற்றுவித்த மற்றொரு உணர்ச்சி லகரி, எதிர்பாராத இடத்தில் பள்ளத்தாக்கின் விளிம்பை வந்தடைந்தது போன்ற ஆச்சர்யம், அவன் பாஷை ஒரு சவரக்கத்தி, சொல்முறை கவிதை, தாண்டல் வீரன் ஓட்டபந்தயதில் தாவி செல்வது போல் வாக்கியங்களை தாண்டி செளிக்றான், முதல் வாக்கியத்தை வாசித்து இரண்டாவது வாக்கியம் தேடி கிடைக்காமல் நேராக மூன்றாவது வாக்கியத்தை பற்றிகொள்ளும்போது உண்டாகும் உணர்வை தான் மூளையின் நரம்பில் லகரியாக உணர்கிறேன்"


ஜே ஜே யின் எழுத்துக்கள் பற்றி சுந்தர ராமசாமி கூறியுள்ள இந்த வரிகளே என் ரசனைக்கு நான் வைத்துள்ள வரையறை. மற்றொரு விஷயம், நான் எந்த ஒரு படைப்பையும் முன்தீர்மானகளோடு அணுகுவதில்லை, என்னுடைய வாசிப்புகளின் பெரும்பகுதியை சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன், கசீ சிவகுமார், மதன் போன்ற சிலரின் பரிந்துரைகளே தீர்மானிக்கின்றன என்றாலும் எந்த புத்தகத்தையும் எப்படியாவது, ஒரு முறையாவது முழுதாய் வாசிப்பது என்ற குறிக்கோளுடனே களம் இறங்குவேன், இல்லாவிட்டால் தூங்க இயலாத ஒரு முன்பதிவில்லா ரயில் பயணத்தில் சாருவின் ஸீரோ டிகிரியை நூற்றி நாற்பது பக்கங்கள் தொடர்ந்து வாசித்திருக்க இயலாது. எனவே நண்பர்களே பார்வையை விசாலமாக்குவோம், ரசனையை வளர்ப்போம், ரசித்ததை பகிர்வோம்.

நண்பர் ஜெட்லி பலமுறை என்னை எழுதும்படி கூறிவந்துள்ளார், அப்போது அவர் சொல்லும் வாக்கியம் "முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க ஆசைபடாதே" என்பது தான், நான் சிக்ஸர் அடித்தேனா டக் அவுட் ஆனேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்

நன்றி
சங்கர்

Monday, September 28, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....(28.9.09)


நேற்று பூஜை இருந்ததால் ஒரு ஆறு மணிக்கு பூஜை போட்டு
பதிவர் சந்திப்புக்கு கிளம்பி விடலாம் என்றும் பார்த்தால் செம மழை.மழையால் கடைசியில் எட்டு மணிக்கு தான் பூஜை
முடிந்தது.பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...

************************************

யாரவது தெரிஞ்சா சொல்லுங்க....

ஆயிரத்தில் ஒருவன் எப்போது வெளிவரும்?????

************************************************

ஒரு சில பேர் பழுத்த மரம் தான் கல்லடிப்படும் என்று நம்
முன்னோர்கள் கூறிய கருத்தை தப்பாக எடுத்து கொண்டுள்ளனர்....
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று மட்டும்
தான் " நம் முன்னோர்கள் பிஞ்சுல பழுத்தவங்களை பத்தி
சொல்லவில்லை".(கண்டிப்பா உள்க்குத்து இருக்கு!).

***********************************************

நண்பரிடம் போனில்...

நான்: மச்சி நாளைக்கு சிதம்பரம் கோவிலுக்கு போறேன்...

நண்பர்: என்னடா தீடிர்னு...

நான்: வேண்டுதல் மச்சி...

நண்பர்: என்ன வேண்டுதல் டா?...

நான்: சிதம்பரம் கோவிலுக்கு போறது தான்...

நண்பர்: சரிடா ...போய்ட்டு வா. நான் அப்புறம் பேசுறேன்.

********************************************

சமீபத்தில் படித்த செய்தி:

தூத்துக்குடியில் குடித்து விட்டு பணியாற்றிய
மதுவிலக்கு ஏட்டுகள் கைது....

***************************************

பொன்மொழிகள்

நீ துன்பப்பட வேண்டுமானால் உன்னை விட
பணக்காரியை மணந்து கொள்.

- மைக்லேட்.

என்னை பொறுத்தவரை மனித தன்மையை அடியோடு
ஒழித்து விட்ட ஆஸ்திகனை விட மனித தன்மையை
பத்திரமாக பாதுகாக்கும் நாஸ்திகனாக இருக்க ஆசைபடுகிறேன்.

- இங்கர்சால்.

************************************

உல்டா விளம்பரம்:(சென்னை சில்க்ஸ்)

எனக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டோட ப்ரெண்டுக்கும் பிடிக்கும்
விஜய் மல்லையாவின் கிங்க்பிஷேர் ....
குடியா குடிப்போம்
சைட்டிஷை தள்ளுவோம்....
கடைசியில் வாந்தியும் எடுப்போம்!!


********************************************
மொக்கை மேட்டர் :

தென்னகத்தின் வருங்கால ஸ்பீல்பெர்க் போல எழுதி வரும்
ஒருவர் செம காமெடி இடுகை இட்டுள்ளார்......................
அவர் கூறவது "ஹரி ஒரு அடி முட்டாளான இயக்குனராம்,
சேவல் படத்தில் பிராமணர்கள் திருநெல்வேலி பாஷை
பேசுவார்களாம் அது கூட தெரியாம ஹரி படம் எடுத்து
இருக்குராம்"

(எனக்கு தெரிந்து என் பிராமண நண்பர்கள் இரண்டு பேர்
திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். அவர்கள் திருநெல்வேலி
பாஷை தான் பேசுவார்கள்)

சேவல் படத்தில பிராமணர் பாத்திரங்கள் அவர்கள் பாஷையை
பேசி இருந்தால் படம் வெற்றி அடைய ஒரு காரணமாக

இருந்திருக்கும் என்ற அரிய கண்டுபிடிப்பை நமக்கு கண்டுபிடித்து
கூறிய பதிவர் சக்திவேல் அவர்களின் பெயரை ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்வோம்.

************************************************
நன்றி

கண்டிப்பா ஒட்டு போட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, September 25, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு....(25.9.09)

வாழ்த்துக்கள்:

அழகர் மலை இன்னைக்கு தான் அம்பதாவது நாளை நிறைவு
செய்தது, அந்தோணி யார், சிவகிரி போன்ற படங்கள் நூறாவது
நாளை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது........

***********************************************

கடந்த வாரம் பேப்பரில் படித்த விஷயம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியினர் தங்கள் தலைவரை பற்றி
மலை மலை என்ற படத்தில் தவறான வசனம் வருவதாக
கூறி தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர்.
இதிலே என்ன கொடுமைனு பாருங்க அந்த படம் அந்த
தியேட்டரில் ஓடவில்லை.ரைட், அப்புறம் கொஞ்ச நேரம்
கோஷம் போட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்களாம்.....

இதில் இருந்து எனக்கு ரெண்டு விஷயம் தெரியுது :

# அந்த குறிப்பிட்ட கட்சியினர் லேட்ஆக தான் படத்தை
பார்த்து இருக்கின்றனர், போன வாரம் தான் படம்
அம்பதாவது நாளை கடந்து நூறாவது நாளை நோக்கி
வெற்றி நடை போடுகிறது.(காமெடி இல்ல சீரியஸ், ஆனா
எந்த தியேட்டர்ல அப்படின்னு என்கிட்டே கேக்காதிங்க!!!)

# பேப்பரில் படம் விளம்பரத்தில் போடும் தியேட்டர்களில்
படம் ஓடுவது இல்லை. ஏன்? அப்புறம் எதுக்கு இந்த வெட்டி
விளம்பரம்?..... அதை சரியா போட்டாதான் என்ன....


எனக்கு தெரிஞ்சு மலைமலை படத்தை சத்யம் தியேட்டரில்
மூணு வாரம் ஒடிச்சு...ஆனா இவங்க அம்பது நாளை கடந்த பின்னும் சத்யம் தியேட்ட்டரில் ஓடுவதாக பீலா உட்டனர். ...
இப்ப பாருங்க இவங்க பப்பு தானா வெளியே வந்து ஒழுங்கா
ரெண்டு தியேட்டரில் தலா ஒரு ஷோ ஓடுவதாக விளம்பரம்
செய்கின்றனர். யாருக்கு தெரியும் அங்க படம் ஓடுதான்னு....


**************************************************

சில்லரை பையன்னு யாரையும் கூப்பிடாதிங்க:

இனிமே நீங்க யாரையும் சில்லரை பையன் அப்படின்னு
கூப்பிடமுடியாது.ஏன் என்றால் நாட்டுல எவ்ளோ
சில்லரை தட்டுப்பாடு அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.இல்லனா நான் சில சாம்பிள்
சொல்றேன்.......

# ஒரு ஹோட்டல்லில் பார்த்த வாசகம்

"ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கொடுத்தால் டிபன் இலவசம்"

நாம சில்லரை கொடுத்தால் அவுங்க ஐநூறு ரூபாய் நோட்
கொடுத்து ஒரு வேளை டிபன் தருவார்கள். அதுகூட அவுங்க
சொல்றத தான் சாப்பிடணும்... இதோ அந்த லிஸ்ட்

* தோசை மற்றும் காபி
(அல்லது)
*பொங்கல் மற்றும் வடை
(அல்லது)
*நான்கு இட்லி மற்றும் காபி.

நாட்டுல சில்லரை கிடைக்க ரொம்ப கஷ்டம்ங்க....
இனிமே பக்கி பசங்கள திட்டனும்னா வேறு ஏதாவது
பேர் வச்சிதான் திட்டனும் போல......
இப்போ சில்லறைக்கு தான் மதிப்பு அதிகம்.......

சரி உடுங்க....யாரவது சில்லரை அதிகம் இருந்தா எனக்கு
போன் பண்ணுங்க......கடைசியா ஒன்னு சொல்றேன்
நான் ரொம்ப நாணயமானவன்.


***********************************

இந்தியாவிலேயே நம்ம ராயப்பேட்டை மெலடி தியேட்டரில்
மட்டும் தான் பால்கனி டிக்கெட் விலையும், கிழே டிக்கெட்
விலையும் ஒன்று,ஆமாம் அம்பது ரூபாய் மட்டும் தான்....

சரி நல்ல விஷயம்தானே அதுக்கு என்ன என்று கேக்குறிங்களா??

டிக்கெட் கவுன்டரில் அவன் மேல கிழே என்று கூறுவதில்லை.
நான் படத்துக்கு சென்றபோது ஒரு பேமிலி மேல வந்தார்கள்

அவர்களை திரும்ப கிழே போக சொன்னார்.அதே போல் பல
பேர் தெரியாமல் வந்து திரும்பவும் திட்டி கொண்டே கிழே
சென்றார்கள்.

ஒன்னு மேல பத்து ஏத்துங்க,இல்ல கிழே பத்தை எறுக்குங்க.

******************************

இது போன்று அதி முக்கிய நாட்டு நடப்பு செய்திகள் அனைவரையும்
அடைய ஒட்டு போடுங்கள்.

உங்கள்
ஜெட்லி சரண்.

Wednesday, September 23, 2009

G.I.Joe : The Rise OF Cobra


ரொம்ப வருடங்கள் கழித்து நான் திரை அரங்கில் பார்த்த ஆங்கிலப் படம், அதுவும் நான் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்து பொழுதைக் கழித்த G.I. Joe படம் பார்த்ததில் செம செம சந்தோசம் தான். ரொம்ப நாளாக முயன்று நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இயக்குனர் ஸ்டீபன் சொம்மேர்ஸ் அவர்களுக்கு என் நன்றிகள் பல, நான் சிறு வயதில் வைத்து விளையாடிய பொம்மைகளுக்கு உயிர் குடுத்து அந்த பாத்திரங்கள் அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருகிறார். அரங்கில் பலரும் என்னை போலவே, இதோ பாரு Snake Eyes, Duke இப்படி ஒவ்வொரு பாத்திரம் வரும் பொழுதும் குஷியாகி பேசிக்கொண்டனர். அந்த கார்ட்டூன் மொத்தத்தையும் நவீன தொழில்நுட்பத்துடன் அதன் Originality மாறாமல் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியுள்ளார். இவர் ஏற்கனவே The Mummy, Catch Me If U Can, The Jungle Book, Deep Rising..... போன்ற அதிரடி பிரமாண்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மம்மி பட புகழ் Brendan Fraser இந்த படத்தில் சும்மா ஒப்புக்கு வருகிறார், அவரை இன்னும் நல்லா பயன் படித்திருக்கலாம்.

ஒவ்வொரு G.I.Joe உருவான விதமும் மிக சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது, கதை என்னவோ வழக்கமான ஆங்கில action பட கதை தான். கெட்டவர்களிடம் இருந்து இந்த உலகை காக்கும் நல்லவர்களின் கதை. ஆனால் அதை எடுத்த விதம் தான் சூப்பர். அதுவும் அந்த பாரிஸ்இல் நடக்கும் அதிரடி Chasing, பிரம்மாண்டம் என்றால் அப்படி ஒரு பிரம்மாண்டம்.அதென்னப்பா உலகை அழிக்கும் வஸ்துக்கள் அனைத்தும் Fluorescent Green நிறத்தில் இருக்குது?? கடைசியில் சிறிது நேரம் போர் அடித்தாலும் ரொம்ப காட்சிகள் நல்லா இருக்கு. படம் முடிந்த விதத்தை பார்க்கும் பொழுது, இன்னும் சில Part வரும் என்றே தோன்றுது.


மொத்தத்தில் நீங்கள் சிறு வயதில் இந்த கார்டூன் பார்த்தோ அல்லது இந்த பொம்மைகளை வைத்து விளையாடி இருந்தால் உங்களுக்கு இந்த படம் ஒரு மலரும் நினைவாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. கண்டிப்பாக சென்று பாருங்கள்.

நன்றி
சித்து

Tuesday, September 22, 2009

சொல்ல சொல்ல இனிக்கும் - விமர்சனம்.

சொல்ல சொல்ல இனிக்கும் - விமர்சனம்.

கடந்த வெள்ளியன்று வெளியான படம் இது பல பேருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.முரளி அப்பாஸ் அவர்கள்
இயக்கியுள்ளார்.நவ்தீப்,அபிநெய்,பிரகாஷ்ராஜ்,மதுமிதா
ஆகியோரின் நடிப்பிலும் பரத்வாஜ் அவர்களின் இசையிலும்
வெளிவந்திருக்கும் படம்.

எனக்கு இந்த நல்ல படத்தை படத்தை பரிந்துரை செய்த
அண்ணன் கேபிள் சங்கருக்கு நன்றி.இந்த படத்தில் காதல்
ஒரு பள்ளிக்கூடம் என்ற பாடலை நம் சக பதிவர்
அப்துல்லா அண்ணன் பாடியுள்ளார், வாய்ஸ் சூப்பர் ஆக
இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணே.

போன மாதம் நான் பேப்பரில் படித்த செய்தி:

டி.வி. தொகுப்பாளினி மீது ஆசிட் வீச்சு.
நான்காவது காதலன் கைது.

மேல உள்ள செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கு.
நவ்தீப்பை காதல் செய்யும் பெண்கள் ஏதாவது ஒரு காரணத்தை
சொல்லி கலட்டி நவ்தீப்பை விட்டு விடுகின்றனர். ஆனால்
அதை அவர் அதை சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாமல்
ஜஸ்ட் லைக் தட் என்று அவர் எப்போதும் போல்
கலகலப்பாக இருக்கிறார்.அடுத்த பெண்ணை டாவு
அடிக்கிறார் அவள் ஏதாவது காரணம் சொல்வாள்
உடனே பிரிந்து விடுவார்கள்.

இது தான் இப்போ நாட்டுல நடக்குது, இது தெரியாம சில
பேர் டீப் லவ் அப்படின்னு சொல்லி தாடி வளக்குறாங்க
இல்லேன்னா தற்கொலை பண்ணி கொள்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ் தான் படத்தின் மிக பெரிய ப்ளஸ், சும்மா
மிரட்டுகிறார்.கிளைமாக்ஸ்இல் அவர் முழிக்கும் முழி
சூப்பர்.குறிப்பாக அந்த ஏலம் எடுக்கும் காட்சி செம...

அபிநய் தன் வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.
விஜயகுமார் இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார்.
சத்யன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்
மொக்கை போடுகிறார்.படத்தில் வசனங்கள் பளிச், ஒரு ஒரு
வசனமும் நச்சுனு இருக்கு.குறிப்பாக நவ்தீப் கோபமாக
மதுமிதாவிடம் பேசும் காட்சி தியேட்டரில் பயங்கர கத்தல்.

படத்தில் எனக்கு பிடித்த சில விஷயங்கள்:

# படம் 2.10 மணி நேரம் தான் ஓடுகிறது....

# வசனம்

# பிரகாஷ்ராஜ்

#நவ்தீப்

# படம் போர் அடிக்கமால் போகிறது கடைசி பாடல் தவிர...

#ஒளிப்பதிவு

#ஆஷிஷ் வித்யார்த்தி(எதார்த்தமான போலீஸ்....)

# காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடல் வரிகள் மற்றும் பாடிய
அப்துல்லா அண்ணே...

தவிர்த்திருக்க வேண்டியது;

நாயகிகளின் தாராளமனதை காட்டும் காட்சிகள் தவிர்த்திருக்கலாம்
என்னை போன்ற சிறுவர்களின் மனதை சஞ்சலப்படுத்துகிறது.

ஜெட்லி பஞ்ச்:

சொல்ல சொல்ல இனிக்கும் விளம்பரம் அதிகரித்தால் தரமான
வெற்றிக்கு வாய்ப்பிருக்கு.....

இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் போய் சேர
ஒட்டு போடவும்....

உங்கள்
ஜெட்லி சரண்.

Monday, September 21, 2009

பிரபல பதிவர் சக்திவேல் இது நியாயமா??...

பிரபல பதிவர் சக்திவேல் இது நியாயமா??...

நான் எழுதிய மதுரை டூ தேனி படத்தின் விமர்சனத்துக்கு வந்த திரு.சக்திவேல் அவர்களின் பின்னூட்டம்:


"என்னடா உங்க டேஸ்ட்டு, உங்கள மாதிரி ஆளுங்களுக்காகவே
பேரரசு,ஹரி மாதிரியான ஆளுங்க ஒரே மாதிரியான படங்களை
தருவாங்க அந்தப்படங்களை பாத்திட்டு லூசு மாதிரி ரோட்டுல திரிங்க.உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா"சக்திவேல் அவர்கள் மதுரை டூ தேனி படத்தின் பி.ஆர்.ஒ
அதனால் தான் அவரிடம் இருந்து இப்படி ஒரு காரமான
பின்னூட்டம்.சக்திவேல் பத்தி நம்ம பதிவுலகத்துக்கு
தெரியாதது அல்ல அவரை பற்றி
கூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்
என்ற தலைப்பில் இடுகைகள் வந்துள்ளது. அதன் பின்
அவர் பதிவுலகத்தை விட்டு ஓடுவதாக கூறினார்.
அப்போதுதான் நான் அவரின் பதிவை பார்த்தேன்
என்பதை விட அவரின் விசிட்டர்ஸ் பார்த்தேன்
தினமும் ஆயிரம் பேர் வருகை தந்தனர்.சரி நானும்
ஒரு கடிதம் அனுப்பினேன் "தொடர்ந்து எழுதுங்கள்" என்று.

அப்போது திரு.சக்திவேல் அவர்கள் விளம்பரத்துக்கு மட்டும்
என் கடிதம் மற்றும் சிலரின் கடிதத்தை வெளியீட்டு மீண்டும்
எழுத தொடங்கினார்.ஒரு பதில் கடிதம் இல்லை ஒரு
பின்னூட்டம் இல்லை,பயங்கர தலைகனம் பிடித்த ஆள்
என்று புரிந்தது.அப்புறம் அந்த பக்கம் போறது இல்லை.

சக்திவேல் ஈரம் படத்துக்கு "ஏதோ படம் சுமார் தான்.
இந்த படத்தை எடுத்த ஷங்கர்க்கு ஈரமான மனசு"
அப்படின்னு ஒரு நல்ல அரங்கு நிறைந்த காட்சிகளாக

ஓடி கொண்டிருக்கும் படத்துக்கு அவரின் தரமான
விமர்சனம் ஒரு சான்று.சரி ஆனால் அவர் பணிபுரிந்த
படத்துக்கு விமர்சனம் எழுதினால் கோபம் வருகிறது
சாபம் உடுகிறார்.

ஒரு படம் எடுக்கறது எவ்ளோ கஷ்டம் அப்படின்னு
எனக்கு தெரியும், அதை விட கஷ்டம் ரசிகர்களை
திருப்திப்படுத்துவது.

சரி இனிமே அவரின் பின்னூட்டதுக்கு வருவோம்,

சக்திவேல் அவர்களே பேரரசு படங்களை நான் பார்ப்பது
இல்லை நீங்க பார்த்து மெண்டல் ஆனா நான் ஒன்னும்
பண்ண முடியாது.பேரரசு கூட ஹரியை தயவு செய்து
ஒப்பீட வேண்டாம்.ஹரி எந்த விதத்தில் உங்கள்
கண்ணுக்கு இளக்காரமாக தெரிகிறார் என்று தெரியவில்லை.
ஏதோ சேவல் படம் நன்றாக இல்லை என்பதால் அவரை
குறை கூற முடியாது.

மதுரை டூ தேனி, இன்டெர்வல் முடிந்து பத்து நிமிடம் ஆகியும்
கதைக்குள் போகமால் சுவராசியம் இல்லாத காட்சிகள் எப்படி
ஒருத்தனை தியேட்டர் உள்ளே உட்கார வைக்கும்?.
இதில் வேறு படத்துக்கு ஹீரோவோடு வந்த அல்லக்கைகள்
மொக்கை காட்சிகெல்லாம் கை தட்டி விசில் அடித்து
கடுப்பு ஏற்றி......... ஏதோ உங்கள் படம் தான் எங்களை போன்ற
ரசிகர்களை மற்ற படங்களில் இருந்து காப்பற்றுவது போல
நீங்கள் எண்ணி கொண்டால் அது உங்கள் அறியாமையை
தான் காட்டுகிறது.


ஆமாம்... ஒருமையில் "டா" என்று கூறுவது தாங்கள்
கற்ற பாடத்தை காட்டுகிறது.நான் சிறுவன் தான் அதற்காக
"டா" என்று அழைப்பது தாங்கள் அறிந்த நாகரிகம் போலும்.
வரும் காலங்களில் உங்கள் பயணம் வெற்றிகரமாய் அமைய

இச்சிறுவனின் வாழ்த்துக்கள்.


உங்கள்
ஜெட்லி சரண்.

Saturday, September 19, 2009

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்:

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி
மலை மலை வெற்றிப்படத்தின் அடுத்த படைப்பு மாஞ்சாவேலு.
இந்த படத்திற்கும் அருண் விஜயின் மாமா தான் தயாரிப்பாளர்.
அதே மலை மலை கூட்டணி ஒருவர் கூட மாறவில்லை.
என்ன மலை மலை படத்துல அருண் விஜய் மீசையை
முறுக்கி விட்டார் இதுல இறக்கி விட்டுருக்கார் நம்ம சிங்கம்
சூர்யா மாதிரி.ஒரு ஸ்டில்இல் அருண் விஜய் அவர்கள் காஸ்
சிலிண்டர் ஒன்றை தூக்கி அடிப்பதை போல் பார்த்து மிரண்டு
விட்டேன்.....

ஆமா... அது காலி காஸ் சிலிண்டர் தானே அருண்....??

***************************************
செய்தி:

ஜீவா ஒரே நாளில் சிங்கம் புலி படத்துக்காக ரெண்டு வேடத்தில்
நடித்தார்.

இது என்ன பிச்சாத்து மேட்டர் எங்க தளபதி டாக்டர் விஜய்
அவர்கள் மூன்று வேடத்தில் ஒரு மணி நேரத்தில் நடித்து
கொடுத்து இருப்பார்.

வழக்கம் போல் ஒரு விஜய், தலையை களைத்து வேறு கலர்
சொக்க போட்டா.. தம்பி விஜய், தலையில் லேசாக வெள்ளை
பெயிண்ட் தடவி வாய்க்குள் பஞ்சு வைத்தால்.. அப்பா விஜய்.

*********************************************************

ஒரு ஜூஸ்க்கடையில் டீ குடிப்பவனக்கு தர மரியாதை கூட
லெமன் ஜூஸ் குடிப்பவனக்கு கிடைப்பதில்லை. நீங்க நேரிய
வாட்டி பார்த்துருக்கலாம் நாம லெமன் ஜூஸ் முதலில்
ஆர்டர் செய்வோம் ஆனால் நமக்கு பின்னால் வந்தவன்
திராட்சை ஜூஸ் ஆர்டர் செய்வான் ஆனால் முதலில் ஜூஸ்
போடுபவன் திராட்சை ஜூஸ் தான் போடுவான்.

இப்போ வேற ஒரு லெமன் ஆறு ரூபாயாம் இனிமே லெமன்
ஜூஸ் இல்லன்னு அசால்ட்ட சொல்லிடுவாங்க.....

**********************************************
சந்தேகம்:

# சமீபத்தில் 9.9.09 அன்று இரவு ஒன்பது நிமிடங்கள் விளக்கை
அணைக்க சொன்னார்கள். நாம சில பேர் அணைத்து இருப்போம்.
ஏன் அந்த ஒரு நாள் மற்றும் இந்த நல்ல விஷயத்தை செய்ய
சொல்லி பயங்கர விளம்பரம்..... 9.9.09 என்ற நம்பர் பேன்சி
நம்பர் என்பதாலா????

*************************************************
சின்ன பசங்க கண்ணை மூடுங்க.....

சாரீயை இப்படி கூட கட்டலாமா? என்று என்னை யோசிக்க
வைத்தவர்கள்... உங்கள் பார்வைக்கும்.

அனைவருக்கும் பொது அறிவு வளர ஒட்டு போடுங்கள்...

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, September 18, 2009

மதுரை டூ தேனி - ஜாலி விமர்சனம்.

மதுரை டூ தேனி - ஜாலி விமர்சனம்.

முன்னுரை:

நண்பர் சரவணகுமார் தன் வலைப்பூவில் என்னை பற்றி எழுதிய
சில வரிகள் உங்கள் பார்வைக்கு--
"நம் படத்தை யார் பார்ப்பார்கள் என்று திரையுலகினர் யோசிக்கவே முடியாதபடி செயல்பட்டு வரும்
ஜெட்லி".


அறிவிப்பு:

நான் ஏற்கனவே A WEDNESDAY ஹிந்தி படத்தை பார்த்து விட்டதால்
உன்னை போல் ஒருவனை சிறிது நாள் கழித்து பார்க்கலாம்
என்று முடிவெடுத்து உள்ளேன், படம் பார்த்தால் ஒப்பிட தோன்றும்
என்ற காரணத்துக்காக நான் படம் பார்த்தாலும் விமர்சனம் எழுத
மாட்டேன்.

********************************உங்கள்
ஜெட்லி சரண்.

மதுரை டூ தேனி, இந்த படத்தக்கு விமர்சனம் எழுதலாமா?
வேண்டாமா?.இந்த படத்தை பார்த்ததாக வெளியில் சொல்லி
கொள்ள வேண்டாம் என்று நினைத்து தான் யோசித்தேன்.
பொதுவா நான் இந்த மாதிரி சிறு பட்ஜெட் படங்களுக்கு
ஆதரவு தருவது உண்டு.அந்த வெண்ணிலா கபடி
குழு பொண்ணு நடிச்சிருக்கு போய் பாப்போம் அப்படின்னு
கிளம்பினேன்.


அங்க போன கொடுமையை பாருங்க என்னை சேர்த்து ஒரு
பத்து பேர் தான் டிக்கெட் எடுத்துட்டு உள்ளே விடுறதுக்கு
காத்துட்டு இருக்கோம். அப்பத்தான் ஒருத்தர் பெரும் படையோட
வந்தார் அவர் தான் படத்தின் ஹீரோவாம்.அப்புறம் ஒரு இருபது
பேர் வந்தாங்க பார்த்த எல்லோரும் பட சம்பந்த பட்டவங்க போல.
12.15 show time ஆனா படம் போட்டது 12.45 மணிக்கு.இன்னைக்கு
தாங்க புல் ஏசி ஒடிச்சு.

சரி படத்துக்கு வருவோம், ஹீரோ அரவிந்த்க்கு ஆசிரியர்
வேலை கிடைத்து மதுரையில் இருந்து தேனிக்கு
செல்கிறார். பஸ் பயணத்தில் கதாநாயகி ஸ்ரிதிகாவை லவ்வுகிறார்,காதலை சொல்கிறார் அப்புறம் இன்டெர்வல்.
ஸ்ரிதிக்காவை பின்தொடர்கிறார் இன்டெர்வல் முடிந்து
பத்தாவது நிமிடத்தில் நான் தியேட்டரை விட்டு
வெளியே வந்து விட்டேன்.

தியேட்டர் நொறுக்க்ஸ்:

# மூன்று காதல் ஜோடிகள் ஒன்றாக படத்துக்கு வந்தன,
அவைகள் எப்போது பறந்தன என்று தெரியவில்லை????.

# என் பக்கத்துக்கு இருக்கை ஆசாமி மிகவும் ரசித்து
பார்த்தார் ஒரு வேளை படத்துக்கு சம்பந்த பட்டவரோ
என்று டவுட் வந்தது ஆனால் அவரும் இன்டெர்வல்
முடிந்த உடன் கிளம்பி விட்டார்.

# படத்தில் ஏகப்பட்ட மொக்கை சீன், அதற்கு தியேட்டரில்
பலத்த கைதட்டு வேறு பின்பு தான் காரணம் புரிந்தது ஹீரோ
கூட படம் பார்க்க வந்த அல்லக்கைகள் என்று.

# சில வருடங்கள் முன் நான் பாதியில் எழுந்து வந்த படம்
பார்த்திபன் நடித்த தென்றல் என்ற திரைக்காவியம், இப்போது
இது......


# நம்ம ஹீரோ தாங்க அடுத்த விஜய், வசனம் பேசியே தண்ணீர்
கேட்டு மறியல் பண்ணும் கிராம மக்களை வழி விட செய்கிறார்.

# படத்தில் ஒரு மொக்கை இன்டெர்வல் பிளாக், என் முன்
இருக்கை நபர் (அவரும் பட சம்பத்தப்பட்டவர்) இன்டெர்வல்
கார்டு போடும் முன்னே வெளியே போய் விட்டார். ஆஹா
தனியா சிக்கிட்டேன் போல என்று நொந்து கொண்டேன்.
நல்ல வேளை நான் நிதானத்தில் இருந்ததால் கமெண்ட்
பாஸ் செய்யவில்லை.

தமிழ் சினிமாவில் தடை செய்ய பட வேண்டிய விஷயங்கள்:

# மதுரை பாஷை பேசுறேன் அப்படின்னு ஓவர் லந்து பண்றது.....

# அப்புறம் பின்னணி இசையில் இளையராஜா பாட்டை போடறது...

#அப்புறம் எவனாது ஒரு சொறி மண்டையன புடிச்சிட்டு வந்து
காமெடினு பேருல மொக்கை போடறது....

இதெல்லாம் நிறுத்தனும்.......

*******************************************

நான் ஏன் இன்டெர்வல் முடிஞ்சா பின்னாடியும் படம் பார்த்தேன்
என்றால், புல் ஏ.சி மட்டுமே காரணம்.நானும் எவ்ளோ நேரம் தான்
வலிக்காத மாதிரி நடிக்கிறது...முடியுல முடியுல....

ஜெட்லி பஞ்ச்:

பஞ்ச் எழுதும் நிலைமையில் நான் இல்லை.....அறுபது ரூபாய்
போச்சே....

போனஸ் செய்தி:

படத்தை பாதியோடு பார்த்து விட்டு வந்தாலும், நம்ம ஆயிரத்தில் ஒருவன் ஆண்ட்ரியா அக்காவை ஜிம் முடித்து வெளியில் வரும்
போது பார்த்தேன்.முதலில் ஏதோ கிழவி தான் வருவதாக
எண்ணினேன் அப்புறம் தான் தெரிஞ்சது அது ஆண்ட்ரியா என்று.

இந்த தகவல் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...

Wednesday, September 16, 2009

உங்கள் ப்ளாகில் பாலோயர்களை அதிகரிக்க சில வழிகள்?

பாலோயர்களை தேடி ஒரு பயணம்:

நாங்கள் புதிதாக வலைப்பூ ஆரம்பித்த போது மொத்தம்
இருந்தது மூன்று பாலோயர்ஸ் ஒன்று நான், மற்றவர்கள்
சித்துவும் நட்டும்.நான் பிற வலைப்பூக்களை பார்க்கும் போது
200,300 பாலோயர்ஸ் இருந்தார்கள், கண்டிப்பா இது ஒரு
பெரிய சாதனை தான் என்று நினைத்தேன். அப்புறம் நம்ம
வலைப்பூவுக்கு யார் சேர போற என்று எண்ணினேன்.
ஆரம்பித்த ஏழு மாதத்தில் 80 பாலோயர்ஸ் இது கொஞ்சம்
கம்மி என்றாலும் என்னை நம்பியும் சேர்ந்து இருக்காங்க
என்று நினைக்கும் போது புல் அரிக்கிறது.

யாரும் சிக்கலையே.......?சரி விஷயத்துக்கு வரேன்.....
கடந்த ஒரு மாதமாக ஒரு பாலோயர் கூட சேரவில்லை,
அது ஏன் என்றால் நண்பர் சித்து இப்போது அவ்வளவாக
இடுகை ஈடவில்லை என்பதே காரணம்.


************************************
ஆறு மாதங்களுக்கு முன்...

நண்பர் நட்டுவிடம் தன் ஆபிஸ் நண்பர்களை பாலோயர்களாக
சேர்த்து விட சொன்னேன்.நட்டு அவர்கள் சும்மா சேர்த்து
விட முடியாது தனக்கு அமௌன்ட் வேணும் என்றார். ரைட்
தலைக்கு பத்து ரூபாய் பேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.
முதலில் பத்து பேரை சேர்த்து விடு நூறு ரூபாய் தந்து
விடுகிறேன் என்றேன்.அட்வான்ஸ் கொடு என்றார் நட்டு.
நீ சேர்த்து விடு நான் அப்புறம் முழுவதுமாக தருகிறேன்
என்றேன். நான் அட்வான்ஸ் தராத கோபத்தில் திரு.நட்டு
அவர்கள் இன்று வரை ஒருவரை கூட பாலோயர்களாக
யாரையும் சேர்க்கவில்லை.

********************************************

பாலோயர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.......

மாதம் தோறும் ஹாங்காங் செல்ல வாய்ப்பு...

சேருங்கள் இப்போதே ஜெட்லி வலைப்பூவின் பாலோயர்களாக.
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும் மூன்று நபர்களுக்கு
ஹாங்காங் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படும்.
*** condition apply .

*** ஹாங்காங் செல்ல தேர்ந்து எடுக்கப்படும் பாலோயர்களுக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வரை பேருந்து வசதி
மட்டுமே ஏற்பாடு செய்து தரப்படும்.மிச்சப்படி ஹாங்காங் போறதுக்கு டிக்கெட், தங்கும், மற்றும் சாப்பிடும் செலவு நீங்களே ஏற்று கொள்ள வேண்டும்.

**************************************

இது இன்னொரு சலுகை:

இப்போது பாலோயர் ஆகிறவர்களுக்கும் ஏற்கனவே இருப்பவர்களுக்கும் நவராத்திரி மற்றும் ஜெட்லியின் அன்பு பரிசாக கந்தசாமி

படத்துக்கே வாழ்த்து தெரிவித்து தியேட்டர்களை விட்டு கொடுத்த

"சிவகிரி" படத்தின் நூறாவது நாள் டிக்கெட் உங்கள் இல்லம் தேடி வரும்.

போனஸ் செய்தி: இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பாதி மோட்சம் அடைந்ததற்கு சமம்....ஆமாங்க படம் மினி மோட்சத்தில் ஓடுகிறது.

***********************************

கம்பெனி விளம்பரம்:

ஜெட்லி MLM டிவிசன் வழங்கும்:

எங்கள் ப்ளாகில் ஆள் சேர்த்து விட்டால் ஸ்டார் அந்தஸ்து கொடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

# பத்து பேரை சேர்த்து விட்டால் சில்வர் ஸ்டார்.

#இருபது பேரை சேர்த்து விட்டால் கோல்டன் ஸ்டார்.

#நூப்பது பேரை சேர்த்து விட்டால் பிளாட்டினம் ஸ்டார்
அந்தஸ்து வழங்கப்படும்.

#எங்களுக்கு வரும் ஒவ்வொரு பாலோயர்களும் எங்களுக்கு ஒரு
தல தான் அதாங்க அல்டிமேட் ஸ்டார்...

****************************************

பின்னூட்டம் போடாதவர்களுக்கு ஒரு கோரிக்கை:

அப்புறம் பின்னூட்டம் வர வர ரொம்ப கம்மியா வருது...
ஒரு மொக்கை படத்துக்கு வர பின்னூட்டத்தில் பாதி
கூட நல்ல படத்துக்கு வரல... அதான் உண்மை.
அதனால் நிறைய பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு
மாதம் மாதம் ஒரு அமௌன்ட் அனுப்பி வைக்கலாம்
என்ற யோசனையில் உள்ளேன்.கூடிய விரைவில்
கம்பெனியில் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும்.

இந்த யோசனைகள் மற்றும் பரிசை அனைவரும் இலவசமாக
பெற ஒட்டு போடுங்கள்....

நன்றி
ஜெட்லி சரண்

Monday, September 14, 2009

சுசியும் சேரனும் மற்றும் பலரும்...

சுசியும் சேரனும் மற்றும் பலரும்...கந்தசாமி வெற்றி படத்தின் இயக்குனர் சுசிகணேசனின்
ஆதங்கத்தை இந்த வார குமுதத்தில் படித்தேன்.அதன் பின் எழுதியது.படத்தை ஒருவரும் விடாமல் அனைவரும் கிழித்து
விட்டார்கள்.நம்ம டாக்டர் சுரேஷ் அவர்கள் வாரத்துக்கு
ஒரு கந்தசாமி பதிவு போட்டு விடுகிறார்(பாவம் ரொம்ப
நஷ்டம் போல).சுசி அவர்கள் கந்தசாமி படத்தை வசூலை
வைத்து மட்டும் வெற்றி படம் என்கிறார், அந்த படம்
ரசிகர்களை கவர்ந்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல
வேண்டும். இதையெல்லாம் நீ சொல்ல உனக்கு என்ன
தகுதி என்று கேட்டால் படத்தை இரண்டு வாட்டி பார்த்து
இருக்கிறேன்(வேறு வழி இல்லாமல் ரெண்டாவது வாட்டி
பார்க்க வேண்டியது ஆச்சு).அது சரி படம் பார்த்துட்டா நீ
என்ன வேணா எழுதலாமா? என்று கேட்டால், ஒரு படைப்பு
என்றாலே விமர்சனம் இல்லாமல் அது முழுமை அடையாது.
விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாதவன் கண்டிப்பாக
ஒரு நல்ல படைப்பாளியாக முடியாது அவ்வளவு தான்.

சுசி அவர்களின் திருட்டு பயலே படத்தை நான் இப்போது
டி.வி.யில் போட்டாலும் ரசித்து பார்ப்பேன். மிக அருமையான
திரைக்கதை , சுவாரிசியம் உள்ள காட்சிகள், சமூகத்தில் நடக்கும்
கள்ள காதலை வெட்ட வெளிச்சமாக கூறவது இது போல் பல.
ஏன் சுசியால் கந்தசாமியின் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை, சுசி சார் நாங்க ரெண்டு வருஷுமா எடுத்த படம்
எப்போ வரும் எப்போ வரும் அப்படின்னு ஆவலோட பார்த்த படத்தில் வெறும் பிரமாண்டம் மட்டுமே உள்ளது, திரைக்கதை எங்கே??.

கந்தசாமியின் வெற்றி மந்திரம் இது தான் "படம் நல்லா இல்லன்னு சொன்னாலும் அப்படி என்னதான் நல்லா இல்லன்னு போய் எல்லோரும் பாக்குறாங்க, அது ஸ்ரேயாவுக்கு ஆக கூட இருக்கலாம்".......

இன்னைக்கு குமுதம் புக்ல உங்க பேட்டியை பார்த்த உடன்
சிரிப்பு தான் வந்தது.போன இதழில் உங்களை ஞாநி தாக்கியவுடன்
இந்த இதழில் நீங்கள் அவரை தாக்கி எழுதி பிரமாண்டம் என்பது
ஒருவருக்கு மட்டும் தான் சொந்தமா? நாங்கெல்லாம் எடுக்க
கூடாதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே, ஆனா
படத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விஷயம் ஒன்னுமே இல்லை சுசி.

********************************************

அடுத்து சேரன், நான் சேரன் இயக்கி நடிக்காத படங்களின் ரசிகன்.
எனக்கு ஆட்டோகிராப் படம் கூட பிடிக்காது, நான் பொக்கிஷம்
படம் கூட பார்க்கவில்லை.ஆனால் ஜெயா டி.வி.யில் ஒரு பேட்டியில்
இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களை "தான்தோன்றிகள்" என்று
கூறிப்பிட்டு பேசியதாக ஒரு வலைப்பூவில் படித்தேன்.பொக்கிஷம் படம் எடுத்து பொக்கிஷம் இழந்து காணப்படும் சேரன்
அவர்களே யாருதான் தான்தோன்றிகள் இல்லை இந்த உலகில்??.
உங்களை விட வேறு யார் நல்ல எடுத்துகாட்டு?.


நான் எடுத்ததான் படம் அப்படின்னு உங்களுக்கு ஒரு ஈகோ
இருக்கு.படம் எடுங்க சார் வெற்றி கோடி கட்டு மாதிரி கமர்சியல்
பிளஸ் கருத்து சொல்ற மாதிரி எடுங்க, சரி லவ் படம் தான்
எடுப்பேன் அப்படின்னு நீங்க சொன்ன எடுங்க ஆனா நீங்க
நடிக்காதிங்க.எனக்கு இப்போவும் உங்க மேல நம்பிக்கை இருக்கு
நீங்க ஒரு நல்ல சமூக படம் தருவிங்க அப்படின்னு.உங்க பாண்டவர்
பூமி படத்தை நான் முதல் நாள் முதல் காட்சி போய் பார்த்தேன்
யாருக்காக?? உங்கள் இயக்கத்துக்காக மட்டும்...


கடைசியா ஒரு விஷயம் புரியுல...

சுசி மற்றும் சேரன் இருவருக்கும் ஒரே கேள்வி:

ஆமாம்,அப்புறம் நீங்க ரெண்டு பேருமே படத்தின் நீளத்தை ஏன்
குறைச்சிங்க?.... ஏன் அப்படியே ஓட விட வேண்டியது தானே
அதில் என்ன தயக்கம் உங்களுக்கு....

இப்படிக்கு
ஜெட்லி சரண்.

Friday, September 11, 2009

ஈரம் - விமர்சனம்.

ஈரம் - விமர்சனம்.ஈரம், படத்துக்கு சரியான டைட்டில்.என்னை 2.45 மணிநேரம்
மழையில் நினைய வைத்த இயக்குனருக்கும், ஒளிப்பதிவு செய்த
மனோஜ்க்கும் என் நன்றிகள்.படத்தில் தண்ணீரை ஒரு கேரக்டர்
ஆக வைத்து நம்மை மிரட்டுகிறார்கள்.


ஆதி, யார் இவர் மிருகம் படத்தில் வந்தவரா? என்று கேட்கும்
அளவுக்கு போலீஸ் ஆக நடிப்பில் கலக்குகிறார். ஆதிக்கு எனக்கு
தெரிஞ்சு படத்தில் அவரது சொந்த குரல் இல்லை என்று
நினைக்கிறேன், இந்த குரலை நான் பல தடவை கேட்டு இருக்கிறேன்
ஆனால் ஞாபகம் வரல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க??.
சிந்து மேனன் , சரண்யா மோகன் தங்கள் பங்கை மிக இயல்பாக
செய்துள்ளனர்.


நந்தா, முதல் பாதியில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம்
பாதியில் இவர் ஆதிக்கம் தான்.எனக்கு என்னமோ கொஞ்சம்
ஓவர் ஆக்டிங் மாதிரி இருக்கு ஒரு வேளை இந்த மாதிரி
கேரக்டரை பல படங்களில் பார்த்ததால? என்று தெரியவில்லை.
ஸ்ரீநாத், பெண்களை மற்றும் காதலை பற்றியும் வசனம் பேசும்
அதே வாய்ப்பு மீண்டும்(சலிக்காத சார் உங்களுக்கு?).என்ன இதுல
கொஞ்சம் காமெடி கம்மி அவ்வளவு தான்.


ஒரு புதுமண பெண்ணின் மரணம் அது கொலையா? தற்கொலையா?
என்று தோண்டும் பழைய காதலனாக ஆதி.அடுத்து அடுத்து அதே
குடியிருப்பில் நிகழும் மரணங்கள் காரணம் தண்ணீர். இதுக்கு நடுவில்
ஆதி சிந்துவின் பழைய காதல் கதைகள்.முதல் பாதி
கொஞ்சம் மெதுவா இருந்தாலும் தண்ணீரால் கொலை செய்யப்படும்
காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிடும்.அதுவும்
தமனின் பின்னணி இசை சூப்பர்.உதயம் தியேட்டர் கழிவறையில்
நடக்கும் காட்சி செம....கிராபிக்ஸ் வேலைகள் கனகச்சிதம்.

ரெண்டாம் பாதி, சில காட்சிகள் கொட்டாவி வர வைத்தாலும்
படம் நல்ல ஸ்பீட் ஆக தான் போகிறது. காட்சிக்கு காட்சி
த்ரில்லர் இல்லாமால் விட்டு விட்டு வருவதால் கொஞ்சம்
பயம் கம்மி ஆயிடுது. ஸ்ரீநாத் விபத்துக்கு அப்புறம் வீட்டுக்கு
வரும் போது அவர் குழந்தை பண்ணும் சேட்டைக்கு தியேட்டரில்
நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம்.

ஈரம், எல்லாம் கலந்த கலவை. கண்டிப்பாக அனைவருக்கும்
ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.படத்தின் நீளம் கொஞ்சம்
அதிகம். அப்புறம் வழக்கம் போல் எல்லா ஆவி படத்தில் காட்டுவது போல் பிளாட்டை அடிக்கடி கோணலாக காட்டாமல் இருந்து இருக்கலாம்.
படம் விட்டு வெளிய வந்த உடன் மழையில் நனைந்த
ஒரு பீலிங்க்ஸ் ஏன் என்றால் படத்தில் முக்கா வாசி நேரம் மழை
பெய்து கொண்டே இருக்கும்.குத்து பாடல் இல்லை, முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை, ஆ ஊன்னு காட்டு கத்தல் சண்டை இல்லை இயக்குனர் ஷங்கரின் தரமான அடுத்த தயாரிப்பு இந்த ஈரம்.

ஜெட்லி பஞ்ச்:
ஈரம்...சில காட்சிகளில் செம த்ரில்லர் ஜூரம்....

இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் போய் சேர
ஒட்டு போடுங்க....
உங்கள்
ஜெட்லி சரண்.

Thursday, September 10, 2009

Quick Gun Muruganநான் இன்று மதியம் சத்யம் தியட்டர் சென்று இந்த படம் பார்த்தேன், நாங்கள் குடும்பமாக அனைவரும் பல வருடங்கள் கழித்து பார்த்த படம் இது தான் (கடைசியாக எந்த படம் பார்த்தோம் என்பது நினைவில்லை). சத்யமில் குறைகள் என்று சொல்ல எதுவும் இருப்பதாக தெரியவில்லை, அப்படி ஒரு சுத்தம், ஒழுக்கம், மரியாதை, படத்தின் தெளிவு, சப்தம் எல்லாமே சூப்பர் தான்.


பதிவுலகில் இந்த அருமையான படத்தை பற்றி அவ்வளவாக பதிவுகள் வராதது எனக்கு சிறு வருத்தம் தான். குடும்பத்துடன் சென்று நல்லா சிரித்து ரசித்து பார்க்கும்படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் Shashanka Gosh, பல இடங்களில் ரொம்ப நுணுக்கமான நகைச்சுவை காட்சிகளை புகுத்தியுள்ளனர் உதாரணத்திற்கு எமதர்மராஜா வரும் வாகனம் அதில் முருகன் பேசும் வசனம், பிறகு Terminator படத்தில் Arnold முதலில் என்ட்ரி ஆகும் காட்சியை கிண்டல் பண்ணியிருப்பது போல இன்னும் பல படம் முழுவதும் ஆங்காங்கே இருக்கிறது. படத்தின் வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம, ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது.படத்தில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டியவர் அனு மேனன் இவர் தான் சேனல் V புகழ் லோலா குட்டி, இவர் அதில் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை, இதிலும் சும்மா அதிரடி கலக்கல் தான். அதுவும் ரம்பாவை சிரிக்கி என்று ஏசும்பொழுது. ரம்பாவிற்கு நடிக்க பெரிதாக ஒன்றும் வாய்ப்பு இல்லை அதனால் நல்லா காட்டிருக்கார், சகிக்கல. நம்ம ஹீரோ முருகன் (தெலுங்கு புகழ் ராஜேந்திர பிரசாத்) குடுத்த வேலைய கச்சிதமா பார்த்திருக்கார் ஆனா இவர் முகத்த க்ளோஸ்அப ஷாட் பாக்க சகிக்கல, வடிவேலு இந்த பாத்திரத்திற்கு ரொம்ப பொருத்தமா இருப்பார்.
இந்தியா டுடே இதழில் இந்த படம் அந்த காலத்து தமிழ் தெலுங்கு சினிமாவ கிண்டல் பண்ணி எடுக்கப் பட்ட படம்னு போட்ருந்தாங்க ஆனா எனக்கு ஒன்னும் அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. இதே மாதிரி எத்தன படத்துல நம்ம கேப்டன் இந்த மாதிரி கேவலமா வசனம் பெசிருப்பாறு?? எத்தன படத்துல நம்ம விஜய், அஜித், சிம்பு......... சும்மா பறந்து பறந்து அடிச்சிருப்பாங்க?? என்ன ஒரே வித்தியாசம் அவங்க சீரியசா பண்றேன்னு காமெடி பண்ணுவாங்க இவங்க காமெடினு சொல்லியே பண்றாங்க.

நடு நடுவில் கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் வெறும் ஒன்னரை மணிநேரம் ஓடும் இந்த Quick Gun Murugan கண்டிப்பா பாத்து ரசிக்கவேண்டிய படம் என்பதில் சந்தேகமே இல்லை, கண்டிப்பா பாருங்க என்ஜாய் பண்ணுங்க.

நன்றி
சித்து.

கிரிவல விவாதம்...

கிரிவல விவாதம்...தலைப்பை பார்த்த உடன் சிநேகா கிரிவல சர்ச்சையில் சிக்குன
விவாதம்னு தப்பா நினைச்சிக்காதிங்க இது வேற...

போன வாரம் நானும் நண்பர்கள் சித்து,நட்டு மற்றும் புறா
என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சங்கரும்
திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமி இல்லாத நாளில்
சென்றோம்.அதிகாலை மூன்று மணிக்கு கிரிவலம் ஆரம்பித்தோம்,
சித்து அவர்கள் பர்ஸ்,கைப்பேசி அனைத்தையும் காரிலே வைத்து
விடும்படி கூறினார்.அப்போது நட்டு அவர்கள் "ஜூரம் வருவது
போல் உள்ளது நான் வரவில்லை நீங்கள் போங்க" என்றார்.
சங்கர் அவர்கள் நட்டுவை சமாதானம் பேசி வர வைத்தார்.

நான் எப்போதும் பௌர்ணமி நாள் அன்று போவேன், இப்போது
போவது மிகவும் வித்யாசமாக பட்டது.எங்கள் நால்வரை தவிர
ரோட்டில் வேறு யாரும் இல்லை.எனக்கு நெஞ்சின் ஓரத்தில் சிறு
பயம் ஒட்டி கொண்டது அதற்க்கு காரணம் தண்ணி வேறு இல்லை.
தண்ணி எப்படி காலி ஆச்சுன்னு சொல்ல விரும்பல....

எனக்கும் சரி சங்கர் மற்றும் நட்டுக்கும் சரி கடவுள் நம்பிக்கை
இல்லை என்றே சொல்ல வேண்டும்.சித்துவை பற்றி தெரியாது.
அப்புறம் ஏன் கிரிவலம் போறன்னு கேக்குறிங்களா?...
மனதை கட்டு படுத்த முடியுமா அல்லது ஒரு நிலை படுத்த முடியுமா என்று ஒரு சிறு முயற்சி அப்புறம் பல ரக மக்களை
சந்திக்கலாம்.நாங்கள் கிரிவலம் ஆரம்பத்தில் எடுத்த டாபிக் ரொம்ப
மட்டமானது,சில சமயம் நான் அவர்களிடம் "நாம கிரிவலம் போய்க்கிட்டு இருக்கோம்"என்பதை நினைவு படுத்த வேண்டி இருந்தது.

உபரி தகவல்: நட்டுவும்,சித்துவும் செருப்பு போட்டு தான் கிரிவலம்
சென்றார்கள்.... யாரவது வேணும்னா கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துங்க.

வழியில் சித்தர்கள் சமாதி இருக்கும் இடத்தில் என்னை யாரோ
பக்தா என்று அழைப்பது போல் கேட்டது. நான் நட்டுவிடம் சொன்னேன் அவன் "டேய் என்னை வீணா டென்ஷன் பண்ணாத,
நீயெல்லாம் பக்தானடா" என்று நக்கல் அடித்தான். இருந்தாலும்
நான் அப்போ அப்போ பின்னாடி திரும்பி பார்த்து பார்த்து நடந்தேன்.

எட்டாவது கிலோமீட்டரில் ஒரு டீக்கடையில் டீ குடித்தோம், அங்கே
சங்கர் அவர்கள் குட்டி தூக்கம் போட்டார்.ரைட் இதுக்கு மேல டாபிக்
போட்ட தான் கோவில் போய் சேர முடியும் என்று டாபிக் ஆரம்பித்தது.
நான் சங்கரிடம் "நீ ப்ளாக் உறிப்பினர், ஏதாவது எழுதுறது" என்றேன்.
அப்புறம் டாபிக் எங்கயோ போய் விட்டது.
"கோவிலுக்கு முட்டை சாப்பிட்டு போறது தப்பு இல்ல,
எனக்கு தப்பா படல" என்றான் நட்டு.மேலும் "உங்களுக்கு தப்பா
படறது எனக்கு தப்பா படல, ஆனா உங்களையும்
நான் செய்ய சொல்ல மாட்டேன்" என்றார்.

மேலும் செக்ஸ் கல்வி, முறை தவறி நடக்கும் செக்ஸ் போன்றவற்றை நண்பர்கள் விவாதம் செய்தார்கள். நான் இந்த
விவாதத்தில் கலந்து
கொள்ளவில்லை காரணம் இந்த விவாதம் செய்ய அது
சரியான இடம் அல்ல என்பதே.
சங்கர் அவர்கள் "எனக்கு தப்பு செய்ய பிடிக்கும் ஆனா
செய்றது இல்ல அதுக்கு காரணம் நான் வளர்ந்த சமூகம் அப்படி" என்றார்.
நண்பர் சித்து அவர்கள் எதற்கெடுத்தாலும் "நான் இப்போ மடக்குரேன்
பாரு" என்று சங்கரை நோக்கி கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தார்,
அல்லது சங்கர் கூறும் அனைத்தையும் மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

கிரிவலம் முடித்து கோவிலுக்குள் போனால் செம கூட்டம்,
மூகர்த்த நாள் என்பதால் ஒரே கல்யாணம்தான்.அருணாச்ச்சலனை
பார்க்க இருபது ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றால் ரெண்டு
வினாடிகள் கூட பார்க்க விடவில்லை.சங்கர் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டார்," எதுக்கு ஒரு ஆளுக்கு இருபது ரூபாய் இதுக்கு தான் நான் திருப்பதி கூட போவதில்லை" என்றார்."அப்புறம் எப்படி எல்லாத்துக்கும்
சம்பளம் கொடுப்பாங்க" என்று சித்து கேட்டார்.
"அதெல்லாம் நிறைய காசு வரும்" என்றார் சங்கர்.
"டைம் ஆச்சு கிளம்புவோம்" என்று சென்னைக்கு திரும்பினோம்.
உங்கள்
ஜெட்லி சரண்

Wednesday, September 9, 2009

முதல் தொடர் பதிவு.....என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

*********
இனி...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஜெட்லி/சரவணன்.

2. B – Best friend? :சில நேரம் புத்தகங்கள்...

3. C – Cake or Pie? : american pie படம் தானே... சூப்பர் படம்....

4. D – Drink of choice?குறிபிட்ட brand எதுவும் இல்லை, எதுனாலும் ஓகே....
(அதாவது kinley,bisleri... தப்பா நினைக்காதிங்க)

5. E – Essential item you use every day? கை... கை இல்லை என்றால் ஒரு வேலையும் செய்ய முடியாது...

6. F – Favorite color? நீலம்(படங்கள் அல்ல)

7. G – Gummy Bears Or Worms : இதெல்லாம் சாப்ட்டது இல்லங்கோ...

8. H – Hometown? - சிங்கார சென்னை....

9. I – Indulgence? - அப்படின்னா..

10. J – January or February? - ஜனவரி(புது வருஷம் வருது இல்ல)

11. K – Kids & their names? நானே ஒரு சிறுவன்...

12. L – Life is incomplete without? திரைப்படங்கள்

13. M – Marriage date? - நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை

14. N – Number of siblings? 2...

15. O – Oranges or Apples? ஆரஞ்சு

16. P – Phobias/Fears? தமிலிஷ் ஒட்டு ..

17. Q – Quote for today? உன் வாழ்க்கை உன் கையில்..

18. R – Reason to smile? அப்பதான் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கும்.

19. S – Season? சத்யம் சீசன் தியேட்டர் தானே, இதுவரைக்கும் போனது இல்ல....


22. V – Vegetable you don't like? எல்லாமே பிடிக்கும்....


23. W – Worst habit? எல்லாத்துக்கும் நோ சொல்வேன்...


24. X – X-rays you've had? எப்போவோ எடுத்தது...


25. Y – Your favorite food? அடையார் கோரோநெட் ஹோட்டல்இல்
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி விலை நூறு ரூபாய் மட்டும்.


26. Z – Zodiac sign? கும்பம்
***************************


1. அன்புக்குரியவர்கள் : எல்லா உயிர்களும்...

2. ஆசைக்குரியவர் : அப்படி யாரும் இல்லை...


3. இலவசமாய் கிடைப்பது : மொக்கை படம் பார்க்கும் போது வரும்
தலைவலி.....

4. ஈதலில் சிறந்தது : காக்காவுக்கு சோறு வைப்பது,..

5. உலகத்தில் பயப்படுவது : டாஸ்மாக் கடையில் வாங்கும் சரக்கு
ஒரிஜினல்லா என்று....

6. ஊமை கண்ட கனவு : கனவு கண்டவன் கிட்ட கேளுங்க அப்பு....

7. எப்போதும் உடனிருப்பது : என் கைப்பேசி....

8. ஏன் இந்த பதிவு : தெரியுல....

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா கூட பழக்கம் இல்லங்க..

10.ஒரு ரகசியம் : ரகசியாவுக்கு சாரி போட பிடிக்காதாம்....

11.ஓசையில் பிடித்தது :
சரக்கு பாட்டிலை திறந்து க்ளாசில் ஊத்தும் ஓசை.


12.ஔவை மொழி ஒன்று : கந்தலானாலும் கசக்கி கட்டு...

13.()ஃறிணையில் பிடித்தது: பைரவன்


மேலே கூறியுள்ள பதில்கள் சிலவை பொய்கள்....
சும்மா ரசிக்க மட்டுமே கூறிய பதிகள்

உங்கள்
ஜெட்லி சரண்.

Tuesday, September 8, 2009

மதுரை சம்பவம்

மதுரை சம்பவம் - சும்மா டைம் பாஸ்.


மூன்று மாதங்களாக காட்டப்படும் படத்தின் ட்ரைலர் என்னை
ஈர்க்கவில்லை. அதுவும் ஹரிகுமார் சொல்ற அந்த வடக்கே
திண்டுக்கல் என்று சொல்லும் வசனத்தை கேட்டாலே ரிமோட்
எடுத்து வேற சேனல்க்கு போய் விடுவேன்.அப்புறம் ஏன்டா இந்த
படத்துக்கு போனேன்னு கேக்குறிங்களா???...

நேத்து 5 மணி வரைக்கும் எனக்கு இந்த படத்துக்கு போகுனும்னு
ஐடியா இல்லை.நம்ம அண்ணன் உண்மை தமிழன் அவர்கள்
தனது விமர்சனத்தில் படம் பார்க்கிற மாதிரி இருக்குது என்று
சொன்னதால் போனேன் , ஆனா காரணம் அது மட்டும் இல்ல.
அந்த காரணம் அனுயா, என் நண்பர்கள் சில பேர் என்னிடமும்
நான் சில பேரிடமும் கேட்ட கேள்வி "அது எப்படி மச்சான்
sms படத்துல வர பாட்ல ப்ளூ கலர் டிரஸ்ல அனுயா கால்
வெண்ணை மாதிரி இருக்கு?".


இதுல வேற படத்துல்ல லிப் கிஸ் வேற இருக்குன்னு
சொல்லிடாங்க.அப்புறம் எப்படி படத்துக்கு போகாம இருக்கறது
என்று நானும் நண்பனும் பைலட்க்கு கிளம்பி விட்டோம்.
என்னுடன் என் நண்பனையும் சேர்த்து நாற்பது ரூபாய்
டிக்கெட்இல் 15 பேர், அம்பது ரூபாய் டிக்கெட்இல் பத்து பேர்
பிளஸ் ஒரு கசமுசா ஜோடி, நூப்பது ரூபாய் டிக்கெட்இல்
ஒரு அளவுக்கு கூட்டம் இருந்தது.

ஹரிகுமார், ஏன் உங்களுக்கு இந்த பில்ட்-அப்?. ஏதோ அடிதடி
காட்சிகளில் தேறுகிறார்.படத்தின் உயிர் நாடி ரெண்டே விஷயம்
தான் ஒன்று ராதாரவி அடுத்து அனுயா(ஜொள்ளு!!). ராதாரவி
பத்தி நமக்கு எல்லாம் தெரியும் அதனால நாம அனுயா பக்கம்
வருவோம். அனுயா, இதுல கொஞ்சம் ரப் அண்ட் டப் கேரக்டர்.
போலீஸ் உடையில் அனுயாவை ஹரிகுமார் சைட் அடிக்கும்
போது இங்கே நமக்கும் ஒரு பீலிங்க்ஸ் வருது.ஒரு முட்டு
சந்துல போய் அனுயாவை கிஸ் அடிக்கிறார் ஹரிகுமார், கொஞ்சம்
தெளிவா காட்டி இருக்குலாம்(நான் ஹரிகுமார் கேரக்டர் பத்தி சொன்னேன்).

எப்போவும் இளிச்சிக்கிட்டே ஒரு பொண்ணு இருக்குமே, அதாங்க
கார்த்திகா ஒரு பாட்டுக்கு வழக்கம் போல இளிக்கிறாங்க அவளோ
தான் வேற ஒன்னும் இல்ல.படம் கொஞ்சம் சுவாரசியமாதான்
போது.போர் அடிக்கிற மாதிரி சீன் எதுவும் இல்ல.எனக்கு ஒரு
குறை தான் அனுயாக்கு டூயட் சாங் இல்லாம போச்சே என்பது
தான் அது.ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடிற மாதிரி
கிளைமாக்ஸ் முன்னாடி செம ட்ரீட்.ஆமாம் அது ஏன் அனுயாக்கு
மட்டும் கிளைமாக்ஸ் முன்னாடி படுக்கை அறை காட்சிகள்
வந்துடுது???என்னமோ போடா 40 ரூபாய்க்கு படம் ஓகே.


ஜெட்லி கவுஜ:

அனுயா, நீ விண்ணில் இருந்து வந்தாயா
அல்லது டயானா தோட்டத்தில் பூத்தாயா
நீ முனியாண்டி விலாசில் போட்ட வீச்சு
உன்னால படமோ சூப்பர் பேச்சு.

புடிச்சா ஒட்டு போடுங்க அப்பதான் பலதரபட்ட மக்களை போய் சேரும்.

உங்கள்

ஜெட்லி.

Friday, September 4, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்.

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்.


முன்னுரை: உங்களால் படமே பார்க்காம இருக்க முடியாதா என்று என்னை பார்த்து கேட்ட வால் பையன் அவர்களுக்கு இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்....நினைத்தாலே இனிக்கும், மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கல்லூரி களம்.ப்ரிதிவிராஜ்,ஷக்தி,ப்ரியாமணி,கார்த்திக் குமார்
நடிப்பில் சன் டி.வி வெளியிட்டுர்க்கும் படம்.மலையாள படமான
கிளாஸ் மேட்ஸ் படத்தின் தழுவல் தான் நினைத்தாலே இனிக்கும்.இயக்குனர் குமாரவேலன் அவர்கள் மலையாள படத்தில் இருந்து வெறும் அஞ்சு காட்சிகளை மட்டும் தான் அப்படியே எடுத்து இருக்கோம் மற்றவை அனைத்தும் புதியவை என்றார்.பேசாம சீன் பை சீன் அப்படியே எடுத்து இருக்கலாம்.


ப்ரிதிவ்ராஜ் 8 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் நடக்கும் get-to-gether விழாவுக்கு வரும் வழியிலே கதை சொல்லி வருகிறார் .
கல்லூரியில் ப்ரிதிவிராஜ்க்கும் கார்த்திக் குமார்க்கும் அடிக்கடி
சண்டை நடக்கும்.சக்தி இருவருக்குமே நல்ல நண்பன்.வழக்கமா
வர காலேஜ் தேர்தல்ல பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது(எத்தனை படத்துல பாக்கறது).நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது,
ப்ரியாமணியும் ப்ரிதிவிராசும் ஒன்றாக இணைவார்களா?
இது தான் நினைத்தாலே இனிக்கும். பிளஸ் சஸ்பென்ஸ்(இதான் முக்கியம்).


பொதுவா ஒவ்வொரு மனுசனுக்கும் அவனோட காலேஜ் லைப்

கண்டிப்பா நினைத்தாலே இனிக்கும் .நான் பார்த்த
ஆராதனா தியேட்டரில் மட்டும் முதல் பாதி மட்டும் நாலு
வாட்டி நிறுத்தி நிறுத்தி போட்டான்.அந்த தியேட்டரே அப்படிதான் என்ன பண்றது , கணபதிராம் ஹவுஸ் புல் ஆயிடுச்சு.


அது என்னமோ தெரியுல விஜய் அன்டனி குரல் கேட்டாலே ஒரு red bull energy drink குடிச்ச மாதிரி ஒரு பீலிங்க்ஸ் ...படத்தின் பாட்டை பற்றி சொல்ல வேண்டாம் ஏற்கனவே ஹிட். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு நல்லா இருக்கு.

படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே இயக்குனர் கொஞ்சம் சொதப்பி
இருக்கிறார் , முக்கியமா இந்த கார்த்திக் குமார் கேரக்டர் முதல் காட்சியில் அவரை காட்டுவதோடு சரி அடுத்து முக்கா மணி நேரம் கழித்து தான் ஸ்க்ரீன் உள்ளே வருவார்.
(ஏன் payment பாக்கியா ??).


ஷக்தி , நீங்க சொன்ன நம்ப மாட்டிங்க நான் இவரோட
மகேஷ் ,சரண்யா மற்றும் பலர் படம் பார்த்தேன் அதில் இருந்து
ஒரு படி உயர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பிரிதிவிராஜ் இவரு என்ன பண்றாரு ரவுடியா இல்ல படிப்ஸ்ஆ ஒன்னும் புரியல (அதான் ஹீரோவோ !!).ப்ரியாமணிக்கு ஒன்னும் பெருசா இல்ல (நான் நடிக்கிற வாய்ப்பை சொன்னேன் ).அட்வைஸ் பண்றதுக்குன்னு ஒருத்தர் அவர் தான் பாக்யராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திரிக்கிறார்.


லொள்ளு சபா ஜீவா ஒபெநிங் நல்ல காமெடி , காலேஜ் கேம்பஸ் காமெடி கொஞ்சம் கம்மி . ப்ரியாமணிக்கு அடிப்பட்டவுடன் பிரிதிவிராஜ் chemistry லேப்க்குள் அவரே மருந்து தயாரிப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் தான். படம் போர் அடிக்காம போது , சஸ்பென்ஸ் இருப்பதால் இதுவா
அதுவா என்று கதை போகிறது . ஷக்தியின் காதலியாக வரும் பெண்ணை க்ளோஸ் அப்பில் பார்க்க சகிக்க வில்லை , அந்த பெண் ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் hostel வருவதாக கூறுவது 10 முழம் பூவை காதில் சூற்றியதுக்கு சமம்.
படம் சுமார் தான் மோசமில்லை .


ஜெட்லி பஞ்ச் :

லாஜிக் மற்றும் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் நினைத்தாலே இனிக்கும் கண்டிப்பாக இனித்திருக்கும் .

இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் சேர ஒட்டு போடவும் ....

உங்கள்
ஜெட்லி

Tuesday, September 1, 2009

சென்னை டூ ஆத்தூர்

சென்னை டூ ஆத்தூர் - பயண குறிப்பு

ஆஸ்திரேலியா நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்
அவர்களின் அண்ணன் திருமணத்திற்கு வழக்கம் போல்
ஒரு நாள் முன்னாடியே சென்றோம்.பத்து பேர் போவதாக
இருந்த பயணம் நாள் நெருங்க நெருங்க நாலு பேர் ஆனது
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் எனக்கு எதிர்பாராத
அதிர்ச்சி கந்தசாமி படத்தை இரண்டாவது தடவை என்னை

கட்டாயப்படுத்தி பார்க்க வைத்தார்கள்.

ஆல் இன் ஆல் என்று அன்புடன் அழைக்கப்படும் அருணாசலம்
அவர்கள் என்னை இந்த படத்திற்கு கண்டிப்பாக வந்து ஆக வேண்டும் என்று என்னை இழுத்து கொண்டு போய் விட்டார்.
(காரணம்: இந்த படம் மட்டும் தான் லேட் ஆக முடியும் ,
அப்புறம் கிளம்பினால், காலையில் ஆறு மணிக்கு தலைவாசல் சேர கரெக்ட் ஆக இருக்கும் என்பது தான்
)

"மச்சி நீங்க படம் பார்த்துட்டு வாங்க, நான் தியேட்டர்
வெளியில் படுத்துக்கிறேன்" என்று நான் கூறினாலும்
நண்பர்கள் கேட்பதாக இல்லை. ஆல் இன் ஆல் கூறிய
இன்னொரு காரணம் ஸ்ரேயாக்குகாக பத்து வாட்டி கூட பார்க்கலாம் என்றார்.


அருமை நண்பர் ஜீத் அவர்கள் வழக்கம் போல் ஒரு சரம் சூப்பர் பாக்கை வாங்கி ஸ்டாக் செய்து கொண்டார். அன்பு நண்பர் கார்த்தி

முக்கா பாண்ட் போட்டு கொண்டு வந்து சேர்ந்தார், கார்த்தி
தடவை கந்தசாமி படம் பார்ப்பதால் அமைதியாக படம் பார்த்து ரசித்தார்.
எனக்கு முதல் பாடல் வந்த உடன் உச்சா செல்ல எழுந்து
நடந்தேன், என் செருப்பு வழுக்கியது. ஜீத்தை அப்போது தான்

கவனித்தேன் பின்பு தான் புரிந்தது செருப்பு வழுக்கியதற்கு
காரணம் ஜீத்தின் வாய்ஜாலம் என்று.

மெலடி தியேட்டரில் ஒட்டப்பட்ட ஒரு ஸ்டிலில் சந்தானம்
விக்ரம் உடன் நின்று கொண்டு இருப்பது போல் விளம்பரம்
இருந்தது, அப்பதான் நினைத்தேன் சந்தானம் இருந்திருந்தால்
படம் ஓரளவுக்கு நல்லா இருந்துருக்குமே என்று....
படம் இனிதே 1.15 மணிக்கு முடிந்தது, ஆல் இன் ஆல் அவர்கள்
கார் ஓட்ட நாங்கள் மூவரும் ஏறி அமர்ந்து அடுத்து வண்டி நின்ற
இடம் திண்டிவனம் ஹை வேய்ஸ் இல் உள்ள கடையில் தான்.
ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டு கிளம்பினோம்.

காலையில் 6.45 மணிக்கெல்லாம் தலைவாசல் வந்து விட்டோம்.
எங்களை வரவேற்க ஆஸ்திரேலியா ரிட்டன் பாலா காத்து கொண்டு
இருந்தார். பாலா அவர்களின் வாயில் தமிழை விட ஆங்கிலம்
தான் அதிகமாக விளையாடியது.சும்மா ஒரு


கார்த்தி: எங்க மச்சான் உங்க வீடு இருக்கு?


பாலா: இங்க இருந்து ஒரு two minutes தான் மச்சி...

பாலா வீட்டுக்கு போனவுடன் டீ கொடுத்தார்கள், நண்பர் கார்த்தி
அவர்களின் வாய் புண்ணாகி போனதால் அவர் tender cocanut தான்
தனக்கு வேண்டும் என்று பாலாவின் பண்ணையில் உள்ள மரத்தில்
இருந்து ரெண்டு மூன்று இளநீரை அடித்து தாக்கினார்.
அருணாச்சலத்தின் காரை விடிந்த உடன் பார்த்த போது ஜீத் உட்கார்ந்த சைடு வெள்ளை காரின் நிறம் சிகப்பாய் போனது அதற்கு
காரணம் சூப்பர்.


அப்புறம் ஏற்கனவே புக் செய்துள்ள லாட்ஜ்க்கு பாலா அவர்கள்
அழைத்து போனார் அந்த லாட்ஜ் ஆத்தூரில் உள்ளது. அங்கு
பாலாவின் உறவினர் கார்த்தி அவர்கள் எங்களுக்கு தங்க
உதவிகளை செய்து கொடுத்தார்.

காரில் செல்லும் போது வழியில் பஸ்கள் நின்று இருப்பதை
பார்த்து பாலா அவர்கள் "எப்படி டா இங்க இருக்கீங்க பிளடி
இண்டியா" என்றார். "நீ எப்படி 21 வயசு வரைக்கும் இங்க
இருந்தியோ அதே மாதிரி தான் மச்சி இருக்கோம்" என்றேன் நான்.
இன்னும் ஊர்களில் இரண்டு மணி நேரம் மின்சார நிறுத்தம்
அமலில் இருப்பது அன்று தான் எங்களுக்கு தெரிந்தது.

*****************************************

மதியம் நண்பர் கார்த்தி அவர்கள் சீட்டு கட்டு விளையாட அழைத்தார்.எனக்கு தூக்கம் வருது அப்புறம் விளையாடலாம்
என்றேன் அவர் கேக்காமல் "i want to see , who is the ass?"
என்றவாறு சீட்டை குலுக்கி போட்டார்.இந்த ஆங்கிலம்
எல்லாம் பாலாவை பார்த்த உடன் கார்த்தியையும் தொத்தி கொண்டது என்று எண்ண வேண்டாம். முதல் ass விளையாட்டில்
கார்த்தி தான் தோத்தார் அதற்கு அப்புறம் வாயையும் அதையும்
பொத்தி கொண்டு விளையாடினார்.ஒரு சமயத்தில் கார்த்தி
அவர்கள் நாலு ass களையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

ரம்மி விளையாட்டில் தான் கில்லி என்று கார்த்தி நிரூபித்தார்,
கார்த்திக்கு மட்டும் பாயிண்ட் ஏற வில்லை. ஜீத் அவர்கள்
மூணு 80 தொடர்ந்து கைப்பற்றி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

***********************************************

நைட் பொறித்த மீன் மற்றும் பொறித்த வேகாத சிக்கன் கால் தூண்டு போன்றவற்றை வாங்கி எங்களின் அன்றைய பொழுதை
முடித்தோம். காலையில் 4.30 மணிக்கே மூகூர்த்தம் என்பதால்
நாங்கள் மூணு மணிக்கே எழுந்து குளித்து கோவிலுக்கு கிளம்பி
விட்டோம்.

கோவிலில் அனைவரும் பொண்ணும் மாப்பிளையும் போட்டோ
எடுத்து கொண்டு இருந்தனர். பாலா அவர்கள் தன்னை போட்டோ
எடுக்குமாறு கூறியும் யாரும் பாலாவை போட்டோ எடுக்க
முன் வராததால் பாலா கொஞ்சம் டேமேஜ் ஆயிட்டார். அப்புறம்
நான் ஏதோ பார்த்து என்னோட 1.3 m.p கைபேசி கேமராவில் படம்
பிடித்தேன். இதோ உங்களுக்காக அந்த படம்.......


அப்புறம் ஒரு 6.30 மணிக்கு பாலா வீட்டுக்கு வந்த உடன்
டிபன் வர ரொம்ப லேட் ஆச்சு. ஒரு வழியாக டிபன் பந்தி போட
ஆரம்பிச்சாங்க. கார்த்தி அவர்கள் சின்ன பசங்க கூட பேசுற
மாதிரி அப்படியே சீட் புடிச்சிட்டார் ரைட் அப்படின்னு சொல்லி
நானும் கார்த்தி பக்கத்தில் ஒரு சீட்டை போட்டேன். கேசரி,
வடை, இட்லி , பொங்கல் என்று மாறி மாறி பரிமாறினார்கள்.
ஆஸ்திரேலியா ரிட்டன் பாலா அவர்கள் கையில் வெள்ளை சட்னியுடன் அலைந்து கொண்டு இருந்தார்....

"ஹே chutney... poor indian white சட்னி" என்று பாலாவை கொஞ்ச
நேரம் ஓட்டினோம்.

ஒரு சமயத்தில் நான் கொஞ்சம் ஓவர்ஆக பேசிவிட பாலா
என்னை மேலும் கீழும் என்னை பார்க்க ஆரம்பித்தார்.
அந்த வேளையில் கார்த்தி இலையில் இருந்து ஜீத் அவர்கள்
வடையை திருடிவிட்டதாக ஒரு பஞ்சயாத்து நடந்தது.
ஒரு வழியாக சாப்பிட்டு கிளம்பும் முன் பாலாவிடம் சில
வார்த்தைகள் பேசினோம்....

நான்: உன் கல்யாணம் எப்படி மச்சி இங்கையா? இல்லை
ஆஸ்திரேலியாவிலா?ஆஸ்திரேலியாவில் கல்யாணம் வச்சா நீயே டிக்கெட் போட்டு கூப்டுவியா மச்சி?

பாலா: எங்க வச்சாலும் உங்களை கூப்பிட மாட்டேன் டா...

அருணாசலம்: டேய்! இதெல்லாம் கம்மி, என் கல்யாணத்தில
பண்ணாததா?.....இதுக்கே நீ டென்ஷன் ஆயிட்ட...

நான்: ஆஸ்திரேலியா வந்தா உங்க வீட்ல தங்கலாமா மச்சி?

பாலா வாயே திறக்கவில்லை...

நான் : என்னடா...

பாலா: ஒரு அரை நாள் தங்கலாம் மச்சி...

கார்த்தி: உன்னை வராதேன்னு சொல்றான் போதுமா..

விடை பெற்று கிளம்பினோம்...
*********************************************************

கார் மீண்டும் சென்னையை நோக்கி பறந்தது நான் ஒரு
குட்டி தூக்கம் போட்டேன். பிறகு ஜீத் அவர்களுக்கு வேலை
காரணமாக நேரிய போன் கால் வந்தது, ஜீத் அவர்கள்
credit card பணம் வசூல் செய்யும் டார்கெட் இன்னும்
முடிக்கவில்லை என்று டென்ஷன் ஆனார்,ரொம்ப கஷ்டமான
வேலை தான்.....

ஆல் இன் ஆல் அவர்களின் பணம் ஸ்டாக் மார்க்கெட்இல்
மாட்டி கொண்டதாக கூறினார்..

நான்: என்ன கம்பெனி ஸ்டாக் வாங்குன மச்சி...

ஆல் இன் ஆல்: rrs, raymonds .....

நான்: அப்போ நீயும் raymondsல ஒரு ஓனர் தானே

ஆல் இன் ஆல்: ஆமாண்டா

நான்: அப்போ நீ போன உனக்கு பாண்ட் பிட் ப்ரீயா?

ஆல் இன் ஆல்: ஜட்டி கூட தரமாட்டாங்க...

நான்: raymondsல ஜட்டி வரது இல்ல மச்சி.

கார்த்தி: talk me .... yae talk me என்று அருணாச்சலத்தை ஓட்டினார்.

இன்னும் நெறைய மொக்கைகள் போட்டு பேசிக்கொண்டு 11.30
மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். அருமையான பயணம்,
இந்த பயணத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை கற்று
கொண்டேன்(சும்மா ஒரு பில்ட் அப்).

நன்றி
ஜெட்லி