கடந்த வெள்ளியன்று வெளியான படம் இது பல பேருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.முரளி அப்பாஸ் அவர்கள்
இயக்கியுள்ளார்.நவ்தீப்,அபிநெய்,பிரகாஷ்ராஜ்,மதுமிதா
ஆகியோரின் நடிப்பிலும் பரத்வாஜ் அவர்களின் இசையிலும்
வெளிவந்திருக்கும் படம்.
எனக்கு இந்த நல்ல படத்தை படத்தை பரிந்துரை செய்த
அண்ணன் கேபிள் சங்கருக்கு நன்றி.இந்த படத்தில் காதல்
ஒரு பள்ளிக்கூடம் என்ற பாடலை நம் சக பதிவர்
அப்துல்லா அண்ணன் பாடியுள்ளார், வாய்ஸ் சூப்பர் ஆக
இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணே.
போன மாதம் நான் பேப்பரில் படித்த செய்தி:
டி.வி. தொகுப்பாளினி மீது ஆசிட் வீச்சு.
நான்காவது காதலன் கைது.
மேல உள்ள செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கு.
நவ்தீப்பை காதல் செய்யும் பெண்கள் ஏதாவது ஒரு காரணத்தை
சொல்லி கலட்டி நவ்தீப்பை விட்டு விடுகின்றனர். ஆனால்
அதை அவர் அதை சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாமல்
ஜஸ்ட் லைக் தட் என்று அவர் எப்போதும் போல்
கலகலப்பாக இருக்கிறார்.அடுத்த பெண்ணை டாவு
அடிக்கிறார் அவள் ஏதாவது காரணம் சொல்வாள்
உடனே பிரிந்து விடுவார்கள்.
இது தான் இப்போ நாட்டுல நடக்குது, இது தெரியாம சில
பேர் டீப் லவ் அப்படின்னு சொல்லி தாடி வளக்குறாங்க
இல்லேன்னா தற்கொலை பண்ணி கொள்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ் தான் படத்தின் மிக பெரிய ப்ளஸ், சும்மா
மிரட்டுகிறார்.கிளைமாக்ஸ்இல் அவர் முழிக்கும் முழி
சூப்பர்.குறிப்பாக அந்த ஏலம் எடுக்கும் காட்சி செம...
அபிநய் தன் வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.
விஜயகுமார் இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார்.
சத்யன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்
மொக்கை போடுகிறார்.படத்தில் வசனங்கள் பளிச், ஒரு ஒரு
வசனமும் நச்சுனு இருக்கு.குறிப்பாக நவ்தீப் கோபமாக
மதுமிதாவிடம் பேசும் காட்சி தியேட்டரில் பயங்கர கத்தல்.
படத்தில் எனக்கு பிடித்த சில விஷயங்கள்:
# படம் 2.10 மணி நேரம் தான் ஓடுகிறது....
# வசனம்
# பிரகாஷ்ராஜ்
#நவ்தீப்
# படம் போர் அடிக்கமால் போகிறது கடைசி பாடல் தவிர...
#ஒளிப்பதிவு
#ஆஷிஷ் வித்யார்த்தி(எதார்த்தமான போலீஸ்....)
# காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடல் வரிகள் மற்றும் பாடிய
அப்துல்லா அண்ணே...
தவிர்த்திருக்க வேண்டியது;
நாயகிகளின் தாராளமனதை காட்டும் காட்சிகள் தவிர்த்திருக்கலாம்
என்னை போன்ற சிறுவர்களின் மனதை சஞ்சலப்படுத்துகிறது.
ஜெட்லி பஞ்ச்:
சொல்ல சொல்ல இனிக்கும் விளம்பரம் அதிகரித்தால் தரமான
வெற்றிக்கு வாய்ப்பிருக்கு.....
இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் போய் சேர
ஒட்டு போடவும்....
உங்கள்
ஜெட்லி சரண்.
6 comments:
ம்ம்..ரைட்டு.
//தவிர்த்திருக்க வேண்டியது;
நாயகிகளின் தாராளமனதை காட்டும் காட்சிகள் தவிர்த்திருக்கலாம்
என்னை போன்ற சிறுவர்களின் மனதை சஞ்சலப்படுத்துகிறது//
நம்பிட்டோம் தல
எம்புட்டு படம்தான் பாப்பீங்க ஜெட்லி உங்க கலைச்சேவைக்கு அளவே இல்லாம போச்சு வாழ்க வளமுடன்...
நல்ல விமர்சனம்
@ ராஜு
நன்றி
@ யோகா
நம்புனா சந்தோசம்
@ வஸந்த்
நன்றி, படம் பார்ப்பதை குறைத்து கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்.
@ கேபிள் சங்கர்..
நன்றி அண்ணே
அப்ப படம் பார்க்கலாம்..,
இதில் மத துவேஷ காட்சிகள் ஏதும் இல்லையா தல...,
Post a Comment