மதுரை டூ தேனி - ஜாலி விமர்சனம்.
முன்னுரை:
நண்பர் சரவணகுமார் தன் வலைப்பூவில் என்னை பற்றி எழுதிய
சில வரிகள் உங்கள் பார்வைக்கு--
"நம் படத்தை யார் பார்ப்பார்கள் என்று திரையுலகினர் யோசிக்கவே முடியாதபடி செயல்பட்டு வரும் ஜெட்லி".
அறிவிப்பு:
நான் ஏற்கனவே A WEDNESDAY ஹிந்தி படத்தை பார்த்து விட்டதால்
உன்னை போல் ஒருவனை சிறிது நாள் கழித்து பார்க்கலாம்
என்று முடிவெடுத்து உள்ளேன், படம் பார்த்தால் ஒப்பிட தோன்றும்
என்ற காரணத்துக்காக நான் படம் பார்த்தாலும் விமர்சனம் எழுத
மாட்டேன்.
********************************
உங்கள்
ஜெட்லி சரண்.
மதுரை டூ தேனி, இந்த படத்தக்கு விமர்சனம் எழுதலாமா?
வேண்டாமா?.இந்த படத்தை பார்த்ததாக வெளியில் சொல்லி
கொள்ள வேண்டாம் என்று நினைத்து தான் யோசித்தேன்.
பொதுவா நான் இந்த மாதிரி சிறு பட்ஜெட் படங்களுக்கு
ஆதரவு தருவது உண்டு.அந்த வெண்ணிலா கபடி
குழு பொண்ணு நடிச்சிருக்கு போய் பாப்போம் அப்படின்னு
கிளம்பினேன்.
அங்க போன கொடுமையை பாருங்க என்னை சேர்த்து ஒரு
பத்து பேர் தான் டிக்கெட் எடுத்துட்டு உள்ளே விடுறதுக்கு
காத்துட்டு இருக்கோம். அப்பத்தான் ஒருத்தர் பெரும் படையோட
வந்தார் அவர் தான் படத்தின் ஹீரோவாம்.அப்புறம் ஒரு இருபது
பேர் வந்தாங்க பார்த்த எல்லோரும் பட சம்பந்த பட்டவங்க போல.
12.15 show time ஆனா படம் போட்டது 12.45 மணிக்கு.இன்னைக்கு
தாங்க புல் ஏசி ஒடிச்சு.
சரி படத்துக்கு வருவோம், ஹீரோ அரவிந்த்க்கு ஆசிரியர்
வேலை கிடைத்து மதுரையில் இருந்து தேனிக்கு
செல்கிறார். பஸ் பயணத்தில் கதாநாயகி ஸ்ரிதிகாவை லவ்வுகிறார்,காதலை சொல்கிறார் அப்புறம் இன்டெர்வல்.
ஸ்ரிதிக்காவை பின்தொடர்கிறார் இன்டெர்வல் முடிந்து
பத்தாவது நிமிடத்தில் நான் தியேட்டரை விட்டு
வெளியே வந்து விட்டேன்.
தியேட்டர் நொறுக்க்ஸ்:
# மூன்று காதல் ஜோடிகள் ஒன்றாக படத்துக்கு வந்தன,
அவைகள் எப்போது பறந்தன என்று தெரியவில்லை????.
# என் பக்கத்துக்கு இருக்கை ஆசாமி மிகவும் ரசித்து
பார்த்தார் ஒரு வேளை படத்துக்கு சம்பந்த பட்டவரோ
என்று டவுட் வந்தது ஆனால் அவரும் இன்டெர்வல்
முடிந்த உடன் கிளம்பி விட்டார்.
# படத்தில் ஏகப்பட்ட மொக்கை சீன், அதற்கு தியேட்டரில்
பலத்த கைதட்டு வேறு பின்பு தான் காரணம் புரிந்தது ஹீரோ
கூட படம் பார்க்க வந்த அல்லக்கைகள் என்று.
# சில வருடங்கள் முன் நான் பாதியில் எழுந்து வந்த படம்
பார்த்திபன் நடித்த தென்றல் என்ற திரைக்காவியம், இப்போது
இது......
# நம்ம ஹீரோ தாங்க அடுத்த விஜய், வசனம் பேசியே தண்ணீர்
கேட்டு மறியல் பண்ணும் கிராம மக்களை வழி விட செய்கிறார்.
# படத்தில் ஒரு மொக்கை இன்டெர்வல் பிளாக், என் முன்
இருக்கை நபர் (அவரும் பட சம்பத்தப்பட்டவர்) இன்டெர்வல்
கார்டு போடும் முன்னே வெளியே போய் விட்டார். ஆஹா
தனியா சிக்கிட்டேன் போல என்று நொந்து கொண்டேன்.
நல்ல வேளை நான் நிதானத்தில் இருந்ததால் கமெண்ட்
பாஸ் செய்யவில்லை.
தமிழ் சினிமாவில் தடை செய்ய பட வேண்டிய விஷயங்கள்:
# மதுரை பாஷை பேசுறேன் அப்படின்னு ஓவர் லந்து பண்றது.....
# அப்புறம் பின்னணி இசையில் இளையராஜா பாட்டை போடறது...
#அப்புறம் எவனாது ஒரு சொறி மண்டையன புடிச்சிட்டு வந்து
காமெடினு பேருல மொக்கை போடறது....
இதெல்லாம் நிறுத்தனும்.......
*******************************************
நான் ஏன் இன்டெர்வல் முடிஞ்சா பின்னாடியும் படம் பார்த்தேன்
என்றால், புல் ஏ.சி மட்டுமே காரணம்.நானும் எவ்ளோ நேரம் தான்
வலிக்காத மாதிரி நடிக்கிறது...முடியுல முடியுல....
ஜெட்லி பஞ்ச்:
பஞ்ச் எழுதும் நிலைமையில் நான் இல்லை.....அறுபது ரூபாய்
போச்சே....
போனஸ் செய்தி:
படத்தை பாதியோடு பார்த்து விட்டு வந்தாலும், நம்ம ஆயிரத்தில் ஒருவன் ஆண்ட்ரியா அக்காவை ஜிம் முடித்து வெளியில் வரும்
போது பார்த்தேன்.முதலில் ஏதோ கிழவி தான் வருவதாக
எண்ணினேன் அப்புறம் தான் தெரிஞ்சது அது ஆண்ட்ரியா என்று.
இந்த தகவல் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...
Friday, September 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அடப்பாவி எங்கூர்ல எடுத்த படம் புட்டுக்குச்சா?
bonus news super
//நல்ல வேளை நான் "நிதானத்தில்" இருந்ததால் கமெண்ட்//
புரியலையே பாஸ்.
சொல்ல சொல்ல இனிக்கும் பாருங்கள். ஓகே.
//படத்தை பாதியோடு பார்த்து விட்டு வந்தாலும், நம்ம ஆயிரத்தில் ஒருவன் ஆண்ட்ரியா அக்காவை ஜிம் முடித்து வெளியில் வரும்
போது பார்த்தேன்.முதலில் ஏதோ கிழவி தான் வருவதாக
எண்ணினேன் அப்புறம் தான் தெரிஞ்சது அது ஆண்ட்ரியா என்று./
செல்வா காதுல விழுந்து தொலைக்க போவுது
//ன்.முதலில் ஏதோ கிழவி தான் வருவதாக
எண்ணினேன் அப்புறம் தான் தெரிஞ்சது அது ஆண்ட்ரியா என்று.
இந்த தகவல் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...//
இதச் சொல்றதுக்குக்கூட ஓட்டுப் போடணுமா?
bus tyear panzara?oh...
padam panzara?
/// பிரியமுடன்...வசந்த் said...
September 18, 2009 6:12 AM
அடப்பாவி எங்கூர்ல எடுத்த படம் புட்டுக்குச்சா? ///
நல்ல கதை உள்ள படம் ஓடும் !
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி....
Post a Comment