Monday, September 14, 2009

சுசியும் சேரனும் மற்றும் பலரும்...

சுசியும் சேரனும் மற்றும் பலரும்...



கந்தசாமி வெற்றி படத்தின் இயக்குனர் சுசிகணேசனின்
ஆதங்கத்தை இந்த வார குமுதத்தில் படித்தேன்.அதன் பின் எழுதியது.படத்தை ஒருவரும் விடாமல் அனைவரும் கிழித்து
விட்டார்கள்.நம்ம டாக்டர் சுரேஷ் அவர்கள் வாரத்துக்கு
ஒரு கந்தசாமி பதிவு போட்டு விடுகிறார்(பாவம் ரொம்ப
நஷ்டம் போல).சுசி அவர்கள் கந்தசாமி படத்தை வசூலை
வைத்து மட்டும் வெற்றி படம் என்கிறார், அந்த படம்
ரசிகர்களை கவர்ந்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல
வேண்டும். இதையெல்லாம் நீ சொல்ல உனக்கு என்ன
தகுதி என்று கேட்டால் படத்தை இரண்டு வாட்டி பார்த்து
இருக்கிறேன்(வேறு வழி இல்லாமல் ரெண்டாவது வாட்டி
பார்க்க வேண்டியது ஆச்சு).அது சரி படம் பார்த்துட்டா நீ
என்ன வேணா எழுதலாமா? என்று கேட்டால், ஒரு படைப்பு
என்றாலே விமர்சனம் இல்லாமல் அது முழுமை அடையாது.
விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாதவன் கண்டிப்பாக
ஒரு நல்ல படைப்பாளியாக முடியாது அவ்வளவு தான்.

சுசி அவர்களின் திருட்டு பயலே படத்தை நான் இப்போது
டி.வி.யில் போட்டாலும் ரசித்து பார்ப்பேன். மிக அருமையான
திரைக்கதை , சுவாரிசியம் உள்ள காட்சிகள், சமூகத்தில் நடக்கும்
கள்ள காதலை வெட்ட வெளிச்சமாக கூறவது இது போல் பல.
ஏன் சுசியால் கந்தசாமியின் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை, சுசி சார் நாங்க ரெண்டு வருஷுமா எடுத்த படம்
எப்போ வரும் எப்போ வரும் அப்படின்னு ஆவலோட பார்த்த படத்தில் வெறும் பிரமாண்டம் மட்டுமே உள்ளது, திரைக்கதை எங்கே??.

கந்தசாமியின் வெற்றி மந்திரம் இது தான் "படம் நல்லா இல்லன்னு சொன்னாலும் அப்படி என்னதான் நல்லா இல்லன்னு போய் எல்லோரும் பாக்குறாங்க, அது ஸ்ரேயாவுக்கு ஆக கூட இருக்கலாம்".......

இன்னைக்கு குமுதம் புக்ல உங்க பேட்டியை பார்த்த உடன்
சிரிப்பு தான் வந்தது.போன இதழில் உங்களை ஞாநி தாக்கியவுடன்
இந்த இதழில் நீங்கள் அவரை தாக்கி எழுதி பிரமாண்டம் என்பது
ஒருவருக்கு மட்டும் தான் சொந்தமா? நாங்கெல்லாம் எடுக்க
கூடாதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே, ஆனா
படத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விஷயம் ஒன்னுமே இல்லை சுசி.

********************************************

அடுத்து சேரன், நான் சேரன் இயக்கி நடிக்காத படங்களின் ரசிகன்.
எனக்கு ஆட்டோகிராப் படம் கூட பிடிக்காது, நான் பொக்கிஷம்
படம் கூட பார்க்கவில்லை.ஆனால் ஜெயா டி.வி.யில் ஒரு பேட்டியில்
இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களை "தான்தோன்றிகள்" என்று
கூறிப்பிட்டு பேசியதாக ஒரு வலைப்பூவில் படித்தேன்.



பொக்கிஷம் படம் எடுத்து பொக்கிஷம் இழந்து காணப்படும் சேரன்
அவர்களே யாருதான் தான்தோன்றிகள் இல்லை இந்த உலகில்??.
உங்களை விட வேறு யார் நல்ல எடுத்துகாட்டு?.


நான் எடுத்ததான் படம் அப்படின்னு உங்களுக்கு ஒரு ஈகோ
இருக்கு.படம் எடுங்க சார் வெற்றி கோடி கட்டு மாதிரி கமர்சியல்
பிளஸ் கருத்து சொல்ற மாதிரி எடுங்க, சரி லவ் படம் தான்
எடுப்பேன் அப்படின்னு நீங்க சொன்ன எடுங்க ஆனா நீங்க
நடிக்காதிங்க.எனக்கு இப்போவும் உங்க மேல நம்பிக்கை இருக்கு
நீங்க ஒரு நல்ல சமூக படம் தருவிங்க அப்படின்னு.உங்க பாண்டவர்
பூமி படத்தை நான் முதல் நாள் முதல் காட்சி போய் பார்த்தேன்
யாருக்காக?? உங்கள் இயக்கத்துக்காக மட்டும்...


கடைசியா ஒரு விஷயம் புரியுல...

சுசி மற்றும் சேரன் இருவருக்கும் ஒரே கேள்வி:

ஆமாம்,அப்புறம் நீங்க ரெண்டு பேருமே படத்தின் நீளத்தை ஏன்
குறைச்சிங்க?.... ஏன் அப்படியே ஓட விட வேண்டியது தானே
அதில் என்ன தயக்கம் உங்களுக்கு....

இப்படிக்கு
ஜெட்லி சரண்.

9 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆமாம்,அப்புறம் நீங்க ரெண்டு பேருமே படத்தின் நீளத்தை ஏன்
குறைச்சிங்க?.... ஏன் அப்படியே ஓட விட வேண்டியது தானே
அதில் என்ன தயக்கம் உங்களுக்கு....//

சரியான கேள்வி. விமர்சனம் வேண்மாம் என்றால் படமெடுக்காமல் பேசாமல் வீட்டிலிருக்க வேண்டியது தானே?...

சென்ஷி said...

/உங்க பாண்டவர்
பூமி படத்தை நான் முதல் நாள் முதல் காட்சி போய் பார்த்தேன்
யாருக்காக?? உங்கள் இயக்கத்துக்காக மட்டும்...//

சேம் ப்ளட் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)உங்க ப்ளாக் யூ ஆர் எல் நல்லா இருக்கு.

வால்பையன் said...

//நீங்க ரெண்டு பேருமே படத்தின் நீளத்தை ஏன்
குறைச்சிங்க?..//

நீங்க பத்திய குறைக்காம பதிவெழுதனும்னு தான்!

ப்ரியமுடன் வசந்த் said...

ஏம்பா நீயும் விடமாட்ட போலியெ?

வினோத் கெளதம் said...

நல்லா தான் கேட்டு இருக்கீங்க கேள்வி..

Admin said...

அப்படியா?

ஊடகன் said...

உங்களுடைய விமர்சனம் நச்..........!

Chitra said...

----நான் எடுத்ததான் படம் அப்படின்னு உங்களுக்கு ஒரு ஈகோ
இருக்கு.படம் எடுங்க சார் வெற்றி கோடி கட்டு மாதிரி கமர்சியல்
பிளஸ் கருத்து சொல்ற மாதிரி எடுங்க, சரி லவ் படம் தான்
எடுப்பேன் அப்படின்னு நீங்க சொன்ன எடுங்க ஆனா நீங்க
நடிக்காதிங்க ------ well said!