Wednesday, September 16, 2009

உங்கள் ப்ளாகில் பாலோயர்களை அதிகரிக்க சில வழிகள்?

பாலோயர்களை தேடி ஒரு பயணம்:

நாங்கள் புதிதாக வலைப்பூ ஆரம்பித்த போது மொத்தம்
இருந்தது மூன்று பாலோயர்ஸ் ஒன்று நான், மற்றவர்கள்
சித்துவும் நட்டும்.நான் பிற வலைப்பூக்களை பார்க்கும் போது
200,300 பாலோயர்ஸ் இருந்தார்கள், கண்டிப்பா இது ஒரு
பெரிய சாதனை தான் என்று நினைத்தேன். அப்புறம் நம்ம
வலைப்பூவுக்கு யார் சேர போற என்று எண்ணினேன்.
ஆரம்பித்த ஏழு மாதத்தில் 80 பாலோயர்ஸ் இது கொஞ்சம்
கம்மி என்றாலும் என்னை நம்பியும் சேர்ந்து இருக்காங்க
என்று நினைக்கும் போது புல் அரிக்கிறது.

யாரும் சிக்கலையே.......?



சரி விஷயத்துக்கு வரேன்.....
கடந்த ஒரு மாதமாக ஒரு பாலோயர் கூட சேரவில்லை,
அது ஏன் என்றால் நண்பர் சித்து இப்போது அவ்வளவாக
இடுகை ஈடவில்லை என்பதே காரணம்.


************************************
ஆறு மாதங்களுக்கு முன்...

நண்பர் நட்டுவிடம் தன் ஆபிஸ் நண்பர்களை பாலோயர்களாக
சேர்த்து விட சொன்னேன்.நட்டு அவர்கள் சும்மா சேர்த்து
விட முடியாது தனக்கு அமௌன்ட் வேணும் என்றார். ரைட்
தலைக்கு பத்து ரூபாய் பேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.
முதலில் பத்து பேரை சேர்த்து விடு நூறு ரூபாய் தந்து
விடுகிறேன் என்றேன்.அட்வான்ஸ் கொடு என்றார் நட்டு.
நீ சேர்த்து விடு நான் அப்புறம் முழுவதுமாக தருகிறேன்
என்றேன். நான் அட்வான்ஸ் தராத கோபத்தில் திரு.நட்டு
அவர்கள் இன்று வரை ஒருவரை கூட பாலோயர்களாக
யாரையும் சேர்க்கவில்லை.

********************************************

பாலோயர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.......

மாதம் தோறும் ஹாங்காங் செல்ல வாய்ப்பு...

சேருங்கள் இப்போதே ஜெட்லி வலைப்பூவின் பாலோயர்களாக.
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும் மூன்று நபர்களுக்கு
ஹாங்காங் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படும்.
*** condition apply .

*** ஹாங்காங் செல்ல தேர்ந்து எடுக்கப்படும் பாலோயர்களுக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வரை பேருந்து வசதி
மட்டுமே ஏற்பாடு செய்து தரப்படும்.மிச்சப்படி ஹாங்காங் போறதுக்கு டிக்கெட், தங்கும், மற்றும் சாப்பிடும் செலவு நீங்களே ஏற்று கொள்ள வேண்டும்.

**************************************

இது இன்னொரு சலுகை:

இப்போது பாலோயர் ஆகிறவர்களுக்கும் ஏற்கனவே இருப்பவர்களுக்கும் நவராத்திரி மற்றும் ஜெட்லியின் அன்பு பரிசாக கந்தசாமி

படத்துக்கே வாழ்த்து தெரிவித்து தியேட்டர்களை விட்டு கொடுத்த

"சிவகிரி" படத்தின் நூறாவது நாள் டிக்கெட் உங்கள் இல்லம் தேடி வரும்.

போனஸ் செய்தி: இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பாதி மோட்சம் அடைந்ததற்கு சமம்....ஆமாங்க படம் மினி மோட்சத்தில் ஓடுகிறது.

***********************************

கம்பெனி விளம்பரம்:

ஜெட்லி MLM டிவிசன் வழங்கும்:

எங்கள் ப்ளாகில் ஆள் சேர்த்து விட்டால் ஸ்டார் அந்தஸ்து கொடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

# பத்து பேரை சேர்த்து விட்டால் சில்வர் ஸ்டார்.

#இருபது பேரை சேர்த்து விட்டால் கோல்டன் ஸ்டார்.

#நூப்பது பேரை சேர்த்து விட்டால் பிளாட்டினம் ஸ்டார்
அந்தஸ்து வழங்கப்படும்.

#எங்களுக்கு வரும் ஒவ்வொரு பாலோயர்களும் எங்களுக்கு ஒரு
தல தான் அதாங்க அல்டிமேட் ஸ்டார்...

****************************************

பின்னூட்டம் போடாதவர்களுக்கு ஒரு கோரிக்கை:

அப்புறம் பின்னூட்டம் வர வர ரொம்ப கம்மியா வருது...
ஒரு மொக்கை படத்துக்கு வர பின்னூட்டத்தில் பாதி
கூட நல்ல படத்துக்கு வரல... அதான் உண்மை.
அதனால் நிறைய பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு
மாதம் மாதம் ஒரு அமௌன்ட் அனுப்பி வைக்கலாம்
என்ற யோசனையில் உள்ளேன்.கூடிய விரைவில்
கம்பெனியில் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும்.

இந்த யோசனைகள் மற்றும் பரிசை அனைவரும் இலவசமாக
பெற ஒட்டு போடுங்கள்....

நன்றி
ஜெட்லி சரண்

21 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

// நிறைய பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு
மாதம் மாதம் ஒரு அமௌன்ட் அனுப்பி வைக்கலாம்
என்ற யோசனையில் உள்ளே//

எத்தனை பின்னூட்டத்திற்கு எவ்வளவு அமௌன்ட் என விளக்கமா சொன்னா தானே, அதற்கு தகுந்த மாதிரி பின்னூட்டம் போடலாம். சாம்பிளுக்கு இதே பின்னூட்டத்த எண்ணிக்கையில் கூட்டி போடவா?

யோ வொய்ஸ் (யோகா) said...

எத்தனை பின்னூட்டத்திற்கு எவ்வளவு அமௌன்ட்

யோ வொய்ஸ் (யோகா) said...

என விளக்கமா சொன்னா தானே,

யோ வொய்ஸ் (யோகா) said...

அதற்கு தகுந்த மாதிரி

அன்புடன் மலிக்கா said...

அட இது எப்படி இருக்கு;
நல்ல வழிதாங்கோ இதுவும்

யோ வொய்ஸ் (யோகா) said...

பின்னூட்டம் போடலாம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

சாம்பிளுக்கு இதே பின்னூட்டத்த எண்ணிக்கையில் போடவா?

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்ப அதிகமா பின்னூட்டியாச்சி இப்ப ஓக்கேயா? எனக்கான தொகையை என் பேங்க் அக்கவுண்ட்டில் டிப்போசிட் பண்ணிவிடவும் ஜெட்லி

தங்கராசு நாகேந்திரன் said...

ஓட்டுப் போட்டாச்சு பின்னூட்டம் போட்டாச்சு
மேலும் நீங்க கொடுக்கப் போறதா சொல்லுற பரிசுகள் எல்லாம் ரொம்ப டெரராக இருந்தாலும் (குறிப்பா சிவகிரி டிக்கட்) நம்பி பின்னாடி வர்றேன்.

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

இராகவன் நைஜிரியா said...

ஃபாலோயர் ஆனா மட்டும் போதாதில்ல... பின்னூட்டமும் போடணும்... இது நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குதுங்க..

சித்து said...

மச்சி நான் இடுக்கை இடாததால் தான் சேர்ந்தவர்கள் பிச்சிக்காம இருக்காங்க. நல்ல பதிவு டா, ரசிச்சேன்.

லோகு said...

// நிறைய பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு
மாதம் மாதம் ஒரு அமௌன்ட் அனுப்பி வைக்கலாம்
என்ற யோசனையில் உள்ளேன்//

மாப்ள.. என்னையும் மைண்ட்ல வச்சுக்க..

லோகு said...

நாங்கள் புதிதாக வலைப்பூ ஆரம்பித்த போது மொத்தம்
இருந்தது மூன்று பாலோயர்ஸ் ஒன்று நான், மற்றவர்கள்
சித்துவும் நட்டும்//

உங்களுக்காவது பரவால்ல, மூணு பேர் இருக்கீங்க.. நான் தனி ஆளா எவ்ளோ நாள் கடையை நடத்திட்டு இருந்தேன் தெரியுமா..

வால்பையன் said...

நீங்களே நூறு ஜிமெயில் ஐடி கிரியேட் பண்ணி புது புது படமா புரோபைலில் ஏத்தி!
உங்களுக்கு நீங்களே பாலோயர் ஆகிங்க!
ஏன்னா நான் ஏற்கனவே உங்களுக்கு பாலோயர்!

சரவணகுமரன் said...

:-))

ஜெட்லி... said...

யோகா ... இன்னும் அந்த பின்னூட்ட அமௌன்ட்
அமல்படுத்தும் வேளை வரவில்லை...
வந்தால் முதல் அமௌன்ட் பெரும் ஆள் நீங்கள்
தான்....

ஜெட்லி... said...

லோகு , வால் பையன், ராகவன் ,தங்கராசு , அன்புடன் மலிக்கா ,சரவணகுமரன்,சித்து
அனைவருக்கும் நன்றி....

ப்ரியமுடன் வசந்த் said...

அடப்பாவி...

மதிபாலா said...

ஆயாச்சி........!!!

சொன்னபடி டெல்லில இருந்து மீனம்பாக்கம் வர டிக்கெட் எடுத்து தந்துருவீங்க தானே???

Jackiesekar said...

அற்புதமான மொக்கை எழுதிய தம்பி ஜெட்லிக்கு வாழ்த்துக்கள்..