Wednesday, September 23, 2009

G.I.Joe : The Rise OF Cobra


ரொம்ப வருடங்கள் கழித்து நான் திரை அரங்கில் பார்த்த ஆங்கிலப் படம், அதுவும் நான் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்து பொழுதைக் கழித்த G.I. Joe படம் பார்த்ததில் செம செம சந்தோசம் தான். ரொம்ப நாளாக முயன்று நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இயக்குனர் ஸ்டீபன் சொம்மேர்ஸ் அவர்களுக்கு என் நன்றிகள் பல, நான் சிறு வயதில் வைத்து விளையாடிய பொம்மைகளுக்கு உயிர் குடுத்து அந்த பாத்திரங்கள் அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருகிறார். அரங்கில் பலரும் என்னை போலவே, இதோ பாரு Snake Eyes, Duke இப்படி ஒவ்வொரு பாத்திரம் வரும் பொழுதும் குஷியாகி பேசிக்கொண்டனர். அந்த கார்ட்டூன் மொத்தத்தையும் நவீன தொழில்நுட்பத்துடன் அதன் Originality மாறாமல் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியுள்ளார். இவர் ஏற்கனவே The Mummy, Catch Me If U Can, The Jungle Book, Deep Rising..... போன்ற அதிரடி பிரமாண்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மம்மி பட புகழ் Brendan Fraser இந்த படத்தில் சும்மா ஒப்புக்கு வருகிறார், அவரை இன்னும் நல்லா பயன் படித்திருக்கலாம்.

ஒவ்வொரு G.I.Joe உருவான விதமும் மிக சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது, கதை என்னவோ வழக்கமான ஆங்கில action பட கதை தான். கெட்டவர்களிடம் இருந்து இந்த உலகை காக்கும் நல்லவர்களின் கதை. ஆனால் அதை எடுத்த விதம் தான் சூப்பர். அதுவும் அந்த பாரிஸ்இல் நடக்கும் அதிரடி Chasing, பிரம்மாண்டம் என்றால் அப்படி ஒரு பிரம்மாண்டம்.அதென்னப்பா உலகை அழிக்கும் வஸ்துக்கள் அனைத்தும் Fluorescent Green நிறத்தில் இருக்குது?? கடைசியில் சிறிது நேரம் போர் அடித்தாலும் ரொம்ப காட்சிகள் நல்லா இருக்கு. படம் முடிந்த விதத்தை பார்க்கும் பொழுது, இன்னும் சில Part வரும் என்றே தோன்றுது.


மொத்தத்தில் நீங்கள் சிறு வயதில் இந்த கார்டூன் பார்த்தோ அல்லது இந்த பொம்மைகளை வைத்து விளையாடி இருந்தால் உங்களுக்கு இந்த படம் ஒரு மலரும் நினைவாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. கண்டிப்பாக சென்று பாருங்கள்.

நன்றி
சித்து

2 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

இங்க இலங்கையில் வந்தால் பார்க்கிறோம் தல..

Jay said...

ம்.. இலங்கையில் மஜஸ்டிக் சிட்டிக்கு வருவதாக உள்ளது இந்த திரைப்படம்.

கொசுறு: Harry Potter 6 லிபர்ட்டிக்கு வருகின்றது. (இலங்கையில் ஆங்கிலப் படங்கள் வெளியாகும் வேகத்தைப் பார்த்தீங்களா??)