ஈரம், படத்துக்கு சரியான டைட்டில்.என்னை 2.45 மணிநேரம்
மழையில் நினைய வைத்த இயக்குனருக்கும், ஒளிப்பதிவு செய்த
மனோஜ்க்கும் என் நன்றிகள்.படத்தில் தண்ணீரை ஒரு கேரக்டர்
ஆக வைத்து நம்மை மிரட்டுகிறார்கள்.
ஆதி, யார் இவர் மிருகம் படத்தில் வந்தவரா? என்று கேட்கும்
அளவுக்கு போலீஸ் ஆக நடிப்பில் கலக்குகிறார். ஆதிக்கு எனக்கு
தெரிஞ்சு படத்தில் அவரது சொந்த குரல் இல்லை என்று
நினைக்கிறேன், இந்த குரலை நான் பல தடவை கேட்டு இருக்கிறேன்
ஆனால் ஞாபகம் வரல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க??.
சிந்து மேனன் , சரண்யா மோகன் தங்கள் பங்கை மிக இயல்பாக
செய்துள்ளனர்.
நந்தா, முதல் பாதியில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம்
பாதியில் இவர் ஆதிக்கம் தான்.எனக்கு என்னமோ கொஞ்சம்
ஓவர் ஆக்டிங் மாதிரி இருக்கு ஒரு வேளை இந்த மாதிரி
கேரக்டரை பல படங்களில் பார்த்ததால? என்று தெரியவில்லை.
ஸ்ரீநாத், பெண்களை மற்றும் காதலை பற்றியும் வசனம் பேசும்
அதே வாய்ப்பு மீண்டும்(சலிக்காத சார் உங்களுக்கு?).என்ன இதுல
கொஞ்சம் காமெடி கம்மி அவ்வளவு தான்.
கொஞ்சம் காமெடி கம்மி அவ்வளவு தான்.
ஒரு புதுமண பெண்ணின் மரணம் அது கொலையா? தற்கொலையா?
என்று தோண்டும் பழைய காதலனாக ஆதி.அடுத்து அடுத்து அதே
என்று தோண்டும் பழைய காதலனாக ஆதி.அடுத்து அடுத்து அதே
குடியிருப்பில் நிகழும் மரணங்கள் காரணம் தண்ணீர். இதுக்கு நடுவில்
ஆதி சிந்துவின் பழைய காதல் கதைகள்.முதல் பாதி
ஆதி சிந்துவின் பழைய காதல் கதைகள்.முதல் பாதி
கொஞ்சம் மெதுவா இருந்தாலும் தண்ணீரால் கொலை செய்யப்படும்
காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிடும்.அதுவும்
தமனின் பின்னணி இசை சூப்பர்.உதயம் தியேட்டர் கழிவறையில்
நடக்கும் காட்சி செம....கிராபிக்ஸ் வேலைகள் கனகச்சிதம்.
ரெண்டாம் பாதி, சில காட்சிகள் கொட்டாவி வர வைத்தாலும்
படம் நல்ல ஸ்பீட் ஆக தான் போகிறது. காட்சிக்கு காட்சி
த்ரில்லர் இல்லாமால் விட்டு விட்டு வருவதால் கொஞ்சம்
பயம் கம்மி ஆயிடுது. ஸ்ரீநாத் விபத்துக்கு அப்புறம் வீட்டுக்கு
வரும் போது அவர் குழந்தை பண்ணும் சேட்டைக்கு தியேட்டரில்
நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம்.
ஈரம், எல்லாம் கலந்த கலவை. கண்டிப்பாக அனைவருக்கும்
ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.படத்தின் நீளம் கொஞ்சம்
அதிகம். அப்புறம் வழக்கம் போல் எல்லா ஆவி படத்தில் காட்டுவது போல் பிளாட்டை அடிக்கடி கோணலாக காட்டாமல் இருந்து இருக்கலாம்.
படம் விட்டு வெளிய வந்த உடன் மழையில் நனைந்த
படம் விட்டு வெளிய வந்த உடன் மழையில் நனைந்த
ஒரு பீலிங்க்ஸ் ஏன் என்றால் படத்தில் முக்கா வாசி நேரம் மழை
பெய்து கொண்டே இருக்கும்.குத்து பாடல் இல்லை, முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை, ஆ ஊன்னு காட்டு கத்தல் சண்டை இல்லை இயக்குனர் ஷங்கரின் தரமான அடுத்த தயாரிப்பு இந்த ஈரம்.
ஜெட்லி பஞ்ச்:
ஜெட்லி பஞ்ச்:
ஈரம்...சில காட்சிகளில் செம த்ரில்லர் ஜூரம்....
இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் போய் சேர
ஒட்டு போடுங்க....
உங்கள்
ஜெட்லி சரண்.
6 comments:
இன்னைக்குதானே ரிலீஸ் ஆச்சு.....பார்க்கலாம் போல உள்ளது. விமர்சனம் படித்து விட்டு...
ஈரம் த்ரில்லர் படமா........
கண்டிப்பா பாதிரவேண்டியதுதான்.......
விமர்சனம் அருமை
த்ரில்லிங்காகவே படம் பார்க்கனும்னு தோனுது.
நல்ல விமர்சனம் நண்பா..
அப்படியா.. பாத்துடுவோம் தம்பி
ஈரம்...சில காட்சிகளில் செம த்ரில்லர் ஜூரம்....//
பட தயாரிப்பாளர் இந்த பஞ்ச் பாவித்தாலும் பாவிப்பார். நல்ல விமர்சனம்.
Post a Comment