Monday, September 28, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....(28.9.09)


நேற்று பூஜை இருந்ததால் ஒரு ஆறு மணிக்கு பூஜை போட்டு
பதிவர் சந்திப்புக்கு கிளம்பி விடலாம் என்றும் பார்த்தால் செம மழை.மழையால் கடைசியில் எட்டு மணிக்கு தான் பூஜை
முடிந்தது.பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...

************************************

யாரவது தெரிஞ்சா சொல்லுங்க....

ஆயிரத்தில் ஒருவன் எப்போது வெளிவரும்?????

************************************************

ஒரு சில பேர் பழுத்த மரம் தான் கல்லடிப்படும் என்று நம்
முன்னோர்கள் கூறிய கருத்தை தப்பாக எடுத்து கொண்டுள்ளனர்....
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று மட்டும்
தான் " நம் முன்னோர்கள் பிஞ்சுல பழுத்தவங்களை பத்தி
சொல்லவில்லை".(கண்டிப்பா உள்க்குத்து இருக்கு!).

***********************************************

நண்பரிடம் போனில்...

நான்: மச்சி நாளைக்கு சிதம்பரம் கோவிலுக்கு போறேன்...

நண்பர்: என்னடா தீடிர்னு...

நான்: வேண்டுதல் மச்சி...

நண்பர்: என்ன வேண்டுதல் டா?...

நான்: சிதம்பரம் கோவிலுக்கு போறது தான்...

நண்பர்: சரிடா ...போய்ட்டு வா. நான் அப்புறம் பேசுறேன்.

********************************************

சமீபத்தில் படித்த செய்தி:

தூத்துக்குடியில் குடித்து விட்டு பணியாற்றிய
மதுவிலக்கு ஏட்டுகள் கைது....

***************************************

பொன்மொழிகள்

நீ துன்பப்பட வேண்டுமானால் உன்னை விட
பணக்காரியை மணந்து கொள்.

- மைக்லேட்.

என்னை பொறுத்தவரை மனித தன்மையை அடியோடு
ஒழித்து விட்ட ஆஸ்திகனை விட மனித தன்மையை
பத்திரமாக பாதுகாக்கும் நாஸ்திகனாக இருக்க ஆசைபடுகிறேன்.

- இங்கர்சால்.

************************************

உல்டா விளம்பரம்:(சென்னை சில்க்ஸ்)

எனக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டோட ப்ரெண்டுக்கும் பிடிக்கும்
விஜய் மல்லையாவின் கிங்க்பிஷேர் ....
குடியா குடிப்போம்
சைட்டிஷை தள்ளுவோம்....
கடைசியில் வாந்தியும் எடுப்போம்!!


********************************************
மொக்கை மேட்டர் :

தென்னகத்தின் வருங்கால ஸ்பீல்பெர்க் போல எழுதி வரும்
ஒருவர் செம காமெடி இடுகை இட்டுள்ளார்......................
அவர் கூறவது "ஹரி ஒரு அடி முட்டாளான இயக்குனராம்,
சேவல் படத்தில் பிராமணர்கள் திருநெல்வேலி பாஷை
பேசுவார்களாம் அது கூட தெரியாம ஹரி படம் எடுத்து
இருக்குராம்"

(எனக்கு தெரிந்து என் பிராமண நண்பர்கள் இரண்டு பேர்
திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். அவர்கள் திருநெல்வேலி
பாஷை தான் பேசுவார்கள்)

சேவல் படத்தில பிராமணர் பாத்திரங்கள் அவர்கள் பாஷையை
பேசி இருந்தால் படம் வெற்றி அடைய ஒரு காரணமாக

இருந்திருக்கும் என்ற அரிய கண்டுபிடிப்பை நமக்கு கண்டுபிடித்து
கூறிய பதிவர் சக்திவேல் அவர்களின் பெயரை ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்வோம்.

************************************************
நன்றி

கண்டிப்பா ஒட்டு போட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி சரண்.

11 comments:

துளசி கோபால் said...

//பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...//

கொட்டும் மழையிலும், சரியா அஞ்சரைக்கு காந்தி சிலை எதிரே இருந்தேன். காரில் இருந்தபடியே ஒரு நிமிஷம் ..... அஞ்சலி (காந்திக்குத்தான்)


மனித தன்மையை அடியோடு
ஒலித்து விட்ட ஆஸ்திகனை = ஒழித்து


செம காமெடி இடுகை ஈட்டுள்ளார் = இட்டுள்ளார்


அறிய கண்டுபிடிப்பை = அரிய

விஜயதசமின்னு டீச்சர் வேலையைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

(ஒற்றை எல்லாம் சேர்க்கலை)

துளசி கோபால் said...

அண்பான வேண்டுகோள்= அன்பான

அது இருக்கட்டும்.பராசக்திப் படப்பாடல்களுக்கு இங்கே பார்க்கவும்

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5174/

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆயிரத்தில் ஒருவன் எப்போது வெளிவரும்?????//

அந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன், எம்ஜியார் அதில் அசத்தியிருப்பார். நம்பியார் கூட தூள்கிளப்பியிருப்பார்.

பணியாரத்தில் வைத்து பணம் கொடுக்கும் காட்சி அசத்தலோ அசத்தல்..,

யோ வொய்ஸ் (யோகா) said...

//எனக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டோட ப்ரெண்டுக்கும் பிடிக்கும்
விஜய் மல்லையாவின் கிங்க்பிஷேர் ....
குடியா குடிப்போம்
சைட்டிஷை தள்ளுவோம்....
கடைசியில் வாந்தியும் எடுப்போம்!!//

அது என்னா மேட்டர் ஜெட்லீ

மணிஜி said...

/சேவல் படத்தில பிராமணர் பாத்திரங்கள் அவர்கள் பாஷையை
பேசி இருந்தால் படம் வெற்றி அடைய ஒரு காரணமாக
இருந்திருக்கும் என்ற அறிய கண்டுபிடிப்பை நமக்கு கண்டுபிடித்து
கூறிய பதிவர் சக்திவேல் அவர்களின் பெயரை ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்வோம்.//

காமெடிபீசு....அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம்..இல்லையென்றால் என் அலுவலகத்தில்(கேபிளை தொடர்பு கொள்ளுங்கள்)

யாசவி said...

when aayirathil oruvan release?

mee too waiting

ஜெட்லி... said...

நன்றி துளசி கோபால் ...

நீங்கள் கூறியது படி மாற்றி விட்டேன்

ஜெட்லி... said...

@ சுரேஷ்

அய்யா நீங்கள் பழம்பெரும் பதிவர் என்பது எனக்கு தெரியும்
டாக்டர்.....

ஜெட்லி... said...

//
அது என்னா மேட்டர் ஜெட்லீ //

யோ அதான் கிங்க்பிஷேர் பீர்....

ஜெட்லி... said...

@ தண்டோரா

கண்டிப்பா அண்ணே... மீட் பண்ணுவோம்...

பிரபாகர் said...

தல பொடிமாஸ் கொஞ்சம் காராமா (//தென்னகத்தின் வருங்கால ஸ்பீல்பெர்க் போல எழுதி வரும்
ஒருவர் செம காமெடி இடுகை இட்டுள்ளார்//), கொஞ்சம் காமெடியா (//தூத்துக்குடியில் குடித்து விட்டு பணியாற்றிய மதுவிலக்கு ஏட்டுகள் கைது....//), கொஞ்சம் ஸ்வீட்டா(//நம் முன்னோர்கள் பிஞ்சுல பழுத்தவங்களை பத்தி
சொல்லவில்லை".(கண்டிப்பா உள்க்குத்து இருக்கு!).//) கலக்காலா இருக்கு. கலக்குங்க...

பிரபாகர்.