முன்னுரை: உங்களால் படமே பார்க்காம இருக்க முடியாதா என்று என்னை பார்த்து கேட்ட வால் பையன் அவர்களுக்கு இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்....
நினைத்தாலே இனிக்கும், மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கல்லூரி களம்.ப்ரிதிவிராஜ்,ஷக்தி,ப்ரியாமணி,கார்த்திக் குமார்
நடிப்பில் சன் டி.வி வெளியிட்டுர்க்கும் படம்.மலையாள படமான
கிளாஸ் மேட்ஸ் படத்தின் தழுவல் தான் நினைத்தாலே இனிக்கும்.இயக்குனர் குமாரவேலன் அவர்கள் மலையாள படத்தில் இருந்து வெறும் அஞ்சு காட்சிகளை மட்டும் தான் அப்படியே எடுத்து இருக்கோம் மற்றவை அனைத்தும் புதியவை என்றார்.பேசாம சீன் பை சீன் அப்படியே எடுத்து இருக்கலாம்.
ப்ரிதிவ்ராஜ் 8 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் நடக்கும் get-to-gether விழாவுக்கு வரும் வழியிலே கதை சொல்லி வருகிறார் .
கல்லூரியில் ப்ரிதிவிராஜ்க்கும் கார்த்திக் குமார்க்கும் அடிக்கடி
சண்டை நடக்கும்.சக்தி இருவருக்குமே நல்ல நண்பன்.வழக்கமா
வர காலேஜ் தேர்தல்ல பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது(எத்தனை படத்துல பாக்கறது).நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது,
ப்ரியாமணியும் ப்ரிதிவிராசும் ஒன்றாக இணைவார்களா?
இது தான் நினைத்தாலே இனிக்கும். பிளஸ் சஸ்பென்ஸ்(இதான் முக்கியம்).
பொதுவா ஒவ்வொரு மனுசனுக்கும் அவனோட காலேஜ் லைப்
கண்டிப்பா நினைத்தாலே இனிக்கும் .நான் பார்த்த
ஆராதனா தியேட்டரில் மட்டும் முதல் பாதி மட்டும் நாலு
வாட்டி நிறுத்தி நிறுத்தி போட்டான்.அந்த தியேட்டரே அப்படிதான் என்ன பண்றது , கணபதிராம் ஹவுஸ் புல் ஆயிடுச்சு.
அது என்னமோ தெரியுல விஜய் அன்டனி குரல் கேட்டாலே ஒரு red bull energy drink குடிச்ச மாதிரி ஒரு பீலிங்க்ஸ் ...படத்தின் பாட்டை பற்றி சொல்ல வேண்டாம் ஏற்கனவே ஹிட். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு நல்லா இருக்கு.
படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே இயக்குனர் கொஞ்சம் சொதப்பி
இருக்கிறார் , முக்கியமா இந்த கார்த்திக் குமார் கேரக்டர் முதல் காட்சியில் அவரை காட்டுவதோடு சரி அடுத்து முக்கா மணி நேரம் கழித்து தான் ஸ்க்ரீன் உள்ளே வருவார்.
(ஏன் payment பாக்கியா ??).
ஷக்தி , நீங்க சொன்ன நம்ப மாட்டிங்க நான் இவரோட
மகேஷ் ,சரண்யா மற்றும் பலர் படம் பார்த்தேன் அதில் இருந்து
ஒரு படி உயர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பிரிதிவிராஜ் இவரு என்ன பண்றாரு ரவுடியா இல்ல படிப்ஸ்ஆ ஒன்னும் புரியல (அதான் ஹீரோவோ !!).ப்ரியாமணிக்கு ஒன்னும் பெருசா இல்ல (நான் நடிக்கிற வாய்ப்பை சொன்னேன் ).அட்வைஸ் பண்றதுக்குன்னு ஒருத்தர் அவர் தான் பாக்யராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திரிக்கிறார்.
லொள்ளு சபா ஜீவா ஒபெநிங் நல்ல காமெடி , காலேஜ் கேம்பஸ் காமெடி கொஞ்சம் கம்மி . ப்ரியாமணிக்கு அடிப்பட்டவுடன் பிரிதிவிராஜ் chemistry லேப்க்குள் அவரே மருந்து தயாரிப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் தான். படம் போர் அடிக்காம போது , சஸ்பென்ஸ் இருப்பதால் இதுவா
அதுவா என்று கதை போகிறது . ஷக்தியின் காதலியாக வரும் பெண்ணை க்ளோஸ் அப்பில் பார்க்க சகிக்க வில்லை , அந்த பெண் ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் hostel வருவதாக கூறுவது 10 முழம் பூவை காதில் சூற்றியதுக்கு சமம்.
படம் சுமார் தான் மோசமில்லை .
ஜெட்லி பஞ்ச் :
லாஜிக் மற்றும் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் நினைத்தாலே இனிக்கும் கண்டிப்பாக இனித்திருக்கும் .
இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் சேர ஒட்டு போடவும் ....
உங்கள்
ஜெட்லி
25 comments:
me the first..
சொன்ன மாதிரி டாண்ணு போட்டுடீங்களே!
அதுக்குள்ளயா? இந்நேரம் முழுசா ஒரு ஷோ தான் முடிஞ்சிருக்கும்...
I cant digest prithivraj as a college student.
\\பிரிதிவிராஜ் chemistry லேப்க்குள் அவரே மருந்து தயாரிப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் தான்\\
கேப்டன் மட்டும் மொபைல ஃபோன் வெளிச்சாத்துல ஆப்பரேஷன் மண்ணாலாம்.
இவரு பண்ணக் கூடாதா..?
என்னாங்க இது ஞாயாயம்.?
புட்டுக்கிச்சா
என்னாது இது எல்லா படமும் வரிசையா சொதப்புதே....
எப்படியோ நமக்கு காசு மிச்சம்.விமர்சனம் நல்லா எழுதிருக்கிங்க.ப்ளாக் நண்பர்கள் படத்தை பத்தி விமர்சனம் எழுதும்போது நமக்கு என்ன கவலை.
//ஷக்தியின் காதலியாக வரும் பெண்ணை க்ளோஸ் அப்பில் பார்க்க சகிக்க வில்லை , அந்த பெண் ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் hostel வருவதாக கூறுவது 10 முழம் பூவை காதில் சூற்றியதுக்கு சமம்.
//
:)))))))))))
க்ளோஸ்-அப் பில் சகிக்கவில்லை என்பதால் தான் ராத்திரி ஒரு மணிக்கு வராங்க...என்னங்க நீங்க புரிஞ்சுக்க வேணாமா !!
:))))))
__
எனக்கு இப்படத்தில் வரும் "அழகாய் பூக்குதே" பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சதால, பட விமர்சனம் படித்தேன். படம் நல்லா இருந்தா சரி. எப்படியும் சன் டிவியில் புண்யத்தில் (அல்லது வேறு டி.வியில்) "அகில பிரபஞ்சத் தொலைகாட்சியில் முதன் முறையாக..." பார்த்து ரசிக்கும் கேசு நானு...
நன்றி.
நன்றி Sachanaa
எதிர் பார்த்திருந்த படம்...
இதுவும் சுமார் தனா..
:)))
@ சரவணகுமரன்
சொன்னதை செய்வான் இந்த ஜெட்லி....
//ராம்ஜி.யாஹூ said...
I cant digest prithivraj as a college student.
//
me too
@ பிரியமுடன்...வசந்த்
ரொம்ப மோசமில்லை வஸந்த்
@ராஜு
நீங்க தே.மு.தி.க வை சேர்ந்தவரா?
@Mrs.Menagasathia
நன்றி
@ Shakthiprabha
அந்த பாடலின் ஒளிப்பதிவு என் கண்ணை கூசியது,.,
@ வழிப்போக்கன்
அட விடுங்க அண்ணே....
//சொன்னதை செய்வான் இந்த ஜெட்லி.... //
தியேட்டரில் இருந்தே விமர்சனம் எழுதுவதுதான் உங்க அடுத்த கட்டம்...
//உங்களால் படமே பார்க்காம இருக்க முடியாதா என்று என்னை பார்த்து கேட்ட வால் பையன் அவர்களுக்கு இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்.//
தல!
நான் சொன்னதுக்கு காரணம், விமர்சனம் எழுதியே ஆகணும்கிற காரணத்துக்காக மொக்கை படமெல்லாம் பார்த்து உடம்ப கெடுத்துக்காதிங்க என்பதற்காக
நல்ல ரிசல்ட் கிடைச்சா பாருங்க நிச்சயமா உங்கள் விமர்சனம் தனித்துவமானது
ரெண்டாவது நீங்க என்னதான் விமர்சனம் எழுதினாலும் நான் தியேட்டர் போய் படம் பார்க்கப்போறதில்ல!
@ வால் பையன்
புரியுது பாஸ் சும்மா தாமாசு...
//தியேட்டரில் இருந்தே விமர்சனம் எழுதுவதுதான் உங்க அடுத்த கட்டம்... //
நீங்க laptop வாங்கி தந்தா அதை கூட செய்வான் இந்த ஜெட்லி...
எப்போ வாங்கி தரிங்க பாஸ்,....?
.பேசாம சீன் பை சீன் அப்படியே எடுத்து இருக்கலாம். ///
சரியாய் சொன்னிங்க
ஒரு திட்டத்தோடு இருக்கீங்களா தல..,
ப்ரியாமணிக்கு ஒன்னும் பெருசா இல்ல (நான் நடிக்கிற வாய்ப்பை சொன்னேன் //
இதை நான் நம்பிட்டேன்..
2 சீன் பார்க்க முடியலைங்க..இதுல படம் மெகா ஹிட்டுன்னு சன் டீவி சொல்லுது.
பிரித்திவிராஜ் ஸ்டூடண்டா ?.. எனக்கென்னமோ 2 புள்ள பெத்தவன் மாதிரி தான் தெரியுரார்.
Post a Comment