Monday, September 21, 2009

பிரபல பதிவர் சக்திவேல் இது நியாயமா??...

பிரபல பதிவர் சக்திவேல் இது நியாயமா??...

நான் எழுதிய மதுரை டூ தேனி படத்தின் விமர்சனத்துக்கு வந்த திரு.சக்திவேல் அவர்களின் பின்னூட்டம்:


"என்னடா உங்க டேஸ்ட்டு, உங்கள மாதிரி ஆளுங்களுக்காகவே
பேரரசு,ஹரி மாதிரியான ஆளுங்க ஒரே மாதிரியான படங்களை
தருவாங்க அந்தப்படங்களை பாத்திட்டு லூசு மாதிரி ரோட்டுல திரிங்க.உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா"சக்திவேல் அவர்கள் மதுரை டூ தேனி படத்தின் பி.ஆர்.ஒ
அதனால் தான் அவரிடம் இருந்து இப்படி ஒரு காரமான
பின்னூட்டம்.சக்திவேல் பத்தி நம்ம பதிவுலகத்துக்கு
தெரியாதது அல்ல அவரை பற்றி
கூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்
என்ற தலைப்பில் இடுகைகள் வந்துள்ளது. அதன் பின்
அவர் பதிவுலகத்தை விட்டு ஓடுவதாக கூறினார்.
அப்போதுதான் நான் அவரின் பதிவை பார்த்தேன்
என்பதை விட அவரின் விசிட்டர்ஸ் பார்த்தேன்
தினமும் ஆயிரம் பேர் வருகை தந்தனர்.சரி நானும்
ஒரு கடிதம் அனுப்பினேன் "தொடர்ந்து எழுதுங்கள்" என்று.

அப்போது திரு.சக்திவேல் அவர்கள் விளம்பரத்துக்கு மட்டும்
என் கடிதம் மற்றும் சிலரின் கடிதத்தை வெளியீட்டு மீண்டும்
எழுத தொடங்கினார்.ஒரு பதில் கடிதம் இல்லை ஒரு
பின்னூட்டம் இல்லை,பயங்கர தலைகனம் பிடித்த ஆள்
என்று புரிந்தது.அப்புறம் அந்த பக்கம் போறது இல்லை.

சக்திவேல் ஈரம் படத்துக்கு "ஏதோ படம் சுமார் தான்.
இந்த படத்தை எடுத்த ஷங்கர்க்கு ஈரமான மனசு"
அப்படின்னு ஒரு நல்ல அரங்கு நிறைந்த காட்சிகளாக

ஓடி கொண்டிருக்கும் படத்துக்கு அவரின் தரமான
விமர்சனம் ஒரு சான்று.சரி ஆனால் அவர் பணிபுரிந்த
படத்துக்கு விமர்சனம் எழுதினால் கோபம் வருகிறது
சாபம் உடுகிறார்.

ஒரு படம் எடுக்கறது எவ்ளோ கஷ்டம் அப்படின்னு
எனக்கு தெரியும், அதை விட கஷ்டம் ரசிகர்களை
திருப்திப்படுத்துவது.

சரி இனிமே அவரின் பின்னூட்டதுக்கு வருவோம்,

சக்திவேல் அவர்களே பேரரசு படங்களை நான் பார்ப்பது
இல்லை நீங்க பார்த்து மெண்டல் ஆனா நான் ஒன்னும்
பண்ண முடியாது.பேரரசு கூட ஹரியை தயவு செய்து
ஒப்பீட வேண்டாம்.ஹரி எந்த விதத்தில் உங்கள்
கண்ணுக்கு இளக்காரமாக தெரிகிறார் என்று தெரியவில்லை.
ஏதோ சேவல் படம் நன்றாக இல்லை என்பதால் அவரை
குறை கூற முடியாது.

மதுரை டூ தேனி, இன்டெர்வல் முடிந்து பத்து நிமிடம் ஆகியும்
கதைக்குள் போகமால் சுவராசியம் இல்லாத காட்சிகள் எப்படி
ஒருத்தனை தியேட்டர் உள்ளே உட்கார வைக்கும்?.
இதில் வேறு படத்துக்கு ஹீரோவோடு வந்த அல்லக்கைகள்
மொக்கை காட்சிகெல்லாம் கை தட்டி விசில் அடித்து
கடுப்பு ஏற்றி......... ஏதோ உங்கள் படம் தான் எங்களை போன்ற
ரசிகர்களை மற்ற படங்களில் இருந்து காப்பற்றுவது போல
நீங்கள் எண்ணி கொண்டால் அது உங்கள் அறியாமையை
தான் காட்டுகிறது.


ஆமாம்... ஒருமையில் "டா" என்று கூறுவது தாங்கள்
கற்ற பாடத்தை காட்டுகிறது.நான் சிறுவன் தான் அதற்காக
"டா" என்று அழைப்பது தாங்கள் அறிந்த நாகரிகம் போலும்.
வரும் காலங்களில் உங்கள் பயணம் வெற்றிகரமாய் அமைய

இச்சிறுவனின் வாழ்த்துக்கள்.


உங்கள்
ஜெட்லி சரண்.

11 comments:

krishna said...

மதுரை டூ தேனி
படம் பார்த்தல் பன்றி காய்ச்சல் வருதாமே ? உண்மையா தல ...

விடுங்க பாஸ் ஒரு மொக்கை படத்துக்கு ஏன் இவ்வளோ சண்ட . அவர் அடுத்து வேட்டைக்காரன் பி.ஆர் .ஒ உங்களுக்கு தெரியுமா?

shabi said...

உங்க விமர்ட்சனத்துலயே போட்டேன் அவர் தான் pro ன்னு ....பாவம் இதற்காக அவர் போராட்டமும் கண்டணக்கூட்டமும் நடத்தப்போவதாக உளவுதுறை தகவல் இன்றய முக்கிய செய்தி

பிரபாகர் said...

ஜெட்லி,

இது போன்ற கீழ்த்தரமானவர்களை ஆளாய் நினைத்து முக்கியத்துவம் கொடுத்து பெரிய ஆளாக்க வேண்டாம் நண்பா...

பிரபாகர்.

♠ ராஜு ♠ said...

ஹா..ஹா..அன்னைக்கு சேரன்..!இன்னைக்கி இவரா..? சாம் ஆன்டர்சன்னின் "யாருக்கு யாரோ ஸ்டடெப்னி" படத்துக்கும் தலைவர்தான்
பி.ஆர்.ஒ.அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாமே..? உங்களுக்கு தெரியுமா ஜெட்லி..?
:-)

ஜெட்லி said...

@ krishna
@ shabi
@ prabhakar
@ raaju

அனைவருக்கும் நன்றி....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தல ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் படிக்கற நிறைய பேரோட அலெஸ்கா ரேன்ங்கிங் பார்த்திருக்கீங்களா?

இல்லையின்னா பாருங்களேன்...,

யோ வாய்ஸ் (யோகா) said...

போற்றுவர் போற்றட்டும் தூற்றுவர் தூற்றட்டும் ஜெட்லீ நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்

வால்பையன் said...

சக்திவேலை பகைச்சுகாதிங்க ஜெட்லி!

அவரு கோபம் வந்தா ”சகதி”வேலா மாறிருவாரு!

அஹோரி said...

சக்திவேல் said...
September 19, 2009 12:09 PM

என்னடா உங்க டேஸ்ட்டு, உங்கள மாதிரி ஆளுங்களுகளுக்காகவே பேரரசு,ஹரி மாதிரியான ஆளுங்க ஒரே மாதிரியான படங்களை தருவாங்க அந்தப்படங்களை பாத்திட்டு லூசு மாதிரி ரோட்டுல திரிங்க.உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா
ஜெட்லி said...
September 19, 2009 5:52 PM

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி....

------------------------------------------------

http://www.sakthipages.com/2009/09/blog-post_20.html

மொக்கை பிரதமர்,கருணாநிதி,சுயநல தமிழர்கள்,மற்றும் பல...
Sunday, September 20, 2009


------------------------------------------------

Sep
21
பிரபல பதிவர் சக்திவேல் இது நியாயமா??...

------------------------------------------------

ரெண்டு நாள் கழிச்சி மெனெக்கெட்டு பதிவு போட்டதுக்கு வேற எதாவது காரணம் இருக்கா சாமி ?

ஜெட்லி said...

//அவரு கோபம் வந்தா ”சகதி”வேலா மாறிருவாரு! // :((

silentboy said...

விடுந்க ஜெட்லி,சில பேர் இப்படித்தான்.

-கார்த்திகேயன்