Friday, September 25, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு....(25.9.09)

வாழ்த்துக்கள்:

அழகர் மலை இன்னைக்கு தான் அம்பதாவது நாளை நிறைவு
செய்தது, அந்தோணி யார், சிவகிரி போன்ற படங்கள் நூறாவது
நாளை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது........

***********************************************

கடந்த வாரம் பேப்பரில் படித்த விஷயம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியினர் தங்கள் தலைவரை பற்றி
மலை மலை என்ற படத்தில் தவறான வசனம் வருவதாக
கூறி தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர்.
இதிலே என்ன கொடுமைனு பாருங்க அந்த படம் அந்த
தியேட்டரில் ஓடவில்லை.ரைட், அப்புறம் கொஞ்ச நேரம்
கோஷம் போட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்களாம்.....

இதில் இருந்து எனக்கு ரெண்டு விஷயம் தெரியுது :

# அந்த குறிப்பிட்ட கட்சியினர் லேட்ஆக தான் படத்தை
பார்த்து இருக்கின்றனர், போன வாரம் தான் படம்
அம்பதாவது நாளை கடந்து நூறாவது நாளை நோக்கி
வெற்றி நடை போடுகிறது.(காமெடி இல்ல சீரியஸ், ஆனா
எந்த தியேட்டர்ல அப்படின்னு என்கிட்டே கேக்காதிங்க!!!)

# பேப்பரில் படம் விளம்பரத்தில் போடும் தியேட்டர்களில்
படம் ஓடுவது இல்லை. ஏன்? அப்புறம் எதுக்கு இந்த வெட்டி
விளம்பரம்?..... அதை சரியா போட்டாதான் என்ன....


எனக்கு தெரிஞ்சு மலைமலை படத்தை சத்யம் தியேட்டரில்
மூணு வாரம் ஒடிச்சு...ஆனா இவங்க அம்பது நாளை கடந்த பின்னும் சத்யம் தியேட்ட்டரில் ஓடுவதாக பீலா உட்டனர். ...
இப்ப பாருங்க இவங்க பப்பு தானா வெளியே வந்து ஒழுங்கா
ரெண்டு தியேட்டரில் தலா ஒரு ஷோ ஓடுவதாக விளம்பரம்
செய்கின்றனர். யாருக்கு தெரியும் அங்க படம் ஓடுதான்னு....


**************************************************

சில்லரை பையன்னு யாரையும் கூப்பிடாதிங்க:

இனிமே நீங்க யாரையும் சில்லரை பையன் அப்படின்னு
கூப்பிடமுடியாது.ஏன் என்றால் நாட்டுல எவ்ளோ
சில்லரை தட்டுப்பாடு அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.இல்லனா நான் சில சாம்பிள்
சொல்றேன்.......

# ஒரு ஹோட்டல்லில் பார்த்த வாசகம்

"ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கொடுத்தால் டிபன் இலவசம்"

நாம சில்லரை கொடுத்தால் அவுங்க ஐநூறு ரூபாய் நோட்
கொடுத்து ஒரு வேளை டிபன் தருவார்கள். அதுகூட அவுங்க
சொல்றத தான் சாப்பிடணும்... இதோ அந்த லிஸ்ட்

* தோசை மற்றும் காபி
(அல்லது)
*பொங்கல் மற்றும் வடை
(அல்லது)
*நான்கு இட்லி மற்றும் காபி.

நாட்டுல சில்லரை கிடைக்க ரொம்ப கஷ்டம்ங்க....
இனிமே பக்கி பசங்கள திட்டனும்னா வேறு ஏதாவது
பேர் வச்சிதான் திட்டனும் போல......
இப்போ சில்லறைக்கு தான் மதிப்பு அதிகம்.......

சரி உடுங்க....யாரவது சில்லரை அதிகம் இருந்தா எனக்கு
போன் பண்ணுங்க......கடைசியா ஒன்னு சொல்றேன்
நான் ரொம்ப நாணயமானவன்.


***********************************

இந்தியாவிலேயே நம்ம ராயப்பேட்டை மெலடி தியேட்டரில்
மட்டும் தான் பால்கனி டிக்கெட் விலையும், கிழே டிக்கெட்
விலையும் ஒன்று,ஆமாம் அம்பது ரூபாய் மட்டும் தான்....

சரி நல்ல விஷயம்தானே அதுக்கு என்ன என்று கேக்குறிங்களா??

டிக்கெட் கவுன்டரில் அவன் மேல கிழே என்று கூறுவதில்லை.
நான் படத்துக்கு சென்றபோது ஒரு பேமிலி மேல வந்தார்கள்

அவர்களை திரும்ப கிழே போக சொன்னார்.அதே போல் பல
பேர் தெரியாமல் வந்து திரும்பவும் திட்டி கொண்டே கிழே
சென்றார்கள்.

ஒன்னு மேல பத்து ஏத்துங்க,இல்ல கிழே பத்தை எறுக்குங்க.

******************************

இது போன்று அதி முக்கிய நாட்டு நடப்பு செய்திகள் அனைவரையும்
அடைய ஒட்டு போடுங்கள்.

உங்கள்
ஜெட்லி சரண்.

7 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

//அவர்களை திரும்ப கிழே போக சொன்னார்.அதே போல் பல
பேர் தெரியாமல் வந்து திரும்பவும் திட்டி கொண்டே கிழே
சென்றார்கள்.//

ஏன் எல்லாம் ஒரே விலை டிக்கட் தானே? அப்படி இல்லாட்டி மேல ஏதும் கசமுசா நடக்குமோ?


//சரி உடுங்க....யாரவது சில்லரை அதிகம் இருந்தா எனக்கு
போன் பண்ணுங்க....//

என்கிட்ட இருக்கு ஆனால் கள்ள நாணயம் பரவாயில்லையா?

Menaga Sathia said...

நாட்டு நடப்பு செய்தி நல்லாயிருக்கு ஜெட்லி.அதுவும் அந்த சில்லரை விஷயம் சரியா சொன்னிங்க.ஒட்டும் போட்டாச்சு.

தினேஷ் said...

அதி முக்கிய நாட்டு நடப்பு செய்திகள்

இராகவன் நைஜிரியா said...

நீங்கள் கேட்டு கொண்டதற்கு இண்ங்க, நான் தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

நாட்டு மேல உங்களுக்கு இருக்குற அக்கரைய பார்த்து ரொம்ப பொறாமையா இருக்கு ஜெட்லி சரண்

ஜெட்லி... said...

@ யோ

கசமுசா கிழ கூட நடக்கும் யோ....


@மேனகா

நன்றி அக்கா

@சூரியன்

கண்டிப்பா

@ராகவன்

ரொம்ப நன்றி சார்

@ வசந்த்

ஹி ஹி ... நன்றி வஸந்த்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தியாவிலேயே நம்ம ராயப்பேட்டை மெலடி தியேட்டரில்
மட்டும் தான் பால்கனி டிக்கெட் விலையும், கிழே டிக்கெட்
விலையும் ஒன்று,ஆமாம் அம்பது ரூபாய் மட்டும் தான்....//

ரிசீ ஸ்ட்ரீட் காசினோ தியேட்டரில் கூட பால்கனி டிக்கெட் விலையும், கிழே டிக்கெட்
விலையும் ஒன்றுதான் நண்பா.