Saturday, September 19, 2009

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்:

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி




மலை மலை வெற்றிப்படத்தின் அடுத்த படைப்பு மாஞ்சாவேலு.
இந்த படத்திற்கும் அருண் விஜயின் மாமா தான் தயாரிப்பாளர்.
அதே மலை மலை கூட்டணி ஒருவர் கூட மாறவில்லை.
என்ன மலை மலை படத்துல அருண் விஜய் மீசையை
முறுக்கி விட்டார் இதுல இறக்கி விட்டுருக்கார் நம்ம சிங்கம்
சூர்யா மாதிரி.ஒரு ஸ்டில்இல் அருண் விஜய் அவர்கள் காஸ்
சிலிண்டர் ஒன்றை தூக்கி அடிப்பதை போல் பார்த்து மிரண்டு
விட்டேன்.....

ஆமா... அது காலி காஸ் சிலிண்டர் தானே அருண்....??

***************************************
செய்தி:

ஜீவா ஒரே நாளில் சிங்கம் புலி படத்துக்காக ரெண்டு வேடத்தில்
நடித்தார்.

இது என்ன பிச்சாத்து மேட்டர் எங்க தளபதி டாக்டர் விஜய்
அவர்கள் மூன்று வேடத்தில் ஒரு மணி நேரத்தில் நடித்து
கொடுத்து இருப்பார்.

வழக்கம் போல் ஒரு விஜய், தலையை களைத்து வேறு கலர்
சொக்க போட்டா.. தம்பி விஜய், தலையில் லேசாக வெள்ளை
பெயிண்ட் தடவி வாய்க்குள் பஞ்சு வைத்தால்.. அப்பா விஜய்.

*********************************************************

ஒரு ஜூஸ்க்கடையில் டீ குடிப்பவனக்கு தர மரியாதை கூட
லெமன் ஜூஸ் குடிப்பவனக்கு கிடைப்பதில்லை. நீங்க நேரிய
வாட்டி பார்த்துருக்கலாம் நாம லெமன் ஜூஸ் முதலில்
ஆர்டர் செய்வோம் ஆனால் நமக்கு பின்னால் வந்தவன்
திராட்சை ஜூஸ் ஆர்டர் செய்வான் ஆனால் முதலில் ஜூஸ்
போடுபவன் திராட்சை ஜூஸ் தான் போடுவான்.

இப்போ வேற ஒரு லெமன் ஆறு ரூபாயாம் இனிமே லெமன்
ஜூஸ் இல்லன்னு அசால்ட்ட சொல்லிடுவாங்க.....

**********************************************
சந்தேகம்:

# சமீபத்தில் 9.9.09 அன்று இரவு ஒன்பது நிமிடங்கள் விளக்கை
அணைக்க சொன்னார்கள். நாம சில பேர் அணைத்து இருப்போம்.
ஏன் அந்த ஒரு நாள் மற்றும் இந்த நல்ல விஷயத்தை செய்ய
சொல்லி பயங்கர விளம்பரம்..... 9.9.09 என்ற நம்பர் பேன்சி
நம்பர் என்பதாலா????

*************************************************
சின்ன பசங்க கண்ணை மூடுங்க.....

சாரீயை இப்படி கூட கட்டலாமா? என்று என்னை யோசிக்க
வைத்தவர்கள்... உங்கள் பார்வைக்கும்.





அனைவருக்கும் பொது அறிவு வளர ஒட்டு போடுங்கள்...

உங்கள்
ஜெட்லி சரண்.

4 comments:

Menaga Sathia said...

எங்கிருந்து சுட்டீங்க இந்த போட்டோஸ்லாம்?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.கே..,

ப்ரியமுடன் வசந்த் said...

//வழக்கம் போல் ஒரு விஜய், தலையை களைத்து வேறு கலர்
சொக்க போட்டா.. தம்பி விஜய், தலையில் லேசாக வெள்ளை
பெயிண்ட் தடவி வாய்க்குள் பஞ்சு வைத்தால்.. அப்பா விஜய்.//

டும்

டம்

டமார்

டுமீல்

அடிவிழுகும்டி...பாத்து நடந்துக்க சிங்கத்தை தட்டி எழுப்பாத....

யோ வொய்ஸ் (யோகா) said...

நீங்க போட்டிருந்த படங்கள பார்க்கல தல..