Friday, December 16, 2011

மௌனகுரு.... பேசப்படுவாரா...?

மௌனகுரு.... பேசப்படுவாரா...?



இதுவரைக்கும் நான் அருள் நிதி படத்தை தியேட்டர்ல போய் டி.வி.டில கூட பார்த்தது இல்ல...ஆனா மௌனகுரு ட்ரைலர் நல்லா இருந்தது... அதுவும் இல்லாம மகேஷ் முத்துசாமி கேமரா...தமன் இசைனு தெரியும் ஆனா பாட்டை கேட்குற வாய்ப்பு கிடைக்கல... சரி நாம தியேட்டருக்கு போவோம்...

திருவான்மியூர் ஜெயந்தி தான் போனேன்...இதுக்கு முன்னாடி எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி நடிச்ச வாடா படத்தை பார்த்து பாதியில் ஓடிவந்தது தான், நான் கடைசியா ஜெயந்தில பார்த்த படம்னு வரலாறு சொல்லுது...!! சென்னை சிட்டில 25 ரூவாய்க்கு படம் பார்க்கறத நினைச்சா சந்தோசமா இருக்கு என்ன பண்றது அந்த தியேட்டருக்கு அவ்ளோ தான் வொர்த்....


மௌனகுரு...நாலு கெட்ட போலீஸ் ஒரு பணத்தை லம்பா விபத்து நடந்த காரில் இருந்து அடிக்கிறார்கள்...அதற்கு எவிடன்ஸ் இல்லைனு பார்த்தா இருக்கு...அருள் நிதி கல்லூரி படிக்கிறார்...சந்தர்ப்பவசத்தால் அந்த எவிடன்ஸ் விஷயத்தில் நாலு பேரிடமும் சிக்கி..என்கவுண்டர் என்று போய்...அப்படியே கீர் போட்டு படம் போகுது....

ரொம்ப நாள் ஆச்சு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் பார்த்து...அடுத்தது என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று நல்லா போச்சு மௌனகுரு... அருள்நிதி நல்லா தான் பண்ணி இருக்கார்..இனியா ஓகே...அவ்வளவா வேலை இல்லை... ஜான் விஜய் வில்லனாக வருகிறார்..மொக்கை காமெடிலாம் பண்ணாமா நல்லாவே பண்ணி இருக்கிறார்... முக்கியமா உமா ரியாஸ் பத்தி சொல்லணும் ஷி டன் ஏ குட் ஜாப்...!!

படத்தில சில பல விஷயங்கள் புதுசா இருந்தது... முக்கியமா சில ஷாட்ஸ் சூப்பர்ஆ இருந்தது... அதே மாதிரி பின்னணி இசை குறிப்பா அந்த ஓட்டேரி நரி அதாங்க ஆடுகளம் படத்துல தனுஷ் கூட வருவாரே... அவர் பூட்டு சாவியை மனநல காப்பகத்தில் திறக்கும் சீன் ..உண்மையிலே செம... படத்தில ரெண்டு பாட்டு தான் வருது அதனால பெரிசா ஒண்ணும் பிரச்சனை இல்லை...ஆனா இந்த தமன் அவர் ஸ்டைல் பாட்டை விட மாட்டாரு போலையே...!!

முக்கியமான விஷயம் வசனம்... ஷார்ப் வசனங்கள்...கடைசியில் எதிர்ப்பாராத ட்விஸ்ட்னு நல்லா தான் போச்சு... ஆஹோ ஓஹோ னு சொல்ல முடியலைனாலும் கண்டிப்பா நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்... தியேட்டர்ளையும் நல்ல ரெஸ்பான்ஸ்.. ...ஆங்கங்கே வசனங்களுக்கு கைத்தட்டுக்கள்.... !!

ஒஸ்தி பாத்து நாஸ்தி ஆனவங்களுக்கு மௌனகுரு
மருந்தாக இருக்க வாய்ப்பு இருக்கு....!!


மௌனகுரு - பேசப்படுவார்....!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# எங்க வீட்டு பக்கத்தில் தான் தியேட்டர் இருக்கு...11 மணிக்கு போனேன்..கேட் கூட திறக்கல..கூட்டம் சேர சேர தான் டிக்கெட் கொடுக்கவே ஆரம்பிச்சாங்க.... அந்த கூண்டு உள்ள போய் டிக்கெட் வாங்கி எவ்ளோ நாள் ஆச்சு...

# நான் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் நிறையவே இருந்தது...

# இன்டெர்வல் டைம் ல ஸ்க்ரீன் பக்கத்தில ஒரு வெள்ளை நாய் ஒடிச்சு...!
இந்தியாவிலே வளர்ப்பு பிராணியை அனுமதிக்கும் ஒரே தியேட்டர் எங்க
ஜெயந்தி தான்...! :))

# 12 to 1 கரன்ட் கட்னாலே ரெண்டு வாட்டி படம் கட் ஆச்சு...ஒரு தடவை
படம் தெரிஞ்சுது சவுண்ட் வரல...அடுத்த தடவ படம் தெரியல சவுண்ட்
வந்தது என்பது குறிப்பிடதக்கது....!!


ஜெட்லி...(சரவணா...)