Tuesday, April 20, 2010

பக்கத்துக்கு வீட்டு உளவாளியும் பொம்மையும்!!

SPY NEXT DOOR VS PHOONK 2


SPY NEXT DOOR :

நான் ஜாக்கிசானின் தீவிர ரசிகன் என்பது நீங்கள் அறிந்ததே.இந்த படத்தின் டி.வி.டி பல மாதங்கள் முன்னே வந்தாலும் தியேட்டரில் தான் பார்ப்பது என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்.இந்த படம் ரகசிய போலீஸ் என்று தமிழில் வெளிவந்துள்ளது.ஆனா தியேட்டரில் தான் கூட்டம் இல்ல ஒரு வேளை சரத்குமார்,நக்மா நடிச்ச ரகசிய போலீஸ் படம்னு நினைச்சிட்டாங்க போல என்று நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. உண்மையான காரணம் படத்தின் ரீலீஸ் பல தடவை அறிவிக்கப்பட்டு தள்ளி போனதே!!

சரி படத்துக்கு வருவோம், அருமையான கதைங்க...
அதாவது ஜாக்கி ஒரு உளவாளி ஆனால் பக்கத்துக்கு
வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு தெரியாது.ரெண்டு பேரும்
உயிருக்கு உயிராக லவ்வுகிறார்கள்.ஆனா பாருங்க அந்த
பொண்ணு கல்யாணம் பண்ண ஒரு கண்டிஷன் போடுது.
அது என்னனா ஜாக்கியை அந்த பொண்ணோட மூணு
பசங்களுக்கும் புடிக்குனும்னு அப்பதான் நம்ம கல்யாணம்
நடக்கும்னு சொல்லுது....மீதி வெள்ளித்திரையில் காணவும்!!


ஜாக்கி வழக்கம் போல் இல்லைனாலும் ஸ்டன்ட்இல் கலக்குகிறார்.
ஜாக்கி கிட்ட வேற என்ன எதிர்ப்பார்க்க போறோம் அவர் ஸ்மைல்
தான்,நன்றாக ரசிக்கலாம்.ஜாக்கியை சின்ன பசங்க படுத்தும் பாடு
செம!! அந்த சின்ன பொண்ணு ரொம்ப க்யுட்.ஜாக்கி ரசிகர்களுக்கு
இந்த படம் தலைவாழை விருந்து இல்லைனாலும் கையேந்தி
பவனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்!!

கூடிய விரைவில் ஜாக்கி ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது
karate kid !!

PHOONK 2: (பொம்மை 2 )



நான் PHOONK படத்தின் முதல் பார்ட் பார்க்கவில்லை ஒரு வேளை பார்த்து இருந்தால் இந்த பார்ட்டை பார்த்து இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். சுதீப்,இவரு கன்னட ஹீரோவாச்சே டான்ஸ் எல்லாம் நல்லா ஆடுவாரு U2 வில் பார்த்து இருக்கேன்.மற்றபடி இது ஒரு திகில் படம் என்று தான் பார்க்கசென்றேன்.பார்த்த பின் தான் தெரிந்தது ஒதுங்குவதற்கு ஏற்ற படம் என்று அதாவது வெயிலில் இருந்து ஒதுங்குவதற்கு என்று எடுத்து கொள்ளவேண்டும்.யுவர் ஆனர்!!

படத்தை பார்த்தால் முதல் பாதி முழுவதும் கொட்டாவியை தவிர வேறு ஆவி எதுவும் வர்ற மாதிரி தெரியலை.அதே ஆதிக்காலத்து தமிழ் படத்தில் வருவது போல் ஒற்றை பங்களா,புதுசா குடி வராங்க,கூட ஒரு வேலைக்காரி,அங்கே புதுசா வரும் வாட்ச்மேன்,அந்த பங்களா பக்கத்தில் வேறு வீடு எதுவும் இருக்காது காடு தான் இருக்கும்,அப்புறம் அந்த பங்களாவை மேலிருந்து கீழும் ஒரு சைடுஇல் இருந்து இன்னொரு சைட்லயும் அப்போ அப்போ மாத்தி மாத்தி காட்டறாங்க......முடியலல....

அப்போ படத்தில் பயமே இல்லையானு கேட்டா இருக்குனு தான் சொல்லணும் ரெண்டாவது பாதி ஓரளவுக்கு பயம் இருக்கு.ஆனா என்ன அதுவும் ஒரு template பேய் படம் காட்சிகள் தான்.எனக்கு நிறைய விஷயம் படத்தில் புரியல அந்த பொம்மைக்கு எப்படி உயிர் வருது?? அந்த அந்நியன் ரெமோ மாதிரி வர்ற பேய் பொம்பளை யாரு??


பயமே என்னை கண்டா பயப்படும்னு சொல்ல நான் மிர்ச்சி சிவா இல்லங்க. ஆனா என் பயமெல்லாம் phoonk 3 னு ஒரு படம் வந்துட கூடாதுனு தான். இதை பார்த்ததுக்கு 13 ஆம் நம்பர் வீடு படத்தை இன்னொரு தடவை பார்த்து இருக்கலாம்.கிளைமாக்ஸ் படத்தில் செம காமெடிங்க அந்த பேய் அங்கே அங்கே அப்போ அப்போ கண்ட கண்ட இடத்தில் அட் ஏ டைம் வந்து நிக்குமாம்.ஆனா மாடியில் இருந்து கிழே விழுந்து உடனே செத்துடுமாம். அப்புறம் இயக்குனர் பேர் போடுவாங்களாம் நாம வீட்டுக்கு போய்டுனுமாம்!!(பேய் படத்தில் லாஜிக் பார்த்த ஜெட்லி வாழ்க!!)

தயவு செய்து யாராவது இந்த படத்தின் இயக்குனர் மிலிந்த் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா அவர்களுக்கும் யாவரும் நலம் படத்தின் டி.வி.டி.யை அனுப்பி வைங்கப்பா...அதை பார்த்தாவது கொஞ்சம் வித்தியாசமா பேய் படம் எடுக்கறாங்கலான்னு பார்ப்போம். இன்னும் மூஞ்சியில் வெள்ளை பௌடரை அடித்து கொண்டு பேய் படம் பண்ணிருக்கோம் என்று எத்தனை காலம் தான் ஏமாத்துவாங்கனு தெரியலைங்க!!

இந்த படத்தை பார்த்து வந்த நம்ம நாட்டமை விஜயகுமார்
என்ன தீர்ப்பு சொல்றார்னு பார்ப்போம்:

"என்றா கண்ணு ஏதோ பேய் படம்னு சொன்னாங்க,ஆனா நான் பள்ளிக்கூடம் போகும் போது பார்த்த படம் மாதிரியில்ல இருக்குது.படத்தில் மியூசிக் போட்டவனை இந்த ஊரை விட்டே தள்ளி வைக்கிறேன்.அந்த பய பயம் காட்டுறேன்னு சொல்லி என் தூக்கத்தை கெடுத்துட்டான்.இனிமே யாரும் இவன்கூட இனிமே டாஸ்மாக் கடையில கட்டிங் போடகூடாது,வாட்டர் பாக்கெட் கொடுக்க கூடாது...இது தான் என்ற தீர்ப்பு... பசுபதி உட்றா வண்டியை!!"


தியேட்டர் நொறுக்ஸ்:

# வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான்ங்க படத்தை பார்த்தேன்...
இன்டெர்வெல்லில் வாடா படத்தின் ஸ்டில்லை மறுபடியும்
பார்க்க நேர்ந்தது.அதில் சுந்தர்.சி அவர்களின் ஸ்டில் என்னை
பார்த்து கண்டிப்பா முதல் நாள் படம் பார்க்க வாடா என்று
அழைப்பது போல் இருந்தது.



# வாடா படம் எப்போ ரீலீஸ் ஆகும் என்று கேட்டதுக்கு டிக்கெட்
கிழிப்பவரிடம் சரியான பதில் இல்லை.சரி வாடா படத்தை நீங்க
பார்ப்பீங்களா?? என்று கேட்டதுக்கு வீட்டில் தன்னை நம்பி தான்
தன் குடும்பம் இருக்கிறது என்று சொன்னார்.சரி அப்போ ஆபரேட்டர் பார்ப்பாரா??னு கேட்டேன்.அவரு படம் போட்டுட்டு தூங்க போய்டுவாரு என்றார்.அப்போ யார்தான் படம் பார்ப்பாங்கனு கேட்டேன்.அங்கே வேலை செய்யும் நாலு ஆயாக்கு மட்டுமே அந்த தைரியம் இருக்கு என்றார்.


மறுபடியும் சொல்றேன் வாடா போறோம்.அது எந்த வருஷம்
ஸாரி வாரம் ரீலீஸ் ஆனாலும் சரி.ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
வாடா படம் ரீலீஸ் தாமதமாவதால் யாரும் தீக்குளிக்கவோ
அல்லது எண்ணெய் தேய்த்து குளிக்கவோ வேண்டாம் என்று
கம்பெனி சார்பாக கேட்டு கொள்கிறோம்.


உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் ஓட்டும் பின்னூட்டமும்
தாறுமாறாக போடவும்!!


ஜெட்லி....

33 comments:

Paleo God said...

நாட்டாமை தீர்ப்பு சூப்பர்..!

:))

Paleo God said...

நாட்டாமை தீர்ப்பு சூப்பர்..!

:))

AkashSankar said...

முடியல... இப்பவே... கண்ண கட்டுது... பாவம் சுந்தர்.C விட்டிருங்க தலைவா...

யாசவி said...

நல்லா வந்திருக்கு

அதிலும் பூங்க் 2 விமர்சனத்தை விட உங்க கமெண்ட் சூப்பர்.

அடிச்சி ஆடுங்க

பனித்துளி சங்கர் said...

//////அதாவது ஜாக்கி ஒரு உளவாளி ஆனால் பக்கத்துக்கு
வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு தெரியாது.ரெண்டு பேரும்
உயிருக்கு உயிராக லவ்வுகிறார்கள்////////

ஏலே மக்கா ஆமா இந்த லவ்வுகிறார்கள் அப்படினா என்னல ????????

பனித்துளி சங்கர் said...

கதை சூப்பர் . இனி நானும் பார்த்துவிடுவேன்

அண்ணாமலையான் said...

சூப்பரப்பு

ஸ்ரீராம். said...

எனக்கும் கூட ஜாக்கி பிடிக்கும்.

Mohan said...

நீங்களாவது பரவாயில்லை PHOONK 1 பார்க்கததால இந்தப் படம் பார்த்து ஏமாந்தீங்க. நான் முதல் பாகத்தை பார்த்திருந்தும்,இந்தப் படத்தைப் பார்த்து மறுபடியும் ஏமாந்தேன்.

ILLUMINATI said...

ஜாக்கியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.அப்புறம்,அய்யா ஜெட்லி .... நீ சொன்னது நூத்துக்கு நூறு நெசம்யா ....தலைவர் சிரிப்பே சிரிப்புயா.... அதுல ஒரு குழந்தைத்தனம் தெரியுமே....அய்யோ....

Menaga Sathia said...

நாட்டாமை தீர்ப்பு சூப்பா!!

G.D.Aswin said...

nan oru migha periya jackie chan rasigna endru elarukum therindha vishayam..
http://www.orkut.co.in/Main#Profile?uid=7015867964624756189

indha padathukaga nan wait en uyirae pochu...........

poor distribution and tv la oru trailer kuda ila...adhan ipadi achu...joly ah pakalam..

review as usual arumai nanaba...

ஜெட்லி... said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║


நன்றி அண்ணே


@சங்கர்

அது எப்படிணே அவ்வளவு சீக்கரத்தில் விட முடியும்

ஜெட்லி... said...

@யாசவி

நன்றி...தங்கள் ஊக்கத்துக்கு..


@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

லவ்வுகிறார்கள் = லவ்வாங்கி

ஜெட்லி... said...

@அண்ணாமலையான்

@ஸ்ரீராம்.

நன்றி அண்ணே

ஜெட்லி... said...

@Mohan RK

உங்களுக்கு பெரிய மனசு தான்....


@ILLUMINATI

தல ஜாக்கி வாழ்க....

ஜெட்லி... said...

@Mrs.Menagasathia


@G.D.Aswin

நன்றி ....

Unknown said...

ஃபூங்க் 2க்கு குடுக்குற பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல போல..

ஜெட்லி- நீங்க பேசிஃபயர் படம் பாத்திருக்கீங்களா?

Chitra said...

"வாடா" படத்துக்கு spy வேலை பாக்குறது நீங்கதானா? என்னா பில்ட்-அப்......!

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் அருமை. அவசர போலீஸ்ன்னு பேரைப்பார்த்தவுடனே நானும் பழைய படம்தான்னு நினைத்தேன்.

ஜெட்லி... said...

@முகிலன்

//ஜெட்லி- நீங்க பேசிஃபயர் படம் பாத்திருக்கீங்களா?//



பேசிஃபயர் பார்த்து இருக்கேன்...வின் டீஸல் நடித்த படம் தானே.....

அதுவும் ஜாக்கியின் இந்த படமும் கிட்ட தட்ட ஒரே கதை தான்...

ஜெட்லி... said...

@Chitra

ரொம்ப ஓவர்ஆ இருக்கோ...

ஜெட்லி... said...

@அக்பர்

நன்றி அக்பர் முடிஞ்சா பாருங்க

ஸ்ரீராம். said...

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

your article in 'good blogs' section..!!

R.Gopi said...

சீக்கிரம் டெர்ரர் படம் “வாடா” பார்த்து விமர்சனம் எழுதுங்க...

CS. Mohan Kumar said...

நாட்டமை கலக்குறாரு

வாடா படத்தை விட மாட்டீங்குறீங்க ; பார்த்துட்டு கண்டிப்பா விமர்சனம் எழுதணும் ஆமா !!

ஜெட்லி... said...

@ஸ்ரீராம்.

தகவலுக்கு ரொம்ப நன்றி அண்ணே....
நீங்க சொன்னவுடன் தான் போய் பார்த்தேன்...

ஜெட்லி... said...

@R.Gopi

@மோகன் குமார்


கண்டிப்பா உங்களுக்காக போவேன் அண்ணே...
நீங்களும் வரீங்களா??

Raghu said...

அப்போ 'ஜாக்கி' ப‌ட‌ம் பாக்க‌லாம்னு 'ஜெட்லி' சொல்லிட்டார், பார்த்துட‌வேண்டிய‌துதான்..:)

Phoonk ப‌ட‌ம் பார்த்திருந்தீங்க‌ன்னா க‌ண்டிப்பா Phoonk 2க்கு போயிருக்க‌ மாட்டீங்க‌. Phoonk ரொம்ப‌ ந‌ம்பி போனேன், இடைவேளைக்கு முன்னாடி வ‌ர்ற‌ சீனைத்த‌விர‌ ப‌ட‌த்துல‌ சொல்லிக்க‌ற‌ மாதிரி ஒண்ணும் இல்ல‌. RGV, ச‌ன் பிக்ச‌ர்ஸ் ஃபார்முலாவை வெச்சு பட‌த்தை ஓட்டிட‌றார்

அன்புடன் அருணா said...

நாட்டாமை தீர்ப்பு சூப்பர்..!

hasan said...

hi jetli!
i dont like "SPY NEXT DOOR" because no stunts as expected....
you know the child star in the movie "karate kid" is the son of american super star WILL SMITH

ஜெட்லி... said...

@ ர‌கு

ஜாக்கி படம் கண்டிப்பா பாருங்க ரகு...
phoonk படத்துக்கு எவ்வளவோ பரவாயில்லை,

ஜெட்லி... said...

@அன்புடன் அருணா


நன்றி அருணா...


@ hasan

ஹ்ம்ம்....வில் ஸ்மித் பையனா...தகவலுக்கு நன்றி ஹசன்.