Sunday, March 22, 2009

ஜெயில் அனுபவங்கள்




என்னடா இவன் எப்போ ஜெயில்க்கு போனான்னு யோசிக்காதிங்க நண்பர்களே, நம்ம சென்ட்ரல் ஜெயில் இப்போ பொது மக்கள் பார்வையிட அனுமதிக்க படுகிறார்கள். நானும் போய் பார்த்தேன், ஆனா எதனலா நான் பார்க்க போனேன்னு எனக்கு தெரியல? நாம அங்க போய் என்ன பாக்க போறம்னு யோசிச்சேன் ...... ஆனால் என்னோட நண்பன் "டேய் அது பிரிட்டிஷ் காலத்துல கட்டின ஜெயில் மச்சான் போய் பாக்கலாம்னா" சரி போய் பாப்போம்ட என்று நாங்கள் இருவரும் சென்றோம்.












நானும் என் நண்பனும் மதிய வேளையில் சென்ட்ரல் ஜெயில் சென்றோம் , அங்கு பார்த்தால் மக்கள் வெள்ளம் என்னடா இவளோ பேர் வந்துருக்காங்க
என்று நான் நினைத்தேன். ஜெயில் உள்ளே போகும் வழியில் சிறு சிறு ரோட்டு கடைகள் இருக்கின்றன. முதலில் விசாரணை அறை எங்களை வரவேற்றுது ஆனா நம்ம பசங்க சும்மா ஜெயில் முழுவதும் கிறுக்கி வைத்து இருக்கிறார்கள் ஒரு வெள்ளை சுவரையும் காண முடியவில்லை. ஜெயில் முழவதும் குப்பை மேடு ஆக காட்சி தருகிருது. குப்பை போட்டது ஜெயில் முழவதும் கிறுக்கி வச்சுது எல்லாம் சுற்றி பார்க்க வந்தவர்கள் என்பதுதான் வேதனை.முதலில் ஒரு ஜெயில் பிளாக் பார்த்தோம் அப்பவே எனக்கு புரிஞ்சிடிச்சி என்னத்த நாம இங்க பார்க்க போறம்னு. ஏன் என்றால் நான் 'ஒரு மனிதன்(கைதி) எப்படி துன்ப அடைந்து இருப்பான்' என்று பார்க்க வந்தது போல் எனக்கு விளங்கியது.அப்புறம் நான் அப்படியே சும்மா நின்னு சுற்றி பார்த்ததோடு சரி போய் ஒரு ஒரு ஜெயில் அறைகளாக போக விரும்பவில்லை.


சரி என்னடா இவளோ சனம்னு பார்த்த அதுல கால் வாசி பேர் பீச்,பார்க் போகின்ற காதல் ஜோடிகளும், சரக்கு அடித்து மட்டை ஆகின்ற கேடிகளும் சென்ட்ரல் ஜெயில் வந்து இருக்கிறார்கள். ஆனால் முக்கா வாசி பேர் உண்மையாக சென்ட்ரல் ஜெயில் பார்க்க வந்து இருக்கிறார்கள். நீங்களும் டைம் கிடைச்ச போய் பாருங்க கண்டிப்பா உங்களகுள் பீலிங்க்ஸ் வரும்.

2 comments:

Anonymous said...

ஜெயில் வாழ்க்கை

Anonymous said...

சிறை வாழ்க்கை பாவம் சார்