Friday, May 7, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்!!!

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
நீண்ட நாட்கள் கழித்து கௌபாய் படம் என்றவுடன் தியேட்டருக்கு ஓடினேன்.அது வேறு அல்லாமல் சிம்புதேவன் அவர்களின் இயக்கம் வேறு...கண்டிப்பா சிரிக்கலாம் என்ற தைரியத்தில் போனேன்.....
சிம்பு ஏமாற்றவில்லை!!


கதைனு ஒண்ணும் பெருசா இல்லை ஆதிகால கௌபாய் கதைதான்.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கமும் கிட்டத்தட்ட இல்ல இது
ஒரு spoof மூவி தான் என்று சொல்ல வேண்டும்.சும்மா பிரிச்சு
மேய்ந்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.படம் ஆரம்பத்தில் காட்டப்படும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தில் "இங்கு குரல்வளை நெரிக்கப்படும்" என்ற வாசகமும்,நாளிதழின் பெயர் "தின ஒப்பாரி" , "பாஸ்மாக்- குடி குடியை ரேப் பண்ணும்" , "சப்போலோ மருத்துவமனை" , கோவில் ஐயர்க்கும் கௌபாய் தொப்பி என்று எல்லா இடத்திலும் அக்மார்க் சிம்புதேவன் குறும்புகள்.

சிங்கமாக லாரன்ஸ், அப்பாவியாகவும் வீரனாகவும் கேரக்டர் செய்வது இவருக்கு புதிதில்லை என்றாலும் ரசிக்கலாம். அதென்ன மூணு நாயகி இருந்த தான் நடிப்பேன் என்று எதுவும் கண்டிஷன் போடுவாரா மனுஷன் எங்கையோ மச்சம் இருக்கு...!! பத்மப்ரியா, ஏற்கனவே எனக்கு புடிக்காத நடிகையில்
இவரும் ஒருவர், படத்தின் கதாநாயகியும் இவர்தான்.சந்தியா எதுக்கு வருகிறார் எங்கே போகிறார் என்று அவுருக்கே வெளிச்சம்.

லட்சுமிராய், வெள்ளைக்காரி பாட்டில் நன்றாக திறமையை வெளிப்படித்தியுள்ளார் கண்டிப்பா நடிப்பு திறமையை சொல்லவில்லை என்பதை இங்கே சொல்லி கொள்ள விரும்பிகிறேன் யுவர் ஆனர்!!
சாய்குமார்... சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் பல காட்சிகளில்
எரிச்சல் படவைக்கிறார் மனுஷன். நாசர், இவர் தான் மெயின் வில்லன்...இவர் பெயர் கிழக்குகட்டை. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கனு தெரியிலப்பா....செம...


அப்புறம் கணக்கு வழக்கு இல்லாமல் நிறைய குணசித்திர நடிகர்கள்
படத்தில் இருக்கிறார்கள்.குறிப்பிட்டு சொல்லணும்னா மௌலி,
வி.எஸ்.ராகவன், இளவரசு,மனோரமா ......தியேட்டரில் மொத்தம்
மூணு பேரு இன்ட்ரோக்கு தான் செம கைத்தட்டு முதலில்
லட்சுமி ராய் அடுத்து எம்.எஸ்.பாஸ்கர் அப்புறம் நீண்ட நாள்
கழித்து நம்ம செந்தில் அவர்களுக்கு...

எம்.எஸ்.பாஸ்கர் கூட translater ஆக வரும் 'ஜாவா' மூர்த்தியாக அறை எண்ணில் வந்து ஊரையே விலைபேசுவாரே அவரே தான் செம....சான்ஸ்ஏ இல்லைங்க மனுஷன் பின்னி பெடல் எடுக்கிறார்...அதுவும் கடைசியில் புதையல் எடுக்க போகும்போது பாஸ்கர் கிழே தவறி விழும்போது அவரது செய்கை...சூப்பர்.


படத்தில் சூப்பர்ஆக இருக்குனு சில காட்சி தவிர எல்லாத்தையும்
சொல்லலாம்.படத்தில் பாடல்கள் பெரும் பின்னடைவு பாடலே
இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால்
பின்னணி இசையில் சபேஷ் முரளி அவர்கள் பிரித்து மேய்ந்து
இருக்கிறார்கள்.முத்துராஜ் அவர்களின் செட்டிங் மற்றும் அழகப்பன் அவர்களின் கேமரா என்று அனைத்தும் சூப்பர்....வச்ச குறி தப்பாது என்று அடைமொழியோடு படத்தை விளம்பரம்
செய்து இருந்தார்கள், அது சரிதான் வச்ச குறி தப்பவில்லை.
படத்தில் ரசிக்கும் முக்கியமா சிரிக்கும் படியா பல காட்சிகள் இருக்கிறது எல்லாத்தையும் சொல்ல விரும்பலை....குறிப்பா அணுஆயுத ஒப்பந்தம், லாரன்ஸ் நிழல் வேகம், புதையல் எடுக்க போகும் காட்சி என்று அனைத்து காட்சிகளும் உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் தியேட்டரில் போய் பாருங்க....பாடல்கள், ஓரிரு காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் போன்றவை
படத்துக்கு திருஷ்டி மாதிரி....


இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - சிரிக்க வைக்கும் தங்கம்!!தியேட்டர் நொறுக்ஸ்:

# அணுஆயுத ஒப்பந்தம் காட்சியில் நம்ம வி.எஸ்.ராகவன் சார்
ஒரு டவுட் கேப்பாரு பாருங்க...ஹையோ..இப்ப நினைச்சாலும்
சிரிப்பு வருதுங்க....அதுக்காகவே இன்னொரு தடவை படத்துக்கு போலாம்...தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்....


# ஒரு காட்சியில் லாரன்ஸ் பத்மப்ரியா வீட்டுக்கு விருந்துக்கு
போய் இருப்பார் அப்போது அங்கே ஒரு ஈசல் ஒன்று சவுண்ட்
கொடுத்து கொண்டே இருக்கும்..அதை லாரன்ஸ் சுட்டுவிடுவார்..
உடனே டெல்லி கணேஷ் "ஒரு உயிரை கொல்றது பாவம் இல்லையா?" என்று கேட்பார் அதுக்கு லாரன்ஸ் பதில் சொல்வாரு
பாருங்க அது தான் மரண மாஸ். இந்த காட்சிக்கு முன்னாடி
இருக்கை நபர் "நாராயண இந்த ஈ தொல்லை தாங்கலடா" என்று
கத்தினார்.

# இன்டெர்வெல்லில் வேறு ஒரு நபர் அவர் நண்பரிடம் "ஏன்டா விஜய் நடிச்சு இருந்தா சூப்பர்ஆ,நல்ல காமெடியா இருந்துருக்கும் இல்ல"என்று ஆதங்கத்தை வெளிப்படித்தினார்..... "நடிச்சா நல்லா தான் இருக்கும் ஆனா மாட்டாரே" என்று அவர் நண்பர் பதில் அளித்தார்.....


இந்த தகவல் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
ஓட்டுக்களை போட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது....


ஜெட்லி....(சரவணா....)


64 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//கதைனு ஒண்ணும் பெருசா இல்லை ஆதிகால கௌபாய் கதைதான்.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கமும் கிட்டத்தட்ட இல்ல இது
ஒரு spoof மூவி தான் என்று சொல்ல வேண்டும்///////


அப்படினா சிம்புதேவன்னுக்கு இந்த படத்தில் ஆப்புதானோ . பகிர்வுக்கு நன்றி . இன்னும் படம் பார்க்கவில்லை . பார்த்துவிட்டு மீண்டும் வருவேன்

மோகன் குமார் said...

சென்னை கோட்டை சினிமா சிங்கம் ஜெட்லி ..

வரதராஜலு .பூ said...

அப்போ பாக்கலாம்னு சொல்றிங்க.

சதீஸ் கண்ணன் said...

அப்ப, படத்த இன்றைக்கே பார்த்துவிட வேண்டியது தான்..

kanagu said...

vimarsanathuku nandri thalaiva... kandippa paakanum... seekram paakanum :)

MANO said...

தல,

உங்க விமர்சனத்துக்காகத்தான் WAITNG. இப்பவே ரிசர்வு பன்னிடர்றேன்.

மனோ

’மனவிழி’சத்ரியன் said...

சரி டிக்கெட் புக் பண்ணிடறேங்க.

முகிலன் said...

சென்னை வரும்போது தியேட்டர்லயே பாத்துடுறேன்..

Ram said...

ஜெட்லி, கைய கொடுங்க, செம..
செமைய கலக்கி இருக்கீங்க (வழக்கம் போல)
இனிமே படம் பாக்கறத யோசிக்குறதுக்கு முன்னாடி உங்க விமர்சனம் பாத்துட்டே போறேன் ங்க., நன்றி

ராம்

♠ ராஜு ♠ said...

ச்சும்மாவே கல்பாத்தி.அகோரம் எல்லா டிவிலயும் வூடு கட்டுவாரு.படம் ஹிட் வேற..!
பங்களாதான்!!
:‍)

ஈரோடு கதிர் said...

நல்ல விமர்சனம்

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paththudalaam

Siva Ranjan said...

அருமையான விமர்சனம்... தங்களின் நகைச்சுவைத் திறன் அருமை... :)

பிரபாகர் said...

ஆஹா! பார்த்துவிட வேண்டியதுதான்! நல்ல விமர்சனம் வழக்கமான உங்கள் துள்ளல் நடையில் சரவணா!...

பிரபாகர்...

Mrs.Menagasathia said...

இப்படி ஒரு படம் எப்போ ரிலிஸ் ஆச்சு ஜெட்லி????

S.Sudharshan said...

நல்ல விமர்சனம் .மரண கடி வசனங்களை கோட்டை விட்டு விட்டீர்களே ..

http://ethamil.blogspot.com/2010/05/blog-post_07.html

S.Sudharshan said...

கூடுதலாக சிம்புதேவன் படங்களில் நகைச்சுவை மட்டும் அல்ல . நகைச்சுவைக்குள் முத்து போல கருத்துகள் இருக்கும் . அரசியல் வசனங்கள் இலங்கை தமிழர் பிரச்சனை என அலசி விட்டார் . நீங்க அதை கவனிக்க மறந்திடீன்களோ தெரியேல்ல :D :)

பிடித்திருந்தா என்னுடைய பார்வையை வாசியுங்கள் .

http://ethamil.blogspot.com/2010/05/blog-post_07.html

இராமசாமி கண்ணண் said...

நல்ல பாஸிடிவ் விமர்சனம் ஜெட்லி. நன்றி.

Chitra said...

நீங்க நல்லா ரசித்து சிரித்திருப்பது தெரிகிறது.... கூல்! :-)

rajasurian said...

//"நடிச்சா நல்லா தான் இருக்கும் ஆனா மாட்டாரே"//

:))))))))))

bala said...

appa kandippa pathuda vandiyathuthan....

thank you jetli

நியோ said...

சத்தமில்லாமல் ஹாட்ரிக் அடித்திருக்கும் சிம்பு தேவனுக்கு வாழ்த்துக்கள்!

நல்ல படத்துக்கெல்லாம் விமர்சனம் செய்ய கூடாது ...

விமர்சனம் மாதிரி செய்யணும் ...

கலக்கிட்டீங்க ஜெட்லி!

ஜெட்லி said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

தலைவா...ஏதாவது ஒரு வரியை படிச்சுட்டு பேஸ்ட் பண்ணீட்டு
போய்டுவீங்களா....??


@ மோகன் குமார்

ரொம்ப புகழ்றீங்க அண்ணே....நன்றி...

ஜெட்லி said...

@ வரதராஜலு .பூ

கண்டிப்பா...தியேட்டர்ல பாருங்க....@ சதீஸ் கண்ணன்

பார்த்துட்டு சொல்லுங்கப்பா...

ஜெட்லி said...

@ kanagu

@MANO

@’மனவிழி’சத்ரியன்

@ முகிலன்

பார்த்துட்டு சொல்லுங்க... படம் எப்படி இருந்ததுனு...

ஜெட்லி said...

@ Ram

நன்றி ராம்....என்னை நம்பியதற்கு...


@♠ ராஜு ♠

அப்படி தான் நினைக்கிறேன்.....
இனிமே வச்ச குறி தப்பாது மாமே தான்.....

ஜெட்லி said...

@ஈரோடு கதிர்

நன்றி...


@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


ஹ்ம்...பார்த்துட்டு சொல்லுங்க....

ஜெட்லி said...

@ Siva Ranjan

நன்றி....

@பிரபாகர்

நன்றி அண்ணே....

ஜெட்லி said...

@ Mrs.Menagasathia

நல்ல கேள்வி....

ஜெட்லி said...

@ S.Sudharshan


நீங்கதான் எழுதி இருக்கீங்களே...அப்புறம் நான் எதுக்கு திரும்பவும் அதை எழுதணும்....அதுவும் இல்லாமால் பொங்கு தமிழ் சீன்
பற்றி எழுதலாமா என்று யோசித்தேன்.....உண்மையை சொன்னார்கள்
தியேட்டர் முழுவதும் சிரித்தோம்..

ஜெட்லி said...

@இராமசாமி கண்ணண்

நன்றி அண்ணே....

@Chitra

ஆமாம்...மிகவும் ரசித்து சிரித்தேன்..கிளைமாக்ஸ் தவிர...

ஜெட்லி said...

@ rajasurian

நன்றி....

@bala

பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்...

ஜெட்லி said...

@ நியோ

நன்றி நியோ,,,,,

hasan said...

பின்னணி இசையில் சபேஷ் முரளி அவர்கள் பிரித்து மேய்ந்து
இருக்கிறார்கள்....!!!!!!!!

all the BGM used in the movies were taken from english movies for example: when they go to search treasure you can here this bgm http://www.youtube.com/watch?v=YEf1jxUZaxU&feature=related

can you feel that?

தமிழ் உதயம் said...

படம் பார்க்க கிளம்பிட்டேன்.

சரவணகுமரன் said...

வகை தொகை இல்லாம பாராட்டி இருக்கீங்க...

அதிஷா said...

உங்க விமர்சனம் படிச்சுட்டு ஈவ்னீங் ஷோ போனேன். சி.தேவன் ஏமாற்றவில்லை.

DREAMER said...

சூப்பருங்க... மே மாசத்துல வர்ற மழை மாதிரி, நம்ம தமிழ் சினிமாவுல பல நாட்களுக்கு(அல்லது மாசத்துக்கு!?) பிறகு,
இந்தப் படத்துக்கு தொடர்ந்து பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் வந்துட்டிருக்கு... சிங்கத்தை கோட்டையில போய் பாத்துடவேண்டியதுதான்...

-
DREAMER

அக்பர் said...

உங்களுடைய விமர்சனங்கள் மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த படத்தையும் சேர்த்து.

வவ்வால் said...

Clint eastwood= kizhakku kattai nu nasseruku peyar karanama irukkum.antha kala "oli oviyar karnan" alavukku simbu devanal padam 'kaatti' irukka mudiyathunu ninaikiren!

ILLUMINATI said...

nalla vimarsanam jetli avargale....

ஜெட்லி said...

@ hasan

ஹோ...அப்படியா செய்தி....pirates of carribean மியூசிக் வந்துதா??
எந்த சீனில்??
ஆனா ஏதோ ஒண்ணு பாட்டுக்கு காப்பி அடிச்சா பின்னணி இசை
நல்லா இருக்கு....

ஜெட்லி said...

@ தமிழ் உதயம்

பார்த்துட்டு சொல்லுங்க அண்ணே...


@சரவணகுமரன்

ஓரளவுக்கு நல்ல பொழுதுபோக்கு படம்....
அதுக்கு தான் பாராட்டு....

ஜெட்லி said...

@ அதிஷா


நன்றி... நம்பி சென்றதுக்கு...@ DREAMER


கரெக்ட்ஆ சொன்னீங்க ஹரிஷ்.....
பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

ஜெட்லி said...

@அக்பர்

நன்றி

ஜெட்லி said...

@வவ்வால்


தலைவா....கிழக்கு கட்டைனா எனக்கு என்னனு தெரியும்...
அதுக்கு தான் எப்படி யோசிக்கிராங்கனு கேட்டு இருந்தேன்...

படம் பார்த்து உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளவும்....

ஜெட்லி said...

@ILLUMINATI

நன்றி...

VAAL PAIYYAN said...

அப்போ படம் நல்லா தான் இருக்கும்
VISIT MY
www.vaalpaiyyan.blogspot.com

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//தலைவா....கிழக்கு கட்டைனா எனக்கு என்னனு தெரியும்...
அதுக்கு தான் எப்படி யோசிக்கிராங்கனு கேட்டு இருந்தேன்...//

தங்களுக்கு தெரியாததுன்னு ஏதாவது இருக்கா அண்ணே. கலக்குங்க :)

dheva said...

படம் பார்த்த உணர்வை கொடுத்துடுச்சு...உங்க ..விமர்சனம் சூப்பர்!

ஸ்ரீராம். said...

வி.எஸ்.ராகவன் என்ன சொன்னார், பத்மப்ரியா வீட்டு விருந்தில் நடந்தது என்ன...சொல்லியிருக்கலாம் இல்லே...எப்போ பார்த்து எப்போ தெரிஞ்சுக்கறது...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இல்லுமி அவர்களின் "unforgiven" பட விமர்சனம் பாருங்க.. நான் அந்தப் படம் பார்த்தேன்.. அதில் வரும் கௌபாய் ஹீரோ பின்னி பெடல் எடுத்திருப்பார்... அவரின் உண்மையான பெயர் clint eastwood.. இப்பப் புரியுதா கிழக்கு கட்டை'ன்னா என்னன்னு...?

உங்க விமர்சனப் படி படம் பார்க்கலாம்...

ஜெட்லி said...

@ VAAL PAIYYAN

ப்ளாக் உலகத்தில் ஒரு வால்பையன் மட்டுமே...அது அருண்
அவர்கள் மட்டுமே....உங்கள் புனைபெயரை மாற்றினால் நல்லா
இருக்கும்.......

ஜெட்லி said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது அண்ணே.....
ஏன் இப்படி...??

ஜெட்லி said...

@ dheva

நன்றி தேவா...


@ ஸ்ரீராம்

அண்ணே அதெல்லாம் படத்தை தியேட்டரில் பார்த்து தெரிஞ்சுகுங்க...

ஜெட்லி said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி


தகவலுக்கு நன்றி பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி.....
எனக்கு படம் பார்க்கும் போதே தெரியும் என்று
மேலே உள்ளே கமெண்ட்இல் சொல்லிவிட்டேன்....

வவ்வால் said...

Thala, 'rajaleelai ragasiyam' arinthavar neer,ariyatha ragasiyam ethuna irukkuma? Kizhakku kattaina enakkum puriumnu kata nan potta bit sami athu!.(athu sari ..rajaleelai entha theaterla oduthu?)

வெற்றி said...

உங்க மேலதான் கொலவெறியில இருக்கேன்..நேர்ல பாக்கும்போது வச்சுக்குறேன்

ஜெட்லி said...

@வவ்வால்

எங்கே ஓடுதுனு தெரியில....பேப்பர்இல் கொஞ்ச நாளா விளம்பரம்
வந்த மாதிரி நினைவு இல்லை.....

ஜெட்லி said...

@ வெற்றி


கொலைவெறிக்கு நன்றி....ஏன்னு தெரியும்...


எனக்கு தெரிஞ்சு நிறைய பேரு படம் நல்லா இருக்குனு சொன்னாங்க.....!!
ப்ரீயா விடு...ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....


கோரிபாளையம் பார்த்துட்டு சொல்லுங்க....

Prasanna R said...

waited for your review only, nice

அண்ணாமலை..!! said...

சிம்புதேவனுக்குச் சொல்லனுமா என்ன..!!
படம் பூராம் அலும்பாதான் இருக்கும்!
பார்த்திடுவோம்!!!

அநன்யா மஹாதேவன் said...

முதல் முறையா உங்க தளத்துக்கு வந்திருக்கேன். ரொம்ப ரசிச்சேன் உங்க விமர்சனம். இந்தப்படத்தை ரெண்டு வாட்டி பார்த்தாச்சு.
//சாய்குமார்... சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் பல காட்சிகளில்
எரிச்சல் படவைக்கிறார் மனுஷன். நாசர், இவர் தான் மெயின் வில்லன்...இவர் பெயர் கிழக்குகட்டை// இதுக்கே நீங்க இந்தப்படத்தை ரெண்டாவது வாட்டி பார்க்கணும். கிழக்குக்கட்டை நாஸர் பேர். சாய்குமார் பேர் உலக்கை! என்னன்னா க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மாதிரி பேர் வைக்கிறாங்களாமா. அதான் கிழக்குக்கட்டை.
அந்த ஈசல் ஜோக்குக்கு நான் விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆல்ஸோ வீ.எஸ்.ராகவன். இன்ஃபாக்டு எப்படியும் அந்த டாப்பிக் வந்துடும்ன்னு நான் எதிர்ப்பார்த்தேன். அவர் நடந்து போகும்போதே நான் சிரிக்க ஆரம்பிச்சாச்சு. அதுக்கு மெடிக்கேஷன் வேற.. அதான் டாப்க்ளாஸ்.
நீங்க ரசிச்சதெல்லாம் நாங்களும் ரசிச்சோம். பாஸ்மார்க்,சொப்போலோ,ஹாட் போட்டுண்ட பூசாரி! என்ன ஐடியாக்கள்! அந்த ஜாவா மூர்த்தி! அல்டிமேட். எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்!

ஜெகநாதன் said...

ஜெட்லி.. படத்தை நல்லா தியேட்டர் சுவத்தில் காலை ஊன்றி ஜம்பி ஜம்பி படம் பாத்திருக்காரு. சும்மா 360 டிகிரி அளவில் சுத்தி சுத்தி விமர்சனம் பண்ணியிருக்காரு. வொய்?? இதையே பின்னூட்டமா ஜெட்லிக்குப் போட்டுடலாம் போல :))

As promised (?!) in Ananya's Buzz.