Monday, May 17, 2010

சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் :

சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் :

கேட்டாலே பதறவைக்கும் பாடல்கள்:சிங்கம் பாட்டு... அடடா இப்படி ஒரு பாட்டை கேட்டு எவ்ளோ நாளாச்சு.... ரேடியோவில் தான் முதல் தடவை கேட்டேன்.அதுக்கு அப்புறம் சிங்கம் பாட்டு போட்டவுடன் வேறு அலைவரிசைக்கு மாற்றிவிடுகிறேன்...பாட்டு எல்லாம் அவ்வளவு ஜூப்பரு...!!படம் வேற சன் பிக்சர்ஸ் வாங்கிருக்கு.... இருந்தாலும் எனக்கு ஹரி மேல நம்பிக்கை இருக்கு....நாங்கெல்லாம் இதுக்கு முன்னாடி சூர்யா நடிச்ச எம்.ஜி.ஆர் படத்தையே ரெண்டு தடவை பார்த்திருக்கோம் அதாங்க வேல் படம். ஹரி ஒரு நல்ல மசாலா கொடுப்பார் என நம்புவோம்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசைப்பற்றி வேறு ஒன்று சொல்வதற்கு இல்லை....!!

*****************************************


சந்தனக்காடு கௌதமன் அவர்கள் அடுத்து மகிழ்ச்சி என்று
புது படத்தை இயக்குகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த
செய்தி. திரு நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை தான்
படமாக்குகிறார் என்று தெரிந்துகொண்டேன். எனக்கு படம்
பார்க்கும் முன் நாவலை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
புத்தக கண்காட்சியில் கேட்டபோது அந்த நாவல் இப்போது ஸ்டாக்
இல்லை என்று சொல்லிவிட்டார்கள்....

திரு நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவல் தற்போது விற்பனையில் உள்ளதா?? எந்த பதிப்பகம் விலாசம் தெரிந்தால் சொல்லவும்.....அல்லது உங்களிடம் தலைமுறைகள் நாவல் இருந்தால் இரவல் கொடுங்கள்.... கண்டிப்பாக திருப்பி கொடுத்துடுவேன்......சென்னையில் இருந்தால் நலம்... மெயில் பண்ணுங்க போன் நம்பருடன் -
jetliidli@gmail.com

******************************************

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அரை டஜன் தமிழ் படங்கள்
வருகிறது. வெள்ளிக்கிழமை எந்த படம் போறதுனு தெரியல.
கரண் நடித்திருக்கும் கனகவேல் காக்க என் கவனத்தை ரெண்டு
விஷயத்தில் ஈர்த்தது. முதலில் பா.ராகவன் என்று பேப்பர் விளம்பரத்தில் படித்தேன்...நம்ம எழுத்தாளர் பா.ராகவன் சார் தான் வசனம் என்று நினைக்கிறேன், சரியா தப்பா என்று தெரியவில்லை..தெரிந்தவர்கள் ஊறுதிப்படுத்தவும். அடுத்தது தணிக்கை குழு இந்த படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள் என்று படித்தேன்........

iron man 2 வேற வருது...அது கண்டிப்பா போகணும்...அப்புறம்
மாஞ்சா வேலு சந்தானத்துக்காக போலாம்.... நான் இன்னும்
மலை மலை படமே பார்க்கலை...என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன் !!

************************************

சமீபத்தில் ஒரு பண்பலை அலைவரிசையில் சில பாடல்களை
கேட்க நேர்ந்தது...ஒண்ணு ஒண்ணும் சமுதாய கருத்துள்ள பாட்டுக்கள்.இந்த பாடல்கள் இவங்களுக்கு மட்டும் எங்கே இருந்து கிடைத்தது என்று தேடி கொண்டிரந்த போது டி.வி.யில் கோரிபாளையம் ட்ரைலர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த படத்தில் உள்ள பாடல்களில் சில வரிகள் உங்களுக்காக....

"ஆப்பக்காரி ஆப்பக்காரி அஜால் குஜால் ஆப்பக்காரி
மாட்டிக்கிட்ட மஜா கச்சேரி"....

வேற பாட்டு சேம் மூவி

"ஒட்ட ஒடசல் ஈயபித்தளைக்கு பேரிச்சம்பழம்
என் உசிரை பிழியிற பொண்ணு கலர் ஆரஞ்சு பழம்"


இந்த மாதிரி சமுதாய கருத்துள்ள பாடல்களை கேட்கும் போது உடம்பு தானா சிலிர்த்துக்குது.எப்படி இப்படியெல்லாம் பாட்டு எழுதுறாங்கனு தெரியல....யாரு எழுதுனாங்கன்னு சொல்ல விரும்பல.....அதுவும் பாட்டு புல்லா டபுள் மீனிங் தான்.என்ன சமுதாய கருத்தா?? என்று நீங்கள் நினைப்பது புரியாமல்
இல்லை ஆனா அது இல்லை,நான் என்ன சொல்ல வரேன்னா கூடிய விரைவில் நானும் பாடலாசிரியர் ஆக வாய்ப்பு இருக்கு என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாக சொல்லி கொள்ள விரும்புகிறேன், தொடர்ந்து இந்த மாதிரி பாடல்கள் வந்தால்.....!!

*********************************************

கில்மாவின் வைகாசி சிறப்பு தெளி(ந்த)வுரை :

நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பின் என் குரு கில்மானந்தா அவர்களின்
ஒரு அற்புத பொக்கிஷ பொருளுரை உங்கள் பார்வைக்கு...

"ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா
தெனம் ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா"


"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே....
சலுக்கு சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

பாடல் வரி இடம் பெற்ற படம் கிரி....குவாட்டர் கட்டிங் அடித்த பிறகு கில்மானந்தாவின் தெளிந்த உரை(தெளிவுரை) உங்கள் பார்வைக்கு.....

"ரெண்டுல ஒண்ண தொட வரியா அப்படினா யாரும் தப்பா
நினைக்கக்கூடாது....அதாவது நாம் எந்த ஒரு விஷயத்திலும்
ரெண்டு பக்கம் சாயாமல் ஒரே பக்கம் இருக்க வேண்டும்
என்று பொருள்..அதை தான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்கிறோம்."

"தினம் ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா - ரெண்டாவது வரியில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அவர்கள் விளக்கி உள்ளனர். அதாவது நம் அன்றாட வாழ்வில் எந்த ஒரு முடிவு எடுக்கவும் யோசிக்க கூடாது...ரெண்டில் ஒன்றை தினமும் தேர்ந்து எடு என்று அர்ஜுனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் மிக பெரிய பாடத்தை கற்று கொடுத்திருக்கிறாள் இந்த கன்னட பைங்குருவி குத்து ரம்யா...."


"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே...
சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

டுபுக்கு என்பதற்கு 'தொந்தரவு' என்று ஒரு அர்த்தம் இருக்கு என்றும் நம்ம தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் பதிந்து இருப்பதாக மூணு நாள் முன்னாடி கட்டிங் கோபால் எமக்கு தந்தி அடித்தார்... சலுக்குனா ஓவர்ஆ இல்லை பிகு இல்லை சீன் என்று எது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்....இந்த பாட்டை தினமும் காலை எழுந்தவுடன் வீட்டில் போடுங்கள்....நமது இளைய சமுதாயம் விளங்கிவிடும்.....!!ஹோ....கில்மா ஜே ரவ...!!

************************************************

இது போல் மேலும் நாட்டுக்கு பல அதிமுக்கிய விஷயங்களை
மக்களுக்கு பரப்ப ஓட்டு போடுங்கள்.....


ஜெட்லி....

34 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பையனுக்குள்ள எதோ ஒன்னு இருக்கு பாரேன்(தப்பா எடுதுக்காதீய)

பேநா மூடி said...

ஆகா..ஆகா.. கில்மானாந்தாவின் தெளிவான உரையை கேட்டு தன்யனானேன்..

அகல்விளக்கு said...

ஓம் கில்மானந்தாய நமக...

யாசவி said...

Just heard one time and seems that one song (unplugged) sounds nice.

கார்க்கி said...

வாழ்க நின் புகழ்.. வளர்க நின் பணி

♠ ராஜு ♠ said...

மலை மலை பாக்கலையா..?
தரமான கமர்ஷியல் படம் அது!

அதே மாதிரி,வரப் போற படங்கள்ல மாஞ்சா வேலு மட்டும்தான் சூப்பர் ஹிட் ஆகும்ன்றது என்னோட கணிப்பு.
வெங்கடேஷ்,பட்டுக்கோட்டை பிரபாகர் ரெண்டுபேருக்குமே கமர்ஷியல் ஃபார்முலா அத்துப்புடி.

சிங்கம். சூர்யா காமெடி பீஸாகப் போகும் வாய்ப்புகள் 75% இருக்கு.

King Viswa said...

//முதலில் பா.ராகவன் என்று பேப்பர் விளம்பரத்தில் படித்தேன்...நம்ம எழுத்தாளர் பா.ராகவன் சார் தான் வசனம் என்று நினைக்கிறேன், சரியா தப்பா என்று தெரியவில்லை..தெரிந்தவர்கள் ஊறுதிப்படுத்தவும்.//

ஆமாம், நம்ம எழுத்தாளர் தான்.

Chitra said...

ஜெட்லி சரவணா........ கருத்தாழம் மிக்க "தத்துவ" பாடல்களை இப்படியெல்லாம், "
"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே...
சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

சரியா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

S.Sudharshan said...

நல்ல தெளிவுரை .. அதிலும் ரெண்டிலை தான் என்னை தொட வறியா விளக்கம் சூபர்.....

ர‌கு said...

'க‌ன‌க‌வேல் காக்க‌'வா? விள‌ம்ப‌ர‌த்துல‌லாம் பில்ட‌ப் ப‌ய‌ங்க‌ர‌மாத்தான் இருக்கு, வ‌ழ‌க்க‌ம் போல‌ ப‌ட‌ம் பார்த்து எங்க‌ளை காப்பாத்துங்க‌ :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மகா ஜனங்களே

எல்லாரும் ஓடுங்க

ஜெட்லி கிழக்கு நோக்கித்தான் வருது!!

:))

அவ்வ்வ்வ்வ்வ்

D.R.Ashok said...

"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே...
சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு ஜெட்லி. நீல.பத்மநாபனின் 'தலைமுறைகள்' நாவல் உடுமலை.காமில் கிடைக்கும். அவசியம் வாங்கி வாசியுங்கள்.

VISA said...

பதிவ படிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம்....
கடந்த இரண்டு மாத காலமா உங்கள் பதிவின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.

ஜெட்லி பஞ்ச்!!!

முகிலன் said...

ஜெட்லி... ஜெட்லி... ஜெட்லி...

கார்த்திகைப் பாண்டியன் said...

iron man - 2

வேணாம் தம்பி.. தாங்க மாட்டே.. நொந்துடுவே.. (தலைவர் ஸ்டைலில் படிப்பா)

ஜெட்லி said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நிறைய இருக்கு....தொடரும்....


@ பேநா மூடி

அதானே வேணும்....சீக்கரம் வந்து ஆசிரமத்தில் சேருங்க பாஸ்...

ஜெட்லி said...

@ அகல்விளக்கு

உங்களுக்கு ப்ரீ பாஸ் ரெடி...


@ யாசவி

இருக்கலாம்......படத்தோடு கேட்கும் போது பார்ப்போம்

ஜெட்லி said...

@ கார்க்கி


நன்றி...

ஜெட்லி said...

@ ♠ ராஜு ♠

மாஞ்சவேலு பார்ப்பேன் என்று நினைக்கிறேன்....
சிங்கம்ல எனக்கு கூட கொஞ்சம் டவுட் இருக்கு...

ஜெட்லி said...

@ King Viswa


ஊறுதிப்படித்தியதுக்கு நன்றி....


@Chitra

சரிதான்..

ஜெட்லி said...

@S.Sudharshan


நன்றி...நீங்களும் அதை பின்பற்றுங்கள்....

@ ர‌கு

கனகவேல் காக்க.... பார்த்துட்டு சொல்றேன்...

ஜெட்லி said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║


ஏன்????


@ D.R.Ashok


நன்றி

ஜெட்லி said...

@ செ.சரவணக்குமார்

தகவலுக்கு நன்றி....

ஜெட்லி said...

@ VISA

நன்றி தலைவரே....


@முகிலன்

நன்றி முகிலன்

ஜெட்லி said...

@கார்த்திகைப் பாண்டியன்

அதுக்குள்ளே டி.வி.டி.ல பார்த்துடிங்களா ??

அக்பர் said...

வழக்கம்போலவே அருமையான பகிர்வு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கில்மானந்தா வாழ்க.

ILLUMINATI said...

சிங்கம்....
தெரிஞ்ச விஷயம் தான பாஸ்!!
அப்புறம் Iron man 2 நன்றாக இல்லை என்று கேள்விப்பட்டேன்.ஆனால் மொக்கை படங்களையும் விடமாட்டேன் என்று அடம் பிடிப்பது தானே உங்களது specialty... :)
அப்புறம்,கருத்துள்ள பாடல்கள் பற்றி,இவனுங்க அலும்பு என்னைக்கு அடங்குமோ?

ஜெகநாதன் said...

யம்மோ யம்மாடி..! ரிலீஸ் ஆன படங்களை தியேட்டருக்கே லாப்டாப் எடுத்திட்டு​போயி ஓபனிங் சாங் முடியறதுக்குள்ள விமர்சனப் பதிவு ​போட்டீங்க... தட்ஸ் ஓகே.

பட்.....

இன்னும் ட்ரைலரே ரிலீஸ் ஆகாத படத்துக்கும் விமர்சனமா? கடன் வாங்கித்தான் அவ்வ்வ்வ் ​போடணும் :)))

ஜெட்லி said...

@அக்பர்

@Starjan ( ஸ்டார்ஜன்

@ILLUMINATI

நன்றி....

ஜெட்லி said...

@ ஜெகநாதன்

ஹுஹம்.....ஒண்ணும் புரியலை.....
ஹோ கலாய்க்கிறீங்களா முன்னாடியே சொல்லிட்டு செய்ங்க....:))

புலவன் புலிகேசி said...

:))

Dinesh said...

இந்த பாடல் வரிகளி பார்க்கும் பொழுது "ஆனந்தம்" (இயக்கம் லிங்குசாமி) படத்தில் மாளிகை கடையில் வேலை செய்யும் அந்த குண்டு சிரிப்பு நடிகர் சொல்லும் கவிதையே பரவா இல்லைன்னு தோணுது.