Saturday, May 22, 2010

மாஞ்சாவேலு , கனகவேல் காக்க - இரு பார்வை.

மாஞ்சாவேலு


அருண் விஜய் ஏதோ ஸ்கை டைவிங் எல்லாம் கத்துக்கிட்டு
இருக்கார் என்று பேப்பரில் படித்தேன்.ஆனால் படத்தின்
முதல் காட்சியை பார்த்தவுடன் அது உறுதியானது. குருவி
படத்தில் விஜய் ரயிலை பிடிக்க பறந்த மாதிரி அருண் விஜய்யும்
பின்னி மில் கட்டிடத்தில் மாறி மாறி பறக்கிறார். ஹையோட
நாமாதான் வந்து சிக்கிடோமோ என்று யோசிக்கும் வேளையில்
படம் கலகலப்பாக நகர ஆரம்பிக்கிறது......

நூல் எப்படி இருக்கு :

கார்த்திக் போலீஸ் அதிகாரி அவரின் தம்பி அருண் விஜய்
ரெண்டு பேருக்கும் பொதுவான எதிரியாக வாகை சந்திரசேகர்
கார்த்திக்கை போட்டு தள்ளுகிறார் சந்திரசேகர். அருண் விஜய்
எப்படி பழி வாங்கினார் என்பது மட்டும் அல்ல கதை கூடவே
நிறைய ஐட்டம் இருக்கு. பல எதிர்ப்பார்த்த திருப்பங்களும் சில எதிர்ப்பாராத திருப்பங்களுடன் படம் வேகமாவே நகர்கிறது.

டான்ஸ், பைட் என்று அருண் விஜய் நல்லாவே செய்திருக்கிறார்...
பக்கா கமர்சியல் ஹீரோவாக இந்த படத்தில் வெற்றி பெற்றுரிக்கிறார்
என்றே சொல்ல வேண்டும். கதாநாயகிக்கு பெருசா சொல்ல ஒண்ணும் இல்லைனாலும் (படத்தில் நடிக்கிற வாய்ப்பை தான்ங்க சொன்னேன்!!) பாட்டுக்கு மட்டும் வந்து உதவி இருக்கிறார்.அவங்கக்கிட்ட ரொம்ப பிடிச்சதே ஷார்ப்பா இருக்கிற அந்த ரெண்டு...... கண்ணு தான்ங்க...!!


கார்த்திக் கிட்ட தட்ட இவர் தான் படம் முழுவதும் ஆட்சி செய்றார்.
இவ்ளோ நாள் எங்கையா போனான் இந்த மனுஷன் அப்படின்னு
கேட்க வச்சுருக்கார். உண்மையில் மறுபடியும் ரொம்ப நாள் கழிச்சு
கார்த்திக் கலகலப்பா வந்து போகிறார். அதுவும் அவர் அக்னி நட்சத்திரம் ராஜா ராஜாதி ராஜா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது செம....பிரபு கடைசியில் ரெண்டு சீன் வந்தாலும் நச்னு வந்திட்டு போறார்.அப்புறம் வில்லன்...வாகை சந்திரசேகர் ஏதாவது புதுசா பண்ணுவார்னு பார்த்தா அவர் இன்னும் 1980 வில்லன் மாதிரி தாங்க இருக்கிறார். சும்மா கிழட்டு சிங்கம் மாதிரி விக்க்கு டை அடித்து ஊறுமுறார் பொருமுறார் அவ்ளோதான்...இருந்தாலும் ரொம்ப நாள் கழிச்சு வில்லனா நடிச்சிருக்கிறார்... மன்னிச்சு விட்ருவோம்...

சந்தானம், வழக்கம் போல் நன்றாக தான் இருந்தது.அதே மலை
மலை கூட்டணி காமெடி இந்த தடவை கூட ஷகீலாவும்...
அதுவும் கடைசியில் வரும் நாடோடிகள் சம்போ சிவா சம்போ
காமெடி செம....மனோகரை அடுப்பாக யூஸ் பண்ணும் காமெடி
லக லக !!

ஒரு பக்கா மசாலா படத்தை அடிபிடிக்காமல் கிளறி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் காரம் ஓவர். எப்படி தான் முறைச்சி பேசினாலும் பாட்டை தவிர வேறு எதுவும் தேறவில்லை. உங்களுக்கு போர் அடிக்குதா பொழுது போகலைன்னா மாஞ்சாவேலு தாரளமா போலாம், என்டர்டைன்மென்ட் கியாரண்டி!! பைட் தான் கொஞ்சம் ஓவர்ஆ இருந்திச்சு.மற்றபடி லாஜிக் பார்ப்பவர்களுக்கும் அதிமேதாவிகளுக்கும் மாஞ்சாவேலு கையை அறுத்துவிடும்.மாஞ்சாவேலு - மசாலா டீலு.


தியேட்டர் நொறுக்ஸ்:

# சிக்ஸ் டிக்ரீஸ் இரவு காட்சி போயிருந்தேன்...பத்து மணிக்கு படம்
என்றார்கள் ஆனால் அந்த டைம் போடவில்லை.....போக போக
பார்த்தால் மஞ்சுளா, விஜயகுமார் , அப்புறம் மாணிக்கம் படத்தில
நடிச்சாங்களே அந்த அக்கா, ஸ்ரீகாந்த் என்று வந்து அமர்ந்தார்கள்...
அப்புறமும் படம் போடவில்லை சொன்ன டைம் படம் போடலைன்னு
கடுப்பா இருந்தது. பத்து நிமிடம் கழித்து பார்த்தால் படத்தின் ஹீரோ
வந்து கொண்டிருந்தார் கையில் சிறு கட்டுடன்.... வி.ஐ.பி.களுக்காக
படம் லேட் ஆக போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.


# தியேட்டரில் பாதி பேருக்கு மேல் பட தொடர்பு உடையவர்கள்
தான் வந்திருந்தார்கள். ஒரு அல்லக்கை கூட்டம் வந்து மொக்கை
சீனுக்கெல்லாம் விசில் அடித்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


# ஸ்ரீகாந்த் கிட்ட எனக்கு ஒரு கேள்வி கேட்கணும்னு ஆசையா
இருந்தது, சரி எதுக்கு வம்புனு கேட்கல...நான் கேட்க நினைச்சது
"உங்க படம் குற்றபிரிவை நீங்களாவது பார்த்தீங்களா??"...!!


# படம் முடித்து வண்டி எடுக்க வரும்போது அங்கே இருந்த
தியேட்டர் ஊழியர்கள் படம் எப்படி இருக்கு என்று கேட்டனர்..
"பார்க்கலாம்" என்றேன் நான். உடனே ஒரு ஊழியர் "நல்லா
இருக்குனு சொல்லுங்க சார் பாவம் அவரு" என்றார்....

மாஞ்சாவேலுவை கனகவேல் காப்பாத்திட்டார் ஆனா கனகவேல் காக்க படத்தை ???

*********************************

கனகவேல் காக்க

வெள்ளிக்கிழமை ஆறு படம் ரீலீஸ் ஆச்சு....நான் ஏன் சார் முதல்ல
இந்த படத்துக்கு போனேன்?? ரெண்டு காரணம் நான் கரண் படம்
தியேட்டரில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அடுத்தது பா.ராகவன்
அவர்களின் வசனம்.கரண் ஒரு அற்புதமான நடிகர்னு நமக்கு தெரியாதது அல்ல.
ஆனா கனகவேல் காக்க படத்தில் கொஞ்சம் ஓவர் பில்ட் அப்போடு
வந்து இருக்கிறார். ஹரிப்ரியா சூப்பர் கதாநாயகி, ரியாக்சன்னா
என்னவென்று கேட்கிறார். சொல்லி கொள்ளும் படி வேறு எதுவும்
அவரிடம் இல்லை.


அன்று இந்தியன் நேற்று ரமணா இன்று கனகவேல் காக்க என்று
நீங்கள் விளம்பரம் பார்த்து இருக்கலாம். கான்செப்ட் வேணும்னா
அந்த ஸ்டைலில் இருக்கலாம் ஆனா படம்...ஹ்ம்..சுத்தம்...
கரண் கோர்ட்டில் டவாலி ஆக இருக்கிறார் அங்கே தப்பும்
கிரிமினல்களை களை எடுக்கிறார். அதற்கு பிளாஷ்பேக் சொல்லுகிறார்....ஆனால் எதிலும் சுவாரசியம் தான் இல்லை.
இதான் அடுத்து நடக்க போகுதுனு நேத்து பிறந்த குழந்தை
கூட சொல்லிவிட கூடிய ஒரு அற்புதமான திரைக்கதை....

பா.ராகவன் அவர்களின் வசனம் சில இடங்களில் மட்டுமே
கவனிக்க வைக்கிறது. படத்தில் முதல் நூப்பது நிமிஷம் மரண
மொக்கை. அப்புறம் கொஞ்சம் போச்சு...திரும்பவும் இன்டெர்வல்
முடிந்து படம் ஸ்டார்ட் ஆனவுடன்....முடியல....


இவங்க சொல்ல வந்த மெசேஜ் நல்ல மெசேஜ் என்றாலும்
சொன்ன விதம் ஆஆவ்வ்வ்...கொட்டாவி தரும் விதம் காரணம்
அரத பழசான காட்சி அமைப்புகள்...கண்ட இடத்தில் பாட்டு...
சரி போதும்னு நினைக்கிறேன்....

அப்புறம் படத்தில் ஒரு வசனம் வரும்.....

காட்டுக்குள தாடி வச்சிக்கிட்டு செய்றது மட்டும் தவம் இல்ல
நாட்டுக்குள்ள நான் செய்யறதும் தவம் என்று கரண் சொல்வார்...

நான் ஒரு லைன் எக்ஸ்ட்ரா சேர்த்துக்க ஆசைப்படுறேன்....

தியேட்டருக்குள் இந்த படத்தை பார்ப்பதும் ஒரு மாபெரும் தவம் தான்......


கனகவேல் காக்க : பழனி மொட்டை.


படம் பார்க்க போறவங்களை கனகவேல் காக்க !!

இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய ஓட்டை போடவும்...ஜெட்லி...(சரவணா...)

நன்றி: indiaglitz

25 comments:

முகிலன் said...

படங்களை ரிலீஸ் ஆனவுடன் பாத்துட்டு சுடச்சுட விமர்சனம் எழுதும் ஜெட்லி செய்வது ஒரு தவம் தான்.. :)))

மாஞ்சாவேலு - பாக்கலாம்..

கனகவேல் காக்க - ஓடலாம்.. :))

சேட்டைக்காரன் said...

தகவலுக்கு நன்றி! ஷகீலாவுக்காகவேனும் ஒருவாட்டி ’மாஞ்சாவேலு’ பார்த்திருவோமில்லே? :-)

எறும்பு said...

குற்றபிரிவை நீங்களாவது பார்த்தீங்களா??"...!!

Expecting review...

எவ்வளவோ பண்றீங்க இத பண்ண மாடீங்களா??

Chitra said...

இப்போ ஜெட்லி சரவணாவை, preview ஷோக்கே கூப்பிட்டு விமர்சனம் எழுத சொல்றாங்க டோய்.........
VIP Jetli!!!

நாஞ்சில் பிரதாப் said...

//உடனே ஒரு ஊழியர் "நல்லா
இருக்குனு சொல்லுங்க சார் பாவம் அவரு" என்றார்....//

உண்மைதான் பாவம்...அருணும் எத்தனை தடவைதான் அவுட் ஆவாரு....

விமர்சனம் டாப்பு...

rsquared said...

naan nethe unga kitta irunthu review ethirparthen.... yemathittinga... but review as usual super... apdiye antha 6 relesayum review pannitinganna naanga polachukkuvom...

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

ஷார்ப்பான விமர்சனங்கள்..!

dheva said...

இனிமே படம் பார்க்க தேவையில்ல ஜெட்லி..உங்க விமர்சனங்களைப் படித்தால் போதும்னு தோணுது....சூப்பர்!

CINEMA GALLARY said...

ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot

http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_22.html

க‌ரிச‌ல்கார‌ன் said...

//"உங்க படம் குற்றபிரிவை நீங்களாவது பார்த்தீங்களா??"...!!//

அதான் நீங்க‌ இருக்கீங்க‌ள்ள

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//நேத்து பிறந்த குழந்தை
கூட சொல்லிவிட கூடிய ஒரு அற்புதமான திரைக்கதை.//

படம்தான் டெம்ப்ளேட்னா விமர்சனமும் அப்படியே இருக்கே!

என்ன கொ.ச.இ??

அக்பர் said...

அப்ப பார்த்துட வேண்டியதுதான்.

ILLUMINATI said...

//கதாநாயகிக்கு பெருசா சொல்ல ஒண்ணும் இல்லைனாலும் (படத்தில் நடிக்கிற வாய்ப்பை தான்ங்க சொன்னேன்!!)

அவங்கக்கிட்ட ரொம்ப பிடிச்சதே ஷார்ப்பா இருக்கிற அந்த ரெண்டு...... கண்ணு தான்ங்க...!!
//

ரைட்.ஜெட்லி இன் பார்ம்...
ரைட் தல,அப்பிடியே எல்லா படத்துக்கும் விமர்சனம் போட்டுடுங்க. :)

சரவணகுமரன் said...

அப்ப மாஞ்சா வேலு தான் நல்லா இருக்குதா?

சரவணகுமரன் said...

ரெண்டு படத்துக்கும் சேர்த்து விமர்சனம் போட்டாலும், இந்த முறை நீங்க லேட்டு!

நான் மதியம் ஒரு விமர்சனத்தையும், சாயந்தரம் ஒரு விமர்சனத்தையும் எதிர்ப்பார்த்தேன்.

பேநா மூடி said...

kutraa pirivu neengalaavathu paarunga........

வெற்றி said...

//கதாநாயகிக்கு பெருசா சொல்ல ஒண்ணும் இல்லைனாலும் (படத்தில் நடிக்கிற வாய்ப்பை தான்ங்க சொன்னேன்!!) //

கொஞ்சம் மாத்த ட்ரை பண்ணலாமே..உங்க விமர்சனங்களில் இதை நிறைய பயன்படுத்துறீங்க :)

ர‌கு said...

ஒரு நேய‌ர் விருப்ப‌ம் ஜெட்லி, 'கொல‌ கொல‌யா முந்திரிக்கா' எப்ப‌டியிருக்குன்னு சொல்லுங்க‌. க்ரேஸி மோக‌ன்ங்க‌ற‌தால‌ கொஞ்ச‌ம் ந‌ல்லாருக்கும்னு நினைக்கிறேன்

வவ்வால் said...

Karan oru arputhamana nadigara? Sutham! Unga rasanai avlo than pola. Karan nadicha "b grade sex" film parthu arputhamana nadigar sollitingalo?

Mokkai padam onnu vidama parpingalo?

ஜெட்லி said...

@ அனைவருக்கும்...

நன்றி....
குற்றபிரிவு மட்டுமில்ல வேற எந்த படத்துக்கும்
போற ஐடியா இல்லை என்பதை இங்கே தெரிவித்து
கொள்கிறேன்......


இனிமே சிங்கம் தான்.....

~~Romeo~~ said...

எச்சரிக்கைக்கு நன்றி .. ஹி ஹி ஹி

இராமசாமி கண்ணண் said...

அனேகமா கார்த்திக்குகாக மாஞ்சாவேலு பாக்கலாம்னு நெனைக்கிறேன்.

புலவன் புலிகேசி said...

அது இன்னாப்பா அல்லா படமும் ஊத்திக்குது இப்பல்லாம்...........

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

வஜ்ரா said...

//
இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய ஓட்டை போடவும்...
//


படங்கள் bore என்பதால் இது உங்கள் மொக்கையா ?

எங்கே "ஓட்டை" போடுவது ?