Friday, May 14, 2010

நான் அவள் அது......

நான் அவள் அது......!!


(டிஸ்கி : இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.....கதையை படிச்சுட்டு பயமா இருந்ததா இல்லை
மொக்கையா இருந்ததான்னு நீங்க தான் சொல்லணும்..)


________________________________நானும் எனது நண்பர்கள் டேவிட்,ராம்,ராஜா,சதீஷ் ஆகியோர்ஒரு மாதம் முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம்.சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை,அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு
புறமாக ரிசார்ட்டில் ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்தஇடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.


என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது, நான் எவ்வளவு தான் சரக்கு அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன். என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன் தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுதான் தூங்குவான். மீதி மூன்று நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.டேவிட் தவிர எங்கள் அனைவருக்கும் குடி பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான். முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்றான் சதீஷ் வேற இடம் சொல்றான். எங்களுக்குள் குழப்பம் அதனால் நான் ஒரு முடிவு எடுத்து, முதலில் நாம்சூசைட் பாயிண்ட் செல்வோம் என்றேன்.சூசைட் பாயிண்ட் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அங்கு நானும் நண்பர்களும் சென்று கம்பியின்அருகில் சும்மா சேட்டை, பிகர்களை நோட்டம் விட்டு எங்கள்பொழுதை களித்தோம்.ஒரு கட்டத்தில் ராஜா தன் செல்போன் கேமராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம். நான்
படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த வீடியோவை preview பார்க்கவில்லை,ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம்... அந்த படத்தில் என் நண்பர்களுக்கு பின்னால் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் பின்னாடி உள்ள சிறு மலையில் ஏறுவது தெரிந்தது. ஆனால் அந்த சிறுமி நேரில்
யார் கண்ணுக்கும் தெரியவில்லை.


பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம்,ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம். ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம். டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.


சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்

"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.


அவன் முகம் வெளிறி போய் இருந்தது. 'என்னடா' என்றேன், அதற்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று புலம்பி தள்ளினான்.


"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.


டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .

"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.

டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.


மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான்.


"அவன் போன போகட்டும் நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று
சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.


அடுத்த நாள் நாங்கள் டால்பின் நோஸ் மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம்.மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான்.அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம். அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,


அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து
"நேத்து காலையில வீடியோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.


எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த வீடியோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள்.


அந்த சிறுமி எங்களிடம்
'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள். நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர். நான் அந்த வீடியோவை அழித்து விட்டதாக கூறினேன் .


அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள்.


நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். ரிசார்ட்டில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு உளறாதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை.


அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து
"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.


"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்லை பாருங்க" என்றார்.நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.


அறையில் இருந்த அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.முற்றும்.


(இது ஒரு மீள் பதிவு கதை - சில மாற்றங்களுடன்)


ஜெட்லி....(சரவணா...)


38 comments:

வெற்றி said...

அண்ணே ! ரூம்ல தனியா இருக்குற பையனை இப்புடியா பயமுறுத்துவீங்க..நானே ஆவி,பேய் அதெல்லாம் புருடான்னு எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டு இருக்குறப்ப 'ஆவி உண்மையாவே இருக்கு'ன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்..

உண்மைய சொல்லுங்க..இதுல ஆவி வர்ற பார்ட் மட்டும் கற்பனை தான?

Ram said...

நல்ல கெளப்புறீங்க பீதிய ... சரி அப்புறம் என்ன ஆச்சு., அத சொல்லுங்க

S.Sudharshan said...

நல்லா கிளபிறீங்கையா பீதிய .. ஏன் இந்த வெறி .. ஏன் ? அப்புறம் .

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மப்புல ஒரு சின்னப்பொன்னுக்கு முடிய வெட்டிட்டு லொள்ளப் பாரு!

:)

MANO said...

BOSS,

சத்தியமா சொல்லுங்க..

இது உன்மையா இல்லை பொய்யா..?

கொடைக்கானல் நம்ம FAVOURITE SPOT.இனிமே அங்க போலாமா வேண்டாமான்னு யோசிக்கனும்.

Bala said...

அதெப்படி சொல்லி வச்சா மாதிரி எல்லோரும் பேய் கதைகளுக்கு குளிர் பிரதேசமா பாத்து செலக்ட் பண்றீங்க? ஏன் பேய்களுக்கு வெயில் ஒத்துக்காதா?

நல்ல கதை. நம்பும்படி இருந்தது : )

Subankan said...

இது உண்மையா, பொய்யா என்றுமட்டும் சொல்லிடுங்க தல

Priya said...

நண்பர்களோடு நல்லாதான் என்ஜாய் பண்ணி இருக்கிங்க. பேய் படம் பார்த்த ஃபீல் வந்துச்சி.

ஜெட்லி said...

@வெற்றி

//உண்மைய சொல்லுங்க..இதுல ஆவி வர்ற பார்ட் மட்டும் கற்பனை தான?
//


இல்லை...நிஜம் தான்...என் நண்பனின் தம்பி மற்றும் நண்பர்களுக்கு நடந்த அனுபவம் இது...

ஜெட்லி said...

@ Ram
@ S.Sudharshan

உண்மை கதை அதோட முடிஞ்சு போச்சு....
பசங்க எல்லாம் கிளம்பி சென்னை வந்து...ஜூரம் வந்து...
ஒரு மாசம் பீதியில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டனர்.

ஜெட்லி said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

அண்ணே....நான் அவன் இல்லை அண்ணே....
அப்புறம் இப்படி எல்லாம் பேசாதிங்க....
பேய் குத்தம் ஆகி போய்டும்!!

ஜெட்லி said...

@ MANO


உண்மை கதை தான்....
ஊருக்கு ஒதுக்கு புறமா ரூம் எடுக்காதிங்க....

ஜெட்லி said...

@ Bala

நல்ல கேள்வி...
சென்னையில் யாருக்கும் அனுபவம் இருந்தா
கேட்டு எழுதுறேன்....

ஜெட்லி said...

@ Subankan


உண்மை....நான் விசாரித்த வரையில் !!

ஜெட்லி said...

@ Priya


நான் இல்லைங்க...
சும்மா கதைக்காக எழுதினது....
நண்பனின் தம்பிக்கு நடந்த கதை இது....

Dinesh said...

Aiyo...Nalla irunduchu unga narration..I almost felt that i was there when i read this post..Nalla yeludirukeenga.Neenga paakaliya ?

Dinesh said...

Neenga oru pei padam yedukalam jetli..Kollywood la yenaku therinju yaar,yavarum nalam mattum thaan pei padam madri oru effect irunduchu.. Neenga yean idha oru saval ah yeduthu oru pei padathu kaana kathai ya uruvakka kudathu..

Cable Sankar said...

சரக்கடிச்சிட்டு எவளோ ஒருத்திய கூட்டிட்டு வந்து அவ அவளோட சவுரிய விட்டுட்டு போனதை பார்த்துட்டு பயந்துவந்துட்டு.. இங்க பேய் கதையா.. ரைட்டு..

DRACULA said...

yen inda kola veri sir

ganesh said...

கதை நல்லா இருந்தது...

குடித்ததால் கண்களில் உள்ள rods and cones கொஞ்சம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக எங்கோ படித்து இருக்கிறேன்....

இதில் rods நம் குறைந்த வெளிச்சத்தில் பார்க்க உதவுவது....

இதில் கொஞ்சம் பிரச்சினை இருந்தால் இந்த ஆவிகள் போன்ற பிம்பங்கள் தெரிய வாய்ப்பு இருக்கலாம் என்பது என் கருத்து...

மற்றபடி ஆவிகள் எல்லாம் இருகின்றது என்பதை நம்ப முடியவில்லை.....

In search of said...

நல்லா கதை சொல்லி இருக்கீங்க... இருண்டு டவுட்
௧) delete பண்ண file எத்தனயோ சாப்ட்வேர் போட்டு recovery பண்ண முடியும்குறது அந்த சின்ன பொண்ணுக்கு தெரியாம இருக்கலாம். உங்களுக்குமா தெரில? பேய் பயத்துல செய்யாம விட்டுருபிங்க.

௨) அந்த பொண்ணு உங்கள video delete பண்ண சொன்னப! நீங்க பொறுமையா அந்த வீடியோ க்ளிப பாத்து பேய் மலை மேல ஏறுது நாம தெரியாம கவர் பணிடோம்னு நீங்க நெனச்சிருக்க மாட்டிங்க. வீடியோ எடுக்கும் பொது அத நீங்க நோட் பன்னால. அபாரம் எபாடி அந்த பொண்ணு மலை மேல ஏறுறத கண்டு புடிச்சிங்க?

In search of said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

டர்ராய்ட்டேன்...

ஜெட்லி said...

@Dinesh

நன்றி தினேஷ்....
உங்க டவுட் நேத்து சாட்டிங் வந்த போதே தீர்ந்து இருக்கும்னு
நினைக்கிறேன்...

ஜெட்லி said...

@Cable Sankar


ரைட்.....உங்க கற்பனை எங்கையோ போகுது.....
நான் அவன் இல்லை...

ஜெட்லி said...

@DRACULA


நன்றி நண்பரே....

ஜெட்லி said...

@ganesh

பாஸ்...இதில் குடிக்காதவர் தான் பேயை முதலில் உணருவார்...

நானும் பேய் இருக்குனு சொல்லல...நண்பனின் தம்பிக்கு நடந்தது...
உண்மையான கதை....அவ்வளவுதான்....

ஜெட்லி said...

@ In search of


கமல் சொன்னது தான்....கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி...
பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்....

முதல் கேள்விக்கு உங்கள் விடை சரிதான்...
நண்பர் அந்த மெமரி கார்டு தர ரெடி தான் நான் தான் வேண்டாம்
என்று சொல்லி விட்டேன்......

ரெண்டாவது டவுட்.... கதைக்காக முன்னாடியே சொன்னேன்...
அவ்வளவு தான்....

ஜெட்லி said...

@ஸ்ரீராம்.


நன்றி...

In search of said...

இம்சை அரசன் stylil: இல்லை இல்லை நீங்கள் என்ன கூறினாலும் என் மனம் ஏற்க மாறுகிறது. கதைக்காக முன்னாடியே சொன்னேன்...
அவ்வளவு தான்.... என்றால் என்ன அர்த்தம்? பேய் மலை ஏறியதை எப்படி கண்டு பிடித்திர்கள். அல்லது இது ஒரு அருமையான கற்பனை கதை. ( எனக்கு பேய் கதைன ரொம்ப பிடிக்கும் அதனால் தான் இந்த கதைக்கு comment கொடுத்தேன் தவிர குற்றம் கண்டுபிடிக்க அல்ல! )

ஜெட்லி said...

@In search of


நீங்க சொல்றது கரெக்ட்தான்....
நமக்கு ஏற்படாத வரையில் அனைத்தும் கற்பனையே....


அதுவும் இல்லாம இந்த கதையில் நான் சம்பந்தப்படவில்லை.....
ஒரு வேளை நான் கதை சொன்னதில் தப்பு இருக்கலாம்...
குறிப்பா நீங்க சொன்ன அதே மலை ஏறும் வரியை இன்னொரு
நண்பரும் சுட்டி காட்டினார்.....நன்றி...

ர‌கு said...

இது க‌தைன்னு முத‌ல்லேயே சொல்லியிருக்க‌க்கூடாது ஜெட்லி...அப்போதான் இன்னும் கிர்ர்ர்ர்ர்ர்னு இருந்திருக்கும் ;)

In search of said...

சின்ன வயசுல கழுத்துல நிறைய தயத்தோட வளந்தவன் தான் நான். அதெல்லாம் பொய்னு புரிஞ்சதுக்கு அப்றம், உண்மைய கூட ( நீங்க சொல்றது உண்மைன்னு நீங்க நெனசிங்கான ) என்னால எதுக்க முடியல ஜெட்லி. உண்மை சம்பவத்துல தவறு இருக்காது, தவறு இருந்தா அது உண்மை சம்பவமா இருக்காது.

அகல்விளக்கு said...

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய....

ஜெட்லி said...

@ர‌கு

அடுத்த வாட்டி ட்ரை பண்றேன் ரகு...


@In search of

இந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் ஆகி போச்சி...
இது நான் ஒரு வருடம் முன்னாடி எழுதிய கதை.....
நீங்க கொடைக்கானல் போகும் போது சொல்லுங்க
அந்த ரிசார்ட் எங்கே இருக்குனு விசாரிச்சி சொல்றேன் பாஸ்...
நன்றி

ஜெட்லி said...

@ அகல்விளக்கு

அதானே நம்ம வேலையே...

R@V! ..:-) said...

nanba...ithu unmaya poiya nu nan research panna virumbala...ana neenga Kathaya sonna vitham super...antha Video va parkala nu sonnathu konjam nerudala irunthuchu...Kathai nu sonna apuram..athai samalikka oru line sethu iruntha ium nala irunthurukkum...!!!

manikandan sethu said...

எனக்கு ஒரு சந்தேகம் அந்த பேய் முதல்ல போஸ் குடுத்துட்டு பிறகு ஏன் அழிக்க சொல்லனும் அந்த பேயே செல் போனை உடைச்சி போட்டிருக்கலாமே