Monday, July 26, 2010

மேதை - ஒரு இசை பயணம்!!

மேதை - ஒரு இசை பயணம்!!



மேதை இசை கானம் இல்ல இசை வெள்ளம் இல்லை இசை சுனாமினு
கூட சொல்லலாம்...நம்ம தினா அவ்வளவு அருமையா மியூசிக் போட்டு
இருக்காரு...!!இந்த அளவுக்கு இந்த டைமில் இப்படி மியூசிக் போட நம்ம
எஸ்.ஏ.ராஜ்குமாரால் மட்டுமே முடியும் என்று நினைத்த போது...
என்னாலையும் முடியும் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.


மேதையா.... கொக்கா??

உள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம்,நீங்க நினைக்கிறதை கிழே நானே சொல்லிடுறேன்.....

" டேய் நீ மொக்கைனு தெரியும் ஆனா இந்த அளவுக்கு மொக்கையா
இருப்பேன்னு நினைக்கிலைடா....."
னு தப்பா நினைக்க கூடாது....

எந்திரனுக்கு ஒரே போட்டி மேதை தான்.

இப்போ சவால் விடுறேன்ங்க முடிஞ்சா ஷங்கர் எங்கள் மக்கள்
நாயகன் ராமராஜனின் மேதை படம் வரும் போது எந்திரன்
படத்தை ரீலீஸ் பண்ண சொல்லுங்க.... அப்புறம் தெரியும்
எங்கள் டவுசர் பாண்டி பவர்!!

ராமராஜனுக்கு சிறப்பு விருது:

'பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா' விருது :

எங்கள் அண்ணன் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தைரியமாக பேட்டி கொடுத்ததால்
அவருக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

(எனக்கும் ராமராஜனுக்கும் ஒரே ஒற்றுமை... நானும் ஹிந்து
பேப்பரில் படம் மட்டும் தான் பார்ப்பேன்!!)



மியூசிக் ஸ்டார்ட்ஸ்....


அன்னை ஒரு குழந்தை :

இந்த பாடலை பாடியவர் நம்ம ஜேசுதாஸ்... அன்னைக்கு இந்த பாட்டு சமர்ப்பணம். எனக்கு ஒரு டவுட் இருக்கு கடைசியில் கேட்குறேன்....


எப்போதும் எல்லாருக்கும் :


பாட்டு ஸ்டார்டிங்கே செம பீட்...எஸ்.பி.பி குரல் இந்த பாட்டுக்கு மிக பெரிய பலம். இந்த பாட்டை கேட்டாலே நாடி, நரம்பு , துரும்பு எல்லாமே ஆடிடும்னு நம்புறேன்....

சாம்பிள் வரி...

" புதுசாக தொறந்தாச்சு உனக்கு ஒரு பாதை
அதை போட்டு தந்தானே அவன் தான் மேதை.."


என் உயிர் தங்கங்களே :


இந்த பாடலை பாடியவர் உன்னி மேனன்...நல்ல கருத்துள்ள
சமுதாய பாடல். அனைவரும் கேட்க வேண்டிய பாடல்.


நிலவுக்கு பிறந்தவள் இவளோ :


ஹரிஷ் பாடியுள்ளார். டூயட் பாட்டு. இந்த கண் கொல்லா காட்சியை
பார்க்க இப்பவே என் கண்கள் துடிக்கிறது. தலைவர் ஏங்கே எல்லாம்
மோப்பம் புடிக்க போறாரோ....


தும்பிக்கை தொப்பை :


என்னையா கரக்காட்டகாரன் பாட்டை ரீமிக்ஸ் பண்ணிட்டாங்கல..
என்று யோசிக்கும் போதே....பாட்டு வேறு திசை நோக்கி போகிறது..
இந்த பாட்டை கேட்டாலே...வேறு ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...



இன்னும் ரெண்டு பாட்டு இருக்குங்க.....இதுக்கு மேல என்னால
முடியல... வேணும்னா நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கிங்க....
ஆனா ஒண்ணு இந்த பாட்டு ஆடியோ சி.டி. வாங்க கடைக்கு
போனா கடைக்காரன் ரியாக்சன் என்னவாக இருக்கும்னு நினைச்சு
பாருங்க... கடைக்காரர் வாங்குனா மூணு சி.டி.யில் முதல் சி.டி.யும்
கடைசி சி.டி.யும் வாங்குற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்கனு
மட்டும் சொல்ல முடியும்... சி.டி வாங்குனா மாலை மரியாதை
கூட பண்ணலாம் பண்ணுவாங்க... பீ கேர்புல்!! நான் இந்த சி.டி.யை
வாங்கனதா நினைச்சா அது உங்க தப்பு. ஆனா எப்போ மேதை
பாட்டு என் சிஸ்டம்இல் வந்ததோ அன்னைலியிருந்தே சிஸ்டம்
மக்கர் பண்ண ஆரம்பிச்சு...இன்னைக்கு நான் இணைய கடையில் இருந்து
மக்கள் நலன் கருதி போஸ்ட் பண்றேன்..என்பது குறிப்பிடதக்கது.





என் டவுட் இதுதான்ங்க இந்த பாட்டு எல்லாம் இருபது வருஷம் முன்னாடி
வர வேண்டியது...தெரியாம லேட் ரீலீஸ் பண்ணீட்டாங்க,,, இருந்தாலும் நாம
படத்துக்கு போறோம்...அது அம்பத்தூர்ல ரீலீஸ் ஆனாலும் சரி திருவள்ளூர்ல
ரீலீஸ் ஆனாலும் சரி...முதல் நாள் முதல் ஷோ போறோம்...!


***************************************


வாடா படம் மீட்பு போராட்ட குழுவின் முக்கிய அறிவிப்பு :

எங்கள் சூப்பர் பாக்கு அண்ணன் சுந்தர்.சி நடித்த வாடா படத்தை
முடக்க பல சக்திகள் முயன்று வருகின்றன. அந்த சக்திகளை
முறியடிக்க மந்தைவெளி மூத்திர சந்தில் கூடிய விரைவில் மாபெரும்
போராட்டம் நடக்க இருக்கிறது...அனைவரும் திறந்து சாரி திரண்டு வாரீர்,,,,!!

***********************************
எப்போதும் எல்லோருக்கும் நல்லதை செய்...
தப்பாம நன்மை வரும் நம்பிக்கை வை....!!


ராமராஜன் கல் உடைக்கிறார் (ராக்ஸ்).

ஏதோ ஒரு குறிப்பு:

அடுத்து சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும் என்ற இடுகை
போடலாம் என்று இருந்தேன்...சிஸ்டம் பணால் ஆனதால் முடியாது
போல.... முடிந்தவரை சீக்கரம் சரி பார்க்கிறேன்!!

இந்த இடுகையை நீங்க லைக் பண்ணா உங்கள் கருத்தையும்
வாக்கையும் போடுங்க....இப்போதைக்கு மீ எஸ்கேப்....


ஜெட்லி...(சரவணா...)

29 comments:

Porkodi (பொற்கொடி) said...

ஜெட்லி, நீங்க என்ன பண்ணுறீங்க முத நாள் முத ஷோ பாத்து அப்புடியே ஒரு வீடியோ எடுத்துக்குவீங்களாம்! அதை யூட்யூபிலோ இல்ல விசிடியிலோ போட்டு எனக்கு அனுப்பி வெப்பீங்களாம்! சரியா? :D

Unknown said...

எங்கள் அண்ணன் வருங்கால அமெரிக்க பிரதமர் மேதை ராமராஜனை கிண்டல் செய்யும் ஜெட்லி ஒழிக..

அப்புறம் நாளைக்கு மூத்திர சந்தில் நடக்கும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள இயலாது தாழ்ம்மையுடன் வேண்டி விரும்பி சொல்லிக் கொள்கிறேன்..
எஸ்கேப்பு.....

KUTTI said...

ஜெட்லி,

பதிவு படு கலக்கல் + காமெடி.

எந்திரனுக்கு சரியான போட்டி மேதை தான்.

மனோ

vasu balaji said...

என்னாச்சி செம மூட் போலயிருக்கே. 2 மொக்க படம் பார்த்தாதான் அடங்குவீரோ:)))

தமிழ் உதயம் said...

(எனக்கும் ராமராஜனுக்கும் ஒரே ஒற்றுமை... நானும் ஹிந்து
பேப்பரில் படம் மட்டும் தான் பார்ப்பேன்!!)


நானும் தான்.
தலைகீழாவா... நேராவா.

பின்னோக்கி said...

எனக்கென்னவோ படம் ஹிட் ஆகிடும்னு தான் நினைக்கிறேன்.

Chitra said...

ராமராஜனுக்கு சிறப்பு விருது:

'பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா' விருது :

எங்கள் அண்ணன் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தைரியமாக பேட்டி கொடுத்ததால்
அவருக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது.


......... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஜெட்லி..... முடியல.... சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு....சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.... சான்சே இல்லை..!

Anonymous said...

//இப்போ சவால் விடுறேன்ங்க முடிஞ்சா ஷங்கர் எங்கள் மக்கள்
நாயகன் ராமராஜனின் மேதை படம் வரும் போது எந்திரன்
படத்தை ரீலீஸ் பண்ண சொல்லுங்க.... அப்புறம் தெரியும்
எங்கள் டவுசர் பாண்டி பவர்!! //
ரைட்டு.. ஒரு முடிவோட தான் கெளம்பி இருக்கீங்க போல :)

Raghu said...

ஆனாலும் ஒரு ப‌ச்ச‌ ம‌ண்ணுக்கு இம்புட்டு தைரியம் ஆவாது :))

ப்ரியமுடன் வசந்த் said...

//" புதுசாக தொறந்தாச்சு உனக்கு ஒரு பாதை
அதை போட்டு தந்தானே அவன் தான் மேதை.."//

சத்தியமா இந்தவரி படிச்சப்போ எஸ்பிபி சிரிச்சு டேக் வாங்கியிருப்பார்ன்னு நினைக்கிறேன்...

Katz said...

இருந்தாலும் சென்பகமே பாட்ட ரீமேக் பண்ணி இருந்த நல்லாயிருக்கும் தலைவரே.

Dinesh said...

செம காமெடி போங்க ...

ராமராஜன் எப்பையோ காலாவதி ஆகலையா??

சிநேகிதன் அக்பர் said...

அப்போ பாட்டு நல்லா இல்லையா :(

போதைதர்மன் said...

//ராமராஜன் கல் உடைக்கிறார் (ராக்ஸ்).//

ha ha ha ha !!!

ஜெட்லி... said...

@ Porkodi (பொற்கொடி)

நீங்க சொன்ன மாதிரி பண்ணா நான் புழல்
ஜெயிலில் தான் இருக்கணும்....



@ கே.ஆர்.பி.செந்தில்

அமெரிக்கா பிரதமரா???
நடத்துங்க அண்ணே...

ஜெட்லி... said...

@ MANO


@வானம்பாடிகள்


நன்றி...மொக்கை படத்தை இன்னைக்கு நேத்தா பார்க்கிறேன்...

ஜெட்லி... said...

@தமிழ் உதயம்


எப்படி வாட்டமா இருக்கோ அப்படி அண்ணே....


@பின்னோக்கி


ஹி...ஹி...ரீலீஸ் ஆகட்டும் முதலில்...

ஜெட்லி... said...

@Chitra


நன்றி....


@ Balaji saravana


அப்படி எல்லாம் இல்லைங்கண்ண....

ஜெட்லி... said...

@ ர‌கு


என்னய்யா சொல்றீங்க???



@ப்ரியமுடன் வசந்த்


இருக்கலாம்....

ஜெட்லி... said...

@ வழிப்போக்கன்


அய்யோயோ....ரீமேக் பண்ணி இருந்தா கெடுத்து இருப்பாங்க
அண்ணே....

@Dinesh


படம் வரட்டும் அப்போ தெரியும் மாஸ்....

ஜெட்லி... said...

@அக்பர்

ஜேசுதாஸ் பாடல் அற்புதம்....
வேற எதுவும் தேறாது...


@psycho


nandri

மகேஷ் : ரசிகன் said...

ஏன்யா ஏன்.... ?

ஏன் இந்தக் கொலைவெறி?

DRACULA said...

eppadi how is it possible mudhiyala pa

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு நண்பரே . ஆனால் ஒன்று எனக்குத் தெரிந்து இன்றும் அதிகமானவர்களின் மனதில் நீங்காமல் இருக்கும் சிறந்த படத்தில் நடித்த அந்த மனிதர்தான் இவர் . யாருக்குத் தெரியும் நாளையே இந்த நிலை மாறிப்போகலாம் . பகிர்வுக்கு நன்றி .

R.Gopi said...

தல......

இருந்தாலும் ஒனக்கு நெம்ப தைரியம் தான்....

ஆயிரம் சொன்னாலும், நீ தான்யா தில்லு துர.....

ஏன், நீங்க மட்டும் தான் எழுதுவீயளோ! நாங்களும் ”மேதை”யை பத்தி எழுதி இருக்கோம்ல....

அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”
http://jokkiri.blogspot.com/2010/07/blog-post.html

சி.பி.செந்தில்குமார் said...

செம காமெடி நைனா

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Prasanna Ramachandran - PXR said...

yoww Jettu tickets reserve pannuyaa

deen_uk said...

(இப்போ சவால் விடுறேன்ங்க முடிஞ்சா ஷங்கர் எங்கள் மக்கள்
நாயகன் ராமராஜனின் மேதை படம் வரும் போது எந்திரன்
படத்தை ரீலீஸ் பண்ண சொல்லுங்க.... அப்புறம் தெரியும்
எங்கள் டவுசர் பாண்டி பவர்!!)
neenga pesaama unga perai lolluji nu vatchukalaam..!

namma varungaala america president ku bayanthuttu thaan enthiran audio release ivlo late aga athuvum malaysia la release panna poraanga..!!dowsar annan padam epdiyum oru varudam super duper hit aga odividum..!athanala enthiranai aduttha varudam release pannalaamaa nu rajini yosikkirathaa kelvi...!
en life la oru audio download panni aduttha 5 vathu nimisam delete pannina muthal padam endra perumai namma paal paandi padam thaan!