Wednesday, July 28, 2010

சினிமா பேசுவோம்!!!

சினிமா பேசுவோம்!!!

சும்மா அரட்டை அடிப்போம்....சினிமா பத்தி ஏதாவது
பேசுவோம்....


நமக்கு பொழுது போவனும் அதுக்காக தான் நாம படத்துக்கு போறோம், வெளியே சுத்த போறோம்...வேற என்னலாமோ பண்றோம். சில பேருக்கு சினிமானாலே அலர்ஜியா இருக்கலாம்...சில பேருக்கு வெளியே சுத்துருது அலர்ஜியா இருக்கலாம்...நாம அவங்களை பத்தி பேச வேணாம்,அவங்களுக்கு பிடிக்கலைனா நாம ஏன் போய் கட்டாய படுத்திக்கிட்டு... அதனால அவங்களை விட்டுருவோம்....!!


அதுக்காக சினிமா பார்க்கறவன் எல்லாம் முட்டாள்னு சொல்றாங்க
பாருங்க அவங்களை விட முடியாது. யாரோ ஒருத்தர் நம்மை
பார்த்து வாரம் ஆனா போது சினிமாவுக்கு போயிருவாண்ட என்று
சொன்னால் சில பேருக்கு கோபம் வரலாம். ஆனா எனக்கு வராது...
காரணம் ஒருத்தர் சொன்னது தான் " வாரம் ஆனா சினிமாவுக்கு
போனமா படத்தை என்ஜாய் பண்ணினோமா...நம்மாளா யாருக்கும்
எந்த தொந்தரவும் இல்ல...". ஆனா அவனும் படத்துக்கு போகாம
நம்மையும் நோண்டிக்கிட்டு அடுத்தவனையும் நோண்டிக்கிட்டு இருக்கறவங்களை என்ன சொல்றது...??!!


அதே மாதிரி படத்தை பற்றி கருத்து சொல்றது....என் நண்பன்
எந்த படத்தை பார்த்தாலும் பார்க்காத மாதிரி அந்த படத்தின்
கருத்தை கேட்பான்... உதராணமாக பையா படம் வந்தப்ப கேட்டான்...
"நான் அதை டைம்பாஸ் படம்...ஓகே" என்றேன். உடனே நண்பன்
"என்னடா கதையே இல்லை அதை போய் நல்லா இருக்குனு"
நக்கல் அடித்தான். உடனே நான் "அங்காடி தெரு பார்த்தியா"
என்று கேட்டேன். "இன்னும் இல்லை...அழுவாச்சி படமாமே அது"
என்றான் சிரித்து கொண்டே. "ஆமாண்டா.. கதை உள்ள படத்தை
போய் பார்க்காதீங்க....ஆனா பொழுது போற படத்தை பத்தி
சொன்னால் மட்டும் கிண்டல் பண்ணுங்க..." என்று கொஞ்சம்
சீரியஸ்ஆகவே சொன்னேன்.

நான் எனக்கு பிடிக்காத படங்களை பலருக்கோ சிலருக்கோ பிடித்து
இருந்தால் நான் அந்த பலர் சிலர் பற்றி விமர்சிப்பதில்லை.படத்தை பற்றி மட்டுமே பேசுவேன். உங்க டேஸ்ட் வேற என் டேஸ்ட் வேற... உங்களுக்கு பிடிச்சு இருந்தா சந்தோசம் தான் என்றும் எனக்கு ஏதாவது டவுட் இருந்தா கேட்டுப்பேன் அவ்வளவு தான். ஆனா ஒரு சிலர் தங்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றால் படத்தை பற்றி திட்டுவது மட்டும் அல்லாமல் படம் நல்லா இருக்கு என்று சொன்னவனையும் சேர்த்து திட்டுவார்கள் கலாய்ப்பார்கள். அதில் என்ன திருப்தி அவர்களுக்கு என்று
தெரியவில்லை....!!


சரி...நம்ம தமிழ் சினிமா எப்படி போகுது....ஆரோக்யமா போகுதா
இல்ல வீக்ஆ போகுதானுலாம் பார்க்க எனக்கு தெரியாது. இந்த
ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்லா இருக்கு சூப்பர்னு
சொல்ற மாதிரி சில படங்களை மட்டுமே சொல்ல முடியும்
என்பது மட்டுமே உண்மை. வேலுபிரபாகரின் காதல் கதைக்கு
முன் , பின் என்று தமிழ் சினிமாவை பார்த்தால் இப்போ

வர்ற படங்களில் அட்டு காட்சிகள் வைத்து விளம்பரம்
செய்து துட்டு பார்க்கிறார்கள். புதிதாக சாந்தி என்று ஏதோ
ஒரு அட்டு படம் வேற வர போது போல.... அதற்கு ஏற்ற
மாதிரி வூட்லாண்ட்ஸ், கோபிகிருஷ்ணா தியேட்டர்கள்
இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தருகின்றன. ஏற்கனவே
சொன்ன மாதிரி அவளின் உணர்ச்சிகள் என்று ஒரு அட்டு
படம் வருகிறது....!! (படத்தோட பேர் மட்டும் தான் நல்லா
இருக்கும்....)


முக்கியமா இவ்வளவு நேரம் மொக்கை போட்டதே இதுக்கு தான்... நேற்று பேப்பரில் வந்த செய்தி இது...

" சென்னை சினிமா தியேட்டரில் நடனமாடி ரகளை.....
படம் பார்க்க விடாமல் தொல்லை கொடுத்த 4 மாணவர்கள்
உள்பட 6 பேர் கைது"


இது எந்த தியேட்டர்ல நடந்ததுனு சொன்ன நம்ப மாட்டீங்க...
சத்யம் சினிமாஸ்இல் தான் இந்த சம்பவம் நடந்தது.
சத்யம் மாதிரி தியேட்டர்களில் போனாலே ஒரு ரேன்ஜ்...
விசில் அடிக்க தோணினா கூட அடிக்க யோசிப்போம்...
ஆனா இப்படி ஆறு பேரு தண்ணியை போட்டுட்டு நல்லா
கூத்து அடிச்சு இருக்காங்க...இதெல்லாம் எங்க ஏரியா
தியேட்டரில் சகஜம்ங்க.. ஆனா இப்ப எல்லாம் இந்த மாதிரி
டான்ஸ் ஆடி பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க....


சினிமா பார்க்கும் போது எப்படி கமெண்ட் வருதுனு நான்
சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பா ஒரு மொக்கை
படத்துக்கு கமெண்ட் மட்டுமே ஒரு சிறு இன்பம். பல நேரங்களில்
படத்தை விட வரும் கமெண்ட்கள் நன்றாக இருக்கும்.ஆனா
அதுவே நல்ல படத்துக்கு கமெண்ட் அடிக்கும் போது தான்
நமக்கு தொந்தரவு ஆயிடுது. துணை கமிஷ்னர் வாழ்க...!
அவர் தான் இந்த தொந்தரவு நடந்தப்ப படம் பார்த்துட்டு
இருந்தாராம். நல்ல வேளை அவர் முதல் நாள் கணபதிராமில்
சிங்கம் பார்க்க வரல, வந்து இருந்தார்னா இந்நேரம் பாதி பேர்
உள்ளே தான் இருந்து இருக்கணும்....!!


அடுத்து....இன்னைக்கு....

பட தயாரிப்பாளரிடம் 25 ஆயிரம் லஞ்சம்...
சென்னையில் சினிமா தணிக்கை அதிகாரி கைது..!!


நான் நினைச்சேன்ங்க....தணிக்கை குழுவில் ஏதோ உள்ளடி வேலை
நடக்குதுனு. எல்லாம் துரோகம் நடந்தது என்ன?? படத்தை
பத்தி தான். அந்த படத்துக்கு 'ஏ' தர சான்றிதழ் கொடுத்திருக்கும் போதே நினைச்சேன். ஒரு படத்தை ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி அதை பார்த்து மக்களுக்கு எது எல்லாம் தேவை, தேவையில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது...எவ்ளோ பெரிய வேலை இது.... அதை சிறப்ப செய்வாங்கனு பார்த்தா இங்கயும் லஞ்சமா.... மக்களே இதில் இருந்து என்ன கருத்து நாம கத்துக்கணும்னா....இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!


இந்த போஸ்ட் மொக்கையா, மரண மொக்கையா என்று
நீங்களே முடிவு செய்து...ஒரு முடிவுக்கு வாங்க....

ஜெட்லி...(சரவணா...)

23 comments:

MANO said...

NICE POST NANBA...

மனோ

VISA said...

Light mokkai thaan......

வெறும்பய said...

Nice Post Bro...

Sathya said...

dont feel for these waste guys jetli yu rock keep up the good work enjoy movies and share with us

டம்பி மேவீ said...

நன்றாக எழுதிருக்கீங்க, ஆனால் கொஞ்சம் மொக்கை கலந்திருந்தது. படிக்கும் பொழுது தெளிவாக தெரியுது

ஜெட்லி... said...

@ MANO

@வெறும்பய


நன்றி....

ஜெட்லி... said...

@ VISA

@டம்பி மேவீ


எனக்கும் படிக்கும் போது அந்த பீலிங் வந்தது....
அதான் கடைசியில் நானே போட்டுட்டேன்...
நன்றி... லைட்டா தான் மொக்கை என்றதற்கு... :))

ஜெட்லி... said...

@ Sathya


சத்யா...நான் எப்பவும் அதுக்கெல்லாம் பீல் பண்ணது
இல்ல.....அந்த மாதிரி இருக்காங்க....அவங்களுக்கு என்ன
தேவைனு தெரியலனு தான் கேட்டிருந்தேன்....
என் மொக்கை படம் பார்க்கும் பயணம் தொடரவே செய்யும்...!!
நன்றி

கண்ணா.. said...

//..இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!//

இந்த ஓரு கருத்துக்காகவே இதை மொக்கைன்னு சொல்ல முடியாது..:))

Riyas said...

//இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!//

அப்பிடியும் நடக்குதா.. ஐய்யயயோ

கானா பிரபா said...

;-))

பின்னோக்கி said...

உங்கள் உணர்வை மிக அழகாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

உங்களின் வலி எனக்கு புரிகிறது. சென்சார் அதிகாரி யை கைது செய்த செய்தியைப் பார்த்து மனம் ஆறுங்கள் :)

M.G.ரவிக்குமார்™..., said...
This comment has been removed by the author.
M.G.ரவிக்குமார்™..., said...

இது போன்ற சமுதாய முன்னேற்றக் கட்டுரைகளை அடிக்கடி எழுதுங்கள்!.......

M.G.ரவிக்குமார்™..., said...

இது போன்ற சமுதாய முன்னேற்றக் கட்டுரைகளை அடிக்கடி எழுதுங்கள்!.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!
///

rompathaan kusumpu thala unkalukku...

அக்பர் said...

எல்லாம் தில்லாலங்கடியாக இருக்கே :)

Chitra said...

இந்த போஸ்ட் மொக்கையா, மரண மொக்கையா என்று
நீங்களே முடிவு செய்து...ஒரு முடிவுக்கு வாங்க....


.....மொக்கையா? அறிவியல் பூர்வமாக - ஆதரத்துடன், ஆழமாக யோசித்து, சமூதாய அக்கறையுடன் எழுதப்பட்ட அருமையான பதிவு... :-)

இராமசாமி கண்ணண் said...

மீடியம் மொக்கதான :)

வவ்வால் said...

Jetli,

mokkai podurathu innum apprentice thaan, poga poga mokai vanthudum!

Censor officer kaithu la vera etho ulkuthu irukkum ninaikiren,

minister parithi ilavazhuthi son balaji hero aga nadikkum padam. Avare binamiya produce seyvathaga news.

Ippadipatta background irukka filmku lanjam ketka thuniya mattanga,

sila samayam vendatha officers ah pottu vanguvanga athu pola ethavathu irukkalam.

Ethavathu thuppariyum magazine news podum ,appo therinjudum.

ஜெட்லி... said...

@அனைவருக்கும்

நன்றி....

மீண்டும் வேற ஒரு நல்ல மொக்கைக்கு முயற்சி
செய்றேன்....

பாலா said...

தலைவரே சாந்திங்கற அந்த படத்துல நடிச்சிருக்கிற பாப்பாவோட அப்பாவித்தனமான முகத்துக்கே அந்த படம் பார்க்கலாம். சந்தேகம்னா யு டியுப்ல போய் பாருங்க

Shivaji Narayanan said...

correctaa sonneenga jet li...