அசல் வீச்சு!!
என்னுரை :
வெள்ளிக்கிழமை கொஞ்சம் வேலை இருந்ததால் அசல்
விமர்சனம் போடமுடியவில்லை.சரி வந்து பார்ப்பவர்கள்
ஏமாறாமல் இருக்க அசல் பத்தி படிக்க ஒரு போஸ்ட் போட்டேன்..
அதை ரசிச்சாலும்,பல பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்...
அதனால் அதுவே இனிமே கடைசியாக இருக்கும்.தொடர்ந்து
உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை......உங்களுக்கு புடிச்சு
இருந்தா கண்டிப்பா தமிழிஷ்இல் ஒட்டு அல்லது கமெண்ட்
போடுங்க.கமெண்ட் ஒரு பூஸ்ட் மாதிரி,அப்பத்தான் இன்னும்
பல சூர மொக்கை படங்களை பார்க்க தெம்பு கொடுக்கும்
என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இனிமே அசல்:
அசல் படத்தில் எனக்கு பிடிச்சதே அவங்க டீலிங் தான்,
அதாவது தியேட்டருக்கு வந்தா ரெண்டு மணிநேரத்தில்
வெளியே அனுப்பிடுவோம் என்ற அந்த டீலிங்
பிடிச்சு இருந்தது.இருந்தாலும் பாட்டு மற்றும் அஜித்
நடப்பதை கொஞ்சம் கட் செய்து இன்னும் இருபது நிமிஷம்
முன்னாடியே விட்டுருந்த ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.
அஜித் கிட்ட எனக்கு பிடிச்சதே அவரின் வெளிப்படையான
பேச்சு தான்.முந்தாநேத்து கூட முதலமைச்சர் பாராட்டு
விழாவில் அவர் "நடிகர்களை மிரட்டி விழாவுக்கு
அழைக்கிறார்கள்..." என்று தைரியமாக பேசினார்.
அது தான் அஜித்.ஆனால் அசலில் பேசாமல் நடித்தாலும்
அவ்வளவு ஈர்ப்பு இல்லை.பஞ்ச் இல்லாதது ஒரு பெரிய
சந்தோசம்.
கதையெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
ஆனா யூகி சேதுவிடம் இருந்து இப்படி ஒரு சுவாரசியம்
இல்லாத திரைக்கதையை எதிர்ப்பார்க்கவில்லை.யூகி சேது
ஒரு மாற்று சினிமாவுக்கு முயற்சி செய்திருப்பார் என்று
நினைத்தால்,இல்லை நான் ஒரு சினிமா encyclopedia மட்டும்
தான் என்று அசல் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் தல கார் சேசிங் சீனை விடல.நாங்க இதெல்லாம்
need for speed, burn out இலே பார்த்துடோம்னு யாராவது
சொல்லுங்க.டேய் ஜெட்லி ஏன்டா செத்த பாம்பை
போட்டு அடிக்கிறனு நீங்க நினைக்கிறது புரியுது.அசல்
முதல் பாதியில் போர் அடிக்காம போகுது ஆனா
ரெண்டாவது பாதியில்??
ஆஆவ்...அது ஒன்னு இல்லங்க கொட்டாவி!!அது பாட்டுக்கு
கணக்கு வழக்கு இல்லாம வந்துட்டே இருக்கு.யூகிசேது
காமெடி?? காமெடிதானே அது முடியலை சார்.அதுவும்
பிரான்ஸ்இல் யூகிக்கும் சுரேஷ்க்கும் நடக்கும் காட்சிகள்
செம மொக்கை.
பிரபு, அருமையான குணசித்திர நடிகராக பல படங்களில்
தன்னை வெளிப்படுத்தியவர், ஆனா அசலில் அசந்துட்டார்
போல.இன்டெர்வல்க்கு பிறகு பிரான்ஸ் வந்தவுடன் எங்கே
போனார் என்று தெரியவில்லை கடைசியில் கிளைமாக்ஸ்இல்
வருகிறார்...வந்தது மட்டும் இல்லாமல் பழையகால வசனத்தை
பேசி மேலும் மொக்கை போடுகிறார்.
(ஒரு வேளை பிரான்ஸ்ஸை சுத்தி பார்க்க போய் இருப்பாரோ??)
பாவனா கிட்ட சொல்றதுக்கு முக்கியமா ரெண்டு விஷயம்
இருக்கு. அட நீங்க தப்பா நினைக்காதிங்க நான் பாவனாவின்
தேத்து பல்லும் அவர் சிரிப்பையும் சொன்னேன்.
சமீரா ரெட்டி, பயங்கரமா வெளிப்படுத்தி இருக்காங்கனு
சொல்ல முடியாது ஆனா ஓரளவுக்கு வெளிப்படுத்தி
இருக்காங்க,நடிப்பை தான்.
மொத்தத்தில் சரண்,பரத்வாஜ்,யூகிசேது மூவரும் சேர்ந்து
அஜித்தை ஏமாற்றி விட்டார்கள்.அஜித் அவர்கள் ஒரு
ஸ்மைல் செஞ்சு இருந்தாக்கூட மனசுக்கு ஆறுதலா
இருந்துருக்கும் ஆனா அதுவும் இல்லை....
படத்தின் உச்சக்கட்ட காமெடியாக வருவது கிளைமாக்ஸ்.
இந்த கிளைமாக்ஸ் சீனை நான் ஏற்க்கனவே ஏதோ
விஜயகாந்த் படத்தில் பார்த்ததாக நினைவு.அதுவும்
கடைசியில் சுரேஷ் திருந்துவது செம....மொக்கை.
தியேட்டர் நொறுக்ஸ்:
# படம் ஆரம்பித்தவுடன் வந்த ஒரு ஜோடி முன்னாடி,கார்னர்
சீட் காலியாக இருப்பதெல்லாம் விட்டுவிட்டு என் பக்கத்தில்
உட்கார்ந்து படம் பார்த்தது....என்ன கொடுமை இது! எனக்கு
எந்த படத்தை பார்க்கறதுன்னு கொழம்பி போய்ட்டேன்.
அசல் vs பரோட்டா - ஒரு பார்வை
# என்னடா டைட்டில் வீச்சுன்னு போட்டு ஒன்னுமே
சொல்லலைனு நினைக்காதிங்க...எப்பவும் மாயாஜால்
போன வழக்கமா சாப்பிடுற ரேவதி ஹோட்டல்க்கு
போன மாஸ்டர் இருக்குற மாவுக்கு எல்லாம்
பரோட்டா போட்டுட்டார்.அப்புறம் எங்கே வீச்சு
சாப்பிடுறது அதனால ரெண்டு பரோட்டா மட்டும்
சாப்பிட்டேன்,சும்மா சொல்ல கூடாது அவுங்க கொடுத்த
குருமா அசல் படத்தை விட நல்லாயிருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜெட்லி பஞ்ச்:
அசல் - மனதில் ஒட்டாத ஹைடக் நாடகம்.
உங்கள்
ஜெட்லி....
நன்றி : indiaglitz
Monday, February 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
அப்படியா.
அப்ப படத்தை கண்டிப்பா பார்க்கணும் (வேற வழி)
பரிகாரம் ஓகே..:))
வரலாறு எவ்வளவு முக்கியமோ
அந்த அளவுக்கு வாடிக்கையாளர் முக்கியமில்லையோ.. ??::))
கவலை வேண்டாம் உங்கள் நண்பர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் (மொக்கைன்னாலும் தொடர்ந்து படம் பாக்கரதில்லை - அது மாதிரி :)
jetli இதுல உன்னோட நய்யாண்டி கம்மி.. ஏமி?
அஜித் பற்றி இட்லிவடை என்ன சொல்கிறார் என்று கொஞம் படித்து பாருங்கள்http://idlyvadai.blogspot.com/2010/02/blog-
அது மட்டுமில்ல "தல". இது ஒரு பழைய புராணம். அரைச்ச மாவு. அட்டு இப்புடி எது வேனா சொல்லலாம். மொத்தத்துல தண்ட செலவு..
@ அக்பர்
நிஜம்மாத்தான் சொல்றிங்களா??
Present sir..
@ ஷங்கர்
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே...
:-))
@ D.R.Ashok
அட நீங்க வேற டாக்டர்...சும்மா
உசுபேத்தி உடாதிங்க,,,,,எங்கே
ரொம்ப நாளா உங்க கவிதை
மாதிரியை காணோம்??
@புலவன் புலிகேசி
உங்க வலி புரியுது நண்பா....
@ எறும்பு
rite...
@ Anbu
நன்றி அன்பு...
ஒன்னும் தோனமாட்டெங்து ஜெட்லி :)
@ D.R.Ashok
ஒரு குவாட்டர் உள்ள தள்ளுங்க...
தன்னால வெளியே வந்து உழும்...
அசல் அசலா இருக்கா ,
தலப்போல வருமா ..
படம் பார்த்தாச்சு . நல்லாருக்கு
எனக்கும் அதே தான் தோணுச்சு... முதல் பாதி ஒ.கே.... ரெண்டாவது பாதிய முடிக்கணுமே-னு முடிச்சுட்டாங்க...
@Starjan ( ஸ்டார்ஜன் )
எந்த படம் நல்லா இருக்கு??
சமீரா குட்டி ஸாரி ரெட்டி படமா?
இல்லை அசல் படமா??
//படம் ஆரம்பித்தவுடன் வந்த ஒரு ஜோடி முன்னாடி,கார்னர்
சீட் காலியாக இருப்பதெல்லாம் விட்டுவிட்டு என் பக்கத்தில்
உட்கார்ந்து படம் பார்த்தது....என்ன கொடுமை இது! எனக்கு
எந்த படத்தை பார்க்கறதுன்னு கொழம்பி போய்ட்டேன்.// ha haa
\\என்ன கொடுமை இது! எனக்கு
எந்த படத்தை பார்க்கறதுன்னு கொழம்பி போய்ட்டேன்.//
உங்க பிரச்சனை புரியுது சகா. பட் ஒரே டிக்கெட்ல ரெண்டு படம் பார்த்துடிங்க ..
அப்போ அசல் மொத்தத்துல செம மொக்கை...தப்பித்தேன் சாமியோவ்வ்வ்வ்
@ kanagu
கரெக்ட் கனகு....
//ஒரே டிக்கெட்ல ரெண்டு படம் பார்த்துடிங்க ..
//
சரி சரி...சைலென்ஸ் ரோமியோ..
@ Mrs.Menagasathia
நன்றி...கரெக்ட்ஆ கண்டுபிடிச்சிட்டிங்க...
@ வஸந்த்
நன்றி....
நல்ல வேளை எங்க நல்ல இருக்குனு சொல்லிடுவீங்களோ நினைச்சேன்...அப்படியே கொஞ்சம் இதையும் பாருங்க arunwritez.blogspot.com
அசல் பட விமர்சனம் படிச்ச பிறகு, அஜித் மேலயும் உங்க மேலயும் அனுதாப அலை அடிச்சுது.
நான் ஒரு முடிவு எடுத்திட்டன் இனி படம் பார்த்த பிறகுதான் விமர்சனம் பார்க்கிற எண்டு ஒண்டு ஒரு மாதிரி மற்றது மட்ட மாதிரி எத்த நம்பி களத்தில இறங்கிற
கொஞ்சம் கடி குறைய இருக்கு உங்க விமர்சனத்தில படத்தில ரொம்ப கடியோ
சில பதிவர்களை நம்பி படம் பார்க்க வேண்டாம் என நினைத்திருந்தேன்..என்ன பண்றது..விதி 'வலி'யது..
ப்ரீயா டிக்கெட் கிடைச்சதுன்னு கிளம்பிட்டேன்..அப்புறம் தான் தெரிஞ்சது ஏன் ப்ரீயா கொடுத்தாங்கன்னு..
'ப்ரீயா டிக்கெட் கொடுக்குறப்பவே யோசிக்க வேணாமா கைப்புள்ள' :))
@ அருண்
அது எப்படி சொல்ல முடியும் அருண்....
@ சித்ரா
அனுதாபத்துக்கு நன்றி...என்ன பண்றது....
@V.A.S.SANGAR
அதான் சொன்னேன்ணே.. எதுக்கு செத்த
பாம்பை போய் அடிச்சுகிட்டு.....
@வெற்றி
ப்ரீயா விடு.....
neenga padam parthingala illaya ?jetli..
ம்ம் ஒரு காலத்தில் தீவிர அஜித் ரசிகரா இருந்தவரின் "அசல்" விமர்சனம்..
பாவனா பத்தி இன்னும் ரெண்டு வரி சொல்லியிருக்கலாம் :))
எதுக்கு indiaglitz-க்கு நன்றி சொல்லியிருக்கிங்கோ...,
வேட்டைகாரனை வேட்டை ஆடி முடிச்சாச்சு. இப்ப அசல முதல் இல்லாம பண்ண கிளம்பிட்டீங்களா?
ம்ம்... நடத்துங்க நடத்துங்க....
//Dinesh said...
neenga padam parthingala illaya ?jetli..
//
எங்க பார்க்க உட்டாங்க.....
@ மோகன் குமார்
என்ன பாவனா பக்கம் வந்துடீங்க...
தமன்னா கொச்சிக்க போவுது அண்ணே!!
@ பேநா மூடி
பாவனா படத்துக்கு ப்பா,....
@ ஆதி மனிதன்
நல்ல விதமாதானே எழுதி இருக்கேன்...
லூசா வுடு... லூசா வுடு... லூசா வுடு... ஜெட்டேடேடேய்ய்ய்ய்ய்...
இவய்ங்க எப்பவுமே இப்படித்தான் ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாய்ங்கன்னு போய்கிட்டே இருக்கணும் ராசா....
@துபாய் ராஜா
ரைட்...
ulaga athisayam ajaku padatha pathi thappa solli irukka. innoru visayam cm prgm la avan dhilla pesinannu solraye nadigarkala mertturanganu sonnahu ok. kaviri prblm la nanga enna panrathunnu sonnane athu thappillaya . tamilan kaasula thaana valuran avanukkaga eathuvum panna mattana. enna panrathu tamilan tharam kettu poittan.
Thala Kalakal
Post a Comment