Wednesday, February 10, 2010

முத்தமும் சடகோபன் ரமேஷும்.....

முத்தமும் சடகோபன் ரமேஷும்.....

(முன்னுரை: எங்க ப்ளாக்கில் இது வரைக்கும் சீரியஸ்
ஆன விஷயம் டிஸ்கஸ் பண்ணது இல்லன்னு ஒரு
குற்றச்சாட்டு இருந்தது.இந்த இடுகைக்கு பிறகு அது
இருக்காது என்று நினைக்கிறேன்.இது எங்களின்
இருநூறாவது பதிவு ஆனதில் பேரின்பம்....!!)
'பிரபல' கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் "பட்டாப்பட்டி"
என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகுராருங்க.
யாரா??அதாங்க ஜெயம் ரவி நடிச்ச சந்தோஷ் சுப்ரமணியன்
படத்தில எந்தவித முகபாவனையும் இல்லாமல் தேமே
என்று திரையில் தோன்றுவாரே அவரே தான்.

பட்டாப்பட்டி படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி கூட
உதட்டு முத்தம் ஒன்னு இருக்குதாம்.முதல்ல ரமேஷ்
ஒத்துக்கலையாம் ஆனாலும் டைரக்டர் கதையின்?அவசியத்தை
வலியுறுத்தி கேட்டுகிட்டதால நம்ம ரமேஷ் பெரிய மனசு
பண்ணி கிஸ் அடிக்க சம்மதிச்சிருக்காரு.ரொம்ப வெட்கப்பட்டு
நடிச்சதாலா 12 கிஸ்....ஸாரி டேக் வரை வாங்கினாராம்!!
இதுல என்ன கொடுமைன்னு பார்த்திங்கனா கிஸ்
அடிச்ச மறுநாளே ரமேஷுக்கு ஜூரம் வந்துருச்சாம்......அதை பற்றி விரிவான சீரியஸ்ஆன கட்டுரை தான் இது.
இந்த கட்டுரைக்கு அதிகப்பட்சம் ஏதாவது அங்கீகாரம்
ரத்தான பல்கலைகழகத்தில் இருந்து டாக்டர் பட்டம்
கொடுத்தால் சந்தோஷப்படுவேன்....

நமக்கு முத்தம் கொடுத்து முன் அனுபவம் இல்லாதுதால.
நம்ம ரமேஷ்க்கு உதவ சில நடிகர்களை கேட்போம்.....
இந்த அதி முக்கியமான விஷயத்தை பற்றி நம் நடிகர்கள்
என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்....

*********************************

முதலில் முத்த(மூத்த) நடிகர் கமல்:

என்னது 12 டேக் எடுத்தாரா?...முதலில் அவரை வந்து
என் முத்த பயிற்சி பட்டறையில் சேர சொல்லுங்கள்.
உங்களுக்கு ஒன்னு தெரியுமா முத்தம் கொடுப்பதனால்
தீவிரவாதம் குறையுது....அதனால எல்லோரும் முத்தம்
கொடுக்கணும் என்பதை வலியுறுத்துவோம்.....!!


எஸ்.ஜே.சூரியா:

என்னத்த சொல்ல சொல்றிங்க சடகோபன் ரமேஷ்
கிரிக்கெட் விளையாடமா படத்தில நடிக்கிறாரே,,,
DO U WANT TO ME TELL ABOUT THAT....

கிரிக்கெட்ளையும் சிக்ஸ் அடிக்காம படத்திலும்
ஒழுங்கா கிஸ் அடிக்காம இருக்குறாரே..
DO U WANT TO ME TELL ABOUT THAT....

பட்டாப்பட்டினு படம் பேரு வச்சிட்டு
கார்கோ பான்டில் ஸ்டில் கொடுக்குராரே....
DO U WANT TO ME TELL ABOUT THAT....

ஆ..எது எப்புடியோ முதல்ல அந்த நடிகையை
நம்ம படத்துக்கு புக் பண்ணனும்....ஆ!!


விஜயகாந்த்:

கிஸ்... ஆங்கிலம்,உருது,ஹிந்தி,ஸ்பானிஷில் எனக்கு
பிடிக்காத ஒரே வார்த்தை.
தமிழ்நாட்டுல ஒரு வருஷத்துக்கு 150 படம் ரீலீஸ்
ஆகுது...அதுல 50 படத்துல கிஸ் சீன் இருக்கு,
மிச்ச 100 படத்துல 20 படத்திலே பிட் சீனே இருக்கு ஆங்....
அந்த பிட் சீனை இன்டெர்வல்க்கு முன்னாடி பத்து
தியேட்டர்ல போடுறாங்க..இன்டெர்வல்க்கு அப்புறம்
மூணு தியேட்டர்ல போடுறாங்க..ஆங்...

(தியேட்டர் பேர் சொன்ன நல்லாயிருக்கும்!!)


சரத்குமார்:

12 டேக் வாங்கி கிஸ் அடிச்சதால தயாரிப்பாளருக்கு
பல அடி பிலிம் வீணாகி போச்சு...இதை கண்டித்து
விரைவில் எங்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும்.
பிரதமரிடம் இது குறித்து புகார் அளிக்கப்படும்.

டி.ஆர்:

டேய் நான் கனவுல கூட நடிகையை கட்டி பிடிச்சு
நடிச்சதில்ல,,,,என்கிட்டே வந்து கருத்து கேக்குறிங்க....

வல்லவன்ல சிம்பு நயனுக்கு கொடுத்தான் முத்தம்
கலங்கியது என் சித்தம்
கொதித்தது என் ரத்தம்
ஜெட்லிக்கு பிடிச்சிருக்கு பித்தம்

(தயவு செய்து நீங்க போடதிங்க சத்தம்...!! என்று
எஸ்ஸானோம்)


சிம்பு :

எனக்கு (உதட்டை)கடிக்க தெரியாதுங்க...
சொன்ன நம்புங்க.... ஸ்டார்ட் கேமரானு சொன்னதான்
கடிப்பேன்...யோ எனக்கு கடிக்க தெரியாதுயா!!

(ஆமாம் சிம்பு வல்லவன்ல உங்க performance
சுத்த மோசம்....எத்தனை இங்கிலீஷ் படம்
பார்த்து இருப்போம் நாங்க....)

நன்றி: ஜோடி நெ.1.


நாட்டாமை விஜயகுமாரின் தீர்ப்பு:

அட இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல ரமேஷ்கண்ணு!!
இனிமே டெய்லி காலையிலே இட்லி சாப்பிடும் போது
கொஞ்சம் கெட்டி சட்னி வச்சு சாப்பிடு எல்லாம் சரி ஆயிடும்...!!
இது தான் என்ற தீர்ப்பு.....பசுபதி உடுற வண்டியை....!!

உங்களுக்கு பிடிச்சு இருந்தா ஓட்டும் கமெண்ட்டும் போடுங்க.

இது போல் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான
கருத்துக்களை உங்களுக்கு தருவது....

ஜெட்லி....

44 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா ஒரு முத்தத்துக்கு இவ்வளவு சத்தமா?. இதுல ஒன்னை விட்டுட்டிங்க 12 டேக் வாங்கிற மாதிரி நடித்து 12 கிஸ் அடித்ததுன்னால அவரு சம்சாரம் மின்சாரம் ஆனதுனால வந்தது காய்ச்சலா இருக்கும். நன்றி.

பித்தனின் வாக்கு said...

இந்த மக்கா அங்கனதான் ஒரு பிப்டி அடிக்ககூட மாட்டாரு. இங்கயாது ஒரு 50 டேக் வாங்கி இருக்கலாம். நன்றி.

♠ ராஜு ♠ said...

யோவ்..!

பில்-டப் ஓவரா இருக்கேன்னு நினைச்சு வந்தா, இப்பிடி போட்டுத் தாக்கியிருக்கீங்க..!
நல்லாருக்குய்யா..!
:-)

எறும்பு said...

:))

நான் வேற ஏதாவது சொல்ல போய், கல்யாணம் ஆகாத உங்க மனச கலைச்ச மாதிரி இருக்கும். எதுக்கும் சங்கர்கூட சபரி மலைக்கு போக முடியுமான்னு பாருங்க.

பேநா மூடி said...

முதன்முறையாக சீரியஸ் விஷயத்தை விவாத பொருளாய் எடுத்து கொண்டமைக்கும் சிறப்பான தீர்ப்பு வழங்கியதற்காகவும் வாழ்த்துக்கள்

||| Romeo ||| said...

இவ்வளவு சீரியஸ்சான பதிவ நான் படிச்சதே இல்லை பாஸ் . படிச்சதுல இருந்து எனக்கு எதாவது சீரியஸ் ஆகிடுமோன்னு தோணுது.

வானம்பாடிகள் said...

கலக்கல்:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஆகா கிளம்பிட்டாங்கைய்யா
கிளம்பிட்டாங்கைய்யா!!!!!!
படம் டெரரா இருகே.
ஓட்டுக்கள் போட்டாச்சி

சேட்டைக்காரன் said...

இந்தக் கிரிக்கெட் ஆளுங்க, ஒரு அழுக்குப்பந்தை பதினோரு பேரும் பேண்ட்டிலே துடைச்சு, எச்சில்தொட்டுத் தடவி என்ன கருமமெல்லாமோ பண்ணுறாங்க! ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுக்கச் சொன்னா கசக்குதா ரமேஷுக்கு? அந்தாளைத் தூக்கிட்டு எனக்கு ஒரு ஃபோன் போடச் சொல்லுங்கப்பு!

ஜெட்லி said...

@ பித்தனின் வாக்கு

காய்ச்சல் வந்ததுக்கு அது தான் காரணமா....
ரைட்....

ஜெட்லி said...

@ ராஜு

நன்றி சித்தப்பு....

ஜெட்லி said...

@ எறும்பு


அப்படி என்ன சொல்ல போறீங்க..??

ஜெட்லி said...

@ பேநா மூடி

தங்கள் தீர்ப்புக்கு நன்றி....

ஜெட்லி said...

@ ||| Romeo |||

இந்த மேட்டரை சீரியஸ் ஆக எடுத்ததுக்கு
நன்றி ரோமியோ.....

ஜெட்லி said...

@ வானம்பாடிகள்

நன்றி ஐயா....

ஜெட்லி said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

ஹா ஹா...அடுத்து ஒரு இம்சை கொடுக்கும்
ஹீரோ.....

ஜெட்லி said...

@ சேட்டைக்காரன்

போன் பண்ணி அவருக்கு சொல்லி கொடுத்தா
புரியாதாம்.....நீங்க நேரா ஷூட்டிங் ஸ்பாட்
போய்டுங்க.....

மீன்துள்ளியான் said...

கடையில உக்காந்து இப்படித்தான் யோசிக்கிறதா ..நடத்துங்க நடத்துங்க.. சடகோபன் ரமேஷ்க்கு தெரிஞ்ச உங்ககிட்ட tution வந்துடபோறார் ..

அத்திரி said...

கலக்கல்

துபாய் ராஜா said...

அந்த போட்டோவுக்கு பதில் வீடியோ அட்டாச் பன்ணியிருக்கலாம்... :))

ஜெட்லி said...

@ மீன்துள்ளியான்


வாப்பா செந்தில்....
என்னைக்காவது பின்னூட்டம் போடறது,,
அதிலையும் என்னை கலாசலான உனக்கு
தூக்கம் வராத??

Mrs.Menagasathia said...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜெட்லி!!

பதிவு செம காமெடி...

ஜெட்லி said...

@ அத்திரி

நன்றி...

ஜெட்லி said...

@ துபாய் ராஜா

ஏன்...உங்களுக்கு இப்படி ஒரு ஆசை...
ரொம்ப கில்மான்ஸ் ஆயிடும் அண்ணே..

ஜெட்லி said...

@ Mrs.Menagasathia

ரசித்ததுக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

200 நாட் அவுட்..
வாழ்த்துகள் மக்களே..:-)))

அண்ணாமலையான் said...

முதல்ல 200 வாழ்த்துக்கள்.. அப்புறம் ஆராய்ச்சி சூப்பர்.

Chitra said...

இருநூறாவது இடுகையில், முத்த முழக்கமிட்ட டாக்டர் ஜெட்லிக்கு, வாழ்த்துக்கள்!

Dinesh said...

அருமையான கருத்து ..ஆழ்ந்த சிந்தனை ..உங்களுக்கு சமிபத்தில் அங்கிகாரம்
ரத்தான வேல்டெக் பல்கலைகழகம் மூலம் உங்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கி தருகிறேன் ஜெட்லி..

மீன்துள்ளியான் said...

double centuryku vaazthukkal

நாளைப்போவான் said...

vaazhththukal!!! ithula jetli yoda reaction pathi onnumae sollalaiya???

பின்னோக்கி said...

200 க்கு 2 வாழ்த்துக்கள்.

ச.சு படத்தில் ரமேஷ் ரொம்ப சூப்பரா நடிச்சுருப்பாரு ?! :) . அதனால இந்த படத்த பார்க்குறத்துக்கு ரொம்ப ஆவலா இருக்கேன்.

டெம்ளேட் ரொம்ப அழகா இருக்கு.

ஜெட்லி said...

@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி அண்ணே...

ஜெட்லி said...

@அண்ணாமலையான்

நன்றி சார்....

ஜெட்லி said...

@ Chitra

டாக்டர்??..மிக்க நன்றி...
உங்களுக்கு மாத்திரை பத்தி
சந்தேகம் இருந்தா என்கிட்டே
கேளுங்க....

ஜெட்லி said...

@ Dinesh


உன் சிந்தனையை தூண்டியதற்கு
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....
டாக்டர் பட்டம் சிபாரிசுக்கு நன்றி தினேஷ்..

ஜெட்லி said...

@ மீன்துள்ளியான்


nandri nanbarae...

ஜெட்லி said...

@ மீன்துள்ளியான்


nandri nanbarae...

ஜெட்லி said...

// நாளைப்போவான் said...
vaazhththukal!!! ithula jetli yoda reaction pathi onnumae sollalaiya???

//

அந்த கொடுமையை வேற சொல்லுனனுமா பாஸ்...

ஜெட்லி said...

@ பின்னோக்கி


பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்....

க.இராமசாமி said...

நல்ல பதிவு. அருமையான தகவல்கள்.

புலவன் புலிகேசி said...

நீங்க பார்த்திபன் கிட்ட கேட்டிருந்தா ரமேஷ் பன்னது சரின்னு சொல்லிருப்பாரு. அவருதான் ரம்பாவத் தூக்க பல டேக் வாங்குனவராச்சே

Dinesh said...

ஏன் தாங்கள் ஆங்கில படத்துக்கு விமர்சனம் செய்ய மாட்டேன்குரிங்க ...நான் நீங்க சொன்ன படத்தையெல்லாம் பார்த்தேன்.. ஒரு முறை shawshank redemption படத்தை பாருங்கள் ஜெட்லி.. அருமையான கதை

Stephen T Paul said...

nk.... serious ana matter thaannn..