Friday, January 29, 2010

கோவா - பால்கோவா வா??

கோவா - பால்கோவா வா??


இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபுவின்
மூன்றாவது படைப்பு கோவா.யுவனுக்கு முன்னாடி இளைய
இசைஞானி என்று அறிமுகத்தோடு படம் கிராமத்தில்
தொடங்குகிறது.





பல கிராம படத்தில் பார்த்த பஞ்சயாத்து காட்சியை நக்கல்
செய்து இருக்கிறார்கள்.குறிப்பாக அந்த ஆனந்த்ராஜ்
பிளாஷ்பேக் செம நக்கல் அதுக்கு அடுத்து பிரேம்ஜியின்
பிறப்பு பற்றி கூறுவது செம....விஜயகுமார்,சந்திரசேகர்
சண்முக சுந்தரம் எல்லோருமே சீரியஸ்ஆக காமெடியா
நடிச்சு இருக்காங்க.



ஜெய்,வைபவ்,பிரேம்ஜி மூணு சுப்ஜெக்ட் ஹீரோ என்றாலும்,
படத்தை தனித்து ஆளுவது பிரேம்ஜி தான்.அவருக்கு ஒரு
பைட் வேற இருக்கு அதில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு
காப்பு ஏறுவது போல் இவருக்கும் ஏறும்.பிரேம்ஜி ஒவ்வொரு
தடவையும் அந்த இங்கிலீஷ்காரியை பார்த்து கண்கள் இரண்டால்
பாட்டுக்கு தலையாட்டுவது பல தடவை சிரிப்பு வந்தாலும்
சில நேரங்களில் அலுப்பு வருகிறது.

ஜெய், ஓட்டை இங்கிலீஷ் வைத்து கொண்டு மனுஷன்
சலம்பி இருக்கிறார். exampel : u believeO notO......,
two coffee one no sugar one yes sugar....,அப்புறம் முக்கியமா
பிரேம்ஜி கண்ணை சாமி குத்தியிடுச்சு என்று வைபவ்விடம்
சொல்லும் காட்சி சூப்பர்.வைபவ், இந்த படத்தில் இவர்
மூஞ்சில் லைட் அடிச்சா பழைய பாட்டு.தன் பங்கை
கரெக்ட்ஆக செய்து இருக்கிறார்.ஆனா இவருக்கு கொஞ்சம்
வாய்ப்பு கம்மி.

சம்பத் குமார், இதுவரை நடிக்காத ஒரு வேடம் நமக்கும்
புதுசு.தொண்டை கிழியே கத்தியே இவரை பார்த்த நமக்கு
இதில் ஒரு அட்டு கேரக்டர்இல் வருகிறார்.அரவிந்த்,சிக்ஸ்
பேக் உடன் சுத்திகொண்டு இருக்கிறார் இவர் தான் வில்லன்
என்று பார்த்தால் இவரும் சம்பத்தும்....ஐயோ சொல்லவே
கூச்சமா இருக்குங்க.....!நைஸ் ஜாப் அரவிந்த்.

பியா, சின்ன பொண்ணுன்னு பார்த்தா முக்காவாசி பாதி
டவுசரில் தான் பொண்ணு வருது, கிஸ் அடிக்குது....
நல்ல முன்னேற்றம் நடிப்பில் தான்!!சிநேகா, கடைசில
வராங்க வைபவ் ஏதோ கதை சொல்றாரு.
சிநேகா அவங்ககிட்ட உள்ள திறமையை காட்டுறாங்க.

வெங்கட் பிரபு சின்ன சின்ன விஷயம் கூட சூப்பர்ஆ பண்ணியிருக்கார்.குறிப்பா சொல்லணும்னா ஒரு காட்சியில்
பியா ஒரு பார்ட்டி மேடையில் இங்கிலீஷ் பாட்டு பாடிட்டு
இருக்கும் அப்போ கிழே நம்ம பிரேம்ஜியின் வெள்ளைக்கார
காதலி அவள் நண்பர்களுடன் இங்கிலீஷ்இல் பேசுவாள்...
அப்போ தீடிர்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி மேடையில்
பியா ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் பாடுவது
மாதிரியும் கிழே வெள்ளைக்காரிகள் தமிழில் பேசுவார்கள்.

பல விஷயங்கள் இருந்தும் படத்தில் சில இடங்களில் தேக்கம்
காணப்படுகிறது.முதல் பாதி கலகலப்பு என்றாலும் அதிலும்
சில காட்சிகள் போர் அடிக்கிறது.பின் பாதியில் பல காட்சிகளில்
போர் அடிக்கிறது என்பது உண்மை.வெங்கட் சில காட்சிகளை
சீரியஸ்ஆக எடுதுட்டாரோ......முக்கியமா பிரேம்ஜியின்
வெள்ளைக்கார காதலி,சம்பத் அரவிந்த்,ஜெய் பியா பேசும்
காட்சிகள் அலுப்பு தட்டுகிறது.அப்புறம் சின்ன எரிச்சல் அந்த
கோவா தீம் மியூசிக் அடிக்கடி போட்டு நாங்க மலேசியாவில்
இல்ல கோவாவில் இருக்கோம்னு சொல்ற மாதிரி இருந்துச்சு.

படத்தில் சீரியல் நடிகர் ஒருத்தர் பல காட்சிகளில் பல
தோற்றங்களில் வருகிறார்...ஏன்னு காரணம் சொல்லி
இருந்தா நல்ல இருந்துருக்கும்,கடைசி வரைக்கும் சொன்ன
மாதிரி தெரியல.முக்கியமா அந்த சிநேகா வைபவ் காட்சிகள்
சுத்தம்....செம போர்...அந்த பாடல் காட்சி கிட்டத்தட்ட
ரெண்டாவது இன்டெர்வல் மாதிரித்தான்.....


கடைசியில் கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சு காரணம் கடைசியில் வரும் முக்கிய ஸ்டார்கள்.அவுங்க யார்லாம்னு சொல்லவேணாம்னு நினைக்கிறேன்.....கடைசியில் பேர் போடும் முன் தியேட்டரை விட்டு போய் விட வேண்டாம்...... அது தான் அவுங்க ரெண்டாவது பாதிக்கு போட்ட மொக்கைக்கு ஆறுதல் தரும்
விஷயம் என்பது குறிப்பிடதக்கது.


தியேட்டர் நொறுக்ஸ்:

# முதல் இன்டர்வலில் காண்டீனில் பப்ஸ் வரவில்லை....
சரி சிநேகா வைபவ் பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்.
ஆனா அப்போவும் பப்ஸ் வரல....என்ன கொடுமை சார் இது!!

# மினி இன்டெர்வல்லின் போது டாய்லட் வந்த மூன்று நண்பர்கள்..

"டேய் தமிழ் படத்துக்கு போலாம்னு சொன்னேன் கேட்டிங்களா?"
என்றான் ஒருவன்,,,,

"ஏன் இதுவும் தமிழ் படம்தானே..." என்று மரண மொக்கை
போட்டான்.....

அடேய் உள்ள தான் மொக்கை தாங்கல டாய்லட் கூட நிம்மதியா போக விட மாற்றங்களே என்று மீண்டும் படம் பார்க்க சென்றேன்......


ஜெட்லி பஞ்ச்:

கோவா - சர்க்கரை இல்லாத பால்"கோவா"!!

இந்த விமர்சனம் எல்லோரையும் சென்று அடைய ஒட்டு மற்றும்
பின்னூட்டங்கள் போடுமாறு கேட்டு கொள்கிறேன்.....

உங்கள்


ஜெட்லி......
நன்றி: indiaglitz

44 comments:

Arun said...

ஜெட்லி..உங்க கடமையுனற்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு...விமர்சனம் நல்ல இருந்தது...

வெள்ளிநிலா said...

யாரேனும் நான் எழுதிருந்த கோவா படத்தோட விமர்சர்சனம் படிசீங்களா?

ஜெட்லி... said...

வந்து சென்றவர்கள்....மீட்டர்
அடிக்கடி மக்கர் பண்ணுது......
தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க....

மீன்துள்ளியான் said...

/# முதல் இன்டர்வலில் காண்டீனில் பப்ஸ் வரவில்லை....
சரி சிநேகா வைபவ் பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்.
ஆனா அப்போவும் பப்ஸ் வரல....என்ன கொடுமை சார் இது!!

# மினி இன்டெர்வல்லின் போது டாய்லட் வந்த மூன்று நண்பர்கள்..

"டேய் தமிழ் படத்துக்கு போலாம்னு சொன்னேன் கேட்டிங்களா?"
என்றான் ஒருவன்,,,,

"ஏன் இதுவும் தமிழ் படம்தானே..." என்று மரண மொக்கை
போட்டான்.....

அடேய் உள்ள தான் மொக்கை தாங்கல டாய்லட் கூட நிம்மதியா போக விட மாற்றங்களே என்று மீண்டும் படம் பார்க்க சென்றேன்......
//

intha grouppa rempa paaratnum ..

CS. Mohan Kumar said...

விமர்சனத்தில் மத்தவங்களை முந்திடீங்க ஜெட் லி. படம் ஓரளவு தான் ஓகே போல தெரியுது.. அடுத்து நிச்சயம் தமிழ் படம் பாத்துட்டு எழுதுவீங்க என நினைக்கிறேன்..

உங்க ப்ளாக் வந்தா அது வேற எங்கோ எடுத்துட்டு போகுது (widget என ) தற்காலிக பிரச்சனை தான் என நினைக்கிறேன்.. Take care

சங்கர் said...

@மோகன் குமார்

எந்த ப்ரவுசர்ல பாத்தீங்க, எந்த சைட்டுக்கு போகுதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்

லோகு said...

நன்றி நண்பா..
நீ தமிழ் படத்துக்கு தான் போயிருப்பேன்னு, அந்த விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்தேன்.

***
அதிமுக்கியமான ரெண்டு விஷயத்த சொல்ல மறந்துட்டயே நண்பா..

1 . சினேகா பிகினில வர்றாங்களா இல்லையா..
2 . சினேகா பிகினில வர்றாங்களா இல்லையா..

Ashok D said...

Go வா..

On7June said...

Nandri annachi.... sari padam oruthadava paakalaamaa....

வெற்றி said...

படம் மட்டுமல்ல உங்கள் டெம்ப்ளேட் கூட மொக்கையாகதான் இருக்கிறது..

javascript disable பண்ணாதான் படிக்க முடிகிறது..

அதை முதலில் மாற்றுங்கள்..

வெற்றி said...

என்ன தமிழ்மணம்,தமிழிஷ் க்கு எல்லாம் இன்னிக்கு விடுமுறையா :)

hasan said...

hi jetli i like GOA Because it is different to our tamil film industry..nice try..good story too

Paleo God said...

ஹும்ம்.. பார்த்தாச்சா..:)
ரொம்ப சந்தோசம்..

vasu balaji said...

சங்கர். கோவா இடுகையில் க்ளிக் செய்தால் ஹைஜாக் ஆகி இங்கு போகிறது..
http://www2.searchresultsdirect.com/parking.php4?domain=wizom.net&registrar=348972&keyword=business+networking&eq=446f8899529b9b180ee566f5cb577420ef87480bfb98f5eec01db3a18ac5578a1485c29e724847bddf2d79a7d2b1df46a21cc9b2adbe924f84a19e5416ca1fd15d2f2fffa29a4c0e0071bfb76d9be8314a9c5187f11493be2f681de9e3dffe811cd8b253ab93f005c1ae0a07942f63df36cb8171cba6aab64475fc741eb453c7f7e122dd5e74e2d95f4a57706dc98eb57cd638cda06eb103f1fb48c2036421555cd512524496eb2175fc9f1373865d22b78f19daa1bb083e79fa1091795c79be&ac300=2

nee-kelen.blogspot.com. இது தமிழிஷ்ல பார்த்து இந்த பின்னூட்டம் போட்டேன். வோட் போட முடியவில்லை. இப்பவே பாருங்க.

Raju said...

பார்க்கலாம் போலயே..!

பிரபாகர் said...

ஜெட்லி,

நீங்க நல்லவங்களா கெட்டவங்களா... புரியலேப்பா.

விமர்சனத்த படிச்சிட்டு ஒரே குழப்பம், பாக்கலாமா வேணாமான்னு. பாலிஷா சொல்லியிருக்கீங்க...

மத்தவங்கல்லாம் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க ஆசைப்படுறேன், உங்க எழுத்துல மெச்சூரிட்டி கூடியிருக்கு!

வானம்பாடிகள் அய்யா சொன்ன மாதிரி உங்க சைட்ட ஓபன் பண்ணவே முடியல, எங்கேயோ போயிகிட்டுந்துச்சி. இப்போதான் ஓ.கே வா இருக்கு படிச்சி பின்னூட்டம் போட முடியுது!

பிரபாகர்.

சித்து said...

@வெற்றி

Template-il எந்த பிரச்சனையும் இல்லை, எப்படியோ யாரோ HTML coding Hacking செய்து விட்டார்கள். இப்பொழுது தான் என் பார்வைக்கு வந்தது சரி செய்துவிட்டேன் நண்பரே. Counter Javascript Disable செய்துவிட்டேன். இனி உங்களுக்கு எந்த சிரமும் இருக்காது. சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) said...

படம் பார்க்கவா வேண்டாமா தல

ஜெட்லி... said...

@ Arun

சும்மா ஒரு சேவை தான்
பாஸ்.....

ஜெட்லி... said...

@ vellinila

லிங்க் அனுப்புங்க....

ஜெட்லி... said...

@ மீன்துள்ளியான்

உங்க தோஸ்துனு நினைக்கிறேன் செந்தில் ......

ஜெட்லி... said...

@ மோகன் குமார்


நன்றி அண்ணே.....தமிழ்
படம் பார்த்துட்டு சொல்றேன்...

என்ன ப்ராப்ளம்னு தெரியல.....

ஜெட்லி... said...

@ லோகு

//சினேகா பிகினில வர்றாங்களா இல்லையா..
//

இல்லப்பா.....
வரலை... :(

ஜெட்லி... said...

@ அசோக்

ஒன்னும் புரியல டாக்டர் அண்ணே....

ஜெட்லி... said...

@ சர்வன்

//sari padam oruthadava paakalaamaa....//

கண்டிப்பா.....அவ்வளவு மோசமில்லை !!

ஜெட்லி... said...

@ வெற்றி

மொக்கைக்கு நன்றி......

ஜெட்லி... said...

hasan

//hi jetli i like GOA Because it is different to our tamil film industry..nice try..good story too

//

opinion differs hasan...

ஜெட்லி... said...

@ பலா பட்டறை

அண்ணே நீங்க கண்ணு வைக்கிறிங்க
வீட்ல சுத்தி போட சொல்லணும்.....!!:)

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்

அதாங்க ஒன்னும் புரியல....
இப்ப சரி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்....

ஜெட்லி... said...

@ ♠ ராஜு ♠

பார்க்கலாம் சித்தப்பு.....
அவ்வளவு மோசமில்லை...

ஜெட்லி... said...

@பிரபாகர்


அண்ணே சும்மா ஒரு
வாட்டி பாக்கலாம்.....
கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனா
மாதிரி பீலிங்....

ஜெட்லி... said...

@ யோ வொய்ஸ் (யோகா)

பார்க்க கூடாத படம்
அல்ல கோவா!!

துபாய் ராஜா said...

பார்த்துடுவோம் சீக்கிரம்.

பின்னோக்கி said...

படம் கோ வா இல்லை வா வா ?.
கோ மாதிரி தான் இருக்கு. படம் புட்டுக்கிச்சு போல.

கடைக்குட்டி said...

ம்ம்ம்.. நான் படிச்சுட்டேன்னு உங்களுக்குத் தெரியும்.. இருந்தாலும் எடத்த நெறப்பிடுவோம்..

விமர்சனம் இப்போ பதிவுலகுல எல்லாரும் பண்றாங்க.. நாம எவ்ளோ சீக்கிரமா பண்றோம்றதுதான் மேட்டர்..

அதுல நீங்க கில்லி.. :-)

ஜெட்லி... said...

@ துபாய் ராஜா

பார்த்துட்டு சொல்லுங்க அண்ணே

ஜெட்லி... said...

@பின்னோக்கி

அப்படிதான் சொல்றாங்க.....

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி

இப்படியே என்னை உசுபேத்தி உடு நீ....

kuruvi said...

//சம்பத் குமார், இதுவரை நடிக்காத ஒரு வேடம் நமக்கும் புதுசு...//

வேட்டையாடு விளையாடு பாக்கலையா நீங்க?!

Chitra said...

காரமான "பால்கோவா" விமர்சனம். அதான் இனிப்பு இல்லைன்னு சட்டுன்னு சொல்லிட்டீங்களே!

rengarajan said...

Vannakam Jetli...serial nadigar pazha vedangalil varuvathu nadigar Kamal ah Kazhaipathu pol therikirathu!Yosichu paarunga$$

ஜெட்லி... said...

@ kuruvi

வேட்டையாடு விளையாடுவில் சம்பத்
இருக்காரா??.....

ஜெட்லி... said...

@ Chitra

உண்மையை சொன்னேன்....

ஜெட்லி... said...

@rengarajan

ரங்கா மாமே...அந்த சீரியல் நடிகர்
செம தலைவலிப்பா....அதுவும் இன்டெர்வல்
சீன் செம மொக்கை......நீ சொல்றது சரிதான்
கமலை தான் கலாய்ச்சீ இருக்காங்க....