Monday, January 25, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள் (25.1.10)

*************************************************
டிஸ்கி:

ஒரு வேளை நீங்கள் இதை படித்து முகம் சுளித்தால்,
நான் பொறுப்பல்ல...நான் படித்த காலை நாளிதழ்களில்
வந்த செய்திகள் இவை....விஜய் மேட்டர் தவிர!!
நீல கலர் எழுத்து மட்டும் என் கைவண்ணம்.....

***********************************************

முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:


அரை நிர்வாணமாக நடித்த கொல்கத்தா அழகி பரப்பரப்பு பேட்டி:அந்தரங்கம் என்ற படத்தில் புதிதாக அறிமுகமாகும் கொல்கத்தா
அழகி கமலிகா ஒரு காட்சியில் துணிச்சலுடன் அரை நிர்வாணமாக
நடித்துள்ளார்....

(முழு படத்தை போட்டால் என்னை போன்ற சின்ன பசங்க
கெட்டு விடுவார்கள் என்ற காரணத்தால் எடிட் செய்யப்பட்ட
படம் கிழே.... முழு படத்தில் சொல்ற மாதிரி ஒன்னும் பெரிசா
எதுவும் இல்லை என்பது வேறு விஷயம்!!)
இதை பற்றி நடிகை கூறியது....

"கதைக்கு தேவைனு தான் அரை நிர்வாணமா நடிக்க
ஒத்துகிட்டேன்,படத்தில் 2 வினாடிகள் மட்டுமே இந்த
காட்சி வரும்.இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண்,
அரை நிர்வாணமாக நடித்ததற்கு நான் வெட்கப்படவில்லை.
அதே சமயம்,எத்தனை கோடி கொடுத்தாலும் முழு
நிர்வாணமாக நடிக்க மாட்டேன்" என்று அவர் கூறியது
நெஞ்சை நெகிழ வைத்தது.

"நமது எதிர்ப்பார்ப்பெல்லாம் அரை நிர்வாணமாக துணிச்சலாக
நடித்த கமலிகாவுக்கு இந்த வருடம் ஏதும் வீர் சக்ரா விருது
கிடைக்குமா என்பது தான்"...

ஜெட்லி செய்திகளுக்காக வடபழனி முட்டு சந்திலிருந்து இருந்து உங்கள் கட்டிங் குமார்.......


*******************************************
பொது அறிவு கேள்வி:

சமீபத்தில் மதுரவாயிலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின்
அங்கீகாரத்தை ரத்து செய்வதாக செய்தி வந்தது, உங்களுக்கு
தெரிந்ததே.......


இதான் கேள்வி,

அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்குன நம்ம இளையதளபதி
விஜய் இப்போ டாக்டரா
??

A.ஆம்


B.இல்லை

உங்கள் பதிலை யாருக்கு வேணும்னாலும் அனுப்புங்கள்,
சத்தியமா எந்த பரிசும் தர மாட்டோம்.(சங்கம் கடன்ல
போதுங்க!!)

**********************************************
விளம்பர இடைவேளை:

நெப்போலியன் குடி மட்டை ஆவு மப்பு போட்டி ஆரம்பம்....


நீங்க ரெடியா...நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்,எங்க நெப்போலியன் கலாட்டா குழு உங்கள் வீட்டுக்கு வரும்போது நீங்கள் நெப்போலியன் குடித்து மட்டையாகி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.....
(குறிப்பு: நெப்போலியன் காலி பாட்டில் அருகில் இருக்க வேண்டும்).


**********************************************

பி(அ)ட்டு செய்திகள் தொடர்கிறது........

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனின் கதை படமாகிறது:

கோவில் கருவறைக்குள் பெண்களை மயக்கி உல்லாசம்
அனுபவித்த அர்ச்சகர் தேவநாதனின் கதையை மையமாக
வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்.

இது குறித்து இயக்குனரிடம் கேட்டதற்கு

"நான் எடுக்கும் படத்தில் அர்ச்சகர் பாத்திரம் தான் ஹீரோ,
ஆனால் நான் தேவநாதனின் கதையை எடுக்க வில்லை".

இதை பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு
"தேவநாதன் எடுத்த வீடியோ காட்சி அவ்வளவு தெளிவு இல்லை
அதனால இந்த இயக்குனர் எடுக்கும் படமாவது நல்லா தெளிவா
இருக்கானு பார்ப்போம்"...என்று ஏக்க பெருமூச்சு விட்டார்......

ஜெட்லி செய்திகளுக்காக மணலி டாஸ்மாக் பார் டாய்லட் பக்கத்தில் இருந்து அதே ஏக்கத்தோடு குவாட்டர் கோவிந்தன்.

**********************************
சிறப்பு பார்வை :

மனிஷா கொய்ராலா அவர்கள் மாப்பிள்ளை படத்தில்
தனுஷின் மாமியாராக நடிக்கிறாராம் அது குறித்து
சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!!)

மும்பை படவுலகை சுமார் இருபது வருடங்கள் முன்
கலக்கிய மனிஷா அவர்கள் நம் தமிழ் திரையுலகில்
இந்தியன் படத்தில் அளவில்லா திறமை காட்டி
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பதினோரு வருடங்கள் முன் நடித்த முதல்வன்
படத்திலேயே மனிஷா அவர்கள் கிழவி போல் இருப்பதாக
சர்ச்சை கிளம்பியது பின் பாபாவில் அது உறுதியானது
என்றால் அது மிகையல்ல.இப்போது அவர் தனுசின்
மாமியராக நடிப்பது எந்த அளவுக்கு செட் ஆகும் என்று
மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.....

மனிஷா கிழவியா இல்ல மாமியாரா என்று பொறுத்திருந்து
பார்ப்போம்!!!.

********************************************

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


உங்கள்

ஜெட்லி....


மேலும் உங்கள் பொது அறிவு வளர பின்னூட்டத்தை போட்டும்
ஒட்டு போட்டும் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

47 comments:

Vijay Anand said...

//அரை நிர்வாணமாக நடித்ததற்கு நான் வெட்கப்படவில்லை.
அதே சமயம்,எத்தனை கோடி கொடுத்தாலும் முழு
நிர்வாணமாக நடிக்க மாட்டேன்" //
Super appuu...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்கல் அத்தனையும் ...

ரோஸ்விக் said...

போலி டாக்டர்னு இவங்களை புடிச்சுகிட்டு போயிரமாடாங்களே இவருடைய அரசியல்(!) எதிரிகள் ?? :-))

என்ன வஞ்சகம் உமக்கு... அந்த புள்ளையோட அரைநிர்வாணப் புகைப்படத்துலையும் அரைப்பகுதியை காண்பிக்கிரீறு?? :-)

கார்க்கி said...

அந்த பல்கலைகழகம் ஷங்கருக்கும் இன்னும் பலருக்கும்தான் டாக்டர் பட்டம் கொடுத்தது.. ஏன் விஜய் மட்டும்?

சரி விடுங்க.... அப்டேட் ஆகிக்கோங்க.. தளபதிக்கு பத்மஸ்ரீ கொடுக்க வாய்ப்பு இருக்காம். ப்ரிந்துரை லிஸ்ட்டில் கில்லியின் பெயரும் அனுப்பப்பட்டிருக்கிறது.. :)))

vinodhu said...

இதை பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு
"தேவநாதன் எடுத்த வீடியோ காட்சி அவ்வளவு தெளிவு இல்லை
அதனால இந்த இயக்குனர் எடுக்கும் படமாவது நல்லா தெளிவா
இருக்கானு பார்ப்போம்"...என்று ஏக்க பெருமூச்சு விட்டார்......

heeeeheeeeee

முகிலன் said...

// கார்க்கி said...
அந்த பல்கலைகழகம் ஷங்கருக்கும் இன்னும் பலருக்கும்தான் டாக்டர் பட்டம் கொடுத்தது.. ஏன் விஜய் மட்டும்?

சரி விடுங்க.... அப்டேட் ஆகிக்கோங்க.. தளபதிக்கு பத்மஸ்ரீ கொடுக்க வாய்ப்பு இருக்காம். ப்ரிந்துரை லிஸ்ட்டில் கில்லியின் பெயரும் அனுப்பப்பட்டிருக்கிறது.. :)))//

சகா - ஷங்கர் இன்னும் டாக்டர்.ஷங்கர்னு போட்டு ஒரு படம் கூட வரலை. ஆனா டாக்டர் விஜய்னு ரெண்டு படம் வந்திருச்சி.. ஹி ஹி ஹி..

பத்மஸ்ரீயா?? அடக் கொடுமையே?

♠ ராஜு ♠ said...

இன்னும் அதே கட்டிங் குமாரு, குவார்ட்டர் கோவிந்தந்தானா..?

கட்டிங் கலைச்செல்வன்,குவர்ட்டர் குழல்யாழினின்னு கட்டுடைப்பு செய்யுங்கயா..! எப்போதான்
பின்நவீனத்துவம் படிக்கப் போறீங்களோ..!
:-)

♠ ராஜு ♠ said...

கட்டிங் கலைவாணி, குவார்ட்டர் குருவம்மாள்ன்னு கூட கட்டுடைப்பு செய்யலாம்..!

நாஞ்சில் பிரதாப் said...

//சரி விடுங்க.... அப்டேட் ஆகிக்கோங்க.. தளபதிக்கு பத்மஸ்ரீ கொடுக்க வாய்ப்பு இருக்காம் //

கார்க்கி,

பத்மஸ்ரீ விருதென்ன அவருக்கு பாரத ரத்னா விருதை கொடுக்கலாம்...பின்ன சும்மாவா என்னா நடிகரு...? போங்க சகா... இலவசமா டிவி கொடுத்தவனங்க ஆளற ஊர்ல என்னவேணாலும் நடக்கும்... கேனப்பய ஊர்ல முட்டாள்பய நாட்டாமை... ஏய் டன்டணக்கா...

கார்க்கி said...

பிரதாப்,

அவரின் நடிப்புக்காக டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை என்பது தெரியுமா உங்களுக்கு?

ஜோசியர் சொன்னா உங்காளு வாங்காமலே டாக்டர்னு போட்டுப்பாரு.. தெரியாதா உங்களுக்கு?

D.R.Ashok said...

ஆஹா... அரும.. அரும்மைய்யா...

மோகன் குமார் said...

கலக்குங்க தம்பி.. விஜய் பதிய கேள்வி கார்க்கிக்கு அனுப்பலாம் :))

முகிலன் said...

//கார்க்கி said...
பிரதாப்,

அவரின் நடிப்புக்காக டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை என்பது தெரியுமா உங்களுக்கு?

//

சகா, எதுக்காக குடுத்தாங்க டாக்டர் பட்டம்? அவரு செஞ்ச மகத்தான அறிவியல் சாதனைக்காகவா?

முகிலன் said...

//ஜோசியர் சொன்னா உங்காளு வாங்காமலே டாக்டர்னு போட்டுப்பாரு.. தெரியாதா உங்களுக்கு?//

ஆமா பிரதாப்போட ஆளு யாரு?

Chitra said...

அது குறித்து
சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!!)
................ ha,ha,ha,ha,.....
Jetli, super. continue to give us more in this style of writing.

ஜெட்லி said...

@ விஜய் ஆனந்த்

நன்றி நண்பரே....

ஜெட்லி said...

@ ஸ்ரீ கிருஷ்ணா...

மிக்க நன்றி நண்பரே...

ஜெட்லி said...

@ரோஸ்விக்


//என்ன வஞ்சகம் உமக்கு... அந்த புள்ளையோட அரைநிர்வாணப் புகைப்படத்துலையும் அரைப்பகுதியை காண்பிக்கிரீறு?? //


அதுல ஒன்னும் பெருசா சொல்ற மாதிரி ஒன்னும் இல்லைணா!!

ஜெட்லி said...

@ கார்க்கி

// ஏன் விஜய் மட்டும்?//

அதானே கே.எஸ்.ரவிக்குமார் கூட டாக்டர் பட்டம்
வாங்கினார்,,,,,ஏன் நான் அவரை பத்தி போடலை....
நேர்ல பார்க்கும் போது சொல்றேன்.....

ஜெட்லி said...

@ வினோத்

சிரிப்புக்கு நன்றி.....

ஜெட்லி said...

@ ராஜு

//எப்போதான்
பின்நவீனத்துவம் படிக்கப் போறீங்களோ..!//

அடுத்த வாட்டி ட்ரை பண்ரேன்ங்க..

ஜெட்லி said...

@ அசோக்

நன்றி ஐயா.....

ஜெட்லி said...

@ மோகன் குமார்...

வந்துட்டாரு அண்ணே....

ஜெட்லி said...

@சித்ரா

நன்றி....ட்ரை பண்றேன்....

பலா பட்டறை said...

வடை இல்லயா..:))

வரதராஜலு .பூ said...

//ஜெட்லி செய்திகளுக்காக மணலி டாஸ்மாக் பார் டாய்லட் பக்கத்தில் இருந்து அதே ஏக்கத்தோடு குவாட்டர் கோவிந்தன்.//

ரொம்பதான் ஃபீலிங்

எல்லா செய்திகளுமே சூப்பர்

நாஞ்சில் பிரதாப் said...

//முகிலன் said...
//

ஆமா பிரதாப்போட ஆளு யாரு?//


ஆமா அதானே என் ஆளுயாரு ??? கார்க்கி சகா இம்புட்டு சொல்லிட்டு என்னோட ஆளு யாருன்னு சொல்லிடவேண்டியதுதானே??? ப்ரியாமணியா? பாவனாவா? எதுன்னாலும் எனக்கு ஒகே

நாஞ்சில் பிரதாப் said...

//சகா, எதுக்காக குடுத்தாங்க டாக்டர் பட்டம்? அவரு செஞ்ச மகத்தான அறிவியல் சாதனைக்காகவா?//

முகிலன்

பின்ன சோப்பு போடறது எப்படிங்கறல ஆரயாய்ச்சி பண்ணிருக்காரு... இப்படி பலஆராய்ச்சிகள்.
ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி கூட கூப்பிடுருக்காங்களாம்...

நாஞ்சில் பிரதாப் said...
This comment has been removed by the author.
செ.சரவணக்குமார் said...

நல்ல கலக்கலான இடுகை நண்பா.

வெற்றி said...

//இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......//

செய்திகளை மட்டும்தான் நீங்க சொல்லணும்..அது தேவையா தேவையில்லையா னு நாங்க சொல்லணும்.. :))))

பின்னோக்கி said...

டாக்டர் பட்டம் பற்றிய செய்தி என்னை யோசிக்க வைத்தது (என்னைய யோசிக்க வைக்குறது ரொம்ப கஷ்டமில்லை).

அர்ச்சகர் மேட்டர் அருமை. ரொம்ப நல்லா யோசிக்குறதுக்காக ஜெட்லிக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்.

ஜெட்லி said...

@ வரதராஜலு .பூ

நன்றி சார்......

ஜெட்லி said...

@ பலா பட்டறை

திரும்பவும் வடையா அண்ணே .....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுகானும்
வடைக்கு எத்தனை அர்த்தம் இருக்கு??

ஜெட்லி said...

@நாஞ்சில் பிரதாப்

//ப்ரியாமணியா? பாவனாவா? எதுன்னாலும் எனக்கு ஒகே//

என்னாது இது ??
இந்த விஷயம் பாவனாவுக்கு தெரியுமா??

ஜெட்லி said...

@ செ.சரவணக்குமார்

நன்றி நண்பரே.....

ஜெட்லி said...

@ வெற்றி

உங்க ஆர்வம் புரியுது நண்பா.....

ஜெட்லி said...

@ பின்னோக்கி

எனக்கு வேணாம்ப்பா....
அப்புறம் அங்கீகாரம் கான்சல் ஆச்சுன்னா அவ்ளோதான்

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))))

Mrs.Menagasathia said...

எல்லாமே கலக்கல்...

புலவன் புலிகேசி said...

விருதுதான கொடுத்திருவோம்

kanagu said...

நியூஸ் எல்லாம் அற்புதம்... நல்லா சிரிச்சேன்... :)

amudha said...

nan enna solvathu


mugaum nainru

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

யோ வொய்ஸ் (யோகா) said...

கில்மா செய்தி மன்னன் ஜெட்லி வாழ்க

Jaleela said...

பொது அறிவு கேள்வி, சிறப்பு பார்வை எல்லாமே ரொம்ப கலக்கலா இருக்கு

//மனிஷா கொய்ராலா அவர்கள் மாப்பிள்ளை படத்தில்
தனுஷின் மாமியாராக நடிக்கிறாராம் அது குறித்து
சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!!)//ஹா ஹா.


( என் வ‌லைப்ப‌க்க‌ம் வ‌ந்து க‌மெண்ட் த‌ந்த‌மமைக்கு மிக்க‌ ந‌ன்றி)

துபாய் ராஜா said...

அட்டு செய்திகள்ன்னாலும் அருமையான செய்திகள். :))