போர்க்களம் vs நாணயம்
இன்னைக்கு ப்ரீயா இருந்ததால் ரெண்டு படம் பார்க்கனும்னு
முடிவு பண்ணி முதலில் போர்க்களம் பார்ப்போம் என்று சங்கம்
நோக்கி வண்டி விரைந்தது.போர்க்களத்தை நான் கிஷோருக்காக
ஓரளவு எதிர்ப்பார்த்தேன்.ஆனா போர்க்களம் என்னை ரணகளம்
ஆக்கிவிட்டது...கிட்டதட்ட இருபது தடவை கொட்டாவி விட்டது
தான் மிச்சம்.
படத்தில் என்ன புதுசு என்றால் மேகிங் எனலாம் அப்புறம் கேமரா
ஷாட்ஸ், எடுத்த விதம் நன்று, ஆனால் போக போக அதுவே பல
கொட்டாவி வர காரணம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் யாரு ஹீரோனே தெரியல ஆமா கிஷோரை விட
அவர் ஜீப்பை பல முறை பல கோணத்தில் காட்டுகிறார்கள்.
கதாநாயகி கிட்ட பெரிசா ஒன்னும் இல்லைன்னு சொல்ல
முடியாது,ரெண்டு விஷயம் இருக்கு.அதாவது வருகிறார்,
அழுகிறார் என்பதை சொன்னேன். சத்யன் தன் பங்கை
கச்சிதமாக செய்து இருக்கிறார்....
இன்டெர்வல் ப்ளாக்கில் ட்விஸ்ட் என்று மரண மொக்கை
போடுகிறார்கள்...ஏன்னா அந்த ட்விஸ்ட் படம் ஸ்டார்டிங்லே
அழகாய் தெரிந்து விடும்(நான் எழுதிய சபலம் கதை போல!).
அலுப்பூட்டும் படத்தில் நிறைய உள்ளன குறிப்பாய் ஜீப்
அல்லது காரை அடிக்கடி முன் பக்கம் காட்டுவது,அப்புறம்
சம்பத்தின் வீட்டை காட்டும் போது அந்த சிலையை காட்டி
நரி ஊளையிடவது என்று தலைவலி காட்சிகள் நிறைய....
ஜெட்லி டவுட்:
ஆமாம், அது ஏன் கதாநாயகியை வில்லன் கிட்ட இருந்து
காப்பாத்தும் போது குறிப்பா மார்க்கெட்டில் மழை வருது????
சரி படத்தை ஒரு சில வரிகளில் நம் நடிகர்கள் பேசிய டயலாக்
மாதிரி சொன்ன எப்படி இருக்குனு பார்ப்போம்....
பொல்லாதவன் தனுஷ்:
5,10 வில்லன் இருக்காங்கனு சொன்னங்க.ஏதோ புதுசா
எடுக்கரங்கினு சொன்னங்க....இங்க வந்தா எல்லோரும்
காமெடி பண்ணினு இருக்காங்க...மரியாதையா என்
75 ரூபாவை கொடுங்க...
வடிவேலு:
ஸ்ஸப்பா....படம் ஆரம்பிச்ச உடனே கண்ணை கட்டுதே...
மாதவன்:
படம் நல்லா இல்லைன்னு சொல்லல ...
ஆனா ஏதாவது நடந்துடுமோனு பயமா இருக்கு!!
கவுண்டமணி,செந்தில்.
கவுண்டமணி:டேய் தம்பி படத்தை பத்தி மக்கள் கிட்ட ஒரு
சவுண்ட்ல சொல்லுடா??
செந்தில்: ஊஊ... ஊஊ....
****************************************************************
நாணயம்:
நாணயம், ஒரு பேங்க் ராப்பரி படம்...ஓரளவுக்கு போர் அடிக்காம
போச்சு...சிபிராஜ் வழக்கம் போல் பாடி லாங்வெஜ் என்றால்
கிலோ என்ன விலை என்று கேட்டவாரே அவரின் அப்பாவின்
வாய்ஸ் மாடுலேசன்,லொள்ளு மூலம் தன்னை காப்பாற்றி
கொண்டார் என்றே சொல்லவேண்டும்.,
பிரசன்னா, தன் பங்கை பக்காவாக செய்து இருக்கிறார்.
ரம்யா அக்கா வராங்க உடனே ரெண்டு பேரும் லவ் ஆவுது.
அப்புறம் சிபி ரம்யாவை கடத்துகிறார்...ட்விஸ்ட் சொல்றன்னு
தப்பா நினைச்சுக்காதிங்க, நாம எத்தனை தமிழ் சினிமா பார்க்குறோம் ..கடைசியில் பார்த்த ரம்யாவும் சிபியின் ஆள்
என்று எதிர்ப்பார்த்த மாதிரியே நடக்கிறது.என்ன இதில் ட்விஸ்ட்
தெரிய வரும் போது ரம்யா நீச்சல் உடையில் வருவார்,பெரிதாக
எதுவும் தெரியவில்லை என்றாலும் (குறையை தான் சொல்றேன்)
ரம்யா தன் பங்கை சிறப்பாகவே செய்து இருக்கிறார்.
படத்தில் வேற ஒரு பெரிய ட்விஸ்ட்டும் இருக்குது அதை
சொல்ல மாட்டேன்.படத்துக்கு ஏன் நாணயம்னு பேர் வச்சாங்கனு
தெரியல யாருமே படத்தில் நாணயமா இல்லை பேசாம ட்விஸ்ட்
அப்படின்னு பேர் வச்சி இருக்கலாம்.மற்றபடி கடைசி ட்விஸ்ட்
நம்பும்படி இல்லை இவரா இப்படி என்று சிரிப்பு தான் வருகிறது.
எப்போதும் போல் கடைசி காட்சியில் போலீஸ் வருகிறது.
ரம்யாவை விட பிரசன்னா பி.ஏ வாக வரும் பெண் நன்றாகவே
இருக்கிறார்....
என்ன கொடுமை சரவணா இது (EKSI) கார்னர்:
சிபிராஜ்,அவளோ பெரிய டலேன்ட்னு சொல்றாங்க ஆனா
பாருங்க தூப்பாக்கியில் தோட்டா இல்லாமா ஒரு நாள்
புல்லா சுத்திட்டு இருந்துருக்காரு!!
ஜெட்லி பஞ்ச்:
போர்க்களம் - ரணகளம் ஆக்கிடுச்சு(என்னை சொன்னேன்!!).
நாணயம் - புதுசா வந்த அஞ்சு ருபாய் நாணயம் மாதிரி,சில
காட்சிகளில் அம்பது காசு மாதிரியும் தெரியும்!!!
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்...
கண்டிப்பா பின்னூட்டமும் போடவும்...நீங்களும் படம் பார்த்து
இருந்த ஷேர் பண்ணிக்கிங்க.....
நன்றி: INDIAGLITZ
உங்கள்
ஜெட்லி சரண்.
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
நடிகர்களின் கற்பனை பஞ்ச் நன்றாக இருந்தது.
அமிதாபச்சன், அக்ஷய் நடித்த ஒரு ஹிந்திப் படம் ஞாபகம் வருகிறது உங்கள் நாணயம் விமர்சனம் படிக்கும் போது படத்தின் பெயர்தான் நினைவில்லை
வேற எதுவும் படம் மிச்சமிருக்கா பார்ப்பதற்கு!!!
அப்ப நாளைக்கு 'குட்டி'யா??
போர்க்களம் எனக்கு ஓகே தான் நண்பா.. மேகிங் அட்டகாசம்.. ஒரு சில இடங்களில் சலிப்பு தட்டினாலும் நல்லா இருந்தது..
@ தர்ஷன்.. அந்தப்படம் aankhen
//நாணயம் - புதுசா வந்த அஞ்சு ருபாய் நாணயம் மாதிரி,சில
காட்சிகளில் அம்பது காசு மாதிரியும் தெரியும்!!!//
ஹா ஹா ஹா :)) ரசித்தேன்..
குட்டி ஒண்ணுதான் பாக்கி..சீக்கிரம் அந்த கடமையும் முடிச்சிடுங்க.
:)
இப்படி ஆள் ஆளுக்கு பஞ்ச் அடிச்சிது அடிச்சு படத்தான் பஞ்சர் ஆக்கிடுரிங்க.
@ தர்சன்
அப்படியா??... நமக்கு ஹிந்தி படம் அவ்வளவா
பார்த்து பழக்கம் இல்லை.
@gulf-tamilan ...
//வேற எதுவும் படம் மிச்சமிருக்கா பார்ப்பதற்கு!!!
//
குட்டி இருக்கே!!
@arun
//அப்ப நாளைக்கு 'குட்டி'யா?? //
கண்டிப்பா....
@ கார்த்திகை பாண்டியன்
நீங்க அந்த இன்டெர்வல் ட்விஸ்ட்
பத்தி என்ன நினைக்கிறிங்க??
@ வெற்றி
முடிச்சுடுவோம்
:))
@ ரோமியோ...
அட விடுங்க பாஸ்.....
.நீங்களும் படம் பார்த்து
இருந்த ஷேர் பண்ணிக்கிங்க.....
.............யான் பெற்ற துன்பம் - பெருக, இவ்வையகம்........ நாணயமான ரணகள எண்ணம், உங்களுக்கு.......
ஜெட்லி உமது சேவை நாட்டுக்கு தேவை.. எங்களுக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கி அனைவரையும் காக்கிறாய் நீ..வாழ்க உமது கலை பணி.
அப்ப நான் தான் காமெடிபீஸா?
இளமையான & ரகளையான விமர்சனம் ஜெட்லி, keep it up
//D.R.Ashok said...
இளமையான & ரகளையான விமர்சனம் ஜெட்லி//
உங்களை மாதிரி, கேபிள் மாதிரி இளமையா?
:))))))
ஒரு படத்தையும் விடறதில்ல போலிருக்கு:-))
//ஜெட்லி பஞ்ச்:நாணயம் - புதுசா வந்த அஞ்சு ருபாய் நாணயம் மாதிரி,சில காட்சிகளில் அம்பது காசு மாதிரியும் தெரியும்!!!//...சூப்பர்!
நடிகர்கள் பேசிய டயலாக்கும் நல்லாயிருக்கு!
ரெண்டு கண்டத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க பாஸ்...
ரெண்ட பத்தியும் நல்லா சொல்லிருக்கீங்க... (படத்தத்தான்)...
பிரபாகர்.
ரெண்டு கண்டத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க பாஸ்...
sariya sollirukeenga..
பஞ்ச் டயலாக்ல தளபதி தலய மிஞ்சிடுவீங்க போல....நல்ல விமர்சனம்
Post a Comment