Wednesday, January 6, 2010

சுஜாதா சந்தோஷப்படுவார் (என்று நம்புகிறேன்)

"ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து நமக்கு வந்து, தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிக பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு, நிஜ ஹைகூக்கள் அடையாளமிழந்து சமூகச்சாயம் ஏற்றிய, மூன்று வரிகளில் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் ஹைக்கூ என்கிற கேவலநிலைக்கு வந்துவிட்டதால், உண்மையான ஹைக்கூக்களை அடியாளம் கண்டுகொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் தேவை என்று தோன்றி இது எழுதப்பட்டது. இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது."

இது ஹைக்கூ - ஒரு புதிய அறிமுகம் புத்தகத்திற்கு சுஜாதா எழுதிய முன்னுரை. அதில் அவர் மேலும் சொல்கிறார்,

ஒரு ஹைக்கூ எழுதும்போது, "எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை உன்னுடன் பகிர்த்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவத்தை, என்னில் ஏற்படுத்திய சம்பவத்தை உனக்கு சொல்கிறேன். அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்கு ஏற்படுகிறதா பார்" என்று சொல்கிறோம்.

அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள் மூலம்,
 
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது.


உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள் விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்க வேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன் விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது, அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவு சாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம், அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்கு வீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை? அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில்  எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ.


தலைவர் சொன்னதை படிச்சாச்சா, இப்போ என்னோட ஹைக்கூ (அப்படி ஒத்துக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்) படியுங்கள்,

கடந்து செல்லும் ரயில்
கதவோரம் இளைஞன்
கண்களில் நீர்.


தலைவர் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் என்னால எழுதாம இருக்க முடியல, ஒரு வேளை இது நிஜமாகவே ஹைக்கூவாக இருந்தா அவர் சந்தோஷப்படுவார்.

பின்குறிப்பு:

மூணே மூணு வரி மட்டும் எழுதினா, தலைப்பு மட்டும் இருக்கு, மேட்டர் இல்லைன்னு, நீங்க திரும்பிப் போயிட்டா என்ன பண்ணுறதுன்னு தான், அவரோட முன்னுரையை எடுத்து போட்டிருக்கேன்.

முன்னுரையோட விடவேண்டியது தானே, எதுக்கு கவிதை விளக்கம் எல்லாம் எழுதிருக்கேன்னு கேட்டீங்கன்னா, அந்த கவிதை படிச்சப்போ எனக்கு ஒண்ணும் தோணலை, விளக்கம் படிச்சதுக்கு அப்புறம் தான் இப்படியும் இருக்கோன்னு தோணிச்சு. அதே மாதிரி என் கவிதைல எதுவும் உங்களுக்கு தோன்றாவிட்டால், உதாரணமா இருக்கட்டுமேன்னு தான் அதையும் எழுதினேன்.

ஹைக்கூ - ஒரு புதிய அறிமுகம்
உயிர்மை - Rs 40

 
நன்றி
சங்கர்
 

42 comments:

வெற்றி said...

//நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது. //

அந்த நேரத்துல அடுத்த வீட்டுக்காரன் என்ன செஞ்சிட்டு இருப்பான்னு யோசிச்சிட்டு இருந்தா இந்த சத்தம் மட்டும் இல்ல இன்னும் கூட நெறைய சத்தத்த கேக்கலாம்.. :)

வெற்றி said...

//கடந்து செல்லும் ரயில்
கதவோரம் இளைஞன்
கண்களில் நீர்.//

ஆனாலும் உங்களுக்கு கழுகு பார்வைங்க..
இல்ல..அவ்ளோ வேகமா போற ரயில்ல நிக்கறவன் கண்ணீர் உங்களுக்கு தெரியுதாக்கும்..

வெற்றி said...

அது சரி அது எந்த ஊர் ரயில்ன்னு தெரிஞ்சுக்கலாமா?
அவ்ளோ மொல்லவா போகுது?

Chitra said...

உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ. .......
..........சின்ன கல் விழுந்தா ஹைக்கூ. பாறாங்கல் விழுந்தா?
சரி, சரி, கோவிச்சுக்காத நைனா. நல்லா இருக்குது.

வெற்றி said...

//சின்ன கல் விழுந்தா ஹைக்கூ. பாறாங்கல் விழுந்தா? //

அப்புறம் ஹைக்கூ எங்க எழுதுறது? ஹை-கோ தான்..:)

இராகவன் நைஜிரியா said...

ஹைக்கூ... ம்... சாதா கவிதையே நமக்கு புரிவதில்லை. ஹைக்கூவா புரியப் போகுது..

என்னமோ போங்க... உங்களுக்குக்காக ஒட்டு போட்டு, பின்னூட்டமும் போட்டாச்சு

சுசி said...

//இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது."//
எப்படியெல்லாம் குறிக்கோள் கண்டுபிடிக்கிராய்ங்கப்பா..

அட.. உங்க அனுபவத்தை அப்டியே ஹைக்கூவாக்கிட்டீங்களே.. சமத்து சங்கர் நீங்க.

சின்ன அம்மிணி said...

அந்த இளைஞன் கண்களில் இருக்கும் நீருக்கு காரணம் ஆனந்தமாகக்கூட இருக்கலாம். :)

கலகலப்ரியா said...

ஓஹோ...
இப்டி போகுதா
ஹைக்கூ...

சங்கர் said...

//வெற்றி said...
அந்த நேரத்துல அடுத்த வீட்டுக்காரன் என்ன செஞ்சிட்டு இருப்பான்னு யோசிச்சிட்டு இருந்தா இந்த சத்தம் மட்டும் இல்ல இன்னும் கூட நெறைய சத்தத்த கேக்கலாம்.. :)//

உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்

சங்கர் said...

//வெற்றி said...
ஆனாலும் உங்களுக்கு கழுகு பார்வைங்க..
இல்ல..அவ்ளோ வேகமா போற ரயில்ல நிக்கறவன் கண்ணீர் உங்களுக்கு தெரியுதாக்கும்..//

யாரோட கண்ணில் நீர்னு, நான் சொல்லவே இல்லியே

சங்கர் said...

//வெற்றி said...
அது சரி அது எந்த ஊர் ரயில்ன்னு தெரிஞ்சுக்கலாமா?
அவ்ளோ மொல்லவா போகுது//

இப்புடி உன்னை யோசிக்க வச்சிட்டேன் பார்த்தியா, அப்போ இது தான் ஹைக்கூ

சங்கர் said...

//Chitra said...
..........சின்ன கல் விழுந்தா ஹைக்கூ. பாறாங்கல் விழுந்தா?//

வட்டம் இன்னும் பெருசா, அழகா, ரொம்ப நேரம் வரும், அதை ரசிக்கலாம்

சங்கர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஹைக்கூ... ம்... சாதா கவிதையே நமக்கு புரிவதில்லை. ஹைக்கூவா புரியப் போகுது..

என்னமோ போங்க... உங்களுக்குக்காக ஒட்டு போட்டு, பின்னூட்டமும் போட்டாச்சு//

புரிஞ்சிதோ இல்லியோ, ரொம்ப நாளுக்கு அப்புறம் கடைப்பக்கம் வந்திருக்கீங்க, வாங்க வாங்க

சங்கர் said...

//சுசி said...
எப்படியெல்லாம் குறிக்கோள் கண்டுபிடிக்கிராய்ங்கப்பா..//

யக்கா, கண்டுபிடிச்சது தலைவர், நானில்ல,

// அட.. உங்க அனுபவத்தை அப்டியே ஹைக்கூவாக்கிட்டீங்களே.. சமத்து சங்கர் நீங்க//


எல்லாம் அவர் செயல்,

ஆமா, உங்களுக்கு லீவு விட்டாங்கன்னு இப்படி கடையை மூடிடீங்களே, எப்போ திறக்குறதா உத்தேசம்??

சங்கர் said...

//சின்ன அம்மிணி said...
அந்த இளைஞன் கண்களில் இருக்கும் நீருக்கு காரணம் ஆனந்தமாகக்கூட இருக்கலாம். :)//

நாலு பேர இப்படி யோசிக்க வச்சா எதுவும் தப்பில்லை, அப்பாடா, இப்போதான் நிம்மதியா இருக்கு,

சங்கர் said...

//கலகலப்ரியா said...
ஓஹோ...
இப்டி போகுதா
ஹைக்கூ...//


ஹை
ஹைக்கூவிலிருந்து பிறந்த
ஹைக்கூ

ஹாலிவுட் பாலா said...

கவிதை
கடவுளே
காப்பாத்து

பூங்குன்றன்.வே said...

ஹைக்கூ என்னையும் யோசிக்க வைத்தது நண்பா.
1) அந்த இளைஞன் ரயில் டிக்கெட் எடுத்திருப்பானா இல்லையா?
2) காதலில் தோல்வியா?
3) கல்யாணம் முடிவாகியிருக்குமோ?
4) வேட்டைக்காரன் பார்த்திருப்பானோ ?

சங்கர் said...

//ஹாலிவுட் பாலா said...
கவிதை
கடவுளே
காப்பாத்து//

ஆஹா, இன்னொரு ஹைக்கூ,

யாரைக் காப்பாத்தணும்,

கவிதையையா?
பாலாவையா?
என்னையா?
இல்லை கடவுளையா?

சங்கர் said...

//பூங்குன்றன்.வே said...
4) வேட்டைக்காரன் பார்த்திருப்பானோ ?//

வேட்டை இன்னும் முடியலையா? விட்டிருங்க பாவம், (சுறா) மீன் பிடிக்க போகலாம்

அறிவன்#11802717200764379909 said...

புறப்படும் ரயிலில்
கதவோரம் அவன்
கண்களில் நீர்

இது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

மோகன் குமார் said...

மன்னா சங்கர் ஹைக்கூவில் ஒரு பிழை இருக்கிறது..

என்னாது?

அதான் சொல்ல தெரியலை மன்னா !!

பின்னோக்கி said...

ஒத்துக்கர்ர்றேன்..நான் ஹைக்கூன்னு நினைச்சு கூவினது ஹைக்கூகூ இல்லைன்னு ஒத்துக்கர்ர்றேன்... சந்தோஷம் தானே. ஏன் இப்படி கவிஞர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள் :). திருவிளையாடல் தருமி மாதிரி புலம்ப வெச்சுட்டீங்க. விட மாட்டேன்.. இன்னைக்கே ஹைக்கூ... ரெண்டு இல்ல.. 4 எழுதுறேன்.. எல்லாம் நான் படிக்குறத்துக்கு மட்டுமே... பப்ளிஷ் பண்ண மாட்டேன்..

சங்கர் said...

//அறிவன்#11802717200764379909 said...
புறப்படும் ரயிலில்
கதவோரம் அவன்
கண்களில் நீர்//

இதுவும் நல்லாருக்கே

சங்கர் said...

//மோகன் குமார் said...
மன்னா சங்கர் ஹைக்கூவில் ஒரு பிழை இருக்கிறது..

என்னாது?

அதான் சொல்ல தெரியலை மன்னா !! //

அப்படியா, அப்போ அடுத்த ஹைக்கூ எழுதிற வேண்டியதுதான்,

பின்னோக்கி said...

//கடந்து செல்லும் ரயில்
//கதவோரம் இளைஞன்
//கண்களில் நீர்.

1. ரயில் கடந்து போவதை இதை எழுதியவர் எங்கிருந்து பார்த்தார் ?. அவர் வீட்டுக்கு அருகிலேயே ரயில் போகிறதா ?
2. கதவோரம் இளைஞன் - ரயிலின் கதவோரமா இல்லை வீட்டின் கதவோரமா ?
3.கண்களில் நீர் - ரயில் போகும் போது கிளம்பிய தூசி பட்டதால், இதைப் பார்த்தவர் கண்களில் கண்ணீரா இல்லை, ரயிலில் போனவனது கண்களில் கண்ணீர் வருவதை இவர் பார்த்தாரா ? கண்களில் கண்ணீர் வர என்ன காரணம்.
4. ரயில் பாசெஞ்சரா, மெயிலா, எக்ஸ்பிரஸா ?, சரியான நேரத்திற்கு ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது தாமதமாக ஓடுவதால், அதில் பயணம் செய்யும் ஒருவன் அழுகிறானா ?.

போதுமா யோசிச்சது ? இல்லைன்னா சொல்லுங்க இன்னும் யோசிக்கிறேன் :).

சங்கர் said...

@பின்னோக்கி

யப்பா, இது உங்க கவிதையை பார்த்து எழுதினது இல்லை, புத்தகக் காட்சியில், புரட்டிப் பார்த்த சில கருமங்களை, ஸாரி, கவிதைகளை பார்த்தால் எழுதினது,

நீங்க நாலு என்ன, நானூறு எழுதுங்க, நான் வந்து படிக்கிறேன்

பின்னோக்கி said...

மன்னா ! பிழையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

தனி வரி பொருள் தரக்கூடாது. ஆனால் சங்கர் எழுதிய முதல் வரி பொருள் தருகிறது. அது தவறு.

சங்கர் said...

//பின்னோக்கி said...
1. ரயில் கடந்து போவதை இதை எழுதியவர் எங்கிருந்து பார்த்தார் ?. அவர் வீட்டுக்கு அருகிலேயே ரயில் போகிறதா ?
2. கதவோரம் இளைஞன் - ரயிலின் கதவோரமா இல்லை வீட்டின் கதவோரமா ?
3.கண்களில் நீர் - ரயில் போகும் போது கிளம்பிய தூசி பட்டதால், இதைப் பார்த்தவர் கண்களில் கண்ணீரா இல்லை, ரயிலில் போனவனது கண்களில் கண்ணீர் வருவதை இவர் பார்த்தாரா ? கண்களில் கண்ணீர் வர என்ன காரணம்.
4. ரயில் பாசெஞ்சரா, மெயிலா, எக்ஸ்பிரஸா ?, சரியான நேரத்திற்கு ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது தாமதமாக ஓடுவதால், அதில் பயணம் செய்யும் ஒருவன் அழுகிறானா ?.//

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்,

சங்கர் said...

//பின்னோக்கி said...
தனி வரி பொருள் தரக்கூடாது. ஆனால் சங்கர் எழுதிய முதல் வரி பொருள் தருகிறது. அது தவறு. //


அப்படியா, அப்போ ரயில் என்பதை ரயிலில்னு மாத்திடலாமா?,

அப்படியே, எனக்கு ஒரு பொற்கிழியும் தந்துட்டீங்கன்னா நல்லா இருக்கும்

பின்னோக்கி said...

என்னங்க இது ? இந்த மாதிரி தப்புன்னு சொன்னா உடனே நீங்க புத்தகத்துல இருக்குற அடுத்த மேட்டர சொல்லுவீங்க. அப்படியே உசுப்பேத்தி..உசுப்பேத்தி புத்தகத்த முழுசா படிச்சுடலாம்னு பார்த்தா உசாரா இருக்கீங்களே :)

D.R.Ashok said...

உள்நுழைந்து ரசித்து
படித்து பின்
பின்னூட்டம்

கடைக்குட்டி said...

அட என்னங்க 3 வரில எழுதுன எல்லாமே ஹைக்கூவா ??? :-) உங்க ஹைகூ புரியலீங்க எனக்கு,,,

வேட்டை
ஆரம்ப
மாயிடிச்சுடோய்..!!!!!


அப்ப இதுவும் ???? ஹி ஹி..

சங்கர் said...

//பின்னோக்கி said...
என்னங்க இது ? இந்த மாதிரி தப்புன்னு சொன்னா உடனே நீங்க புத்தகத்துல இருக்குற அடுத்த மேட்டர சொல்லுவீங்க. அப்படியே உசுப்பேத்தி..உசுப்பேத்தி புத்தகத்த முழுசா படிச்சுடலாம்னு பார்த்தா உசாரா இருக்கீங்களே :)//

அவ்வளவுதானே, புத்தகத்தைச் சுருக்கி, ஒரு பதிவாகப் போட்டுடலாம்

சங்கர் said...

//D.R.Ashok said...
உள்நுழைந்து ரசித்து
படித்து பின்
பின்னூட்டம்//

வாங்க டாக்டரே,

நம்ம கவிதையால, நாலு ஹைக்கூகள் உண்டாகுதுன்னா, ரொம்ம்ம்மம்ப்ப்ப பெருமையா இருக்கு

சங்கர் said...

//கடைக்குட்டி said...
அட என்னங்க 3 வரில எழுதுன எல்லாமே ஹைக்கூவா ??? :-)//

முதல் பத்தியை ஒழுங்கா படிக்கலைன்னு தெரியுது,


// உங்க ஹைகூ புரியலீங்க எனக்கு,,,//

பின்னூட்டங்களையும் படிக்கலைன்னு தெரியுது

// வேட்டை
ஆரம்ப
மாயிடிச்சுடோய்..!!!!!

அப்ப இதுவும் ???? ஹி ஹி..//

நம்ம பூங்குன்றன் அண்ணனுக்கு, நான் சொன்ன பதிலை ரிப்பீட்டுகிறேன்

சித்து said...

அய்யய்யோ யம்மயம்மயம்மா எப்படிடா மச்சி இப்படியெல்லாம்?? சார் நீங்க எங்கயோ போய்டீங்க

கமலேஷ் said...

மிக பயனுள்ள பதிவு...உங்களின் ஹைகூவும் அருமை ...சுஜாதாவின் வரிகளை அடிகொடிட்டது...மிக பலம்...வாழ்த்துக்கள்...

சங்கர் said...

@சித்து

நான் எங்கேயும் போகல, அங்கேயே தான் இருக்கேன்

சங்கர் said...

@கமலேஷ்

நன்றி, தொடர்ந்து வாங்க

Priya said...

//மூணே மூணு வரி மட்டும் எழுதினா, தலைப்பு மட்டும் இருக்கு, மேட்டர் இல்லைன்னு, நீங்க திரும்பிப் போயிட்டா என்ன பண்ணுறதுன்னு தான், அவரோட முன்னுரையை எடுத்து போட்டிருக்கேன்//...
நல்லவேள, விளக்கம் கொடுத்திருக்கீங்க‌!
நல்லா இருக்கு உங்க ஹைகூ!