Monday, January 11, 2010

முன்னாள் அஜித் ரசிகனின் டைரியிலிருந்து!!

முன்னாள் அஜித் ரசிகனின் டைரியிலிருந்து!!


முதல் நாள் வேட்டைக்காரன் படத்துக்கு விமர்சனம் போட்டவுடன்
என் நண்பர்களிடம் வந்த குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் ஒன்றை
மட்டும் தான் தெரிவித்தன அது "அசல் வரட்டும்" என்ற செய்தி.
நான் இன்னும் அஜித் ரசிகனாகவே பார்க்கப்படுகிறேன் என்று
தோன்றியது.ஆமாம்,நான் அஜித் ரசிகனாக இருந்தேன் அது ராஜா
என்ற படம் வரும் வரைக்கும் என்பது தான் உண்மை.நான் அஜித் ரசிகர் மன்றங்களில் பெரிய பதவியில் இருந்தேன்.......
ஏன்?.... ஏன்?....இப்போ ஏன் இல்ல..??(என்னா பில்ட் அப்!!)

கில்மானந்தாவின் பொன்மொழி:

ஒருவன் வாழ்வில் உச்சக்கட்ட கலாய்த்தளை சந்தித்து
இருந்தால்,அவன் கண்டிப்பாக அஜித் ரசிகனாக இருந்திருக்க
வேண்டும்....(தத்துவம் நெ.6000)


நெகடிவ்...... அதாங்க பிளாஷ்பேக்.

முதல் முதலில் நான் குழந்தையாக இருக்கும் போது அஜித்தை
ரசிக்க ஆரம்பித்தது 1997 இல் காதல் மன்னன் என்ற படத்திலிருந்து தான்.(ஏங்க நாற்பது அம்பது வயசுகாரங்க நாங்க யூத்னு சொல்லும்
போது நான் குழந்தைனு சொன்ன நம்ப மாட்டிங்களா....).அதற்கு
அடுத்து 1998 இல் உன்னை தேடி படத்திலும் அவரின் ஸ்மார்ட்நெஸ்
கவர்ந்தது.நானும் எங்க அண்ணனும் ஒற்றுமையா இருந்தது அஜித்
விஷயத்தில் மட்டும் தான்.நானும் எங்க அண்ணனும் தொடரும்
என்ற மொக்கை படம் என்று தெரியமாலயே அதை பார்க்க ஒரு மணிநேரம் பயணம் செய்து கோயம்பேடு ரோஹிணியில் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புறம் 1999 இல் வாலி வந்தது.வாலி படத்தை வெளியான
ஒரு வாரத்தில் தேவியில் ரெண்டு முறையும் ப்ராத்தனாவில்
ஒரு தடவையும் பார்த்தேன்..இந்த கால கட்டம் தான் நான்
அஜித்தின் தீவிர விசிறியான நேரம் என்று வரலாறு சொல்கிறது.
1999 இல் அமர்க்களம் ஷூட்டிங் பெசன்ட் நகரில் நடந்தது,நான்
தினம்தோறும் பள்ளி முடித்த பின் ஷூட்டிங் பார்க்க சென்று
விடுவேன்.ஷூட்டிங்இல் அஜித்தின் கோப முகத்தையும் கண்டேன்
இருந்தாலும் நான் அந்த படத்தில் நடித்ததால் அதை பெரிதாக
எடுத்து கொள்ளவில்லை.எந்த சீனில் வருகிறேன் என்று நீங்கள்
கேட்டால் படத்தின் கிளைமாக்ஸ்இல் கும்பல் கும்பலாக ஓடும்
ஒரு காட்சியில் மங்கலாக என் மஞ்ச கலர் டி.ஷர்ட் தெரியும்!!


2000 இல் முகவரி ஓகே ரகம்,அதன் பின் வந்த உன்னை கொடு என்னை தருவேன் என்ற தலைவலி படம்.பின் கைகொடுத்தது 2001 இல் தீனா, இந்த படத்தில் இருந்து தல அவர்கள் அதிரடி படத்தை தேர்ந்து எடுத்தார்.
உச்சக்கட்டமாக சிடிசன் படம் வெளிவரும் முன்பு அந்த சோக சம்பவம் நடந்தது.ஆமாம் அது அஜித்துக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்போம் என்று நான் சிறு வயதில் இருந்து பழகிய தியேட்டர் ஊழியர்கள் கூறினார்கள். போர்டு வைக்கணும் அது இது என்று பணத்தை கறந்து விட்டார்கள். எனக்கு ஒரு பதவி வேற கொடுத்தாங்க அது துணை செயலாளர் பதவி.எங்க அண்ணனுக்கு பொருளாளர் பதவி கொடுத்தாங்க.ரசிகர் மன்றத்தில் இருந்த பத்து பேருக்கும் ஆளுக்கு ஒரு பதவி கொடுத்தாங்க!!(ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும்...ஆன எங்க தலைவர் அவரே பலர் பேரை போட்டு நிரப்பி விட்டார்).சிடிசன் படம் வெளிவந்தது படத்தை பற்றி உங்களுக்கு தெரியாதது அல்ல.ரசிகர் மன்றத்தில் இருந்த பத்து பேரில் அஞ்சு பேரை ஆளை காணோம் என்பது சிடிசன் செய்த சாதனையில் ஒன்று....

சிடிசன் படத்துக்கு போர்டு வச்சோம்...2002 இல் வெளியான ரெட்
படமும் பயங்கர எதிர்ப்பார்ப்பு.எங்கள் மன்றத்தில் பல பேரை
காணாததால் மன்ற தலைவர் அவர்கள் போர்டு வைக்க எவனும்
சிக்க மாட்டான் என்று பேனர் கட்டுவோம் என்று முடிவு செய்தார்.
படம் ரிலீஸ் அன்று பேனரை பார்த்தால் இருபது ஆட்களின் பெயர்
பேனரில் இருந்தது!!

அது ஒரு கருப்பு சரித்தரம்:

2002 இல் வெளியான ராஜா என்ற மகா காவியத்தை நான்
முதல் ஷோ பார்க்கவில்லை.பக்கத்துக்கு தியேட்டரில் தான்
படம் ரிலீஸ்,இருந்தாலும் நம்பிக்கை இல்லை.ராஜா படத்தின்
முதல் நாள் மேட்னி ஷோவே ஈ ஆடுவதாக விஜய் ரசிகர்கள்
கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.சரி அப்படி என்ன தான்
படத்தில் இருக்கு என்று தலையில் தூண்டு போடாத குறையாக
காவியத்தை பார்த்து வந்தேன்.ரசிகர் மன்றத்தில் கடைசியாக
இருந்த தலைவரும் வேறு ஊருக்கு போய் விட்டதால் ரசிகர்
மன்றத்தை அதோடு மூட்டை கட்டியாச்சு.பின்பு அஜித் பேட்டி
எல்லாம் காமெடி ஆன டைம் அது.நான் அஜித் ரசிகன் என்ற
மாயவலையில் இருந்து விடுபட்டு கொண்டிருந்தேன்.

2003 மற்றும் 2004 இல் ஆஞ்சநேயா, ஜனா,போன்ற படங்களை அடுத்தடுத்து பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி போனேன்.அந்த சமயம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கருப்பு சரித்தரம் என்றே சொல்லலாம்.ரோட்ல போறவன் கூட கூப்பிட்டு வச்சு கலாய்ப்பாங்க.இந்த காலகட்டத்தில் அஜித் கார் ரேஸ்களில்
கவனம் செலுத்தியதால் அதோடு நானும் அஜித் ரசிகன் என்ற போர்வையிலிருந்து முழுதும் வெளியே வந்துவிட்டேன்.ஆனாலும் ஊருக்குள்ள நான் அஜித் ரசிகன் இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை.

2005 இல் கூட படிக்கும் நண்பன் ஆசைபட்டான் என்று பரமசிவன்
என்ற படத்தை அவனோடு போய் முதல் நாள் பார்த்தேன்.
பரமசிவன் மாதிரி படத்தை பார்க்கிற கொடுமையை என் எதிரிக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்தேன். அதன் பின் வெளியான திருப்பதி,ஆழ்வார் போன்ற படங்களை நான் இன்று வரை பார்த்தது இல்லை.இப்பொழுது பில்லா மற்றும் ஏகன் படங்களை முதல் நாள் பார்த்தேன்......

இன்று:

நேற்று காலையில் அசல் பாட்டுக்களை என் கைப்பேசியில்
கேட்டேன்...பின்பு போர்க்களம்,பையா,கோவா போன்ற படங்களுக்கு
மாற்றிவிட்டேன். அசல் பாடல்களில் சில பாடல்கள் கேட்கும்
போது ஏதோ டி.வி.சீரியல் பாட்டு மாதிரி இருப்பதை உணர
முடிகிறது.சரண் வேறு படத்தை நாடகம் மாதிரி எடுப்பார்...
பார்ப்போம்!!பரத்வாஜ் அவர்கள் யுவன் மாதிரி ட்ரை பண்றேன்னு
சொல்லி முட்டியை உடைச்சிக்கிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அஜித் அவர்கள் அல்டிமேட் ஸ்டார் பட்டதை இனிமே பயன்படுத்த மாட்டேன் என்று அவர் கூறிய கருத்தை இப்போது நடித்து கொண்டிருக்கும் புரட்சி,சின்ன,மினி தளபதிகள் கேட்டு திருந்தினால் நன்றாக இருக்கும்.......

உங்களுக்கும் இது போல் அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து
கொள்ளவும்.....ஒட்டு குத்திட்டு போங்க....

நன்றி :
indiaglitz.ajithfan.blogspot.com.


நன்றி
ஜெட்லி சரண்.

41 comments:

பிரபாகர் said...

தல வரலாறு நல்லாத்தான் இருக்கு!

எல்லாம் கனவு மாதிரி சரண். சில நேரங்கள்ல நாம செஞ்சத நினச்சா நமக்கே சுர்ருனு வரும். விட்டுத்தள்ளுங்க பாஸ்...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

பிரபாகர்.

பெசொவி said...

ஒரு கலைஞனுக்கு என்று இல்லாமல் கலைக்கு மட்டுமே ரசிகராக இருந்தால் இதுபோன்ற எந்த ஏமாற்றமும் வராது என்பது என் அபிப்ராயம்.

Paleo God said...

உங்க தலைய விட்டுட்டு அடுத்தவங்க தலைய ரசிச்சா இப்படித்தான்... (அசல் பாட்டு தான் வீக்கு படம் ஸ்ட்ராங்குன்னு சொன்னாங்க)...அட ஏம்ப்பா அடிக்க வர..::))

கார்க்கிபவா said...

//அஜித் அவர்கள் அல்டிமேட் ஸ்டார் பட்டதை இனிமே பயன்படுத்த மாட்டேன் என்று அவர் கூறிய கருத்தை இப்போது நடித்து கொண்டிருக்கும் புரட்சி,சின்ன,மினி தளபதிகள் கேட்டு திருந்தினால் நன்றாக இருக்கும்//

அதுக்கு காரணம் ஜோசியமாம். விசாரிச்சிங்களா?

Raju said...

டன் டணக்கா..டன் டணக்கா..!
டணக்கா டன் டணக்கா..!
டன் டணக்கா..டன் டணக்கா..!
டணக்கா டன் டணக்கா..!

:-)

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு ஜெட் லி. உண்மையாய் எழுதி உள்ளீர்கள். உங்களின் வலி புரிகிறது. "யாருக்கும் ரசிகன்" ஆகாமல் யார் நன்றாக நடித்தாலும் ரசித்து பாராட்டுவது நல்லது. இதை தான் நான் follow செய்கிறேன்.

vinodhu said...

http://www.youtube.com/watch?v=7IW3-HUd14U

Chitra said...

. ...........ஜெட்லி, உங்கள் வரலாற்றில் நீங்க நொந்து நூடுல்ஸ் ஆன கதையும் கல்வெட்டில் இருக்கும்னு நான் நினைச்சி கூட பாக்கலை. அழாதீங்க.
உங்க சோக கதையை கேட்டு ..................... :-(

புலவன் புலிகேசி said...

நான் எப்போதும் கதக்கும் நடிப்புக்கும் ரசிகன். என்னுடன் பணிபுரியும் சிலர் அஜீத் ரசிகன் என சொல்லி கொண்டு மற்ற நடிகர்களை கலாய்ப்பதும், படம் நன்றாக இருந்தாலும் குறை சொல்வதும் கொடுமை. இன்னும் திருந்தாமலே இருக்கானுங்க. ரசிகனாய் இரு பைத்தியகாரனாய் இருக்காதே...இது அவர்களுக்கு சொல்லும் விடயம்..

ஊடகன் said...
This comment has been removed by a blog administrator.
வெண்ணிற இரவுகள்....! said...

முகவரி படம் நல்ல படம் நண்பா ....அற்புதமான நடிப்பு......கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நல்ல படமே ...............பூவெல்லாம் உன் வாசம் நல்ல படமே...........
ஒரே ஹீரோயிசம் படம் மட்டுமே பார்த்தது உங்கள் ரசனை தவறாய் உள்ளது அவ்வளவே

வெண்ணிற இரவுகள்....! said...

ஜெட்லி உங்கள் பதிவில் கிரீடம் வரலாறு விட்டுவிடீர்கள்
அப்ப நீங்கள் அது நல்ல படம் என்று ஒத்துகொள்கிறீர்கள் ஆனால் அஜித் மீது
காழ்புணர்ச்சி வேற என்ன சொல்ல..............................SMART பார்த்து தான் FAN ஆனீங்க உங்க ரசனையை என்ன சொல்ல நண்பா......தல நன்றாக நடிக்க கூடியவரே ..அவரை உபயோக படுத்த வேண்டும் .....
எனக்கு தெரிந்து "அசல்" பாடல் நன்றாகவே உள்ளது நண்பா...."குதரைக்கு தெரியும்" பாடல் தவிர.................

நீங்கள் நல்ல படங்களை விட்டு விட்டு மோசமான படங்களை வைத்து விமர்சனம் செய்தால் ......கமல் கூட "மகராசன்" என்ற அற்புதமாய் படம் எடுத்துள்ளார்

ஷாஜி said...

//ஜெட்லி உங்கள் பதிவில் கிரீடம் வரலாறு விட்டுவிடீர்கள்
அப்ப நீங்கள் அது நல்ல படம் என்று ஒத்துகொள்கிறீர்கள் ஆனால் அஜித் மீது
காழ்புணர்ச்சி வேற என்ன சொல்ல..............................SMART பார்த்து தான் FAN ஆனீங்க உங்க ரசனையை என்ன சொல்ல நண்பா......தல நன்றாக நடிக்க கூடியவரே ..அவரை உபயோக படுத்த வேண்டும் .....
எனக்கு தெரிந்து "அசல்" பாடல் நன்றாகவே உள்ளது நண்பா...."குதரைக்கு தெரியும்" பாடல் தவிர.................

நீங்கள் நல்ல படங்களை விட்டு விட்டு மோசமான படங்களை வைத்து விமர்சனம் செய்தால் ......கமல் கூட "மகராசன்" என்ற அற்புதமாய் படம் எடுத்துள்ளார்//

Repeate

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

வெற்றி said...

என் நண்பன் தீவிர தல விசிறியாய் இருந்தான்..நண்பர்களின் கலாய்த்தல் தாங்க முடியாமல் போக்கிரி படம் பார்த்து விட்டு விஜய் ரசிகன் ஆனான்..
அவன் ராசி அவனை அங்கும் இருக்க விடாது துரத்த இப்போது தனுஷ் ரசிகன் ஆகி விட்டான்..

//உங்களுக்கும் இது போல் அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து
கொள்ளவும்.....ஒட்டு குத்திட்டு போங்க....//

பகிர்ந்தாச்சு..வோட்டும் போட்டாச்சு..

ஜெட்லி... said...

@ சின்ன அம்மிணி

மிக்க நன்றிங்க...

@ பிரபாகர்

அண்ணே இப்போ நான் யார் ரசிகனும் இல்லை...

ஜெட்லி... said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

அதை நான் ரொம்ப லேட்ஆ தான் புரிஞ்சிக்கிட்டேன்....

ஜெட்லி... said...

@ பலா பட்டறை

எதா இருந்தாலும் படத்தை பார்த்து முடிவு செய்வோம்...
படம் ஸ்ட்ராங்ஆ இல்லையானு.....

ஜெட்லி... said...

@ கார்க்கி

//அதுக்கு காரணம் ஜோசியமாம். விசாரிச்சிங்களா? //

அப்படியா........
நல்லதை மட்டும் வரவேற்ப்போம் கார்க்கி ,,,,,

ஜெட்லி... said...

@♠ ராஜு ♠

புரியுது.....

ஜெட்லி... said...

@மோகன் குமார்

நன்றி அண்ணே...நான் திருந்தி பல வருஷம் ஆச்சு....

ஜெட்லி... said...

@ வினோத்து

நானே நொந்து போய் இருக்கேன்...ஏன் லிங்க் அனுப்பி
இன்னும் நோகடிக்கிற...

vettippayapullaiga said...

sariyana kalayppu!

ஜெட்லி... said...

@சித்ரா

அட நீங்க பீலிங்க்ஸ் ஆகுரிங்க...
இதெல்லாம் சகஜம்...

ஜெட்லி... said...

@ புலவன் புலிகேசி

கரெக்ட்ஆ சொன்னிங்க புலிகேசி....

//ரசிகனாய் இரு பைத்தியகாரனாய் இருக்காதே//

சூப்பர்...

shabi said...

அடுத்து 1998 இல் உன்னை தேடி படத்திலும் அவரின் ஸ்மார்ட்நெஸ்/////இப் படம் சூர்யா நடிப்பில்...............//

ஜெட்லி... said...

@ வெண்ணிற இரவுகள்

//ஒரே ஹீரோயிசம் படம் மட்டுமே பார்த்தது உங்கள் ரசனை தவறாய் உள்ளது அவ்வளவே //

நீங்க சொன்ன எல்லா படமும் நான் பார்த்து இருக்கிறேன் அதை
பற்றி நான் குறை கூறவில்லை.....
நான் என் என்னத்தை தான் சொன்னேன் அவ்வளவு தான்...
அதுக்கு போய் ரசனைனு நீங்க பேசுனா நான் ஒன்னும் சொல்றதுக்கு
இல்ல பாஸ்........

ஜெட்லி... said...

@ வெண்ணிற இரவுகள்..

//கமல் கூட "மகராசன்" என்ற அற்புதமாய் படம் எடுத்துள்ளார் .//

நான் அந்த படத்தை முழுதும் பார்க்கவில்லை..பானுபிரியா
பாட்டு மட்டும் மிட்னைட் மசாலாவில் பார்த்ததாக நினைவு....
எனக்கு எப்பவுமே இந்த மாதிரி ரசனை தான் பாஸ்....
ஏன்ப்பா கோப படுரிங்க...என் ரசனையை பற்றி என் பதிவுலக
நண்பர்களுக்கு தெரியும்....

ஜெட்லி... said...

@ஷாஜி

தங்கள் ரீபீடுக்கு..வெண்ணிற இரவுக்கு அளித்த அதே பதில்....

ஜெட்லி... said...

@ யோ

யோ என்னையா ஆளை ரொம்ப நாளா காணோம்...

ஜெட்லி... said...

@ வெற்றி

//பகிர்ந்தாச்சு..வோட்டும் போட்டாச்சு.. //

நன்றிப்பா....

ஜெட்லி... said...

@vettippayapullaiga

நன்றி நண்பரே...

பின்னோக்கி said...

இப்ப தான் வேட்டை முடிஞ்சது. நீங்க அசல அலச ஆரம்பிச்சுட்டீங்க. ம்ம்..

குப்பன்.யாஹூ said...

a good actor but was not able to get right films with right directors.

baarathiraaj, K vishwanath, baalu mahendra had to be used him,

Eevn today no female will say that they do not like Ajith.

vasu balaji said...

என் கடமைய செய்துட்டேன்:)).

Priya said...

நானும் (உங்களை மாதிரி) குழந்தையாக:-)இருக்கும்போது ஆசை பார்த்து அஜித் ரசிகையாயிருந்து, அப்புறம் காதலுக்கு ம‌ரியாதை பார்த்து விஜய் ரசிகையாகி, இப்போ ???

ஊடகன் said...

இதையும் கொஞசம் படிங்க,

http://eppoodi.blogspot.com/2010/01/blog-post_8366.html

நாங்கலெள்ளாம் ஏன் அஜித்தை மதிக்கிரோம்னு புரியும்.......

ஊடகன் said...

இதையும் கொஞசம் படிங்க,

http://eppoodi.blogspot.com/2010/01/blog-post_8366.html

நாங்கலெள்ளாம் ஏன் அஜித்தை மதிக்கிரோம்னு புரியும்.......

Anonymous said...

உங்களை போன்ற ஒரு ரசிகன் தலையை விட்டு போவது அவருக்கு நல்லதே... அவர் சிலரை போன்று சினிமாவில் நடிக்க தெரியாமல் நிஜத்தில் நடிப்பவர் அல்ல... சினிமாவில் நடிப்பார்... நிஜத்தில் அல்ல... நல்ல மனிதனை மதிக்க தெரியாதவர் நீங்கள் ...

// அஜித்தை அவருடைய நல்ல படங்களிலும் , அவரின் சிறந்த குணங்களிலும் ரசிக்கும் ரசிகன் நான் ....

மனிதனை மதிக்க தெரியாதவர் நீங்கள் ...

// அஜித்தை அவருடைய நல்ல படங்களிலும் , அவரின் சிறந்த குணங்களிலும் ரசிக்கும் ரசிகன் நான் ....

மனிதனை மதிக்க தெரியாதவர் நீங்கள் ...

// அஜித்தை அவருடைய நல்ல படங்களிலும் , அவரின் சிறந்த குணங்களிலும் ரசிக்கும் ரசிகன் நான் ....

எது எப்படியோ மனதில் பட்டதை கூறிவிட்டு,நடிப்பு என்பதை தொழிலாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் 'தலை'க்கு ஒரு சல்யுட்...

"ராஜா" said...

///அதுக்கு காரணம் ஜோசியமாம். விசாரிச்சிங்களா?

ஷப்பப்பா... தானும் திருந்த மாட்டானுக அடுத்தவனையும் திருந்த விட மாட்டானுக...

Unknown said...
This comment has been removed by a blog administrator.