Monday, October 18, 2010

வாடா - ஒலக பட விமர்சனம்!!

வாடா....வந்துரிச்சுடோய்....!!


அன்பான சுந்தர்.சி ரசிகர்களே வெள்ளிக்கிழமை நீங்க வாடா படம் பார்க்க
போய் இருந்தா பெட்டி வந்திருக்காது....சனிக்கிழமை தான் பெட்டி வந்ததுனு
சொன்னாங்க, என்னது சவபெட்டியா??னு எல்லாம் கேட்க கூடாது.நான்
சொல்லிட்டு இருக்கிறது வாடா படத்தோட பெட்டி பத்தி. நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி. அவர்களை பற்றி ஊரில் அவர் இத்தனை படத்தில் நடிச்சு என்னத்த 'கலட்டிடாறுனு கேட்கருவங்களுக்கு என்கிட்ட சில பதில் இருக்கு....
அதாவது இந்த படத்தில் கலெக்டர்ஆ வந்து கண்ணாடியை அடிக்கடி
கலட்டுராறு,,, ஒரு சீன்ல நாயகியோட பான்ட்டை கூட கலட்டுராறுனா
பாருங்க...


அகில கெரக சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பில் இந்த பதிவை வெளியிடுவிதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.


நான் சனிக்கிழமை நைட் ஷோ ஜெயந்தி தியேட்டர்ல படம் பார்த்ததுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு ஏன்னா சென்னை சிட்டியில் அங்கே தான் டிக்கெட் விலை கம்மி. எப்படியும் படம் டம்மினு உலகத்துக்கே தெரியும் அதை ஏன் அதிக காசு கொடுத்து பார்த்துக்கிட்டுனு அங்கேயே இந்த மகா காவியத்தை பார்த்துட்டேன்.இந்த ஊரே ஏன் உலகமே நீ ஏன்ப்பா வாடா படத்தை பார்க்க துடிக்கிற அப்படின்னு கேட்டாங்க....அதுக்கு ஒரே பதில் நானும் பார்க்கலைனா யாரு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்றது.... எல்லாம் கெரகம்....


வாடா என்ன கதை??


சரி நாம படத்தோட கதைக்கு வருவோம்....என்னது அப்படி ஒண்ணு இருக்கா??னு நீங்க மெரசல் ஆகாதீங்க...ஆனா இருக்கு படு பயங்கரமான கதை...விஜய் நடிச்ச மதுர படம் பார்த்து இருக்கீங்களா?? அந்த மாதிரி இருக்கும்...என்ன இந்த படத்துல கொஞ்சம் நேரம் ரிஷிகேஷ் ஊரை காட்டுறாங்க....முதல் காட்சியில் இருந்து அப்படியே அனல் பறக்குது காரணம் தியேட்டர்ல சுத்தமா காத்து வரல என்பது மட்டுமே என்று இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்.

விவேக் பத்தி என்னத்த சொல்றது போங்க.சுருளிராஜன் கெட்டப் போட்டுட்டு
காமெடி அப்படின்னு ஏதோ பண்ணிட்டு இருந்தார். ஒரு காட்சியில் மட்டுமே
சிரிப்பு வந்தது. நல்ல வேளை இந்த கொடுமையெல்லாம் பார்க்க சுருளிராஜன்
இல்ல. சுருளிராஜனோட கஞ்சன் காமெடி எப்போதுமே என் ஆள் டைம் பேவரைட்.இமான் பத்தி ஏற்கனவே சொன்னது தான் அவர் பாட்டே ரீமிக்ஸ் மாதிரி தான் இருக்கும் இதுல தனியா ரீமிக்ஸ்னு சொல்லி ஆட்களை கொல்லுகிறார்.

ஷெர்லின் நம்ம மசாலா பட நாயகியாக வந்து மூஞ்சில ரியாக்சன் தவிர வேற எல்லாத்தையும் நல்லாவே காட்டுறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் அந்த சீரியல் நடிகர் அதாங்க நேபாளி படத்தில் கூட போலீஸ்க்காரர வருவாரே அவர் வந்து அப்போ அப்போ சாவல் விட்டுட்டு போறார்.


FACE TO FACE


படத்தோட உயிர்நாடி காட்சியே அந்த பைக் மேல நின்னு சுந்தர்.சி சுட் பண்றது தான் ஏன்னா அந்த காட்சி தான் இன்டெர்வல் ப்ளாக்...பல பேரு தியேட்டரை விட்டு தப்பிச்சு உயிர் பிழைக்க அந்த காட்சி ரொம்ப உதவிச்சு. ஆனா பாருங்க அப்பமும் நான் போகலை....நம்ம தல பரமசிவன் படத்தில பைக்ல கிழே நின்னு சுட்டார் ஆனா எங்க சூப்பர் பாக்கு தல பைக் மேல நின்னு சுட்டு அரிசி கடத்துரவனை பிடிக்கிறேன்னு சொல்லி மூணு லாரியோட டீஸல் டாங்கை சுட்டு அந்த அரிசியை யாருக்கும்
கிடைக்காத படி செய்ஞ்சுடுறார்.


கலெக்டர்னு சொன்னவுடனே அப்படியே பக்கவா முடி வெட்டிட்டு இருப்பார்னு மட்டும் நீங்க நினைக்காதீங்க...ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான் மாட்டி இருப்பார் என்ன தலையில சூப்பர் பாக்கு பிளீச் மட்டும் இருக்காது அவ்வளவுதான். படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச வசன காட்சி ஒன்னு இருக்கு... கலெக்டர் நண்பரிடம் போய் நாயகி...


நாயகி : எங்கையா உங்க கலெக்டர்...நான் அவர் வருவார்னு எவளோ நேரம்
வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...


நண்பன் : நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க...நீங்க யாரு??


நாயகி : ஐட்டம்...


நண்பன் : ஹலோ என்ன சொல்றீங்க...


நாயகி : இல்ல நான் கலெக்டர்ஆ லவ் பண்றேன்னு சொன்னேன்...


இந்த மாதிரி வசனமெல்லாம் வாடா உலக படத்தில் மட்டுமே வருகிறது...
இதற்க்காகவே நீங்க இந்த படத்துக்கு போகணும்.அது மட்டுமில்ல வாடா
படம் பார்ப்பதனால் மனவலிமை, பொறுமை , தைரியம் என எல்லாமே
கண்டமேனிக்கு வளரும். வாடா பட பெயருக்கு வரிவிலக்கு கொடுத்தாங்களா
இல்லையானு நமக்கு தெரியாது...ஆனா வாடா படம் பார்க்க போறவங்களுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ஏதோ ஒரு அமௌன்ட் கொடுத்தால் தேவலை!!

வாடா - காஞ்சி போன பேடா....


பாருங்கள் வாடா படத்தை அடையுங்கள் சமாதி நிலையை..!!
ஹே கில்மா கி ரவா...!!


வாடா படத்தை நம்ம கவுண்டர் பார்த்தார்னா என்ன சொல்லி இருப்பார்....


" அடேய் சூப்பர் பாக்கு மண்டையா உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா...அது ஏன்டா எப்பவுமே கழுத்துல ஒரு துண்டை சுத்திட்டு வர்ற..?? ஹா..எனக்கு புரிஞ்சு போச்சி..கோவில்ல உண்டக்கட்டி தருவாங்க அதை வாங்கி துண்டுல கட்டிக்கிட்டு ஒரு வாரம் திங்கலாம்னு தானே....நல்லா காட்ட்ரிங்கப்பா டகால்டி..."தியேட்டர் நொறுக்ஸ்..


# படத்தோட முதல் இருபது நிமிஷம் பார்த்துட்டு நான் ரமணா, கஜினி ரேன்ஜ்க்கு பீல் பண்ணிட்டு இருந்தேன் ஆனா பக்கத்தில் இருந்த நண்பர் "அநேகமா இது தான் சுந்தர்க்கு கடைசி படமா இருக்கும்"னு சொல்லி நம்மை போன்ற ரசிகர்களை ஆப் பண்ண நினைக்கிறார்கள்...நாம கவலை பட வேணாம் வரிசயா நமக்கு தலைவலி கொடுக்க ஸாரி குதுகலம் கொடுக்க சுந்தர் படங்கள் வந்து கொண்டே இருக்குது....

# இன்டெர்வல் அப்போ சில பேரு விட்டா போதும்னு எஸ்கேப் ஆகிட்டாங்க..
சில பேரு அடிச்ச சரக்கில் மட்டை ஆகி இருந்தாங்க....


# படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் இருந்தது...என் கலேரியில் ஒரு பதினைந்து பேர் இருந்தோம்...ஆனா இன்டர்வல்க்கு பிறகு அது ஆறாகி போச்சி...இந்த படத்தை நான் இன்டர்வல்க்கு பிறகும் நான் ஏன் பார்த்தேன்னா... படத்தில் ஒரு சஸ்பென்ஸ் இருந்தது...அதுவும் மொக்கையா தான் இருந்தது ஆனா இந்த இமான் பையன் இருக்கானே ரீமிக்ஸ் பண்றேன்னு சொல்லி "என்னடி ராக்கமா" பாட்டை கொலை பண்ணி காதை செவடாக்கிட்டாறுப்பா...அப்போ எஸ்கேப் ஆகி வந்தவன் தான்....


# என் வாழ்நாளில் நான் பார்த்த மொக்கை படத்துக்கு இந்த படத்துக்கு
மட்டும் தான் யாருமே கத்தலை....அதனால நொறுக்ஸ் அவ்வளவா தேரல...


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கு முக்கியம் நண்பர்களே....!!


ஜெட்லி...(சரவணா...)

48 comments:

Balaji saravana said...

//அதுக்கு ஒரே பதில் நானும் பார்க்கலைனா யாரு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்றது.//

எங்களுக்காக உங்க உயிரையே பணயம் வச்சு இந்தபடத்த பாத்திருக்கீங்க,
உங்க கடமை உணர்ச்சில உடம்பெல்லாம் புல்லரிக்குது ஜெட்லி..!
இன்று முதல் நீ "சூரப்பட்டி சுறா" என்று அன்போடு அழைக்கப்படுவாய்.. அவ்.. :)

டம்பி மேவீ said...

வாடா படம் ஒரு தெய்விக அனுபவமுங்க ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பயம் இருக்கணும். அப்புறம் வரேன்

சி.பி.செந்தில்குமார் said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனம் சக்கையா இருக்கு

VELAN said...
This comment has been removed by the author.
VELAN said...

//முதல் காட்சியில் இருந்து அப்படியே அனல் பறக்குது காரணம் தியேட்டர்ல சுத்தமா காத்து வரல என்பது மட்டுமே என்று இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்.//

Timing..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சார் ஜெட்லி சார் இருக்கீங்களா இல்லை சமாதி நிலையை அடைஞ்சிட்டேன்களா?

முரளிகண்ணன் said...

ரசிக்க வைக்கும் விமர்சனம்.

Chitra said...

///வாடா பட பெயருக்கு வரிவிலக்கு கொடுத்தாங்களா
இல்லையானு நமக்கு தெரியாது...ஆனா வாடா படம் பார்க்க போறவங்களுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ஏதோ ஒரு அமௌன்ட் கொடுத்தால் தேவலை!!///


.......படம் மோசமா இருக்கும் என்று தெரியும்.... ஏன் ஜெட்லி, இம்பூட்டு மோசமாவா இருந்துச்சு? பாவம்ங்க நீங்க.....!

நையாண்டி நைனா said...

அகில பிர"பஞ்ச" நாய்கன், காசுக்கு ஆறு முட்டாய் மாதிரி, "ஆசுக்காறு" வாங்க போகும் எங்கள் சிங்கம் சுந்தர்.சி அவர்களை பாராட்டும் உங்களுக்கு... "மாஞ்சாவின் நெஞ்சு" அப்படின்னு பட்டம் கொடுக்குறோம்...

இப்படிக்கு நெஞ்சிலே மாஞ்சா இல்லாதவர்கள் சங்கம்-

ranjith said...

next cm enga annan sundar.c than

sakthi said...

ஆஹா விமர்சனம் அருமை

ஆகாயமனிதன்.. said...

வந்தாச்சுல்ல....'போடா' தியேட்டர விட்டு....
- நாயைப் பார்த்து சொன்னது தியேட்டர் வாட்ச்மேன்..

அருண் பிரசாத் said...

இதையும் பார்த்துட்டு உசிரோடவா இருக்கீங்க... பொறுமைசாலிங்க நீங்க

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

:)

ப.செல்வக்குமார் said...

//அது மட்டுமில்ல வாடா
படம் பார்ப்பதனால் மனவலிமை, பொறுமை , தைரியம் என எல்லாமே
கண்டமேனிக்கு வளரும். //

இதெல்லாம் கூட வளருதுங்களா .?
அப்படின்னா கண்டிப்பா பாக்குறேன் ..!! ஆனா நீங்க சூப்பர் பக்கு மண்டயன கிண்டல் பண்ணினதால அவரோட ரசிகப் பெருமக்கள் உங்க ப்ளாக் வந்து எதாச்சும் பண்ணிடப் போறாங்க .!!

RAVI said...

எங்கள காப்பாத்துன ஒங்களுக்கு எல்லார் சார்பாகவும் நன்றி.
"சூரப்பட்டி சுறா" - வாழ்க.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இதுக்கு டெய்லி கஸ்தூரி சீரியல் பாருங்கண்ணே! :)

Riyas said...

என்னது வாடா உலகபடமா....?

எஸ்.கே said...

பாவமாக இருக்கு உங்களை நினைச்சா!

ஜெட்லி... said...

@Balaji saravana

//"சூரப்பட்டி சுறா"//ஏன்ப்பா உங்களுக்கு வேற நல்ல பேர் கிடைக்கிலியா....!!
மீ பாவம்...


@டம்பி மேவீ


நீதான்யா சரியா புரிஞ்சு வச்சிருக்க...

ஜெட்லி... said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)சின்ன கேப் கிடைச்சா போதுமே...உடனே லந்தை
கொடுக்குற....ஹ்ம் நடத்துங்க...@சி.பி.செந்தில்குமார்

யாருமே வலையுலகில் வாடா படத்தை பார்க்க மாட்டாங்கனு
நினைச்சேன்....அதை நீங்க உடைச்சுடீங்க அண்ணே....

ஜெட்லி... said...

@VELANநன்றி வேலன்...@முரளிகண்ணன்நன்றி அண்ணே....

ஜெட்லி... said...

@Chitraஅதை ஏன் கேட்குறீங்க....படம் பார்த்துட்டு வந்தாலும் வந்தேன்...
நைட் துக்கமே வரல...கரண்ட் வேற போய்டுச்சு.... நேத்து புல்லா
தலைவலி....@நையாண்டி நைனா


//மாஞ்சாவின் நெஞ்சு//ஏன் பாஸ்...எப்படி இப்படி யோசிக்கிறீங்க...
மாஞ்சா வேணும்னா காச்சி அனுப்பி விடுறேன் பாஸ்...

ஜெட்லி... said...

@ranjithரஞ்சித் உங்களை மென்மையாக கண்டிக்கிறேன் ...
ஏன் பிரதமர் ஆக அண்ணனுக்கு தகுதி இல்லையா??


@sakthiநன்றி....

நன்றி..

ஜெட்லி... said...

@ all

//

ஆகாயமனிதன்.. said...
வந்தாச்சுல்ல....'போடா' தியேட்டர விட்டு....
- நாயைப் பார்த்து சொன்னது தியேட்டர் வாட்ச்மேன்..

//

ஹி..ஹி...கலாசிட்டாராம்....

ஜெட்லி... said...

@அருண் பிரசாத்தியேட்டர்குள்ள கயிறு கொண்டு போறதுக்கு அனுமதி இல்லங்க....


@பெயர் சொல்ல விருப்பமில்லைநன்றி அண்ணே...

ஜெட்லி... said...

@ப.செல்வக்குமார்


நான் எப்ப கிண்டல் பண்ணேன்....
அன்பா கூப்பிடுறேன்...
நான் தான் முதல் ரசிகன்...@RAVIஅய்யோயோ பேரு பரவிடும் போல இருக்கே...
வேணாம் பாஸ்...

ஜெட்லி... said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இதுக்கு டெய்லி கஸ்தூரி சீரியல் பாருங்கண்ணே! :)
//டைமிங் சொல்லுங்க பார்க்குறேன்....
அப்படியே முன் கதை எல்லாம் போன்ல சொல்லுங்க...
நாம ரெண்டு பேரும் தினமும் பார்த்துட்டு டிஸ்கஸ் பண்ணுவோம்ணே...

ஜெட்லி... said...

//Riyas said...
என்னது வாடா உலகபடமா....?//


ஆமா ரியாஸ்....
உலக படம்னா உலகத்தில் இருக்குற யாருமே பார்க்க கூடாத
படம்னு கூட எடுத்துக்கலாம்....


@எஸ்.கேஉங்க பாசத்துக்கும் நேசத்துக்கும் மிக்க நன்றி....

DRACULA said...

boss i have one doubt i want to have a new title for you not soorapatti sura adhu romba mokaia irrukku how about junior superpaku manda adhavadhu junior sundar.c eppadi ok va ?

ஜெட்லி... said...

@DRACULAஎனக்கு தலை ப்ளீச் பண்ற பழக்கம் இல்லங்க....
ஏன் உங்களுக்கு இந்த ஆசை??

ILLUMINATI said...

// நீ ஏன்ப்பா வாடா படத்தை பார்க்க துடிக்கிற அப்படின்னு கேட்டாங்க....அதுக்கு ஒரே பதில் நானும் பார்க்கலைனா யாரு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்றது.... எல்லாம் கெரகம்....//

ஹாஹா....
மஹா நக்கல் பிடிச்ச விமர்சனம். :)

நன்றி சூரப்பட்டி சுறா... ;)

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

நீ படம் பார்க்கிறத என்னிக்கு நிறுத்துறியோ அன்னிக்குத்தான் நல்ல படம் வரும் மச்சி நீ வேண்ணா பாரு!

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. பயங்கரமா கலாய்ச்சிருக்கீங்க..

மொக்கைப்படத்துக்கும்.. ரசிக்கும் படியா விமர்சனம் எழுதியிருக்கீங்க.. சூப்பர்..

DRACULA said...

இல்ல பாஸ் உங்களுக்கு இந்த பெயர் தான் சூப்பரா இருக்கு இல்லன்ன இன்னொரு பெயர் இருக்கு அது வந்து இன்டர்நெட் TR எப்படி இருக்கு பாஸ்

ranjith said...

ennai mannithu vidungal jetli.
nengal solvadum thavaru,
ean endral namma annan sundar.c than adutha america janadipathi

ஜெட்லி... said...

@ILLUMINATI


நன்றி...


@ ப்ரியமுடன் வசந்த்


அப்படியா மாமு...ட்ரை பண்றேன்...

ஜெட்லி... said...

@பதிவுலகில் பாபுநன்றி பாபு....


@DRACULA


ஹலோ என் பதிவு என்ன அவ்வளவு டெர்ரர்ஆவா இருக்கு....??
பட்ட பெயர் வைக்கிறதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு...

ஜெட்லி... said...

@ ranjith...

by the way...

இந்த விஷயம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும் வெளியே சொல்லீடாதிங்க....

தியாவின் பேனா said...

அருமையா விமர்சனம் செய்து விட்டீர்கள்

DRACULA said...

yes boss neenga than internet TR ilana Internet ulagin Sam Anderson

Pradeep said...

Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

angelin said...

konjam vetti pechhu chitra ungal link + murukku seedai padathai pottadhai paarthu naan recipe aasaiyil vandhen ,but i enjoyed your review.very nice.

ஈஸ்வரி said...

இது போல் நக்கலும் கேலியும் செய்ய உம்மை மிஞ்ச ஆள் இல்லை.படம் பார்க்காமலேய பாதி உசுரு தானாகவே போய் விட்டது. இதுபோல் தொடரட்டும் உங்கள் சேவை. மிகவும் ரசித்தேன் . நன்றி.

balak said...

Hello boss Sundar.C next film vandache nagaram enna pannittu irrukkinga ?

thangaraju said...

// Hello boss Sundar.C next film vandache nagaram enna pannittu irrukkinga ? //

yes we want "Nagaram Marupakkam" review...