Monday, November 22, 2010

நகரம் என்பக்கம்.....

நகரம் என்பக்கம்.....


ஒரு மாசமா பதிவு எழுதல..கடைசியா எழுதினது நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர் நடிச்ச அகில உலக அதிரடி மெகா ஹிட் ஆன படம் வாடா பத்தி தான். அப்புறம் கல்யாண பிஸி...கடைசி நேரத்தில் நிறைய பேருக்கு தெரிவிக்க முடியல...ஒரு வழியாக 18 ஆம் தேதி திருமணம் முடிந்தது...நேரில் வந்து வாழ்த்திய பதிவுலக அண்ணன்களுக்கு நன்றி..கல்லூரி நண்பர்களுக்கு நன்றி...ஆர்குட் தமிழ் குடும்பம் குழுமம் மற்றும் நேரில் வந்து வாழ்த்திய ஜெயந்தி மேடத்துக்கு நன்றி....போன் மற்றும் மெயில் மூலம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.


கல்யாணத்துக்கு அப்புறம் நாம பார்க்கிற மொத படம் எங்க தலைவர் சூப்பர்
பாக்கு தல சுந்தர்.சி படமா தான் இருக்கணும்னு..அவ கிட்ட சொன்னப்ப...
நீங்க மட்டும் போயிட்டு வாங்கனு சொல்லிட்டா...மொத தடவை படத்துக்கு போறோம்னு அப்புறம் நகரம் பாத்துட்டு என் வாழ்க்கை நரகம் ஆயிட கூடாதேனு சொல்லி நானே என்னை தேத்திக்கிட்டு மைனா போலாம்னு யோசிச்சேன்..ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்ததால் போகவில்லை....மந்திர புன்னகை ரெட்ஹில்ஸ் சைட் ஓடுற மாதிரி தெரியலை.அப்புறம் வடிவேல் ஜோக் இருக்கும், சுந்தர்.சி டைரக்ட் பண்ணி இருக்கிறார், தமன் மியூசிக் போட்டு இருக்கிறார்... என்று சொல்லி நகரம் படத்துக்கு கூட்டிட்டு போனேன்...(அனுயா பற்றி எதுவும் சொல்லவில்லை...!!)ரெட்ஹில்ஸ் லட்சமி தியேட்டர்க்கு தான் போனோம்....செம கூட்டம்....
நான் சொல்றது தியேட்டர் வெளியே இருக்கிற கடைங்கள்ல என்பதை நோட் பண்ணிக்குங்க....70 ரூபாய் டிக்கெட்..கொஞ்சம் அதிகம் தான்...தியேட்டர்
வெளியே கேவலமா இருந்தது ஆனா உள்ளே சூப்பர்ஆ இருந்தது...என்ன
ஏ.சி மட்டும் தான் போடல....எங்களையும் சேர்த்து மொத்தம் ஒரு பத்து
பேர் பால்கனியில் இருந்து இருப்போம்...நகரம்....நரகமா??


அதே திருந்தி வாழ நினைக்கிற ரவுடி தலைநகரம் கதை தான்னாலும்...
படம் போர் அடிக்காம தான் போச்சு...வடிவேல் சில இடங்களில் சிரிக்க
வைக்கிறார். குறிப்பா அந்த பம்ப் செட் காமெடி....ஆனா அவரு இன்னும்
வின்னர், தலைநகரம் ஸ்டைல் தான் பொல்லொவ் பண்றார்....மாத்துங்க
ஜி....இல்லனா விவேக் மாதிரி மரண பிளேடு ஆக வாய்ப்பு இருக்கு....அனுயா...சரி வேணாம்...வேற டாபிக் பேசுவோம்..தமன் மியூசிக் ஓகே...
அந்த திக்கி திக்கி பாட்டை ரேடியோவில் கேட்டவுடன் கண்டுபிடித்து விட்டேன் அது தமன் மியூசிக் என்று....படம் மொக்கை இல்லாம டைம் பாஸ் ஆச்சு நாங்க தியேட்டர்குள்ள இருந்த வரைக்கும்....ஆமா வேலைகள் காரணமாக , மற்றும் படத்தின் நீளம் காரணமாக கிளம்பி விட்டோம்.நல்ல வேளை படத்தை பார்த்துட்டு வீட்டுக்காரம்மா எதுவும் பீல் பண்ணலை... அடுத்தது எந்திரனுக்கு பிறகு உலகம் முழுவதும் அதிக பரபரப்பை ஏற்ப்படுத்த போகும் ராமராஜனின் மேதை படத்துக்கும் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.... எதிர் ரியாக்சன் பற்றி சொல்ல விரும்பவில்லை....:))

இப்போதைக்கு நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்...தியேட்டர் நொறுக்ஸ்ஆ?? அட
நீங்க வேற பத்து பேரு தான் இருந்தாங்க அப்படி ஒரு சைலன்ட்....அப்பறம்
எங்கே இருந்து எழுதறது....இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்கிறேன்...
படம் பார்த்தா கண்டிப்பா அதை பத்தி பதிவு போடுவேன். வேற பொது அறிவு
செய்திகள் எல்லாம் வேற அப்டேட் பண்ணனும்....பார்ப்போம்...மீண்டும்
சந்திப்போம்...


அதுவரைக்கும் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் படத்தோட ஸ்டில்லை
பார்த்து ரசிங்க...
உங்கள்

ஜெட்லி... (சரவணா...)

39 comments:

LK said...

திருமண வாழ்த்துக்கள்

MANO said...

congrats and happy marriage life jetli.

வெறும்பய said...

திருமண வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

திருமண வாழ்த்துக்கள் நண்பா...

இரவு வானம் said...

இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பா, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், விமர்சனம் கொஞ்சம் காரம் கம்மியா இருக்கு

Madhav said...

திருமண வாழ்த்துக்கள்...

ஆனாலும் உங்க கடமை உணர்ச்சிய நினைச்சா புல்லரிக்குதுங்க
:-)

பிரபாகர் said...

வாழ்த்துக்கள் தம்பி... ஆனாலும் முதல் படமாக அழைத்து சென்றது துணிச்சல்தான்.

பிரபாகர்...

மணிஜீ...... said...

வாழ்க்கையின்னா இன்னான்னு சிம்பாலிக்க சொல்லிட்ட..திருமண வாழ்த்துக்கள் சரவணா....(என்னை கூப்பிடலை)

தமிழ் உதயம் said...

திருமண வாழ்த்துக்கள் ஜெட்லி

Balaji saravana said...

வாங்க தல! திருமண வாழ்த்துக்கள் :)

Siva Ranjan said...

அனுயா...சரி வேணாம்...வேற டாபிக் பேசுவோம்..//

மக்களே இதை கவணிங்க....

இவர் இப்போ குடும்பஸ்த்தராம்மா... :P

வாழ்த்துக்கள் சரவணா.. :)

Katz said...

திருமண வாழ்த்துக்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அனுயா... சரி வேணாம்... வேற டாபிக் பேசுவோம்..]]]

தம்பி.. இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலியா..?

இத்தனை நாளா அத்தனை ஹீரோயின்ஸ் பத்தியும் புட்டுப்புட்டு வைச்சுப்புட்டு இப்ப ஒரே நாள்ல ஜகா வாங்குறியேப்பா..! நல்லாயில்ல.. சொல்லி்ட்டேன்..!

Mohan said...

இனிய திருமண வாழ்த்துக்கள்!

மோகன் குமார் said...

//அனுயா...சரி வேணாம்...வேற டாபிக் பேசுவோம்..//

அந்த பயம் இருக்கட்டும்.

இன்னிக்கு தான் உங்க திருமணம் பற்றி சிறியதாய் என் ப்ளாகில் எழுதி உள்ளேன். பார்த்தீர்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திருமண வாழ்த்துக்கள் ///


machchi mandapa vaadakai innum sollave illai

VISA said...

வாங்க புது மாப்பிள்ளை சார்.

Bala De BOSS said...

வாழ்த்துக்கள் நண்பா...... உனக்கு கல்யானம்கிரதே இந்த பதிவைப் படிச்ச பிறகுதான் எனக்குத் தெரியும்.

வாழ்த்துக்கள் நண்பா.......

All the best and happy Married Life!!!!

ஜெட்லி... said...

வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல....

செ.சரவணக்குமார் said...

திருமண வாழ்த்துகள் நண்பரே.

DRACULA said...

happy married life uncle enga honeymoon plans

Sathya said...

congrats happy married life

ILLUMINATI said...

இனிய திருமண வாழ்க்கை அடைய வேண்டுகிறேன் நண்பா..வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

திருமண வாழ்க்கை நலம் பல பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

--

இந்தப் படத்த குடும்பத்தோடு பார்க்க ப்ளான் பண்ணியிருந்தீங்களா ?? :)...

Prasanna R said...

again you didn't take me to the super pakku thalayan's movie :( too bad thalai

soundar said...

HAPPY MARRIAGE LIFE.

philosophy prabhakaran said...

திருமண வாழ்த்துக்கள்...

நீங்கள் செய்தது ஒரு மாபெரும் பிழை... திருமணத்திற்கு பின் பார்த்த முதல் படம் "நகரம்" என்று உங்கள் பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் வரை பேசுவார்கள்... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

Senthil said...

sollavae illa!!!!

துபாய் ராஜா said...

திருமண வாழ்த்துக்கள்

In search of said...

திருமண வாழ்த்துக்கள் !

அனுயா... சரி வேணாம்... வேற டாபிக் பேசுவோம்///

எனக்கு என்னவோ பதிவு தணிக்கை செய்யப்பட்ட மாதிரி தோணுது!

வேற பொது அறிவு
செய்திகள் எல்லாம் வேற அப்டேட் பண்ணனும்///

திருமணம் ஆனதுக்கு அப்புறம் பொது ஆறிவா? உங்க பதிவு எப்பவுமே காமெடிதான்!

sivakasi maappillai said...

congrats and happy married life

கானா பிரபா said...

திருமண வாழ்த்துக்கள் ;)

கே.ஆர்.பி.செந்தில் said...

கொஞ்ச நாளைக்கு இப்படி படம் பாக்குறத விட்டுட்டு மனைவிக்கு உதவிய சமையல் வேலைகளை பாருங்க தம்பி ...

சிவகுமார் said...

பவர் ஸ்டாரா? ஷங்கர், கொலவெறிய கெளப்பாதீங்க.... அந்த போட்டோவை தூக்குங்க..நீங்கள் நல்லா இருப்பீங்க..

சிநேகிதன் அக்பர் said...

கல்யாண வாழ்த்துகள் நண்பரே.

பார்வையாளன் said...

திருமண வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திருமண வாழ்த்துக்கள் நண்பரே! ஆனால் ஒரு பெரும் வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்களே, திருமணத்திற்குப் பின்பு பார்த்த முதல் படம் எது என்று இனி காலத்திற்கும் அவப் பெயர் வந்துவிடுமே..அய்யகோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி எதிர்காலத்துல் சன் டீவி நிகழ்ச்சிகள் எதுலேயும் நேரடியா கலந்துக்க முடியாதே? ஏன்னா எல்லாத்துலேயும் கல்யாணத்துக்கப்புறமா பார்த்த முதல் படம் எதுன்னு கேப்பாங்களே, இதுக்கு என்ன செய்ய போறீங்க?

ஜெட்லி... said...

@பன்னிக்குட்டி ராம்சாமிஆமாம்ப்பா...நீ சொல்றது சரி தான்...எப்ப நல்ல படம் வரும் வரும்னு
காத்திருந்து அஞ்சு வருஷம் கழிச்சு போய் இருக்கலாம்.... தப்பு
பண்ணிட்டேன்....