Tuesday, March 9, 2010

தம்பிக்கு இந்த ஊரு - மகா மெகா காவியம்!!

தம்பிக்கு இந்த ஊரு


தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமா
பைலட் தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனா
நான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன்
ஆனா அதுக்குள்ள ராஜலீலை படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.
பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை.
சரி அவ்ளோ தூரம் வந்துட்டோம் நம்ம சின்ன தளபதி நடிச்ச
படத்தை பார்ப்போம்னு உள்ளே என்டர் ஆயிட்டேன்.


சின்ன தளபதினு கார்டு போடும் போதே தலையெல்லாம் சுத்திச்சு...சீ சீ..மப்புல்ல இல்லங்க,சாதாரணமாவே தான்!முதல் சீனே விவேக் இன்ட்ரோ எனக்கு கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு,அதாவது படம் போடுறாங்களா இல்ல ஆதித்யா டி.வி. கட்டுராங்கலன்னு....படத்தில் விவேக்வோட அக்கபோர்
செம பிளேடு!!என்ன கதையா?? இருபது வருஷம் முன்னாடி உள்ள கதை...பயங்கரமான கதை...!!

இளைய,புரட்சி தளபதினு ரெண்டு பேருமே பன்ச் குறைச்சி
சும்மா இருக்கும் போது நம்ம சின்ன தளபதி மட்டும்
அறிமுக காட்சியில் இருந்து பஞ்ச் பஞ்சா உட்டு உடம்பை
பஞ்சர் ஆக்குகிறார்.பஞ்சர்னு சொன்ன உடனே இன்னொரு
விஷயம் நினைவுக்கு வருது......


நம்ம பரத் ஒரு பைட் சீன்ல நின்னுக்கிட்டு இருக்கிற பைக்கின்
டயரை சும்மா ஒரு கையில் இழுத்து எடுத்து வில்லன் மேல வீசுவாரு பாருங்க...சான்ஸ்ஏ இல்லை.எங்க வீட்டாண்ட உள்ள
பஞ்சர் கடையில் அவசரத்துக்கு வண்டியை விட்ட பஞ்சர் பார்க்க
அரை மணி நேரம் ஆகுது.அங்க மட்டும் நம்ம சின்ன தளபதி
இருந்தார்னு வைங்க அஞ்சு நிமிஷத்தில் பஞ்சர் பார்த்து
வண்டியை கொடுத்துடுவாங்க...சும்மாவா திருப்புழி,
ஸ்பேனர் இல்லாம வண்டி டயரை அழகா கழட்டுறார்.
ஒரே இழுப்பில் எந்த வித உபகரணமும் இல்லாமல்
டயரை கழட்டிய சின்ன தளபதி வாழ்க.....!!!அடுத்த மொக்கையாக ஆந்திராகாரர் வேடத்தில் பாஸ்கர்.இவர் ஹோட்டல்லில் போடும் மொக்கைக்கு அளவே இல்லை.அப்புறம் பாட்டெல்லாம் செம....ஒரு ஒரு பாட்டுக்கும் தியேட்டர்ல இருக்கிற நாப்பது பேர்ல இருபது பேர் வெளியே போய்டுறாங்க....படத்தின் ஒரே ஆறுதல் சானாகான் மட்டுமே...!!சானாகான் இன்னும் திறமையை வெளிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


அப்புறம் செண்டிமெண்ட் சீன்...நிழல்கள் ரவி பரத் தன்
மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை
தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!
பிரபு வருகிறார் ஊறுமுகிறார் அப்புறம் என்ன ஆனார்னு
எனக்கு தெரியல....காரணம் படம் முடிய அரை மணி நேரம்
முன்னாடியே வெளியே வந்துட்டேன்!!வெளியே வந்ததுக்கு
காரணம் வீட்டில் சின்ன வேலை இருந்ததுனு சொன்ன
நம்பவா போறீங்க....


தியேட்டர் டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் இந்த வாக்கியத்தை
வைக்கணும்...மறந்துட்டாங்க போல....

WARNING:
(Beware of thambikku intha ooru..it contents mokkai comedy and bayangara
fights and it may harmful to ur health and purse too.)

தயவு செய்து இனிமே யாரும் ரஜினி,கமல் மற்றும் நல்லா
ஓடிய படங்களின் டைட்டிலை யூஸ் பண்ண வேணாம்னு
ஒரு சட்டம் போட்ட நல்லா இருக்கும்!!ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை
கெடுக்குரானுங்கலே.....

கவுண்டர் கிட்ட இந்த படத்தை பத்தி கேட்டதுக்கு:

"அடங் கொன்னிய,இந்த காவியத்தை காண ரெண்டு கண்ணு
பத்தாது...அதனால மக்களே, இன்னும் கொஞ்ச நாள்ல கலைஞர்
டி.வி வெள்ளி பரிசில் இந்த படத்தை போடுவாங்க....உங்களுக்கு
உயிர் மேல ஆசை இருந்தா...இந்த படம் போடும் போது
கரண்ட் இல்லாத ஊருக்கு ஓடிடுங்க.என்னா டகால்டி காட்றானுங்க"


ஜெட்லி பஞ்ச்:

தம்பிக்கு இந்த ஊரு : வெளியே சொல்லிடாத....!


பல பேர் இதை படித்து விழிப்புணர்வு பெற ஒட்டு போடுங்கள்...
இந்த காவியத்தை பற்றி விவாதிக்க பின்னூட்டத்தில் சந்திப்போம்.

ஜெட்லி....

70 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

(ஜெட்லி) தம்பிக்கு நல்ல மனசு. இந்த மாதிரி முன்னாடியே சொல்லிட்டா, நாங்க படம் பாக்காம தப்பிச்சுக்குவோமில்ல, அதான். வாழ்க, ஜெட்லி.

Chitra said...

அப்புறம் செண்டிமெண்ட் சீன்...நிழல்கள் ரவி பரத் தன்
மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை
தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!


........ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை
கெடுக்குரானுங்கலே.....


..........Mr. ஜெட்லி MCA, பாவம் நீங்க. முக்கால் படம், காசு கொடுத்து பாத்த உங்களுக்கு எப்படி இருக்கும்?

தண்டோரா ...... said...

ராஜலீலை படத்துல கதையாலே முக்கியம் !

பிரபாகர் said...

பலபேர் உயிரை தனது உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய ஜெட்லியை தேசிய அளவில ஏதோ அவார்ட் தருவாங்களே, அதுக்கு பரிந்துரை செய்கிறேன்.

பிரபாகர்.

D.R.Ashok said...

:))))

லோகு said...

ஜெட்லி பஞ்ச் சூப்பர் நண்பா.. அதுவும் அப்படியே கவுண்டர் சொல்ற மாதிரியே இருந்துச்சு...

அகல்விளக்கு said...

//வெளியே வந்ததுக்கு
காரணம் வீட்டில் சின்ன வேலை இருந்ததுனு சொன்ன
நம்பவா போறீங்க...//

எப்பா....

அந்த படம் ஓடுற தியேட்டர கூட பாக்கக்கூடாது....

காப்பாத்திய ஜெட்லி வாழ்க...

எறும்பு said...

ha ha ho ho hi hi

:)

தமிழ் உதயம் said...

தம்பிக்கு இந்த ஊரு - மகா மெகா காவியம்!!நீங்க பண்ணின இந்த உதவிக்கு, ஏழே ஏழு ஜென்மத்துக்கும் உங்கள மறக்க மாட்டேன்.

கட்டபொம்மன் said...

ஜெட்லி ஜெட்லி.. நலமா. (படம்பார்த்துட்டீங்களா)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்க விமர்சனம் ரொம்ப சூப்பர்.

சிரி..சிரி..சிரிக்க முடியல; இந்த படத்தை பாக்காமல் இருப்பதே நல்லதுபோல..

vinodhu said...

WARNING:
(Beware of thambikku intha ooru..it contents mokkai comedy and bayangara
fights and it may harmful to ur health and purse too.)


thanks jetli.. kandipa poda sollanum. illana ivan ipadiey dhan pannitey irupan.. eppa sami.. tv la oru secene pathen mayangiten..

அக்பர் said...

டரியலாக்கி விட்டீர்கள்.

gulf-tamilan said...

/பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை/
:)))

மோகன் குமார் said...

ஜெட் லி இந்த படத்தோட ட்ரைலர் மற்றும் போஸ்டர் கூட பாக்க முடியலை. எப்படி படத்தை பார்த்தீங்க?? என்னவோ போங்க நிறைய பேரை காப்பாத்துறீங்க

வானம்பாடிகள் said...

சே! தன் உசிர பணயம் வெச்சி எத்தன பேரை காப்பாத்தி இருக்கீங்க. புல்லரிக்குது உங்க தியாகத்த பார்க்க:))

கார்த்திகைப் பாண்டியன் said...

//வீட்டில் சின்ன வேலை இருந்தது//

or சின்ன வீட்டில் வேலை இருந்தது?

G.K ma..:-)))

டக்கால்டி said...

பகிர்தலுக்கு நன்றி...

ஜெட்லி said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

நல்ல மனசு என்று கூறிய அண்ணன் வாழ்க...!!
நன்றி...

ஜெட்லி said...

@ Chitra

காசு போன போவுது....பொழுது போன சந்தோசமா
இருந்துருக்கும்......

ஜெட்லி said...

// தண்டோரா ...... said...
ராஜலீலை படத்துல கதையாலே முக்கியம் !

//
அது சரிதான்.....இருந்தாலும் முதல்ல எதுவும்
முக்கியமான சீன் போயிருந்தா என்ன பண்றதனு
நினைச்சேன்.....

ஜெட்லி said...

@ பிரபாகர்

விட்டா சிலை வைப்பிங்க போல....
நன்றி அண்ணே....

ஜெட்லி said...

@ D.R.Ashok


என்ன வெறும் சிரிப்பு மட்டும் தானா....
நன்றி..

ஜெட்லி said...

@ லோகு

நன்றி நண்பா.,..சின்ன வயசில்
இருந்து கவுண்டரை பார்ப்பதால்
அவர் தாக்கம் எனக்குள் இருக்கு!!

ஜெட்லி said...

@ அகல்விளக்கு

நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க...
நன்றி...

ஜெட்லி said...

@ எறும்பு

நன்றி அண்ணே ...

ஜெட்லி said...

@ தமிழ் உதயம்

பார்க்க தானே போறேன்....

ஜெட்லி said...

@ கட்டபொம்மன்

இந்த படத்தை பார்த்த பின் நலமா என்று
கேட்டால் எப்படி...??

ஜெட்லி said...

@ Starjan ( ஸ்டார்ஜன்

கண்டிப்பா....பார்த்தீங்கனா உங்களுக்கு நல்லது இல்ல...!!

ஜெட்லி said...

@ vinodhu

வினோத் இதை நீ முன்னாடியே சொல்லி இருந்தா
நான் கொஞ்சம் உஷாரா இருந்துரப்பேன்..

ஜெட்லி said...

@ அக்பர்

இந்த மாதிரி படத்தை அப்படி தான்
ஆக்க வேண்டும் அரசே ...

ஜெட்லி said...

@ gulf-tamilan

நன்றி...

ஜெட்லி said...

@ மோகன் குமார்

அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் அண்ணே...
யாருமே இந்த படத்துக்கு போலன்னா எப்படி??

ஜெட்லி said...

@ வானம்பாடிகள்

புல்லரிக்கிற மாதிரி நான் எதுவும் செய்யலையா ஐயா....

சேட்டைக்காரன் said...

பார்த்திட்டீங்களா அண்ணே? ஐயோ பாவம்! நான் நேத்தே "ராஜலீலை" பிராட்வேயிலே பார்த்திட்டேனுங்க! ஹி..ஹி..!

ஜெட்லி said...

@ கார்த்திகைப் பாண்டியன்

அண்ணே நீங்க வேற சும்மா இருங்க....

ஜெட்லி said...

@டக்கால்டி

படித்ததற்கு நன்றி டக்கால்டி ....
உங்க புனை பெயர் எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு!!

ஜெட்லி said...

@ சேட்டைக்காரன்

ராஜலீலை எப்படி இருக்கு??
தாங்கள் எதிர்ப்பார்த்தப்படி இருந்ததா??

~~Romeo~~ said...

என்ன பாஸ் மாயாஜால் போகலையா ?? ஹி ஹி ஹி

Statistics said...

ஐயோ ஐயோ... உங்கள நெனச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு..... நான் நேத்து இந்த படத்த download பண்ணி பார்த்தேன் ... ஐயோ சாமி உலக மகா மொக்கடா டேய்..... ஏன் சார் இந்த பரத், பிரபு, நிழல்கள் ரவி , தலைவாசல் விஜய் எல்லாம் நடிக்கிறதுக்கு முன்னாடி கதையே கேட்க மாட்டாங்களா (விவேக் சரி பரவாயில்லை, எப்பவுமே மொக்கைதான் )....... ஆனா இந்த படத்தால நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம்... இனிமே பரத், விவேக் படத்த தியேட்டர், உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக , டவுன்லோட் எப்படியுமே பார்க்க போறதில்லை என்கிற முடிவுக்கு வந்துட்டேன்.....ஆங் உங்களுக்கு பெரு சின்ன info... ராஜலீலையும் செம மொக்கயாம்... பேய் படமாம் ....

யோ வொய்ஸ் (யோகா) said...

neenga rooooomba pavam

முகிலன் said...

எவன் எவனுக்கோ பத்மஸ்ரீ குடுக்குறானுவ.. நம்ம ஜெட்லிக்கு ஒன்னு குடுங்கப்பா

ILLUMINATI said...

எத்தனை விழுப்புண்கள் வாங்கினாலும் அசராமல் போர்க்களம்(தியேட்டர் தான்) செல்லும் ஜெட்லி வாழ்க....

ஆமா,கேக்கனும்னு நெனச்சேன்,ஏன்யா உமக்கு மட்டும் இப்படி சனியன் சட விருச்சு ஆடுது?
போறதெல்லாம் மொக்கையா இருக்கேதேய்யா.
சரி,மனச திடப்படுத்திகிட்டு அப்டியே நம்ம ப்ளாக் கிட்டயும் வாங்க.ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் உங்க அனுபவத்துக்கு (நீரு போன படம் தான்யா) ஏத்த மாதிரி மொக்கை போட்டு இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். :)

ஜெட்லி said...

@~~Romeo~~

ஆமாம்... இந்த படத்தை மாயாஜால்தான் பார்க்கணும்...
தனியா இல்லை....

ஜெட்லி said...

@ Statistics

பரிதாபத்துக்கு நன்றி நண்பரே....
ராஜாலீலை படம் பத்தி எனக்கு முன்னவே
தெரியும்...இருந்தாலும் அவுங்க விளம்பரம்
ரொம்ப ஓவர்ஆ இருக்கு....!

ஜெட்லி said...

@ Statistics

பரிதாபத்துக்கு நன்றி நண்பரே....
ராஜாலீலை படம் பத்தி எனக்கு முன்னவே
தெரியும்...இருந்தாலும் அவுங்க விளம்பரம்
ரொம்ப ஓவர்ஆ இருக்கு....!

ஜெட்லி said...

@ யோ வொய்ஸ் (யோகா)


பரிதாபத்துக்கு நன்றி yo....

ஜெட்லி said...

@ முகிலன்

அண்ணன் முகிலனுக்கு ஒரு பாதாம் பால்
சொல்லுங்கப்பா....

ஜெட்லி said...

@ILLUMINATI

ILLUMINATI எங்கையோ கேள்விப்பட்ட பெயர்....
ஆ angel and demons படத்தில் வரும்....
வந்து பார்க்கிறேன்...

Subankan said...

ரொம்ப நன்றி ஜெட்லி, உங்களை மறக்கவே மாட்டேன். உயிரையில்ல காப்பாத்தியிருக்கீங்க :P

ர‌கு said...

ஜெட்லி, என‌க்கு "இணைந்த‌ கைக‌ள்" ப‌ட‌த்தோட‌ இன்ட‌ர்வெல் சீன் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. ராம்கி க‌யிறு அறுந்து தொங்கிகிட்டிருக்கும்போது அருண்பாண்டிய‌ன் வ‌ந்து காப்பாத்துவாரே, அதுமாதிரி நீங்க‌ எல்லாரையும் காப்பாத்துறிங்க‌.....என்னால‌ முடிய‌ல‌, ஆன‌ந்த‌க் க‌ண்ணீரா வ‌ருது....

"வீர‌சேக‌ர‌ன்" விம‌ர்ச‌ன‌ம் எப்போ?...:)

ஜெட்லி said...

@ Subankan

என்னால முடியல...நன்றி!!

ஜெட்லி said...

@ ர‌கு

//வீர‌சேக‌ர‌ன்" விம‌ர்ச‌ன‌ம் எப்போ?...:)
//

அடுத்த வாரம் தியேட்டர்ல ஓடிச்சுன்ன...
பார்த்து போடுறேன்...:))..
இதெல்லாம் எனக்கு சாதா'ரணம்'.

பின்னோக்கி said...

வேலியில போற.......

ஏங்க... ஜன் மியூஜிக்லதான் இந்த படத்தோட பாட்டு போட்டாங்கள்ள, அதப்பார்த்தாவது திருந்தாம... இந்த மாதிரி மக்கள் சேவை செஞ்ச உடம்புக்கு ஆகாது.. அப்புறம் உங்க இஷ்டம்..

thenammailakshmanan said...

தயவு செய்து இனிமே யாரும் ரஜினி,கமல் மற்றும் நல்லா
ஓடிய படங்களின் டைட்டிலை யூஸ் பண்ண வேணாம்னு
ஒரு சட்டம் போட்ட நல்லா இருக்கும்!!ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை
கெடுக்குரானுங்கலே.....
//
உண்மையான வருத்தம் ஜெட்லி

Anbu said...

:-((

Veliyoorkaran said...

நோ...உங்களுக்கு பொறாமை...எங்க எங்களோட சின்ன தளபதி முதலமைச்சர் ஆய்டுவாரோன்னு உங்களுக்கு பொறாமை...விட மாட்டேன்..என் பிகர கூட்டிகிட்டு அந்த படத்துக்கு போய் கண்டிப்பா பார்ப்பேன்...படத்த...!!

தமிழன் said...

சின்னத்தளபதி நடித்த படத்தை காசு கொடுத்து பார்க்கக்கூடாது என்ற கொள்கையை அதிவிரைவில் பதிவுலகம் பரப்பினால் நல்லது....

VISA said...

அப்படியா. அப்போ இன்னேலிருந்து நான் வெளியூரு.

ஜெட்லி said...

@பின்னோக்கி


நான் அவ்வளவா டி.வி.பார்க்கிறது இல்ல நண்பா...

ஜெட்லி said...

@ thenammailakshmanan'

நன்றி....

ஜெட்லி said...

@ Anbu

நீ யாருக்கு பீல் பண்றே??

எனக்கா இல்ல பரத்துக்கா!!

ஜெட்லி said...

@ Veliyoorkaran

கண்டிப்பா பிகரோட பார்க்க ஏற்ற படம் தான்...
என்ஜாய் பண்ணு....

ஜெட்லி said...

@ தமிழன்

நூத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க அண்ணே...

ஜெட்லி said...

@ VISA


மீ டூ....

BONIFACE said...

//நிழல்கள் ரவி பரத் தன்
மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை
தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!//ஹி ஹி ஹி

jasmin said...

நானும் இந்த படத்தை பார்த்தேன் ஆரம்ம்பமே அலைக்கழிப்ப இருந்திச்சு ரோம்பனாளைக்கப்புரம் விவேக்கை பார்க்க கிடைத்தாலும் வேண்டாமென்று போய்விட்டது அவரது அருவைகல என்ன செய்வது பார்த்து தொலயவேண்டியது தான் இன்னும் எத்தனை நாளைக்கிதான் கற்பனைக்கே எட்டாத சண்டைக்காட்சி வைப்பான்களோ இதனை பார்க்கிறத சும்மா சுருட்டி போட்டு படுங்கலப்பா

Matangi Mawley said...

ultimate review ponga.. kandippa friends-oda poi paarthu ensaai panna vendiya padamnu sollunga! naangallaam palani, naayakan(new), vettaikkaaran-e parthuttu uyiroda irukkom.. ithellaam chumma jujubi...


on a serious note.. very entertaining blog!

நாஞ்சில் பிரதாப் said...

தெய்வமே சமயத்துல காப்பாத்துனப்பா...

இந்தபடம் பார்க்கறதுக்கு உக்காந்தேன்... சரி எப்படின்னு ஒரு விசமர்சனத்தை படிக்கலாம்னு உங்க பதிவான்ட வந்தேன்... தலை தப்பிச்சது...

Anonymous said...

Rajini's Title + Kamals Balram Comedy =====> Mokkai Padam