Wednesday, March 17, 2010

லீலைகள்....!!

லீலைகள்....!!


லீலைகள் என்ற தலைப்பில் உங்களிடம் ஒரு ரெகார்ட் அல்லது
ப்ராஜெக்ட் சமர்ப்பிக்கிறேன்......எக்ஸாம் டைம்ல அதான் இந்த
பிட்.......!!

INDEX

1.நித்ய லீலை

2.லீலை

3.ராஜலீலை

4.கிருஷ்ணலீலை


***************************************************************

நித்ய லீலை :

என்ன சொல்றதனு எனக்கு தெரியிலங்க...இவரு படம் டி.வி.யில் ஓடுன அடுத்த நாள் காலையில் சில நண்பர்கள் எப்போ விமர்சனம் போட போற என்று கேட்டார்கள். இப்படி கேட்ட நண்பர்கள் மேல் கூட எனக்கு வருத்தம் இல்லங்க, எனக்கு நித்யானந்தா மேலதான் ஏகப்பட்ட வருத்தம்ங்க....
அவரு இப்படி பண்ணியிருக்க கூடாதுங்க, முக்கியமான காட்சியில் லைட் ஆப் பண்ணினாரு பாருங்க அது தான் என் வருத்தத்துக்கு காரணம்ங்க...!! அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில் இதை லைட்டாக கண்டிக்கிறோம்ங்க.மற்றபடி அவரை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.திருவண்ணாமலை கிரிவலம் போகும் போது கூட அவரு ஆசிரமம் வந்தா ரெண்டு அடி தள்ளியே தான் நடப்பேன்ங்க...!

அப்புறம் நக்கீரன் புத்தகத்தின் விளம்பர போஸ்டர்களை பத்தி
சொல்லவே வேண்டாம்...கிழே சாம்பிள் தான்....இந்த போஸ்டரை
நாலஞ்சு பேரு சுத்தி நின்னு படிச்சிட்டு இருந்தாங்க...கஷ்டப்பட்டு
எடுத்தேன்......


இதே போல் ரெண்டு நாள் முன்னாடி "சாமியாருக்கு பேன் பார்க்கும் ரஞ்சிதா - இதுவரை வெளிவராத அதிர்ச்சி புகைப்படங்கள்"!! பேன் பார்ப்பதில் என்ன அதிர்ச்சி இருக்குதுன்னு சத்தியமா எனக்கு தெரியலைங்க..அப்புறம் சாமியார் பத்தி ரெண்டாவது நியூஸ் நக்கீரன்ல வரும்போது பேப்பர்கடைக்காரர் வேலை செய்யும் பையனிடம் "நக்கீரன் ஹாட் நியூஸ் தம்பி...மக்கள் டபுள் ரேட்னா கூட வாங்குவாங்க.." என்று கிண்டல் அடித்தார்.ஆனா அது கிண்டல் இல்லை அது தான் உண்மை.இன்னும் வரும் வாரங்களில் என்ன என்ன அதிர்ச்சி செய்தி வரபோகுதோ..!!


*******************************************************

லீலை

லீலை படத்தில் வரும் பாடல் ஜில்லென்ற ஒரு கலவரம் இசையமைத்தவர் சதீஷ் சக்கரவர்த்தி இப்போதைக்கு இது மட்டும் தான் நினைவில் இருக்கு....யாரு இயக்குனர்,நடிகர்கள் என்பதெல்லாம் மறந்து பல மாசம் ஆச்சு.தயவு செய்து அந்த பாட்டின் வீடியோ கிளிப்பிங்க்ஸை மட்டுமாவது டி.வி.யில் போட்டால் சந்தோஷப்படுவேன்....!படம் பார்க்கும் ஆர்வம்ல இல்ல,கேட்க நன்றாக இருக்கும் அந்த பாட்டை எப்படி
ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று பார்க்கத்தான்......

**********************************************************
ராஜலீலை :

இந்த படத்தை அக்குவேறா ஆணிவேறா ஏற்கனவே பிரிச்சாச்சு.
இன்னைக்கு இந்த படத்தோட 76 வது நாள்...!தொடர்ச்சியா ஒரு
தியேட்டரில் ஒட்டாமல் ஊரில் இருக்கும் பல அட்டு தியேட்டர்களில்
இணைந்த வாரமாக ஒட்டி படத்தை கண்டிப்பா நூறு நாள் ஒட்டி
விடுவார்கள்.இந்த படத்தை நல்லா இல்லைன்னு பல பேர்
சொல்லிட்டாங்க...இருந்தாலும் இவங்க விளம்பரம் தான் தாங்க
முடியல....!


ஏற்கனவே ராஜலீலை குறித்து எழுதியதை படிக்க கிளிக் செய்யவும்
ராஜலீலையும் தேவலீலையும்!!எது எப்படியோ நான் முன்னாடி ராஜலீலை லீலை பத்தி பதிவு போட்டதுக்கு அப்புறம் தான் விதம் விதமா தபு ஸ்டில் பேப்பரில் வந்தது என்று "ஜோதி"கிருஷ்ணா போனில் தெரிவித்தார்.வடை சூடும் ஆயா நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கி தராமலேயே நமக்கு கிடைத்த வெற்றி இது...!!வருங்காலத்தில் இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு
நமது போராட்ட அறிவிப்பு தொடரும் என தெரிவித்து கொள்கிறோம்.


*************************************************

கிருஷ்ணலீலை:

நம் தமிழ் திரையுலகில் ஆஸ்கார் வாங்க தகுதியுள்ள ஒரே
நாயகன் நடித்த படம் தான் கிருஷ்ணலீலை.
பல முகபாவனைகளை அட் ஏ டைம் காட்டும் ஒரே ஹீரோ
ஜீவன் தான் அது.இவர் கடைசியா நடிச்ச ஸாரி விக் வச்சி
வந்த நான் அவனில்லை பார்ட் 2வை பார்த்து மெய்
மறந்தவர்களில் நானும் ஒருவன்....!!யோவ்...என்னைய நீ இப்ப கிருஷ்ணலீலை பத்தி ஏன் இப்ப
எழுதுறனு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.காரணம்
லீலைகள்னு தலைப்பு வச்சாச்சு வேற என்ன பண்றது
மூணோட நாலா இருந்துட்டு போட்டுமே.....

கிருஷ்ணலீலையும் கந்தசாமியும் ஒரே கதையாம்....அதான்
படத்தை லேட் ரீலீஸ் பண்றாங்கனு கேள்விப்பட்டேன்..
கந்தசாமி படமே நாலைஞ்சு படத்தோட சேர்ந்த கதை அப்போ
கிருஷ்ணலீலை......??


********************************************************

இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைத்து மக்களிடமும்
சென்று அடைய ஒட்டு போடுமாறு கேட்டுகொள்கிறோம்.......

லீலைகள் தொடரும்........

ஜெட்லி

41 comments:

Sangkavi said...

உங்க லீலைகள் அனைத்தும் கலக்கல் லீலைகள்....

Chitra said...

ஜெட்லியின் கருத்து மொக்கைலீலை - அசத்தலோ அசத்தல்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்க லீலைகள் தாங்கல..,

♠ ராஜு ♠ said...

ஒன்னுஞ்சொல்றதுக்கில்லைண்ணே..!
அடிச்சு ஆடறேள்.

முகிலன் said...

ஜெட்லீ இதுதான் கடைசி வார்னிங். தமிழ்மணம் ஓட்டுப்பட்டை கீழ மாத்தல, நான் இனிமே தமிழ்மணத்துல ஓட்டுப்போட மாட்டேன்..

வெய்ட் வெய்ட், தமிழ்மணத்துல நெகட்டிவ் ஓட்டுப் போட்டுருவேன்.. ஆமா சொல்லிப்புட்டேன்..

முகிலன் said...

மத்தபடி ஜெட்லீ(லை) எப்ப வெளிய வரும்?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஜெட்லி..
சூப்பரப்பு..:))

டம்பி மேவீ said...

""சாமியாருக்கு பேன் பார்க்கும் ரஞ்சிதா - இதுவரை வெளிவராத அதிர்ச்சி புகைப்படங்கள்"!! பேன் பார்ப்பதில் என்ன அதிர்ச்சி இருக்குதுன்னு சத்தியமா எனக்கு தெரியலைங்க"


செமைய சிரிச்சேன் .....


ஆமா "பயங்கர தீவில் அழகு கன்னி" படம் பார்த்தசா ??? (நான் வெறும் போஸ்டரை தான் பார்த்தேன்)

கார்க்கி said...

உம்ம லீலைக்கு சீக்கிரம் முடிவு கட்டனும் ஓய்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

INDEX
1 . நித்ய லீலை
2 .லீலை
3 .ராஜ லீலை.
4 .கிருஷ்ண லீலை
5 . ஜெட்லி லீலை
முடியல...

வானம்பாடிகள் said...

ஒரு லி எதுக்கு வேஸ்ட். ஜெட்லீ ‘லை’:)).

ஜெட்லி said...

@ Sangkavi

என் லீலை இல்லைங்க இது...
ஊருக்குள நடக்கிறத சொன்னேன்!!

ஜெட்லி said...

@ Chitra

எப்படியோ மொக்கைனு சொல்லீடிங்க...
ஜீவன் ஆஸ்கார் அவார்ட் வாங்கும் போது
உங்களுக்கு தெரியும்......

ஜெட்லி said...

@ SUREஷ் (பழனியிலிருந்து

அண்ணே என் லீலை இல்லணே இது....

ஜெட்லி said...

@ ♠ ராஜு ♠

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் சித்தப்பு....

ஜெட்லி said...

@ முகிலன்

ஏன் இப்படி ஒட்டு போடமாட்டேன்னு சொல்லி
டெர்ரர் ஆக்குரிங்க முகிலன்.....மாத்திடுவோம்...
நான் நல்ல பையன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க....
அதனால கஷ்டம்தான்...

ஜெட்லி said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றி அண்ணே...

ஜெட்லி said...

@ டம்பி மேவீ

//பயங்கர தீவில் அழகு கன்னி//

பேரே சூப்பர்ஆ இருக்கே....
எங்கே ஓடுது பாஸ்....?
முடிஞ்சா ட்ரை பண்ணுவோம்....

ஜெட்லி said...

@ கார்க்கி

அறியா வயசு ஏதோ தெரியாம
எழுதிட்டேன் மன்னிச்சு உட்ருங்க!!

ஜெட்லி said...

@திருநாவுக்கரசு பழனிசாமி


//முடியல....//


ஆமாம் பாஸ் இன்னும் முடியல இது தொடரும்....

ஜெட்லி said...

@ வானம்பாடிகள்

எனக்கு ஒரு லி போதுங்க.....

A.சிவசங்கர் said...

பேன் பார்கிரதில என்ன அதிர்சி இருக்கு
ஹாஹாஹா

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இப்பதாங்க அந்த லீலை என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடிக்கொண்டிருந்தேன் பாருங்க நீங்களே சொல்லிட்டீங்க . நேரம் மிச்சம் .

மீண்டும் வருவான் பனித்துளி !

Rajasadaraj said...

good

தமிழ் உதயம் said...

இங்கயும் நக்கீரனா...
நீங்க ரெம்ப நல்ல சார் ன்னு நினைச்சேன்.

Mrs.Menagasathia said...

அசத்தல் மொக்கை லீலைகள்!!

ஜெட்லி said...

@ A.சிவசங்கர்


சிரிப்புக்கு நன்றி.....

ஜெட்லி said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி சங்கர்...
என்ன பில்ட் அப் லாம் பயங்கரமா இருக்கு??

ஜெட்லி said...

@ Rajasadaraj


thanks...

ஜெட்லி said...

@ Rajasadaraj


thanks...

ஜெட்லி said...

@தமிழ் உதயம்


நக்கீரன் போஸ்டர் பார்த்ததோடு சரி அண்ணே...
புக்லாம் வாங்கறது இல்ல....

ஜெட்லி said...

@ Mrs.Menagasathia

நன்றி....நன்றி...

thenammailakshmanan said...

எல்லா லீலையும் படிச்சு சிரிச்சேன் ஜெட்லீ அருமை

ர‌கு said...

//பல முகபாவனைகளை அட் ஏ டைம் காட்டும் ஒரே ஹீரோ
ஜீவன் தான் அது//

ஜெட்லி, ஆஃபிஸ்ல‌ ப‌டிச்சுட்டு வாய்விட்டு சிரிச்சுட்டேன்.... :)))))


அடுத்து "முன்தின‌ம் பார்த்தேனே" விம‌ர்ச‌ன‌ம்தானே?

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

ஒரு லி எதுக்கு வேஸ்ட். ஜெட்லீ ‘லை’:)).
///

ஹா ஹா ஹா....

கவிதை காதலன் said...

லீலைகளை வெச்சே நீங்க ஒரு லீலை நடத்திட்டீங்க போல.. நக்கீரனோட இந்த கேவலமான புத்தி எப்போ மாறுமோ தெரியலை..

அக்பர் said...

பார்த்து பாஸ் லீலைகள் அதிகமாகிட்டே போகுது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

DREAMER said...

"லீலாவிநோதா பாதபங்கஜ
சமயேசித மோஹன
திம்சுக்கட்ஹே ரஞ்சிட்ரோஃபியாய நக்கீரஹ ஆயில்மசாஜோ பவ:"

சாரிங்க... லீலா வர்க்அவுட் ஆயிடுச்சி... உங்க இடுகையில் தொடர்ந்து வந்த பிட் லீலைகளை படித்ததும், மெய்மறந்து எழுதிட்டேன். அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்க அடுத்தவார நக்கீரனை ப்ளாக்கில் வாங்கி படித்து தெரிந்துக் கொள்ளவும்.

//எக்ஸாம் டைம்ல அதான் இந்த
பிட்.......!!//
இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...

-
DREAMER

வெற்றி said...

ஜெட்லீலை :)

தோழி said...

eppdi Jetleee naattu makkalukkaga ivlo yosikkareenga. Unga karuthukkalum aarachiyum romba yosikka vaikkuthu. Keep writing more. the world expects more from you >> me too >>