Saturday, March 20, 2010

கச்சேரி ஆரம்பத்தை முன்தினம் பார்த்தேனே......2 இன் 1 பார்வை.

கச்சேரி ஆரம்பத்தை முன்தினம் பார்த்தேனே......"தீடிர்னு ஒரு நாள் ஹோட்டல்க்கு போறோம் அங்கே பூரி
ஆர்டர் பண்றோம்.வர ரெண்டு பூரியில ஒரு பூரி ஊப்பி
இன்னொரு பூரி சப்பி இருந்தாலும் நாம ரெண்டையும்
சாப்பிடறது இல்லையா அது போல தான் நம்ம வாழ்க்கையும்..!"

சாரிங்க,கச்சேரி ஆரம்பம் பார்த்த எபெக்ட்ல இப்படி எழுதிட்டேன்.
இந்த மாதிரி தான் ஜீவாவும் படத்தில் தாறுமாறா கருத்து
சொல்றாரு,பஞ்ச் சொல்றாரு இதை சீரியஸ்ஆ வச்சாங்களா
இல்ல காமெடிக்கு வச்சாங்களானு சௌத்ரி அவர்களுக்கே வெளிச்சம்.
கதையா..பிரசாந்த்,சிநேகா நடிச்ச ஆயுதம் மற்றும் நம்ம இளைய
தளபதியின் அப்பா இயக்கிய பந்தயம் ரெண்டு படத்தையும்
கலந்து கட்டி அடிச்சி இருக்காங்க.


சாம்பிள் பன்ச்:

" கை நீட்டுனா பிச்சை போடுவேன்....
கை ஓங்குனா உடைச்சு புடுவேன்...!"


சமீபகாலமா தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் மற்றும்
வழக்கமான காட்சிகளை படத்தில் வைத்து அதை அவர்களே கிண்டல் அடிப்பார்கள் இதுவும் அது மாதிரி தான் ஸ்டார்ட் ஆச்சு.
ஆனா போக போக அந்த வழக்கமான கதையில் அவங்களும்
சிக்கி நம்மையும் சிக்க வச்சி சின்னாபின்னமா ஆக்கிட்டாங்க....

வடிவேலு, சில சமயங்களில் சிரிக்க வைக்கிறார் அவ்வளவுதான்..
கிரேன் மனோகர்,கிங்காங் சில டைமிங் காமெடிகள் நம்மை
சிரிக்க வைக்கின்றன.பூனம் பாஜ்வா அப்படியே தெனாவட்டில்
பார்த்த மாதிரி இருக்காங்க.சக்ரவர்த்தி பாவம் சார் இவரு...
இன்னைக்கு பேப்பர்ல கூட எனக்கு சூப்பர் ரோல்னு பேட்டி
கொடுத்து இருந்தார் ஆனா இவரை டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க!!ஜீவா, தன்னை கமர்சியல் ஹீரோவாக நிலை நிறுத்த இது
போன்று மசாலா படங்களில் நடித்து வருகிறார்.ஜீவாவை
இந்த படத்தில் ரசித்து இருந்துருக்கலாம் கொஞ்சம் அடக்கி
வாசித்து இருந்தால்.ஆனா ஒரு காட்சியில் டைமிங் காமெடி
மிகவும் ரசித்து சிரித்தேன் அது அந்த சப் வேயில் சாப்பிடும்
காட்சி.படத்தில் சில பைட் மற்றும் சில பாடல் காட்சிகள்
தேவை இல்லாதது.கிளைமாக்ஸ்இல் வசனம் பேசியே
வில்லனிடம் இருந்து கதாநாயகியை காப்பாற்றுகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# ரொம்ப நாள் கழிச்சு நைட் ஷோ படத்துக்கு போனேன்...
நல்ல கூட்டம்.படம் இன்டெர்வல் வரைக்கும் கொஞ்சம்
கலகலப்பா போச்சு....ஆனா அதுக்கே நாலைஞ்சு டிக்கெட்
மட்டையாகி போச்சு....! எனக்கு இன்டெர்வல்க்கு பிறகு
கண்ணு சொருக ஆரம்பிச்சது.....

# ஒரு காட்சியில் சக்ரவர்த்தி பூனம் வீட்டுக்கு போய் அவள்
இல்லை என்றவுடன் வெளியே வந்துவிடுவார்.அங்கே காத்திருக்கும்
ஜீவா "என்ன அண்ணே கங்குலி மாதிரி போன உடனே வந்துட்டே" என்பார்...அப்போது தியேட்டரில் ஜீவாக்கு எதிராக பல குரல்கள் எழுந்தன...

# படம் முடியற முன்னாடி ஆர்த்திகிட்ட நம்ம ஜீவா காதல்
பத்தி ஒரு அஞ்சு நிமிஷம் நிக்காம மொக்கை போடுவாரு
பாருங்க.....ஐயோ சாமி....என்று தியேட்டரே அமைதியாய்
இருந்த போது படம் பார்த்து கொண்டிருந்த ஒரு குடிமகன் மட்டும் ஜீவா சொல்ற வசனம் மற்றும் கருத்துக்கு... ஆ..ஆ..ஆ என்று சவுண்ட் விட்டு கொண்டிருந்தார்.

ஜெட்லி பன்ச்:

கச்சேரி ஆரம்பம் : ஸ்பீக்கர்ல ஓவர் சவுண்ட்...!!

************************************************

முன்தினம் பார்த்தேனே.....
இந்த படத்தில் குத்து பாட்டு இல்லை,அலற வைக்கும் சண்டை
காட்சிகள் இல்லை,முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இல்லை,
ஹீரோவுக்கு பன்ச் வசனம் இல்லை அது போல் படத்தில் சுவாரசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!!

படம் ரெண்டு மணி நேரம் தான் என்றாலும் படம் எப்போ
முடியும் அப்படின்னு கேட்க வைக்கிறது திரைக்கதை.படம்
ஆமையை விட கொஞ்ச மெதுவா போது அவ்வளவு தான்.
உன்னாலே உன்னாலே மாதிரி ட்ரை பண்ணி இருக்காங்க
அப்படின்னு சொல்லலாம் ஆனா எல்லாமே பணால் ஆகி
போச்சி.....

டி.வி.சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் அந்த சல்சா ஜோடி செலக்ட்
பண்ணும் இடத்தில் சிரிக்க வைக்கிறார்.மிச்ச டைம் அவரு
காமெடி பண்றேன்னு முன்னாடியே சொல்லி இருந்தார்னா
சிரிச்சிருக்கலாம்......ஹீரோ சஞ்சய் நல்லாத்தான் இருக்காரு...
பார்ப்போம் அடுத்த படத்தில்....


கதாநாயகி...சத்தியமா என்ன பேருன்னு எனக்கு தெரியலைங்க...
மூணு கதாநாயகினு சொன்னாங்க ஆனா நான் ரெண்டு பேரை
தான் பார்த்தேன்.அதுவும் எல்லாம் ஒரே முக அமைப்பில்
இருப்பதனால் கொஞ்சம் கஷ்டம் ஆயிருச்சு.அப்புறம் கேரக்டர்
பேரு கூட மறந்துட்டேன்....அவ்வளவு குழப்பம்!!

தியேட்டர் நொறுக்ஸ்:

நொறுக்ஸ் எழுதுற அளவுக்கு தியேட்டர்ல ஆளு இல்லைன்னு
தான் சொல்லணும்.என்ன என்னையும் சேர்த்து இருபது பேர்
இருந்துருப்பாங்க சாய்சாந்தியில்.அதிலும் அஞ்சு ஜோடிகள் என்பது
குறிப்பிடத்தக்கது....நான் ஸ்க்ரீனை மட்டும்தாம்பா பார்த்தேன்....!!


காதலர்கள் கொண்டாட ஒரு படம் முன்தினம் பார்த்தேனே...
கண்டிப்பா படத்தை பார்த்து அல்ல!!


ஒரு வேளை வடிவேலு இந்த படத்தை பார்த்தால்...
படம் ஆரம்பிக்கும் முன் படியில் ஏறும் போது.....

" மாப்பு....மாப்பு....வச்சிட்டாங்கடா ஆப்பு....
அடேய் நானாதான் தனியா வந்து சிக்கிட்டேனா,...."

படம் முடிந்து வெளியே வரும்போது....தனக்கு தானே...

"உன்னை எவன்டா முந்தாநேத்து பார்க்க சொன்னது....
இனிமே பாப்பியா...இனிமே பாப்பியா..
பீ கேர்புல்"(என்னை சொன்னேன்!!).

ஜெட்லி பன்ச்:

முன்தினம் பார்த்தேனே - பார்க்காமலே இருந்திருக்கலாம்!!


இந்த விமர்சனம் பல மக்களை சென்று அடைய ஒட்டு மற்றும்
பின்னூட்டம் போடுமாறு கேட்டுகொள்கிறோம்.....ஜெட்லி.....

நன்றி:indiaglitz

66 comments:

Mrs.Menagasathia said...

மொக்கை படத்தை பார்க்கவிடாமல் செய்த ஜெட்லி வாழ்க!! நன்றி ஜெட்லி!! இருந்தாலும் உங்களை கஷ்டப்படுத்தி படம் பார்த்து எங்களுக்கு விமர்சனம் எழுதறீங்களே அதற்க்காக உங்களுக்கு ஒரு சல்யூட்...

லோகு said...

படம் மொக்கையோ இல்லையோ, மொதல்ல தியேட்டர் நொறுக்ஸையும், ஜெட்லி பன்ச்யையும் படிச்சுட்டு தான் விமர்சனம் படிக்கிறேன். அட்டகாசம்.

அதுக்கு வேண்டியே நீங்க நிறைய மொக்க படம் பார்க்கணும்னு வேண்டிக்கிறேன். :)

thenammailakshmanan said...

ஜெட்லி ஒரு வேளை முந்தினம் பார்த்ததால நல்ல எச்சரிக்கை தெளிவா குழப்பி இருக்காங்கன்னு நினைகிறேன்

முகிலன் said...

தன் உயிரையும் துச்சமாக மதித்து தமிழ் மக்களைக் காக்கும் அண்ணன் ஜெட்லிக்கு வீர சாகசத்துக்கான ஜனாதிபதி விருது வழங்க வேண்டும்

இவண்
ஜெட்லி ரசிகர் மன்றம்

முகிலன் said...

இது மூணாவது தடவையா நான் போடுற கமெண்ட்..

தமிழ் மணம் பட்டியை தமிழிஷ்க்கு கீழ கொண்டு வாங்கப்பு.. ஓட்டுப் போட வசதியா இருக்கும்..

ஆடுமாடு said...

முன் தினத்துல... பாடல் எல்லாம் நல்லாருக்கே... படத்தைதான் கொன்னுட்டாய்ங்களா?

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

........ மொக்கை படங்களுக்கும் சூப்பர் வசனம் எழுதும் ஜெட்லி வாழ்க! வாழ்க!
தானாய் சென்று தனக்கு ஆப்பு வைத்து கொண்ட தானை தலைவன், ஜெட்லி வாழ்க, வாழ்க!
வருங்கால முதல்வரே, வாழ்க! வாழ்க!

ஜெட்லி ரசிகர் மன்றம்
மகளிர் அணி

hasan said...

haa haaaa hhhaaaaa. jetli please neenga kastapaduratha parka mudiyala!
so ini mel trailer parthutu padathuku ponga!

பிரபாகர் said...

இந்த மாதிரியெல்லாம் பின் தினம் வருத்தப்படக்கூடாது!

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

என்னா ஒரு பொருமைடா சாமி:))

ஜெட்லி said...

@ Mrs.Menagasathia

நன்றி...இஷ்டப்பட்டு தான் படம் பார்க்கிறேன்
கஷ்டப்பட்டு இல்ல.....!!
படம் பார்த்தவுடன் வந்த பன்ச்.....

ஜெட்லி said...

@ லோகு

நானும் அதுக்கு தான் போறேன் நண்பா....!!

ஜெட்லி said...

@ thenammailakshmanan

ஏதோ ஒன்னு....சுத்தமா முடிந்தது கதை...
நன்றி

ஜெட்லி said...

@ thenammailakshmanan

ஏதோ ஒன்னு....சுத்தமா முடிந்தது கதை...
நன்றி

ஜெட்லி said...

@ முகிலன்

டென்ஷன் ஆகாதிங்க முகிலன் கூடிய விரைவில்
வைக்கிறேன்.....

ஜெட்லி said...

@ ஆடுமாடு

பாட்டை நம்பி தான் அண்ணே போனேன்....
கஷ்டம்....

ஜெட்லி said...

@ Chitra


ஏன்...வருங்கால அதிபரை விட்டுடீங்க....

ஜெட்லி said...

@ hasan

இப்போ நான் டி.வி.பார்க்கற டைம்ல
ட்ரைலர் போட மாட்டுகிறாங்க.....
பார்க்கலாம்....நான் என்ன இன்னைக்கு நேத்தா
மொக்கை படம் பார்க்கிறேன்.....

ஜெட்லி said...

@ பிரபாகர்

சரியா சொன்னீங்க அண்ணே.....

ஜெட்லி said...

@வானம்பாடிகள்

இதை தான் நான் சொன்னேன்....
மொக்கை சினிமா பாருங்க சகிப்பு
தன்மை கண்டமேனிக்கு வளரும் என்று.....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அடேங்கப்பா.. ஆரம்பமே அசத்தல் (பன்ச்..பன்ச்..:).

--
வர வர படம் ஒன்னுமே சரியில்ல போல ஜெட்லி, எதுக்கும் டிவி சீரியலுக்கு விமர்சனம் போட்டா என்ன?? :))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

தல விமர்சனம் நல்ல காமெடி யா இருக்கு சிரிச்சிகிட்டே படிச்சே கலக்குங்க ....

senthilkumar said...

படம் முடியற முன்னாடி ஆர்த்திகிட்ட நம்ம ஜீவா காதல்
பத்தி ஒரு அஞ்சு நிமிஷம் நிக்காம மொக்கை போடுவாரு
பாருங்க.....ஐயோ சாமி....என்று தியேட்டரே அமைதியாய்
இருந்த போது படம் பார்த்து கொண்டிருந்த ஒரு குடிமகன் மட்டும் ஜீவா சொல்ற வசனம் மற்றும் கருத்துக்கு... ஆ..ஆ..ஆ என்று சவுண்ட் விட்டு கொண்டிருந்தார்.


இங்கே உங்கள் விமர்சனம் சரியாக விளங்குவது போல் குலப்பி இருக்கிரிர்கள்
உங்கலுக்கு செந்தில்குமாரின் வணக்கங்கள்...........

தமிழ் உதயம் said...

நீங்க சொல்லி தான், இந்த படங்கள் எல்லாம் ரீலிசானதே எனக்கு தெரியுது. வாழ்க சமூக சேவை

ILLUMINATI said...

// உன்னாலே உன்னாலே மாதிரி ட்ரை பண்ணி இருக்காங்க
அப்படின்னு சொல்லலாம் ஆனா எல்லாமே பணால் ஆகி
போச்சி.....//
ஹா ஹா ......
ஆமா,classic படம் பாத்திங்களா தல?எப்டி இருந்துச்சு?

ஸ்ரீராம். said...

காம்ப்ளிமென்ட்டரி டிக்கெட் கொடுத்துடராங்களோ..? எப்படிங்க இப்படி பெயர் தெரியாத படம்லாம் பார்க்கறீங்க?

ஜெட்லி said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║


ஏன்ணே நான் டி.வி.யே அவ்வளவா பார்க்கறது
இல்லை.....அதை வேற புல்லா உட்கார்ந்து யார்
பார்ப்பது......

ஜெட்லி said...

@ ஸ்ரீ.கிருஷ்ணா

கச்சேரி ஆரம்பம் படம் கூட காமெடினு
சொல்றாங்க...போய் பாருங்க...
சில இடங்களில் சிரிப்பு வருகிறது....

ஜெட்லி said...

@ senthilkumar

குழப்பறது தான் நம்ம வேலையே செந்தில்.....

ஜெட்லி said...

@ தமிழ் உதயம்

அண்ணே....உங்க ரேன்ஜ் வேற அண்ணே...

ஜெட்லி said...

@ ILLUMINATI

இன்னும் தரவிறக்கம் பண்ணவில்லை...
பார்த்தவுடன் மெயில் பண்ணுகிறேன் நண்பரே....

ஜெட்லி said...

@ ஸ்ரீராம்

அண்ணே ரேடியோவை போட்ட ஒரே பட விளம்பரம்
தான் வருது.....பார்க்காம எப்படி இருக்கிறது...
ஏதோ என்னால முடிஞ்சா வரைக்கும் படங்களை
பார்க்கிறேன்......

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பி..!

எனக்கு செலவை மிச்சப்படுத்திட்ட.. மிக்க நன்றி..!

இது மாதிரி எல்லா படத்தையும் பார்த்திட்டு வெளில வரும்போதே எனக்கு போன் அடிச்சு சொல்லிட்டீன்னா ரொம்ப நல்லாயிருக்கும்..

D.R.Ashok said...

ஒரே கல்லுல இரண்டு மாங்கா... :))

D.R.Ashok said...

இரண்டு விமர்சனத்த சொன்னேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

யாம் பெற்ற துன்பம் மாதிரி ரெண்டு மடங்கா.. அவ்வ்வ்வ்வ்வ்

~~Romeo~~ said...

2 in 1 :)

kanagu said...

முந்தினம் பார்த்தேனே நல்லா இருக்கும்-னு நெனச்சேன்... இப்படி ஆயிடுச்சே... :( :(

ஜீவா ஏன் தேவ இல்லாம கமர்ஷியல் படம் நடிக்கிறேன்னு நம்மள காண்டேத்துறார்-னு தெரியல :( :(

எறும்பு said...

:))
Same blood...

ஜெட்லி said...

@உண்மைத் தமிழன்

உங்க கிட்ட சொல்லாம வேற யாருக்கு சொல்ல போறேன்....
கண்டிப்பா சொல்றேன்!!

ஜெட்லி said...

@ D.R.Ashok

நீங்க என்னமோ டபுள் மீனிங்ல சொல்றீங்க....
சின்ன பையன் எனக்கு புரியலை...

ஜெட்லி said...

@ D.R.Ashok

நீங்க என்னமோ டபுள் மீனிங்ல சொல்றீங்க....
சின்ன பையன் எனக்கு புரியலை...

ஜெட்லி said...

@ D.R.Ashok

நீங்க என்னமோ டபுள் மீனிங்ல சொல்றீங்க....
சின்ன பையன் எனக்கு புரியலை...

ஜெட்லி said...

@ D.R.Ashok

நீங்க என்னமோ டபுள் மீனிங்ல சொல்றீங்க....
சின்ன பையன் எனக்கு புரியலை...

ஜெட்லி said...

@ கார்த்திகைப் பாண்டியன்

ஹா ஹா....

ஜெட்லி said...

@ ~~Romeo~~

nandri romeo

ஜெட்லி said...

@ kanagu

எனக்கும் அதே எண்ணம் தான் நண்பா...

ஜெட்லி said...

@ எறும்பு

என்ன படம் பார்த்தீங்க??

மோகன் குமார் said...

தம்ப்ப்ப்பீ நீங்க படம் பாத்து கஷ்ட பட்டாலும் எங்களை சிரிக்க வச்சிடுறீங்க

அக்பர் said...

இப்படி மொக்கை படத்தை கூட விடமா பார்த்து விமர்சனம் எழுதி மக்கள் பொருளாதாரத்தை காக்கும் ஜெட்லி வாழ்க.

உங்க பஞ்ச் எனக்கு பிடிச்சிருக்கு.

DREAMER said...

2 in 1 விமர்சனம் நல்லாயிருக்கு ஜெட்லீ...

இதுல ஹலைட் என்னன்னா, நீங்க காதலர்களுக்கு இந்த படத்தை ரெகமெண்ட் செய்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..!

//காதலர்கள் கொண்டாட ஒரு படம் முன்தினம் பார்த்தேனே...
கண்டிப்பா படத்தை பார்த்து அல்ல!!//

கலக்குங்க..!

-
DREAMER

ர‌கு said...

நீங்க‌ த‌னியாதான் ப‌ட‌ம் பாக்க‌ போறீங்க‌ளான்னு என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம் ஜெட்லி ;))

இராமசாமி கண்ணண் said...

கண்டிப்பா ஒங்களுக்கு பாரத ரத்னா கொடுத்த் ஆகனும்னு ராகுல் காந்தி அடம் பிடிக்கிறாரு. என்ன சொல்லட்டும் நான் ! மறுபடியும் நன்றி நண்பரே வாழ்க்கயில் ஒரு 6 மணி நேரத்தை காப்பாறியமைக்கு.

kanavugal said...

நாங்க கஷ்டப்பட கூடாதுன்னு நீங்க எவ்வளவு இம்சைகளை தங்குறீங்க .... நீங்க ரொம்ப நல்லவரு நண்பா.....

ஜெட்லி said...

@மோகன் குமார்

நன்றி அண்ணே....ஏதோ என்னால் முடிந்த
சேவை....!!

ஜெட்லி said...

@ அக்பர்

ஆஹா..இது கொஞ்சம் ஓவர்ஆ இல்ல இருக்கு....

ஜெட்லி said...

@ DREAMER

நன்றி ட்ரீமர்...
ஏதோ நானும் காதலர்களுக்கு உதவி செய்த
திருப்தி,...! :))

ஜெட்லி said...

@ர‌கு

அட...நீங்க வேற ரகு...தொடர்ந்து பல
மொக்கை படங்களை பார்த்து வருவதால்
ஆண் நண்பர்களே ஜகா வாங்குறாங்க...:((
ஸ்டார் வால்யு உள்ள படத்துக்கு
மட்டும் தான் என் கூட வராங்க...

ஜெட்லி said...

@ இராமசாமி கண்ணண்

உங்க அன்பு புரியுது....பட் நோ பொலிடிக்ஸ்...
நன்றி...

ஜெட்லி said...

@ kanavugal

நன்றி நண்பரே... கிரி வடிவேலு ரேன்ஜ்க்கு பீல்
பண்றீங்க...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஜெட்லி பஞ்ச் ரொம்ப சூப்பர்.

புலவன் புலிகேசி said...

:))

சைவகொத்துப்பரோட்டா said...

நேத்துதான் கச்சேரிக்கு போனேன் :(

Rajasadaraj said...

good punch

வெடிகுண்டு வெங்கட் said...

தல,
அந்த ஆரம்ப வசனம் சூப்பர். மிகவும் ரசித்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி