Wednesday, March 3, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்:(3.3.10)

முக்கிய அட்டு செய்திகள் :

***************************************************

கவர்ச்சி காட்டுவது தப்பல்ல.....
நீச்சல் உடையில் நடிப்பேன்.
-நடிகை பியா பரப்பரப்பு பேட்டி.

ஏகன், கோவா போன்ற படங்களில் மினி ட்ரெஸ்ஸில்
வந்து அசத்திய பியா அவர்கள் கதைக்கு தேவைப்பட்டால்
பிகினியில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்....இது குறித்து எமது செய்தியாளரிடம் கோவா படம் பார்த்து
வந்த வாலிபர் தெரிவித்தது.....

" பியா அவர்கள் ஏற்கனவே ஜட்டி போன்ற கால்சட்டையில்
நடிச்சாலும்,நாங்க அவரை பிகினியில் பார்க்க ஆவலாக

இருக்கோம்..!" என்று ஜொள் வழிந்தபடி அவர் கூறியது
காலை நினைத்தது.

"எதுவாக இருந்தாலும் பியாவின் தாராள சேவை தமிழ்நாட்டுக்கு
வழக்கம் போல் தேவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்."
ஜெட்லி செய்திகளுக்காக நைன்டி மைனா.

********************************************

ரொம்ப சீரியஸ் ஆன விஷயம்:

இடைத்தேர்தலில் சுயமரியாதையை விட்டுவிட்டு யாரையும்
ஆதரிக்க மாட்டோம்.....

ஆதரவு கேட்டால் மட்டும் ஆதரவு கொடுப்போம்....

விஜய.டி.ராஜேந்திரன் பேட்டி...(இதுக்கு என்ன கமெண்ட் பண்றதுனு எனக்கு தெரியல!!)

*************************************************

விளம்பர இடைவெளி:

உங்க சரக்கில் மப்பு இருக்கா??

மைக்குடன் ஒரு பெண் வீட்டினுள் நுழைந்து அங்கு
குப்புற படுத்து கிடந்தவரிடம்:" உங்களுக்கு காலையில்
எழுந்தவுடன் தலைவலி இருக்கா??"

அவர் : "ஆ.ஆ ..ஆமா!!"

பெண்: உங்க சரக்கில் மப்பு இருக்கா??

அவர் :"லை..லை.. லைட்டா தான் இருக்கு...."

பெண் : "இந்தாங்க புதிய B.P.GOLD இனிமே உங்களுக்கு
மப்பு பிரச்சனையே இருக்காது...."

அவர்: "புதிய B.P.GOLD நாள் முழுதும் கிடைக்குமே மப்பு!!"

புதிய B.P.GOLD மப்புக்கு கியாரண்டி....!!

************************************************

சிறப்பு பார்வை:

சின்ன அசினா?? இல்ல சின்ன சிநேகாவா??....தொடர்ந்து மொக்கை படங்களை கொடுத்து வரும்
பூர்ணா என்ற நடிகை முதலில் தன்னை சின்ன அசின்
என்று கூறினால் சந்தோஷப்படுவேன் என்றார்.இப்போ
என்னனா சின்ன சிநேகானு சொன்ன சந்தோஷப்படுவேன்
என்கிறார்.

இது குறித்து ஒரு சிறப்பு பார்வை வழக்கம் போல் சாதாரண
கண்ணில் பார்த்தது தான்.

"நாடே கொந்தளிக்கிறது....யார் இந்த பூர்ணா??
இவர் சின்ன அசினா?? இல்லை சின்ன சிநேகாவா??
இதற்கு விடை தெரியாமல் மக்கள் கூட்டம் அங்கும்
இங்கும் இருக்கும் சுவர்களில் தங்கள் தலையை முட்டி
கொண்டு இருக்கிறார்கள்......"

இது பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு....
"இவங்கள விட்டா நான் மினி நமீதா, குட்டி தமன்னானு
சொல்லிட்டே போவாங்க...." என்று மேலும் சோகத்தில்
ஒரு குவாட்டர் வாங்க சென்றார்.

****************************************************

பொது அறிவு கேள்வி :

சமீபத்தில் லிப் கிஸ் அடித்து ஜுரம் வந்த நடிகர் யார்??

A.பட்டாப்பட்டி சடகோபன் ரமேஷ்.

B.என் கூட பி.சி.ஏ. படிச்ச ரமேஷ்.

வழக்கம் போல விடையை யாருக்கு வேணும்னாலும்
அனுப்புங்க.....முடிஞ்சா பட்டாபட்டி படத்தின் டிக்கெட்
வாங்கி அனுப்புகிறேன்.....!!

***************************************

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


உங்கள்
ஜெட்லி....

மேலும் உங்கள் பொது அறிவு வளர பின்னூட்டத்தை போட்டும்
ஒட்டு போட்டும் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

32 comments:

ROMEO said...

Me the First ..

படிச்சிட்டு வரேன்

ROMEO said...

\\மைக்குடன் ஒரு பெண் வீட்டினுள் நுழைந்து அங்கு
குப்புற படுத்து கிடந்தவரிடம்:" உங்களுக்கு காலையில்
எழுந்தவுடன் தலைவலி இருக்கா??"//


கொஞ்ச நாள் போச்சுனா டாய்லேட் போக முடியலையான்னு வந்து கேட்டாலும் கேப்பாங்க.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//"எதுவாக இருந்தாலும் பியாவின் தாராள சேவை தமிழ்நாட்டுக்கு
வழக்கம் போல் தேவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்."
ஜெட்லி செய்திகளுக்காக நைன்டி மைனா.
//

இருமல் வருதே அண்ணாச்சி..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஆதரவு கேட்டால் மட்டும் ஆதரவு கொடுப்போம்....
//

யார் கேட்டாலும் கொடுப்பார்கள்..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இதற்கு விடை தெரியாமல் மக்கள் கூட்டம் அங்கும்
இங்கும் இருக்கும் சுவர்களில் தங்கள் தலையை முட்டி
கொண்டு இருக்கிறார்கள்......"
//

வேற மேட்டருக்குல்ல இப்ப முட்டிக் கொண்டு இருக்கிறார்கள்..,

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பரபரப்பா இருக்கு..:))

♠ ராஜு ♠ said...

சைடு கேப்புல நீங்க ஒரு பிசிஏ பட்டதாரின்னு சொன்ன உங்க நுண்ணரசியலை நான் வெகுவாக ரசித்தேன்.

Chitra said...

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


........அந்த ஆறிப்போன உப்புமா செய்திகளையும் சூடாக்கி படிக்கிற என்னை போன்ற வெட்டி ஆட்களுக்கு, பாராட்டு விழா எடுக்கும் போது கண்டிப்பாக சொல்லி அனுப்புங்க. அந்த செய்தியை பிந்தி தந்துடாதீங்க......

வானம்பாடிகள் said...

:))

தமிழ் உதயம் said...

பியான்னு ஒரு நடிகை இருக்காங்களா

ஜெட்லி said...

@ romeo

அதுவும் வந்திரிச்சே பாஸ்...
அப்பாஸ் விளம்பரம் பார்க்கலையா...
வீட்ல வந்தே கழுவி விடுவாரு!!

ஜெட்லி said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

//வேற மேட்டருக்குல்ல இப்ப முட்டிக் கொண்டு இருக்கிறார்கள்..,
//

ஓகே...புரியுது...

ஜெட்லி said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

எல்லாம் ஆறிப்போன நியூஸ் அண்ணே...

ஜெட்லி said...

@ ♠ ராஜு

சித்தப்பு....நான் எம்.சி.ஏ. பட்டதாரி....

ஜெட்லி said...

@Chitra

பாராட்டு விழாவா.....??
இனிமே ஆறிப்போன நியூஸ் போடமாட்டேன்...
அவன் அவன் பாராட்டு விழானு சொன்னாலே
டெர்ரர் ஆகுறாங்க......

ஜெட்லி said...

@ வானம்பாடிகள்

nandri...

ஜெட்லி said...

// தமிழ் உதயம் said...
பியான்னு ஒரு நடிகை இருக்காங்களா
//


பச்சை மண்ணுணே நீங்க...

Bala De BOSS said...

//சமீபத்தில் லிப் கிஸ் அடித்து ஜுரம் வந்த நடிகர் யார்??

A.பட்டாப்பட்டி சடகோபன் ரமேஷ்.

B.என் கூட பி.சி.ஏ. படிச்ச ரமேஷ்.///

அருமை நண்பா......

இந்த கேள்வியை கொஞ்சம் மாத்தி,

லிப் கிஸ் அடிச்சதை பார்த்து ஜுரம் வந்தது யாருக்கு என்று கேட்டிருந்தால்

"நம்ம அண்ணன் ரமேஷ் தான்னு பட்டுன்னு சொல்லியிருப்பேன்

பாலா said...

பியா டவுசர் போட்டதே பிக்கினி மாதிரி தான் இருக்கு. இதுல பிகினி போட்டா எப்படி இருக்கும்....:)))))))


//இடைத்தேர்தலில் சுயமரியாதையை விட்டுவிட்டு யாரையும்
ஆதரிக்க மாட்டோம்.....

நெனப்புதான் பொழப்ப கெடுக்கும் என்பார்கள்..
இந்த கமெண்ட் ஓகேவா
balapakkangal.blogspot.com

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லாயிருக்கு தல

D.R.Ashok said...

புதிய B.P.Gold matteru உண்மையா ஜெட்லி

முகிலன் said...

செய்திகள் எல்லாம் நல்லா இருக்கு..

செய்தி படிச்சா BP கோல்ட் வீட்டுக்கு அனுப்புவம்னு ஈமெயில் வந்துச்சே எப்ப வரும்?

வெற்றி said...

சாமியார் மேட்டர் இருக்கும்ன்னு நம்பி வந்த குழந்தைய ஏமாத்திட்டீங்களே பெருசு :((

பாலா said...

பாலோயர் ஆகிட்டேன் தல...

rajaram said...

மாப்ள சைடு gapla உன் MCA வ BCA ன்னு சுருக்கிப்புட்டாங்க.. Be careful da...

Porkodi (பொற்கொடி) said...

ennanga idhu! nithyananda pathi padhivu illadha ore bloga irukum polaye? :)

அத்திரி said...

)))))

சேட்டைக்காரன் said...

பிந்தித்தந்தாலும் படித்து தொந்தி பெரிதாகி விட்டது போல ஒரு பூரிப்பு ஏற்பட்டு விட்டதண்ணே! :-))

அக்பர் said...

என்ன அருமையான செய்திகள்.
கமெண்ட்ஸ் மிக அருமை.

ர‌கு said...

நீங்க‌ளாவ‌து அந்த‌ மேட்ட‌ர் ப‌த்தி எழுதாம‌ இருந்திங்க‌ளே, எந்த‌ ப்ளாக் போனாலும் அந்த‌ மேட்ட‌ர்தான் ஓடிகிட்டிருக்கு

Anbu said...

:-))

DREAMER said...

செய்திகள் அருமை ஜெட்லி...

நீங்க தனியா ஒரு நியூஸ் சேனலே ஆரம்பிக்கலாம். மேலும், 'குற்றம் குடைந்தது என்ன..?' போன்ற தரமான நிகழ்ச்சிகளையும் வாரி வழங்கலாம்...

கலக்குங்க... சூப்பர்...

-
DREAMER