Tuesday, June 1, 2010

விசிலடிக்கலாம் வாங்க....

விசில் = பிகில்

நீங்க எப்போ கடைசியா விசில் அடிச்சீங்க,,,,?? நேத்து போன படத்துக்கா இல்ல ரோட்ல போற பொண்ணை பார்த்தா... நான் கடைசியா விசில் அடிச்சது குருசிஷ்யன் படத்தில் சந்தானம் அறிமுக காட்சிக்கு. தியேட்டரில் இருந்த நூப்பது பேரில் என் ஒரு விசில் சத்தம் மட்டுமே முதலில் கேட்டது அதன் பின் ரெண்டு மூணு பேர் விசில் அடித்தனர்.


விசில் பத்தி சாதாரணமா எடை போட்டுட கூடாது. சில வருடங்கள் முன் அமெரிக்கா பள்ளியில் மாணவர்கள் வாயில் விசில் கருவி வைத்து விசில் அடித்து கின்னஸ் சாதனை புரிந்து உள்ளனர். பின்னர் இந்த சாதனையை நாப்பது ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து விசில் அடித்து முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பசங்க அடிச்ச விசில் வீடியோ உங்கள் பார்வைக்கு....

http://www.youtube.com/watch?v=g09H_6vHmzsநமது உற்சாகத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்த விசில் அடிப்பது வழக்கமாகி விட்டது. விசில் அடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று விசில் அடிப்பவர்கள் சொன்னாலும், தியேட்டரில் நமது நண்பர்கள் அல்லது பின் சீட்டுக்காரர் விசில் அடிக்கும் போதும் நமக்கும் நம் அபிமான நடிகரோ நடிகையோ தோன்றும் போது விசில் அடிக்க ஆவல் தூண்டி இருட்டில் வாயில் விரல் வைத்து ஊதினால் காத்து தான் வரும். அதை நண்பர்கள் பார்த்துவிட்டு கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள். பல நண்பர்கள்
வாயில் விரல் வைத்து விசில் அடிக்க வராததால் தியேட்டருக்கு
விசில் கருவி கொண்டு வந்து அடிப்பதையும் பார்த்து இருக்கிறோம்.

விசில் அடிப்பது எப்படி:

விசில் அடிப்பது எப்படினா....நாக்கை மடித்து கொண்டு உங்கள் கட்டை விரல் கூட எந்த விரல் காம்பியும் சேர்த்து கொள்ளலாம்.பழக முதலில் ஆள்க்காட்டி விரல் தான் பெஸ்ட்....ரெண்டு விரலையும் இணைத்து நாக்கின் அடியில் வைத்து மனம் தளராமல் ஊதி கொண்டிருந்தால்..... சில வாரங்களில் நீங்களும் விசில் அடிக்கலாம்....அப்படி விசில் அடித்துவிட்டால் லம்பாக ஒரு அமௌன்ட் அனுப்பவும்....பயிற்சி கட்டணம்...!!

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதும் என் நண்பன் வாயில்
விரல் வைத்து விசில் அடிப்பான். அவன் விசில் அடிக்க கத்து கொடுத்த டிப்ஸ் தான் இப்போது நான் விசில் அடிக்க காரணம். ஒரே நாளில் விசில் அடிக்க முடியாது முயற்சி செய்து கொண்டிருந்தால் தான் சவுண்ட் வரும் என்பான். முதல் மூணு நாளில் காத்து மட்டுமே வந்தது பின்பு சைக்கிளில் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் விசில் அடித்து பழகுவதே
முதல் வேலையானது. ஒரு வாரத்தில் விசில் அடிக்க கத்து கொண்டு நண்பனிடம் விசில் அடித்து காட்டி பின்பு அவன் பல்வேறு விரல்களையும் கொண்டு விசில் அடிக்கலாம் என்று பாடம் நடத்தினான்.

ஸ்கூல் டூர் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் விசில் அடித்து பல பேரின் கவனத்தின் பெற்றேன். ஆனால் அந்த கவனம் நல்ல அடையாளம் அல்ல என்று அப்போதே தெரிந்தது, இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் விசில் பறந்து கொண்டு தான் இருந்தது. ஒன்பதாவது படிக்கும் போது தான் எங்கள் தெருவில் உள்ள பாய் ஒருத்தர் ஒரு நபரை அழைக்க வாயில் விரல் வைக்காமலே நாக்கை மடித்து விசில் அடித்தது என் காதை கிழித்தது. எப்படி விசில் அடிக்கிறார் இப்படி மனுஷன் அதுவும்
கை வைக்காமல் என்று நானும் பல மாதங்கள் முயற்சி செய்தும்
சவுண்ட் அவ்வளவாக வரவில்லை.....விசில் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமைததாக ஆகிவிட்டது. காலையில் பால் குக்கர் விசில் அடிக்கும் அப்புறம் பிரஷர் குக்கர் விசில் அடிக்கும் இப்படி விசில் நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்டது. சாப்பிட்டு வேலைக்கு போனால் நம் வண்டியை நிறுத்த டிராபிக் போலீஸ்காரர் அடிப்பதும் விசில்தான்.பள்ளியில் விளையாட்டிலும் விசிலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அப்படியே போர் அடிச்சு படத்துக்கு போன அங்கே போனாலும்
விசில் தான்.சாவு மேளத்துக்கு வூடு கட்டுபவர்களுக்கு பேரும் உற்சாகம் தருவதும் இந்த விசில் தான்.எனக்கு விசில் பாட்டு என்றாலே சந்திரபாபுவின் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' என்ற பாட்டு தான் நினைவுக்கு வரும். இனிமையான கருத்துள்ள பாட்டு. ப்ரீயா இருக்கும் நேரத்தில் விசில் அடித்தே ஒரு பாட்டை பாடினால் சுகமே தனி. விசிலை நம் சென்னையில் பிகில் என்றும் அழைப்பார்கள். 'ஓரம் போ' படத்தில் லால் பெயர் கூட பிகில் தான்....விசில்னு ஒரு படம் கூட வந்திருக்கு ஆனா தியேட்டரை விட்டு சீக்கரம் போயிருச்சு...ரைட் நான் பிகில் அடிச்சுட்டு அப்படியே எஸ் ஆயிக்கிறேன்...!!


உங்களுக்கும் இது போல் விசில் அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்....

ஜெட்லி...(சரவணா...)

12 comments:

அநன்யா மஹாதேவன் said...

கடைசி வரைக்கும் விசில் அடிப்பது எப்படிங்கற டுட்டோரியல் எதுவும் காணோமே? நாலெட்ஜு ஷேரிங் வேணும்ப்பா..
ஜாலியான கட்டுரை

ஜெட்லி said...

@அநன்யா மஹாதேவன்


ஐயோ அதை பேஸ்ட் பண்ண மறந்துட்டேன்ங்க...
நன்றி... இப்போ போட்டாச்சு..

யாசவி said...

ஊஊஊஊ

ஜெய் said...

எனக்கு விசிலடிக்கத்தெரியாதுன்னு ரொம்ப நாளா வருத்தம்.. :( சீக்கிரமே கத்துக்கிறேன்.. செய்முறை விளக்கத்திற்கு நன்றி..

MANO said...

விசில் அடித்தே ஆக வேண்டும் என்கின்ற வெறியே தூண்டி விடுகிறது உங்கள் பதிவு. ரொம்ப ஜாலியான பதிவு. வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
அகல்விளக்கு said...

.


.

.
என்ன எம்ப்டியா இருக்குன்னு பாக்குறீங்களா...

நானும் விசிலடிச்சு என் ஆதரவத் தெரிவிச்சேன்...
:-)

ர‌கு said...

ந‌ம‌க்கு புடிச்ச‌ ந‌டிகை ஸ்க்ரீன்ல‌ வரும்போது, கூட‌வே வாய்ல‌ருந்து வாட்ட‌ர் ஃபால்ஸும் வ‌ருதே, அந்த‌ ச‌ம‌ய‌த்துல‌ எப்ப‌டிங்க‌ விசில் அடிக்க‌ற‌து? :))

வானம்பாடிகள் said...

நல்ல ஆராய்ச்சி. :))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////சில வருடங்கள் முன் அமெரிக்கா பள்ளியில் மாணவர்கள் வாயில் விசில் கருவி வைத்து விசில் அடித்து கின்னஸ் சாதனை புரிந்து உள்ளனர். பின்னர் இந்த சாதனையை நாப்பது ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து விசில் அடித்து முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ////

எனக்கு இதுவரை தெரியாத தகவல் நண்பரே பகிர்வுக்கு நன்றி

அக்பர் said...

அண்ணே எங்கேயோ போயிட்டிங்க.

என் பங்குக்கு நானும் விசிலடிச்சுட்டேன்.

தியேட்டரில் சத்தமா விசிலடிக்கிறாங்களே. அது எப்படிண்ணே.

gobi muthusamy said...

நீங்க சொன்னத முயற்சி செய்து பார்த்தேன் விசில் வருது எனக்கு நன்றி