Tuesday, June 8, 2010

காயத்ரியுடன் இரு அனுபவம்!!

காயத்ரியுடன் இரு அனுபவம்!!


ரெண்டு வாரம் முன்னாடி தாங்க தலைவர் சுஜாதா எழுதின கதை தொகுப்பு காயத்ரியை வாங்கி படிச்சேன்.மொத்தம் அஞ்சு கதை இருந்தது.முதல் கதை காயத்ரி கொஞ்சம் பெரிய கதைதான் என்றாலும் செம விறுவிறுப்பு. அதுவும் சுஜாதா அவர்கள் கதை சொல்லும் விதம் செம. இந்த கதை தினமணி கதிரில் 1976ல் தொடர்கதையாக வந்தது என்று தெரிந்துகொண்டேன்.அதன் பின் காயத்ரி 1977ல் படமாகவும் காட்சி தந்திருக்கிறாள். சுப்பர்ஸ்டார் ரஜினி தான் நடித்திருக்கிறார் ஹீரோவாக அல்ல வில்லனாக...!!


நான் எழுதபோவது விமர்சனம் அல்ல...காயத்ரியுடன் என் அனுபவம் மட்டுமே.அதாவது புத்தகம் மற்றும் படங்கள் எனக்கு தந்த ஆச்சரியங்களும் ஏமாற்றங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் அவ்வளவே.

காயத்ரி கதை:

சுஜாதாக்கு காயத்ரி கதையில் அவருக்கே ஒரு ரோல் இருக்கும்.
அவரின் மூலமாகத்தான் கதையை நகர்த்துவார்.அதாவது மூர்
மார்க்கெட் சென்று அங்கு பழைய புத்தகத்தை வாங்கும் போது
தான் காயத்ரி எழுதிய சில குறிப்புகள் அடங்கிய நோட் புத்தகம்
கிடைக்கும்.பின்பு காயத்ரியின் கதையை அவள் எழுதிய அந்த
புத்தகத்தின் எழுத்துக்கள் மூலம் கதையை நகர்த்துவார்.
காயத்ரிக்கு ராஜரத்னம் என்பவருடன் திருமணம் ஆனதில்
இருந்து அங்கு நடக்கும் சில சம்பவங்கள் ராஜரத்னம் அவர்களின்
அக்கா,மற்றும் சமையல் அய்யரின் வினோத நடவடிக்கைகள்
குறித்து சுவாரசியத்துடன் கதை செல்லும்.

காயத்ரி வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் தன்னை யாராவது காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் "அவசரம் அவசியம்" என்று ஒரு நோட் புத்தகத்தில் தன் அனுபவத்தை எழுதுகிறாள்.பழைய பேப்பர்க்காரன் வரும் நேரம் பார்த்து தான் எழுதிய புத்தகத்தை நடுவில் வைத்து பழைய பேப்பர் கடையில் சேர்ந்து அது நம் எழுத்தாளரிடம் கிடைக்கிறது...அதன் பின் எழுத்தாளர் தன் நண்பன் வக்கீல் கணேஷ் மற்றும் அவரது உதவியாளர் வஸந்த் மூலம் எப்படி காயத்ரியை காப்பாற்றுகிறான் என்பதே சுஜாதா எழுதிய கதை.


சரி ராஜரத்னம் வீட்டில் என்னதான் நடந்தது நீங்க கேட்டா...
காயத்ரி குளிக்கும் போது யாரோ அவளை வாட்ச் பண்ற மாதிரி
ஒரு பீலிங் அதே போல் ரத்னத்துடன் படுக்கையிலும் அதே
பீலிங். அது தவிர சரசு அக்காவின் டார்ச்சர் வேறு.இதை கணேஷ்
தான் கண்டுபிடிக்கிறார் அதாவது scandal எடுத்து வெளிநபர்களுக்கு
அதை விற்று பணம் பண்ணுவதே ராஜரத்னம் குழுவுக்கு தொழில்.
இந்த கதையில் வழக்கம் போல் வஸந்தின் சொல்லுக்கு குறைவில்லை.

காயத்ரி படம்:


கதையை படித்த பின் எனக்கு படத்தை பார்க்க ஆவல் தூண்டியது.
இந்த மாதிரி ஒரு கதையை எப்படி படம் எடுத்திருப்பார்கள் என்று
ஒரு ஆவல் வந்தது. அதுவும் ரஜினிகாந்த் வேற நடித்து இருக்கிறார்
ஒரு வேலை அவர்தான் கணேஷோ என்று நினைத்தாவரே சி.டி.யை
போட்டேன்.

முதல் பெயர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என்று வந்தது பின்பு
தான் ரஜினி பெயர் அப்புறம் ஸ்ரீதேவி பெயர். ஜெய்சங்கர் தான்
கணேஷ்ஆக வருகிறார்.ரத்னமாக ரஜினி. காயத்ரியாக ஸ்ரீதேவி.
இந்த படம் 1977 இல் A சான்றிதழுடன் வெளிவந்துள்ளது. இளையராஜா
இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து இப்போது தான்
ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்க்கிறேன்.

காயத்ரி கதையில் மட்டும் கஷ்டங்கள் நிறைய அனுபவிக்கவில்லை
படம் எடுக்கப்பட்ட விதத்திலும் அனுபவத்திருக்கிறாள் போலும்.
பல மாற்றங்கள் உடன் படம் வந்திருக்கிறது. அந்த டைமில் இந்த
படம் ஒடிச்சானு எனக்கு தெரியாது... ஆனா இப்போ பார்க்கறதுக்கு
ஏதோ ஒரு நாடகம் பார்ப்பது போல் தான் இருந்தது. அதுவும் இல்லாமல் புத்தகத்தில் காயத்ரியின் கேரக்டர் நன்றாக தெரியும்
ஆனால் படத்தில் அப்படியெல்லாம் இல்லை முதல் சீனே பெண்
பார்த்து கல்யாணம் ஆகிவிடும்.

மெட்டி ஒலியில் அப்பாவாக வரும் டெல்லி குமார் இதில் ஸ்ரீதேவியின் அப்பாவாக வருகிறார். அதே குரல் அதே கனீர்!! புத்தகத்தை படிக்கும் போது இருந்த ஒரு பரபரப்பு படம் பார்க்கும் போது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதே போல் கணேஷ் கேரக்டர் ஜெய்ஷங்கர்க்கு சுத்தமாக செட் ஆகவில்லை. சுஜாதாவின் பல நாவல் படித்தவன் என்கிற முறையில் கணேஷ் எப்படி இருக்கணும் எனக்கு ஒரு ஐடியா இருக்கு ஆனா ஜெய்சங்கருக்கு பாடி லாங்குவெஜ் எதுவுமே சரியா இல்லை.


அப்புறம் கதையில் வந்த வஸந்த் கேரக்டரை படத்தில் காணவில்லை
வஸந்தின் சேட்டையையும் சேர்த்து அந்த எழுத்தாளர் பாத்திரத்தில்
வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியே செய்து விடுகிறார்.
படத்துக்கும் கதைக்கும் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார் திரைக்கதை ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம். பட்டாபிராமன் அவர்கள்
படத்தை இயக்கியுள்ளார்.


கதையை படித்த பின் படம் பார்த்த எனக்கு காயத்ரி படம் ஒரு
ஏமாற்றம் தான். ஒரு வேளை அந்த காலத்தில் படம் எடுத்ததால்
அப்படி ஒரு பீலிங்ஆ என்று தெரியவில்லை. இல்லை ஏற்கனவே
இது தான் கதை என்று தெரிந்த பின் வந்த பீலிங்ஆ என்று
தெரியவில்லை.


அடுத்தது சுஜாதாவின் ப்ரியா கதையை படிக்கலாம்னு இருக்கேன். படத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கதையை படிச்சுட்டு இன்னொரு தடவை படத்தை பார்க்கணும். சுஜாதா அவர்களின் கொலையுதிர் காலம் நாவலை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும். நல்ல த்ரில்லிங் கதை. என்னது அதையும் ஏன் படம் எடுத்து கெடுக்கணுமா...?? அதுவும் சரி தான்.

இது சும்மா....
இப்போது யாராவது கணேஷ் வஸந்தை வைத்து படம் எடுத்தால் எந்த நடிகர் சரியா இருப்பாங்க...??னு நீங்க நினைக்கிறிங்க.

எனக்கு என்னவோ கணேஷாக அஜித்தும் நம்ம ரேடியோ மிர்ச்சியில் காலையில் வருவாரே அஜய் அவர் வஸந்த் கேரக்டர்க்கு செட்
ஆவாங்கனு தோணுது...!!


ஜெட்லி...(சரவணா...)

27 comments:

Ram said...

காயத்ரி படத்தில் பாடல்கள் பற்றி குறிப்பிடவே இல்லையே ஜெட்லி, பாடகர் சுஜாதா அறிமுகம் (13 வயதில்) இந்த படத்தில் தான் என நினைக்கிறேன்., காலை பனியில்., அருமையாக இருக்குமே.,
-
ஆனால் நீங்க கூறியது உண்மையே., நாவலாக படிக்கும் போது இருக்கும் விறு விறுப்பு படத்தில் குறைவே., நிறைய நாடக தனம் வேறு., மசாலா நெடியும்.,

வந்தியத்தேவன் said...

//சுஜாதா அவர்களின் கொலையுதிர் காலம் நாவலை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும். நல்ல த்ரில்லிங் கதை. என்னது அதையும் ஏன் படம் எடுத்து கெடுக்கணுமா...?? அதுவும் சரி தான்.//

ஹிஹி ஆனந்த தாண்டவம் படத்தை கெடுத்தது போதாதா..

ப்ரியாவைப் படியுங்கள் படமாகப் பார்க்கவேண்டாம். வசந்தாக ஒருவர் நடிப்பார் ஐயோ கொடுமை அது. ப்ரியா கதையை வாசிக்காமல் படமாக பார்த்தால் நன்றாக இருக்கும்'

என் கொலையுதிர்காலம் விமர்சனம்

http://enularalkal.blogspot.com/2010/01/blog-post_11.html

Subankan said...

படமாக்கப்பட்ட சுஜாதாவின் நாவல்கள் எதுவுமே எனக்குத்தெரிந்து வாசிக்கும்போது கொடுத்த விறுவிறுப்பை படத்தில் கொடுக்கவில்லை

Mrs.Menagasathia said...

இந்த படம் நாவல்ன்னு தெரியாது,படித்ததுமில்லை.ஆனால் படம் பார்த்திருக்கேன்.ரொம்ப நல்லாயிருக்கும்...எனக்கு பிடித்த படம் கூட..

ஸ்ரீராம். said...

சுஜாதாவே தன்னுடைய கதைகள் படமாகப் பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்திருப்பார். அதுவும் ப்ரியா படம் வெளி வந்த பிறகு இதை யாரும் படமாக்கக் கேட்க முடியாது என்று சொல்லியே 'மேற்கே ஒரு குற்றம்' போன்ற கதைகள் எழுதினார். படத்தில் சுஜாதா டச் எதிர் பார்க்காதீர்கள். விஷுவலில் எழுத்தில் உள்ள நிறைய சுவாரஸ்யங்களைக் காட்ட முடியாது. இதை பின்னர் சுஜாதாவே சொல்லியும் உள்ளார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

திரைப்படமாக்கப்பட்ட பல கதைகளின் நிலை இதுதான் ஜெட்லி..:-(

தமிழ் உதயம் said...

காயத்ரி படத்தில் ஒரே ப்ளஸ் பாயிண்ட்... இளையராஜா, இரண்டு அற்புதமான பாடல்கள். 1 காலை பனியில் நாணும் மலர்கள். 2 வாழ்வே மாயமா. பெரு மழையா. கடும் புயலா.

யோ வொய்ஸ் (யோகா) said...

வசந்த் ரோலுக்கு நான் பொருத்தமாயிருப்பேன்..

ஜெட்லி said...

@ அனைவருக்கும்..

பின்னூட்டம் ஈட்ட அனைவருக்கும் நன்றி... :))

Kaarthik said...

Many years back, Kolai udhi kaalam was telecast as serial in Doordarshan. Actor Vivek did the role of Vasanth and a drowsy actor killed the role of Ganesh.


IMO, Arjun as Ganesh and Mirchi Shiva may be suitable

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நீங்களே வசந்தாக நடிக்கலாமே ஜெட்லி!! :-)

ர‌கு said...

//அதுவும் ப்ரியா படம் வெளி வந்த பிறகு இதை யாரும் படமாக்கக் கேட்க முடியாது என்று சொல்லியே 'மேற்கே ஒரு குற்றம்' போன்ற கதைகள் எழுதினார்//

நானும் இதை ப‌டிச்சிருக்கேன். 'ப்ரியா'வினால் ஏற்ப‌ட்ட‌ அதிருப்தி கார‌ண‌மாக‌வே, இதை எப்ப‌டி பட‌மா எடுக்க‌றீங்க‌ன்னு பாத்துட‌றேன்னு ஒரு ச‌வாலாக‌வே 'மேற்கே ஒரு குற்ற‌ம்' எழுதினார். க‌தை சென்னையில் ஆர‌ம்பித்து ஜெர்ம‌னி வ‌ரை போகும். முடிவில் கொஞ்ச‌ம் சாதார‌ண‌மா இருந்தாலும், க‌தையோட‌ ஃப்ளோ ஃப‌ன்டாஸ்டிக்!

க‌ணேஷையும் மீறி அஜித்தான் தெரிவார்னு தோணுது ஜெட்லி. ஒய் நாட் க‌ம‌ல்? வ‌ஸ‌ந்துக்கு நீங்க‌ சொன்ன‌ சாய்ஸ் சூப்ப‌ர், அஜ‌ய்யோட‌ துறுதுறு பேச்சு செட்டாகும்னுதான் நினைக்கிறேன்

கொலையுதிர் கால‌ம் என‌க்கும் ரொம்ப‌ புடிச்சிருந்த‌து. 'ஆ' ப‌டிச்சிருக்கீங்க‌ளா? இதை ப‌ட‌மா எடுக்க‌ற‌துக்கு பிர‌காஷ்ராஜ் நிறைய‌ த‌ட‌வை த‌லைவ‌ரிட‌ம் கேட்டிருக்கார். ஆனா அவ‌ர் க‌டைசி வ‌ரைக்கும் ஒத்துக்க‌வேயில்ல‌‌ ;)

ர‌கு said...

ப‌திவோட‌ த‌லைப்பு....இதுதான் ஜெட்லியிஸ‌மா?! ;)))

ஜெட்லி said...

@Kaarthik

அர்ஜுன் சரியாதான் இருப்பார்...
ஆனா வயசாகி போச்சே..


@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║


நல்ல யோசனை....

ஜெட்லி said...

@ ர‌கு

ஆ படிச்சு இருக்கேன்....

//இதுதான் ஜெட்லியிஸ‌மா//

இருக்கலாம் ரகு ...

Porkodi (பொற்கொடி) said...

நான் டிவில கொலையுதிர் காலம் பாத்தப்போ விஜய் ஆதிராஜ் வசந்தா வந்தார் நினைக்கிறேன். மெட்டி ஒலி சரோ (காயத்ரி) தான் லீனா. :)

சினிமாவிலன்னா, கணேஷாக அர்ஜுன் (ஓரளவு தான் ஓகே, ரொம்ப இறுக்கமா இருப்பார்னு தோணுது), வசந்தாக சூர்யா தம்பி கார்த்தியை போடலாம்.. (எனக்கு கார்த்தி ஒண்ணும் ஃபேவரிட் கிடையாது, ஆனா வசந்த்னா உயரமா, அழகா அதே சமயத்துல காமெடி பண்ணறேன்னு சொல்லாம பண்ணனும்.. மிர்ச்சி சிவா பேசற‌ டோன் அப்பட்டமான காமெடியா இருக்கும், அஜய் பேச்சு சூப்பர் ஆனா உயரம் கம்மியாக இருப்பார், சரி வராது.)

Kaarthik said...

Actor Suresh n Vijay Adhiraj acted as Ganesh & vasanth in Sun TV series named "Ganesh-Vasanth" produced by Suhasini...

Karthi would be a better choice but he may not play second fiddle.

Indian said...

வசந்த் ரோலுக்கு ஜெகன் பொருத்தமாயிருப்பார்னு நினைக்கிறேன்.

Chitra said...

Hello Ganesh - sorry, Jetli - இந்த வாரம் மொக்கை படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லையா? ஹி,ஹி,ஹி,ஹி.....

ஆறுமுகம் முருகேசன் said...

அடுத்தது சுஜாதாவின் ப்ரியா கதையை படிக்கலாம்னு இருக்கேன். படத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கதையை படிச்சுட்டு இன்னொரு தடவை படத்தை பார்க்கணும். சுஜாதா அவர்களின் கொலையுதிர் காலம் நாவலை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும். நல்ல த்ரில்லிங் கதை. என்னது அதையும் ஏன் படம் எடுத்து கெடுக்கணுமா...?? அதுவும் சரி தான்.//

ம்,ஆமா..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////கதையை படித்த பின் படம் பார்த்த எனக்கு காயத்ரி படம் ஒரு
ஏமாற்றம் தான். ஒரு வேளை அந்த காலத்தில் படம் எடுத்ததால்
அப்படி ஒரு பீலிங்ஆ என்று தெரியவில்லை. இல்லை ஏற்கனவே
இது தான் கதை என்று தெரிந்த பின் வந்த பீலிங்ஆ என்று
தெரியவில்லை.
//////

இதில் நீங்கள் இரண்டாவதாக எண்ணுவதுதான் சரி நண்பரே

கே.ஆர்.பி.செந்தில் said...

காயத்ரியின் ரசிகன் நான் ..

தமிழ் வெங்கட் said...

புதகம் படிக்க நேரம் இருக்கா ஜெட்லி..?
ஆடியோவில் ரசிச்சு கேட்ட ஒரு பாடலை காட்சியோட பாருங்கள்..உங்கள் கற்பனையே சிதைந்து போகும்..

அக்பர் said...

காயத்ரி படம் பார்த்ததில்லை இனிமேதான் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி தல.

மகேஷ் : ரசிகன் said...

கணேஷ் - அர்ஜூன்
வசந்த் - ஆர்யா.... ?

ciniposter said...

இந்த படம் பார்க்கவில்லை. உங்கள் படைப்பை படித்தபின் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பதிவுக்கு நன்றி

http://www.ciniposters.com

INNOVATOR said...

என்னோட ப்ளோக்ல புது பதிவு போட்டுருக்கேன் வந்து பாத்துட்டு மறக்காம என்னோட ப்ளோக்ல கமெண்ட் போடுங்க