Tuesday, June 2, 2009

ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்திய மாணவர்களின் மீதான தாக்குதல்.


நன்றி : நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்.

"ஆஸ்திரேலியாவில் படித்து வரும் நம் இந்திய மாணவர்களின் மீதான வன்முறை வெறியாட்டம் மிகவும் வருந்தம் அளிக்கிறது" - மன்மோகன் சிங்க்.

இந்த மாதிரி ஒரு பேட்டியை நானோ அல்லது மற்றொரு பதிவுலக நண்பரோ கூறியிருந்தால் அது ஏற்கத் தக்கது, ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?? பிரதமர் Diplomacy Maintain பண்றாருனு நீங்க சொல்லலாம், உண்மை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது முதல் தாக்குதலா?? இந்த மாதிரி சில மாதங்களுக்குள் எத்தனை முறை நடந்துள்ளது?? அது சரி தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்த பொழுதும், மும்பை தாக்குதல் பொழுதும் கூட கீறல் விழுந்த ரெகார்ட் போல "இதை வண்மையாக கண்டிக்கிறேன், இனியும் இது போன்ற ஒரு தாக்குதலை இந்தியா பொறுமையாக ஏற்றுக் கொள்ளாது!!!!". விளைவு இன்று திரு.கசாப் சொல்றான் "நான் எந்த கொலையும் பண்ணல நீங்க பொய் சொல்றீங்க".

சரி அவரை விடுங்க நல்ல மனுஷன் பாவம் என்ன பண்ணுவாரு, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 93,000 சொச்சம் இந்தியா மாணவர்கள் படிக்கின்றனர் அதில் மெல்பர்ன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 38,000 பேர். ஒரு ஆண்டுக்கு இவர்களால் அந்த நாட்டுக்கு வரும் வருமானம் 4 Billion Dollars (ஆத்தாடி!!). வருமானம் மொத்தத்தையும் வாங்கி ஜோபிகுள்ள உட்டுகறாங்க ஆனா நம்மள புடிக்காதாம். அதை அந்த அரசாங்கமும் கண்டு கொள்ளாது. இந்த சம்பவம் (Shravan Attack) நடந்து பத்து நாட்களுக்கு விஷயம் அந்த அரசாங்கத்தால் மூடி மறைக்கப் பட்டுள்ளது, மெல்பர்னில் வசிக்கும் என் நண்பர் பாலசந்தர் அவர்களுக்கே இந்த செய்தி TimesofIndia செய்தி வந்த பிறகு தான் தெரியுமாம். நேற்று கூட ஹைதராபாதை சேர்ந்த ஒரு நபர் தாக்க பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கூட அவர்கள் எவ்வளவு மூர்க்கமாக தரம்கெட்ட விமர்சனங்கள் கூறுவர் என்பதை நீங்கள் நன்று அறிவீர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பே இப்படி நடப்பவர்கள் ஆளில்லா இடங்களில் என்னவெல்லாம் செய்வர்??

நாம் செய்ய வேண்டியது என்ன??

அரசாங்கம் : நமது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் "ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை, அதனால் அங்கு படிக்கவும் சுற்றுலா செல்லவும் உகந்த சூழல் வரும் வரை யாரும் அங்கு செல்ல வேண்டாம்" இது அந்த அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் , இப்படி ஒரு எச்சரிக்கை வந்தால் அங்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். மற்ற நாடுகள் முன் இது ஒரு அவமானமாகும்.

காமன்வெல்த் அமைப்பு மூலமாக நம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். Diplomatic Tension குடுக்கலாம்.

கிரிக்கெட் : முதலில் IPL இல் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆட்டக்காரர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் இதை லலித் மோடி கண்டிப்பா செய்ய மாட்டாரு. அவருக்கு நாட்டை விட பணம் தான் பெருசு. நீங்கள் கூறலாம் விளையாட்டு நட்பை வளர்க்கும் அதனால் இது சரியான வழி இல்லை என்று. நான் கேட்கிறேன், எப்பொழுதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் பொழுது நீங்கள் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியதுண்டா?? இல்லை மற்ற நாடுகளை கூட எடுத்துக்கோங்க. சரி அப்படியே வச்சுக்கலாம், ஏன் பாகிஸ்தான் போய் விளையாடல?? போக வேண்டியது தான?? ஏன் இப்ப தென் ஆப்ரிக்கா போனீங்க?? உங்க உயிரு தான் உயிரா?? அப்பா மதவங்களுது என்ன .........??

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் : குறைந்தது ஒரு மாததுக்காவது இந்த Tension இருக்கும் அது வரைக்கும் எங்கு சென்றாலும் ஒரு ஐந்து பேர் குழுவாக செல்லவும், தற்காப்புக்காக Pepper Spray எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். பார், கிளப் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். "Don't be Offensive, be Defensive" இது தான் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய யுக்தி. நாம் ஒன்னும் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கு தான் நம் தயவு தேவை நமக்கு இல்லை.

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

இதைப்பற்றி அதிக பதிவுகள் வராதது எனக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது!!!!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி அவர்களின் வெறியை அறிந்துகொள்ளவும்.
http://www.news.com.au/heraldsun/comments/0,22023,25565946-2862,00.html


நன்றி
சித்து.

5 comments:

Bala De BOSS said...

நண்பா, முதலில் உன் பதிவுக்கு நன்றிகள் பல.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிக இன வெறி கொண்டவர்கள் இந்த மானங்கெட்ட ஆஸ்திரேலியர்கள்தான். மற்ற நாட்டவர்கள் வெளிப்படியாக கான்பிதுவிடுவார்கள். ஆனால் இவர்கள், மறைமுகமாக செய்வார்கள். இது மிகக் கொடுமையானது. இது இவர்கள் பிறவி குணம். மாற்ற முடியாது. இவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் இருந்து கைதிகளாக வந்தவர்கள்தானே. அதுதான் அந்த திருட்டு புத்தி இன்னும் இவர்களிடம் இருக்கிறது.

இந்த நாதாரி மக்களை, இங்கிலாந்தில் உள்ள சிறையில் இடம் இல்லாததால் அங்கிருந்து கொண்டுவந்து இங்கு விட்டார்கள். அனால் இவர்கள் இங்கு வந்து இந்த நாட்டு "Aboriginal" என்று சொல்லப்படும் பூர்விக மக்களை அடித்து, பல மக்களை கொன்றுவிட்டு ஆக்கிரமித்து விட்டார்கள். இவர்கள் இங்கு 1850 ல் வந்தபோது பத்து லட்சம் பூர்வீக மக்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது ஒரு லட்சம்தான் இருக்கிறார்கள். அதுவும் எங்கேயோ ஒரு மூலையில், காடுகளில், வீடு, உடை, உணவு இல்லாமல், இன்னமும் ஆதி வாசிகள் போலதான் இருக்கிறார்கள். அவர்களை மேம்படுத்த எந்த முயற்சியும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஒரு "Call Center"ல் வேலை செய்கிறேன். ஒரு முறை ஒரு வெள்ளைக்காரன் "போன்" செய்தான். என்னுடைய குரல் ( Indian Accent )கேட்டதும், " Why don't you go back to your country" என்றான். எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நான் சொன்னேன், அதை சொல்ல உனக்கு உரிமை கிடையாது, ஏனென்றால் இது உன்னுடைய நாடு கிடையாது. எனக்காவது திரும்பி போக ஒரு ஊர், ஒரு வீடு இருக்கிறது. ஆனா நீ திரும்பி இங்கிலாந்து போனா உன்க்கு ஜெயில்தான் இருக்கும்னு சொன்னேன்.

இவர்களைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

சித்து said...

உன் வலி எங்களுக்கு புரிகிறது, இந்த மானங்கெட்டவர்களின் வரலாறை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து கூறிவிட்டாய். நீ அந்த மதிகெட்டவனுக்கு சரியான பதில் தான் கூரியுல்லை. கவலை படாதே காலம் மாறும்.

chittoor.S.Murugeshan said...

Anyhow due to these conditions of provoking discussions the lives of Tamils in Sri Lanka is over . Now you r concentrating on Ausstralia keep it up

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இது இவர்கள் பிறவி குணம். மாற்ற முடியாது. இவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் இருந்து கைதிகளாக வந்தவர்கள்தானே. அதுதான் அந்த திருட்டு புத்தி இன்னும் இவர்களிடம் இருக்கிறது.//


இந்தப் பார்வை தவறு நண்பரே..,

ஆஸ்திரேலியாவில் நடந்த தவறுகளுக்கு கண்டனங்கள் கொடுக்கப் படும் அதே வேளையில் இதுபோன்ற பார்வைகளை வெள்யிடுவது

அதே பார்வையில் நம்மை நோக்கியும் சில கொடிய விமர்சனங்களை வைக்க வழிவகுக்கக் கூடும். பல பிரச்சனைகளை மேலும் மோசமாக்க ஆரம்பித்துவிடும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அங்கே இருப்பவர்கள் உன்னைப் பத்தி தெரியாதா? என்று ஆரம்பித்து முன்னாட்களில் நடந்த பிழைகளுக்கு இன்று நடக்கும் கொடுமைகளை சரியென வாதிடும் போக்கு ஏற்பட்டுவிடும்.

நடந்த தவறுகளை மட்டும் பட்டியலிட்டு வாதிடலாம். முன்னோர்களை வம்புக்கு இழுக்க வேண்டாம்.

இது எனது வேண்டுகோள் மட்டுமே..

ஆனால் உங்கள் உணர்வுகளில் நான் பங்கு கொள்கிறேன்.

Anonymous said...

//குறைந்தது ஒரு மாததுக்காவது இந்த Tension இருக்கும் அது வரைக்கும் எங்கு சென்றாலும் ஒரு ஐந்து பேர் குழுவாக செல்லவும்,//

இதைக்கடைப்பிடிச்சலே பாதுகாப்புதான் சித்து.

//பார், கிளப் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.//

நல்ல யோசனையாத்தான் படுது :)