Thursday, June 11, 2009

கிளுகிளுப்பா ஒரு காதல் கதை.....

கிளுகிளுப்பா ஒரு காதல் கதை.....
(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.)


டேய் யார பார்த்தாலும் எங்க அண்ணன் மாதிரி இருக்குடா" என்று குமாரின் கையை பிடித்து கூறினாள் ஹேமா.


"உங்க அண்ணன் இந்த நேரம் அவர் ஆபீஸ்ல பிஸியா வேலை பார்த்துட்டு இருப்பார்,அவர் இந்த டைம்ல பீச்சுக்கு வந்து என்ன பண்ண போறார்" என்று தன் காதலிக்கு தெம்பு ஊட்டினான் குமார்.


இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிறது. இன்னைக்கு தான் எப்படியோ அவளை தாஜா செய்து பீச்சுக்கு கூட்டி வந்திரிக்கிறான், எப்படியாவது அவளை முத்தமிட வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக கணக்கு பண்ணி கொண்டிரிக்கிறான். குமாரின் நண்பன் பாலு வேறு ஏற்கனவே காதலியுடன் எப்படி கிளுகிளுப்பா இருக்கிறது என்று சில ஐடியாக்களை அள்ளி தந்துள்ளான்.


ரெண்டு பேரும் ஒளி இல்லாத இடத்தில தஞ்சம் அடைந்தனர்.குமாரின் இதயம் லப்டப் லப்டப் என்று வேகமாக அடித்து கொண்டது, எங்கே அவள் கோபித்து கொள்வாளோ என்று மிகவும் யோசித்தான்.


"நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன் தப்ப நினைக்கமாட்டியே?" என்று ஹேமா கேட்டாள்.


என்ன இவளும் அத தான் எதிர் பாக்குறாளா என்று மனதில் நினைத்து கொண்டே உற்சாகமாய் " சொல்லு என்ன செய்யணும்" என்று தோளில் கையை போட்டான்.


அவள் அவன் கையை தட்டி விட்டு "இல்லப்பா, மூடு சரியில்லை" என்றாள்.


"ஏன் என்ன ஆச்சு"? என்று கேட்டவாரே ஒரு உம்மா கொடுக்க ட்ரை பண்ணினான் குமார்.

"சீ சும்மா இரு இதுக்கு தான் நீ இருட்டுக்கு கூட்டிட்டு வந்தியா!" என்று அதட்டினாள் ஹேமா.

சிறிது நேர மௌனத்துக்கு பிறகு.....

"எனக்கு மொதல்ல ஒன்னு வாங்கி கொடு" என்றாள்.

"என்ன" என்று தன் கிளுகிளுப்பு நிறைவேறாத ஆசையில் கேட்டான்.

"என் அண்ணனுக்கு, பையன் பிறந்து ரெண்டு மாசம் ஆவுது இல்ல, அவன் கூட நான் விளையாடுறதுக்கு ஒரு கிலுகிலுப்பு வாங்கி தாயேன்" என்று கேட்டாள்......


டிஸ்கி: ஆக மொத்தம் ஹேமாவுக்கு கிலுகிலுப்பு கிடைச்சிருச்சி. நம்ம கதையின் நாயகனுக்கு?.... சாரிங்க நான் டைட்டில்ல இந்த கிலுகிலுப்பு தான் போடணும்னு நினைச்சேன். ஆனா சும்மா ஒரு கிளுகிளுப்புக்குதான் இதை போட்டேன். நீங்க முடிஞ்சா ஓட்டையும் போடுங்க.....(இது பேர் தான் கிலுகிலுப்பு)

உங்கள்

ஜெட்லி

19 comments:

டக்ளஸ்....... said...

:)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ளு, லு, பிரச்சனை காதலர்களுக்கு கிடையாதுல்ல..,

ஜெட்லி said...

உங்கள் வருகைக்கு நன்றி.....

என்ன டாக்டர் சுரேஷ் தலைவரே வர வர நம்மள கண்டுக்க மாட்டிகிரிங்க....

ஜெட்லி said...

நன்றி டக்ளஸ் அண்ணாச்சி...

நையாண்டி நைனா said...

கதையிலே அருமையான டுவிஸ்டு...

நல்ல நடை

அருமையான கதை....

(அப்புறம் வேற என்ன சொல்லணும்...
ம்ம்...ம்ம்...)

ஹான்... சீக்கிரம் ஆவி-ளே வர வாழ்த்துக்கள்..

(அப்புறம் என்ன சொல்லணும்....)

அடுத்த தளத்திற்கு முன்னேறி விட்டீர்கள்.

வால்பையன் said...

யாராவது துப்பாக்கி வாங்கி கொடுங்கப்பா!
ஜெட்லிய சுடலாம்!

ஜெட்லி said...

என்ன நையாண்டி நக்கல் கொஞ்சம் தூக்கலா இருக்கு......
இருந்தாலும் உங்க approach எனக்கு பிடிச்சிருக்கு...

ஜெட்லி said...

@ வால்பையன்...

என்னை தூளைக்க இன்னும் தோட்ட கண்டுப்புடிக்கல......

ஜெட்லி said...

எல்லாம் ஒரு கொலை வெறியோடு தான் திரியிறாங்கப்பா ....

கார்த்திகைப் பாண்டியன் said...

பாஸு.. இந்தக் கதைல நீங்க வெளிப்படுத்தி இருக்கிற கொலைவெறிய யாராலும் பீட் பண்ண முடியாது.. ஏதோ கில்மான்னு வந்தா.. அவ்வவ்....

கடைக்குட்டி said...

அருமை...

நல்ல ட்விஸ்டு... :-)

(உங்களுக்கு பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி என் மனசாட்சியுடன் நடண்ட மோதல்.. )


டேய் கடக்குட்டி.. திருந்துடா...

நீ பின்னூட்டிடம் போட்டா.. ஐயோ நல்லா இருக்கு போல இருக்கேன்னு இதே மதிரி மொக்க போட போறாங்க...

வேணா .. பின்னூட்டம் போடாத...போடாதா..போ..ப்.... “

Suresh said...

சூப்பர் பல்பு ஹீ ஹீ சரியான வேஸ்ட் பயலா இருக்கானே விவரமே பத்தவில்லை ;)

ஜெட்லி said...

@ கார்த்திகை பாண்டியன்.

தங்கள் கருத்துக்கு நன்றி......
கில்மாவா அப்படின என்ன தலைவா?

ஜெட்லி said...

@ கடைக்குட்டி.

இதுக்கெல்லாம் எதுக்குப்பா மனசாட்சியோட சண்டை போடுற....
ப்ரீயா உடு கடைக்குட்டி.

பேசி தீத்துக்கலாம்.
பின்னூட்டம்தான் எனக்கு பூஸ்ட்.

ஜெட்லி said...

@ சுரேஷ்

சரியா சொன்னிங்க சுரேஷ்....
உங்களை மாதிரி ஒரு ஆள் இருந்த பூந்து
விளையாடி இருப்பார்.

சித்து said...

செம ட்விஸ்ட் மச்சி, சும்மா டாப் கீர் போட்டு தூக்கி இருக்க.

ILA said...

கிலுகிலுப்பை' சரியான வார்த்தை போடுங்க எசமான். லொள்ளுசபா ரேஞ்சுல ட்ரை பண்ணுறீங்க. வாழ்த்துக்கள்!

Chitra said...

ha,ha,ha,ha.... ரெண்டு அல்ப்பங்க காதலிச்சா, இப்படிதான் இருக்கும் போல.

cheena (சீனா) said...

அன்பின் ஜெட்லி

கிளுகிளுப்பான காதல் கதை - அதுவும் வயது வந்தவர்களுக்கு மட்டும் - ஆசயா வந்தேனே - கிலுகிலுப்பாப் போச்செ

எப்பா ஏம்பா இப்பூடி

நல்வாழ்த்துகள் ஜெட்லி