Saturday, June 20, 2009

காதல் செய்ய ஏற்ற இடம்?

காதல் செய்ய ஏற்ற இடம்?

***************************
நேத்து நைட் என் மனசாட்சி என்கிட்ட வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு...
"டேய் ஜெட்லி கண்ட கண்ட மொக்கை பதிவலாம் போடுறியே,
நாலு பேருக்கு நல்லது செய்யுற மாதிரி எப்ப பதிவு போட போற ...."
என்று கேட்டது.


"சரி காதலர்களுக்கு உதவியா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடுறேன்" அப்படின்னு சொன்னேன்.


தீடிர்னு அவன்(மனசாட்சி) சிரிக்க ஆரம்பிச்சு
"டேய் உனக்குதான் காதலும் பிடிக்காது, காதல் செய்ரவங்களையும்
பிடிக்காதே. நீ என்ன உதவி செய்ய போற".


அவனை(மனசாட்சி) விடுங்க, அதற்காக தான் இந்த பதிவு... ஸ்பெஷல் காதலர்கள் பதிவு.

***********************

# முதல்ல நீங்க இந்த குழந்தைகள் பூங்கா, வண்டலூர் ஜூ
போன்ற இடங்களுக்கு போவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.

சின்ன பசங்களை கூட்டிட்டு பாம்பு, பறவையை
பாக்க வந்த நீங்க கண்டதையெல்லாம் பாக்க வைக்கிறிங்க.#அப்புறம் இந்த அண்ணா நகர் டவர் பூங்கா பக்கம் போக
முடியுல, அப்படி போனாலும் அந்த டவரை சுத்தி பாக்க
முடியுல. செவுரு புல்லா ஒரு காதல் வசனம் பிளஸ்
முகம் சுளிக்கும் வசனம். அந்த டவர் ஏறுறதுக்கு குள்ள
ஒரு பத்து காதல் ஜோடி வழியை மறைச்சி உட்காரிங்க.
நாங்கலாம் டவர் பாக்க வந்தோம் நீங்க என்னன்ன எங்களுக்கு
ஓசியில மலையாளம் படம் காட்றிங்க. அப்புறம் ஏன் mms
எல்லாம் வராது.


டேய் ஜெட்லி என்னடா லவ்வர்ஸ்க்கு ஹெல்ப் பண்றேன்
சொல்லி டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா நீ எங்களையே
கலாய்க்கிரியா என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது.
இதோ வரேன் இருங்க அடுத்தது அதான்........(பின்வரும் சம்பவம் அனைத்தும் நான் பார்த்தவையே,
எனக்கு இது மாதிரி எதுவும் அமைந்ததில்லை, நான் ஒரு
பார்வையாளன் மட்டுமே)


சரி அப்போ காதலர்களுக்கு ஏத்த இடம் எது அப்படின்னு பார்த்தா


# தியேட்டர் தாங்க, யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்ல.
ஆனா தயவு செய்து புது படம் மற்றும் கூட்டமான தியேட்டர்க்கு
எல்லாம் போகாதிங்க,ஏன்னா திருப்பியும் அது உண்மையாக படம்
பார்க்க வந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். மொக்கை படம்
போன கூட்டம் இருக்காது இருந்தாலும் உங்க காதல் வேலையை நீங்க சவுண்ட் இல்லாம பண்ணா நல்ல இருக்கும்.இப்படிதான்
பாருங்க நம்ம கேபிள்சங்கர் அண்ணே , ராகவன் படத்துக்கு போய் ரொம்ப பயந்துட்டார்.


(எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கு இதை கிளிக்
செய்து படிக்கவும்)
,
# சென்னை பக்கத்தில் இருக்கும் மாயாஜால் யாரை நம்பி
கட்டிவச்சிருகாங்க நினைச்சிங்க, காதலர்களின் சொர்க்க பூமிங்க
அது.ஆனா காதலன் பர்ஸ் காலி ஆயிடும்.இங்கே போய் படம் பார்த்தா,ஹோ ஸாரி நீங்க படம் பாக்க மாட்டிங்க இல்ல.
இங்கே போய் உட்கார்ந்த யாருக்கும் எந்த வித தொந்தரவும்
இருக்காது.சில மொக்கை படம் ஒரு ஷோ மட்டும் ஓடும் அது
தான் நீங்க தேர்ந்து எடுக்க பட வேண்டிய படம். ரெண்டு பேர் இருந்தா கூட புல் ஏ.சி போட்டு படத்தை போடுவாங்க.

எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....

இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க.

உங்கள்
ஜெட்லி

8 comments:

லோகு said...

** என்ன மாப்ள லைன்ஸ் காப்பி பண்ணினா செலக்ட் ஆக மாட்டேங்குது...

**பல் இருக்கறவன் பக்கோடா திங்கறான்... உனக்கு ஏன் மாப்ள காண்டு..

**தியேட்டர் கரெக்ட் சாய்ஸ் தான்.. சர்வம், தோரனைனு நெறைய தியேட்டர் காலியாத்தான் இருக்கு..

லோகு said...

ஓட்டும் போட்டாச்சு..

ஜெட்லி said...

@லோகு

$லைன்ஸ் காப்பி பண்ணாம இருப்பதற்கு சித்து பல வேலை
செய்து வைத்து உள்ளார்.

$காண்டு இல்ல மச்சான், வயித்து எரிச்சல் அப்படின்னு கூட
சொல்லலாம்

$அப்புறம் இன்னிக்கு எந்த தியேட்டர் போற?

லோகு said...

//$லைன்ஸ் காப்பி பண்ணாம இருப்பதற்கு சித்து பல வேலை
செய்து வைத்து உள்ளார்.//


இது சித்துவோட சித்து வேலையா..
லைன்ஸ் காப்பி பண்ணாம எப்படி பாராட்டறது..

(ரெண்டு லைன் காப்பி பண்ணி போட்டு சூப்பர் ன்னு சொல்லியே எங்களுக்கு பழகிடுச்சு)

ஆனந்தன் said...

நகரத்துல சினிமா தேட்டர் இருக்கு பரவ இல்ல கிராமத்து காதலர்கள் எங்க போவார்கள் ?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....//

நாங்க காப்பி பண்ணிட்டோம்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க.//

ஓ.கே . கதம்

சித்து said...

நீ சொன்னா சரி தான் லோகு அந்த Script தூக்கியாச்சு.