Saturday, May 30, 2009

பொடிமாஸ் .....

பொடிமாஸ் .....

********************************


ஜோக்:

(நண்பர்களின் வேண்டுகோள் படி இந்த வார சைவம் ஜோக்)


ஒருவன்: சார் " மனைவியை அடக்கி ஆள்வது எப்படி" ங்கற
புத்தகம் எங்கே இருக்கு?


லைப்ரேரியன்: கற்பனை நாவல் எல்லாம் கடைசி ஸெல்ப்பில்(shelf) இருக்கும்.


ஒருவன்: ? ? ? ? ?.


*********************************

சமீபத்தில் வலைப்பதிவு நண்பர் லோகுவுடன் நானும் சாட் செய்யும் போது என்னால் லோகுவின் நகைச்சுவை உணர்வை மேலும் உணர முடிந்தது, அந்த சாட்டில் இருந்து சில வரிகள் உங்களுக்காக

நான் : எந்த படத்தில் இருந்து உனக்கு அஜித்தை பிடிக்கும்?


லோகு : நெஞ்சினிலே.

(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? )

*************************************

எனக்கு பிடித்த பொன்மொழிகள்:

# பறக்கும் முத்தத்தை கொடுப்பவர்கள் - படுசோம்பேறிகள்.


- பாப் ஹோப்.


# ஏமாற்றத்தை தள்ளி போடுவதற்கு பெயர்தான் - நம்பிக்கை.

-பரிட்டன் பால்.


**********************************************

(பாட்டி சும்மா போஸ் தான் குடுக்குது, யாரும் நம்பாதிங்க)நாளைக்கு(31.5.09) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாட படுகிறுது. நேத்து ரேடியோல என்ன சொன்னாங்கனா நாளைக்கு எந்த கடையிலும் சிகரட் விக்க மாட்டங்களாம், அதையும் பாக்க தானே போறேம்.நம்ம நாட்டுல இந்த போதை பாக்குக்கு தடை பண்ணி பல வருஷம் ஆச்சு, ஆனா கடையுல சரம் சரமாக தொங்கத்தான் செய்யுது. முதல்ல சிகரட் தயாரிப்பதை நிறுத்தினாலே அனைவரும் புகை பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். அதை விட்டுட்டு ஒரு நாள் சிகரட் விக்காம இருந்தா யாரும் திருந்த மாட்டாங்க, அதான் உண்மை.எதுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வலையுலக நண்பர்களே தயவு செய்து முன்னாடியே ஒரு பாக்கெட் சிகரட் வாங்கி வச்சுக்குங்க. நம்ம ஆளுங்க தமிழ் படம் வில்லனுங்க மாதிரி தீடிர்னு திருந்திற போறாங்க.


*************************************

படித்தது:


ஹிட்லர் யூதர்களை அடியோடு வெறுத்தவர். ஒரு தடவை ஒரு ஜோதிடரை அழைத்து அவரிடம் ஹிட்லர் "நான் எப்போது சாவேன்?" என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர் "நீங்கள் யூதர்களின் விடுமுறை நாளன்று மரணம் அடைவீர்கள்" என்றார்.


"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு?" என ஹிட்லர்
மறுபடியும் வினாவினார்.


"நீங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் விடுமுறை நாள்!"
என்று ஜோதிடர் பதிலளித்தார்.


****************************************

கேட்டது:

யுவனின் இசையில் சமீபத்தில் ஜெய் நடித்த வாமணன் படத்தில் ஒரு பாடல் வித்யாசமான மெலடியாக இருந்தது "ஒரு தேவதை" என்று தொடங்கும் பாடல் ரூப்குமார் ரதோட் என்பவர் பாடியுள்ளார் . டைம் கிடைச்சா கேட்டு பாருங்க.


************************************

பிடித்தது:

இந்த வாரம் இராகவன் , நைஜிரியா , கடைக்குட்டி ,சக்கரை சுரேஷ் இவர்களின் பதிவு அருமையாக இருந்தது, அதுவும் இராகவன் சார் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் அவர்களின் பெயரை கிளிக் செய்து படிக்கவும்.


********************************************


நடந்தது:

டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்கள் சுதி ஏத்தி
கொண்டிருந்தனர். நான்கு ரவுண்டுக்கு அப்புறம் அதில் ஒருத்தன் தீடிர் என்று மது பாட்டில் லேபுளை பார்த்து தன் எதிரில் இருக்கும் நண்பனிடம்....


"மச்சான் நீ லவ் பண்றத பத்தி இந்த பாட்டில் லேபுளில்
போட்டிருகாங்க, தயவு செய்து லவ் பண்றதா விட்ரு மச்சி".


"டேய் குடிச்சிட்டு போலம்பாதாட, நான் லவ் பண்றதை பத்தி அந்த பாட்டில்ல என்னடா போட்ருக்கு"


"இங்க பாரு மச்சி மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு, உன் லவ்வர் பேர் மது தானே..."


*********************

மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 3 ,
பொடிமாஸ் 2 ,
பொடிமாஸ் 1 .


********************

உங்கள்

ஜெட்லி.

13 comments:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

கடைக்குட்டி said...

கொஞ்சம் லென்த் ஜாஸ்தி.. இருந்தாலும் சூப்பர்...

கடைக்குட்டி said...

எனக்கு லிங்க் குடுத்ததுக்கு நன்றி ..:-)

கடைக்குட்டி said...

இந்த டெம்ப்லேட் நல்லா இருக்கு.. இதுலேயே இருக்க பாருங்க

நாமக்கல் சிபி said...

பொடிமாஸ் நல்லாவே இருக்கு

இராகவன் நைஜிரியா said...

எனக்கு லிங்க் கொடுத்ததற்கு நன்றிகள் பல.

இந்த வாரம் சைவ பொடிமாஸ் நல்லா இருக்குங்க.

//(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? ) //

நானும் தாங்க.

லோகு said...

மாப்ள.. எதிர்பார்க்கவே இல்ல..

நன்றி..

எல்லாமே நல்லா இருக்கு.. template Super...

சித்து said...

லோகு அதுக்கு நாங்க உனக்கு தான் நன்றி சொல்லணும், உன்னுடைய Template பாத்து தான் போட்டோம். கொஞ்ச நேரம் கழித்து திரும்ப வந்து ஓட்டு போடு.

லோகு said...

ஒட்டு போட்டாச்சு.. சிக்கன் பிரியாணி எங்கே..

(நல்ல Template ஏதாவது கிடைச்சா அனுப்பு மாப்ள..)

ஜெட்லி said...

நம்ம வலைப்பக்கம் வந்ததற்கு ரொம்ப நன்றி இராகவன் சார்,

ஜெட்லி said...

நீ சென்னைக்கு வா லோகு, அடையார் கோரோநெட் ஹோட்டல்ல உனக்கு ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி வாங்கி தரேன்.

Bala De BOSS said...

அருமையான பொடிமாஸ் நண்பா. சரக்கடிக்கும்போது சாப்பிடும் "சில்லி சிக்கென்" கணக்கா சுருக்குன்னு இருக்கு!!!!!! அப்புறம் புது "Template" நல்லா இருக்கு.

ஜெட்லி said...

ரொம்ப நன்றி பாலா மாமு....