Thursday, May 28, 2009

உங்களால் இதெல்லாம் முடியுமா?

உங்களால் இதெல்லாம் முடியுமா?

*************************

# நீங்கள் உங்கள் நண்பனின் மொக்கை பேச்சை அமைதியாக
காது
கொடுத்து கேப்பவரா?


#நீங்க நண்பர்களோடு எப்போ ஹோட்டல்லில் சாப்பிட்டாலும்,
நீங்க தான் பில் செட்டில் பண்ணுவிங்களா?


மேல கூறியுள்ள மாதிரி பழக்கங்கள் உள்ள நபரா நீங்கள்?

அப்போ வாங்க பழகுவோம். உங்களை மாதிரி ஒருத்தரை தான்
தேடிட்டு இருக்கேன். ஆமாம் உங்க வீடு எங்க இருக்கு?

*******************************************************

#விஜய் நடித்த ஆதி, குருவி , வில்லு போன்ற படங்களை தொடர்ந்து
ஒரே நாளில் பார்க்கும் தில்லு உடையவரா நீங்கள்?


#உங்களால் ஆறு பீரை ஒரே சமயத்தில் குடிக்க முடியுமா?
(என் நண்பன் ஐந்து பீர் குடிப்பான்)



மேல கூறியுள்ள விஷயம் உங்களக்கு ஜுஜுபி என்றால்......

உண்மையிலே நீங்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்.
உங்களை என் மைண்ட்ல வெச்சிரிகேன்.

***********************************


#தாசில்தார் அலுவலகத்தில் ஒரே நாளில் உங்கள் வேலையை முடிக்க முடியுமா?


#டிராபிக் போலீசிடம் சிக்கி பணமே தராமல் உங்களால் தப்பித்து வர முடியுமா?


#வங்கியுள் சென்று ஐந்து நிமிடத்தில் பணத்தை போட்டோ அல்லது எடுத்து கொண்டோ வர முடியுமா?



மேல கூறியுள்ள விஷயமெல்லாம் உங்களுக்கு அல்வா விஷயம் என்றால்,


எனக்கு உங்கள் கைபேசி நம்பரை தயவு செய்து தரவும், ஏன்னா கண்டிப்பா நீங்க பெரிய கையாக தான் இருக்க வேண்டும்.

**************************************************


#
சத்யம் திரை அரங்கில் உங்களால் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்க
முடியுமா?(சாதாரணமா நினைச்சிராதிங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்).


#டாஸ்மாக் கடையில் இரவு 9.30 மணிக்கு அவளோ கூட்டத்தில்
உங்களால் சீக்கரம் சரக்கு வாங்கி வர முடியுமா?


மேல கூறியுள்ள விஷயம் உங்களக்கு கை வந்த கலை என்றால்...

என்னையும் உங்கள் பார்ட்னர் ஆக சேர்த்து கொள்ளவும்.
(என்னடா இவன் சரக்கு வாங்குறதுக்கு பார்ட்னர் கேக்குறானே
அப்படின்னு நினைக்காதிங்க, சும்மா பஸ்ல போகும் போது
டாஸ்மாக் கடை பக்கம்
சும்மா திரும்பி பாருங்க.(பி.கு:நானும்
அப்படி பார்த்து தான் உங்களுக்கு சொல்றேன்).

************************************************


உங்கள் ,

ஜெட்லி



9 comments:

Unknown said...

முடியும் ஆனா முடியாது அண்ணே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எப்படிண்ணே.. இப்படியெல்லாம்?

ஜெட்லி... said...

நானெல்லாம் சின்ன பயங்க.... என்ன போய் அண்ணன்னு சொல்றிங்க

லோகு said...

//#டிராபிக் போலீசிடம் சிக்கி பணமே தராமல் உங்களால் தப்பித்து வர முடியுமா?

//

அந்த கொடுமைய ஏன் மாப்ள ஞாயபக படுத்தற.. நேத்து தான் 200 ரூபா அழுதேன்.. நைட் 11 மணிக்கு..

Unknown said...

//நானெல்லாம் சின்ன பயங்க.... என்ன போய் அண்ணன்னு சொல்றிங்க//

நான் இப்பதாங்க பஸ்ட் டைம் ஓட்டுப் போட்டேன்.

ஜெட்லி... said...

சாரி லோகு மச்சி.... நம்ம கிட்ட இருந்து அவுங்க புடுங்காம உட மாட்டங்க.

Sri said...

super da machi...

கிரி said...

நான் தேற மாட்டேன்.. ரொம்ப குஷ்டம் ..கஷ்டமப்பா:-)

//வங்கியுள் சென்று ஐந்து நிமிடத்தில் பணத்தை போட்டோ அல்லது எடுத்து கொண்டோ வர முடியுமா?//

எந்த வங்கி என்பது முக்கியம் ;-)

kumar2saran said...

poya yov..ivaru nallavaraamaa.. tasmac kadai'ah bus'la irundhu thaan paarpaaraam.. enna yenna rasaka paayathula irundhu vandhavan'nu ninaichiyaa..