Tuesday, May 19, 2009

கல் ஹோ நா ஹோTomorrow may never come.

நான் இதுவரை பார்த்து ரசித்து, திரும்ப திரும்ப பார்த்தும் ஒரு முறையேனும் சலிக்காத மிக சில படங்களுள் இந்த படமும் ஒன்று, எப்படியும் ஒரு பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன். இப்படி தான் நேற்றும் பார்த்தேன், அந்த சுகமான நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

கதை என்னவோ காதல் கதை தான், அதை சொன்ன விதம் தான் அழகு. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், கலாச்சார மாற்றங்களால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் படும் துயர் மற்றும் இன்ன பிற விஷயங்களை கலந்து நவரசங்கள் பொங்கி வழியும் படமாக தந்துள்ளார் இயக்குனர் நிக்கில் அத்வானி. இது இவரின் முதல் படமாம், அப்பாடா நம்பவே முடியல. ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து செதிக்கியிருக்கிறார் மனிதர். கதைக்குள் புகாமல் மேலோட்டமாக பார்ப்போம் அப்பொழுது தான் நீங்கள் படம் பார்க்கும் பொழுது சுவையாக இருக்கும்.நியூ யார்க் நகரம் அப்படியே நம் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கிறது, ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான இந்த photography க்காகவே படம் பார்க்கலாம். ஒரு காட்சியில் ப்ரீத்தி ஜிந்தா ஒரு இடத்தில அமர்ந்திருப்பார் அப்பொழுது Long Shot'il இருந்து அவரை காண்பிப்பார்கள் அப்பொழுது அவர் நம் அருகில் வருவார் ஆனால் அவர் பின்பு உள்ள கட்டிடங்கள் தூரம் செல்லும், இப்படி நிறைய இடங்களில் Camera விளையாடியுள்ளது.

அடுத்தது இசை ஷங்கர், ஈஷான் மற்றும் லாய் கூட்டணி சும்மா கலக்கி இருப்பாங்க ஒவ்வொரு பாட்டும் அருமை, படம் முடிந்த பின்பு கூட அந்த பின்னணி இசை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நம்ம S.A. ராஜ்குமார் படங்களில் வருவது போல் அந்த ஒரே இசை தான் பின்னணி முழுவதும் ஆனால் ரசிக்க முடிகிறது.

படத்தின் கதாபாத்திரங்களின் உடைகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு, இதற்க்கு நாம் மனிஷ் மல்ஹொத்ரா அவர்களை தான் பாராட்ட வேண்டும், ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக உடை வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து தான் நிறைய விஷயங்கள் நம் உன்னாலே உன்னாலே படத்தில் பயன் படுத்தியுள்ளனர் (குறிப்பாக அந்த Day 1, 2........ அந்த காட்சிகள்) உடை விஷயத்திலும் இந்த படத்தில் சாயல் அதில் நிறையவே தெரிந்தது.இவ்வளவு பேசிவிட்டு கதையின் நாயகன் மற்றும் நாயகி பற்றி கூறவில்லையென்றால் ஏன் மனசாட்சியே என்னை சும்மா விடாது. ஷாருக் கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பை பார்க்க வேண்டுமானால் இந்த படம் தான் சிறந்த சாட்சி, இருவரும் போட்டி போட்டு நடிக்கின்றனர். அப்பாடா ஷாருக் இந்த அளவுக்கு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் என்றார் அதற்கு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறாரு, "Wow, sema cool attidude".

ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்யப்பட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகள் வாங்கி குவித்துள்ளது இந்த படம்.

நீங்கள் அனைவரும் அவசியம் இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும், ரசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி.

நன்றி : Wikipedia, Google.

2 comments:

கவிதை காதலன் said...

நான் பார்க்கலை. கண்டிப்பா பார்த்திட்டு சொல்றேன்..

கடைக்குட்டி said...

புடிச்ச படம்தான்....

’உன்னாலே உன்னாலே ’ படம் இதன் பாதிப்பில் எடுக்கப்பட்டதே!!!