Friday, May 1, 2009

பசங்க விமர்சனம்

பசங்க விமர்சனம் தமிழ் திரையுலகில் அஞ்சலிக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து குழந்தைகளை மையப்படுத்தி வந்துள்ள படம் பசங்க. முதலில் இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்ததற்கு தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இருவருக்கும் ஒரு சபாஷ் போடலாம். படத்தில் நடித்த அனைத்து
குழந்தை நட்சத்திரங்களும் மிகவும் இயல்பாக தங்கள் நடிப்பை வெளிபடித்தியுள்ளனர், முக்கியமா அந்த புஜ்ஜி ஆக வரும் சின்ன பையன் செய்யும் குறும்புதனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன அவர் அடிக்கடி கூறும் வசனம் "எப்புடி" சூப்பர்ஒ சூப்பர்.

நான் படத்தின் PROMOS டி.வி.யில் பார்த்த உடன் என்னடா திரும்பவும் ஒரு வன்முறை படமா என்று நினைத்தேன் ஆனால் ஒரு வன்முறை கூட இல்லை. இந்த படம் கண்டிப்பாக மசாலா படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை படத்தில் ஒரு பைட் கூட இல்லை எல்லாம் சின்ன பசங்க சண்டைதான். ஆனா அந்த சண்டை காட்சிக்கே ரொம்ப பில்டப் குடுக்குறாங்க.புதிதாக பள்ளிக்கு வரும் அன்பரசன் அங்கு ஏற்கனவே பள்ளியில் படிக்கும் ஜீவா இருவருக்கும் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகிறது. அதே பள்ளியில் ஜீவாவின் அப்பாவும் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஜீவா வால்தனம் மிக்கவன் ஆனால் அறிவு நல்ல புத்திசாலி, ஜீவா கடந்த ஐந்து வருடங்களாக கிளாஸ் லீடர் பதவியில் இருப்பவர் ஆனால் அன்பரசன் வந்த உடன் அந்த பதவியை பெறுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து அடிக்கடி அடித்து கொள்கிறார்கள். அன்பரசன் சித்தப்பாக்கும் ஜீவாவின் அக்காவுக்கும் காதல் மலர்கிறது, அப்புறம் நடுவில் இரண்டு குடும்பத்துக்கும் சண்டை வருகிறது இதையெல்லாம் மீறி அவர்கள் இருவரும் நட்பனார்களா? என்பதே கதை.

படம் ஆரம்பத்தில் விமல்(சித்தப்பா) பேர் முதலில் போட்டாலும் அவுருக்கு பெருசா ஒண்ணும் வேலையில்லை. வேகாவும் விமலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. ஜீவாவின் அப்பாவாக வரும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ் ஆசிரியராக நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
ஜீவா கூட வரும் பக்கட(பகோடா இல்லை), குட்டிமணி இருவரும் நம்மை சிரிக்கவைகிறார்கள். அதுவும் அந்த பக்கட பையன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் அனைவரும் தங்கள்
நடிப்பை மிக அருமையாக வெளிபடுத்தியுள்ளார், எப்படின்ன ஒரு REALITY இருக்கு.

படத்தின் முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்கிறது, சின்ன பசங்க படம்னாலும் பில்டப்க்கு குறைவில்லை. முதல் பாதியில் நம்மை ரொம்பவே சோதிக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் வாழ்கைக்கான அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் சில அறிவுரைகள் நம்மை சலிப்படைய செய்கின்றன. இந்த படத்தை கண்டிப்பாக
பசங்க பாக்கறாங்களோ இல்லையோ ஆனால் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.இந்த படம் கண்டிப்பாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு செல்லும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இது ஒரு தரமான படம். இந்த மாதிரி புது முயற்சிகள் வரவேற்க படவேண்டும்... மக்கள் வரவேற்பார்களா?
9 comments:

KADUVETTI said...

சின்ன பசங்க :)))))

hassan said...

நானும் பாத்துட்டேன்... விமர்சனம் படிச்சுட்டு சொல்லுங்க !!!

உங்கள்து நல்லா இருக்கு..

Bala De BOSS said...

மச்சி பேசாம நீ ஆனந்த விகடனுக்கு விமர்சனம் எழுத போய்டலாம். அருமையான விமர்சனம். You really have a good taste and you are eligible to critisize. I still haven't watched this movie. but i think this will be right. because i have read all ur reviews and i strongly believe Your criticism are not biased and they are true. I really believe in your review of movies. Keep it up

கார்த்திகைப் பாண்டியன் said...

சான்சே இல்லை நண்பா.. கிட்டத்தட்ட இதே விமர்சனத்த தான் நானும் எழுதி இருக்கேன்.. படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது..:-)

ஜெட்லி said...

வாங்க காடுவெட்டி யாரு சின்ன பசங்க...
சும்மா ப்ரீயா இருக்கும்போது படம் பாருங்க.

ஜெட்லி said...

ஹசன், கார்த்திகை பாண்டியன் உங்கள் பின்னூட்டத்திருக்கு ரொம்ப நன்றி
நான் எல்லாம் உங்க முன்னாடி தூசு சார்.

ஜெட்லி said...

பாலா மாமே உன் பின்னூட்டதக்கும் ,என் மேல் நம்பிக்கை வைத்து இருப்பதற்கும் என்
நன்றிகள்.

வண்ணத்துபூச்சியார் said...

அஞ்சலி குழந்தைகள் படமா..??

பசங்களை போயும் அத்துடன் சேர்க்கலாமா..

படம் பார்த்து விட்டேன். அருமையான படம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

gangram said...

Nalla irukku boss.. keep going...